Saturday, January 29, 2011

மீனவ நண்பன்

எனக்காக
கடல் ஆழம் தாண்டி
மீன் பிடித்து வந்த
நண்பன்
அதை காய வைத்து
சுட்டு....
உலக்கையால்
இடித்து காரம் கலந்து
அதில் அவர்கள்
அன்பையும் கலந்து
செய்த நண்பனின்
மனைவி [என் தங்கை]
கடல் கடந்து
வாழும் எனக்காய்
நீ கடல் ஓடி
பாசத்தோடும்
நேசத்தோடும்
அனுப்பிய அந்த
மீன் கருவாட்டின்
ருசியை நான்
அறியுமுன்
நீ
சுடப்பட்டு போனாயே நண்பா....
என் தங்கை
கைம்பெண்ணாகவும்
பிள்ளைகள்
தகப்பனில்லாமலும்
தவிக்கும் போது
எனக்கு நீ அனுப்பிய
மீன் பொடியை
நான் எப்படி
உண்பேன் மக்கா
அது
உன் உயிரல்லவா......
[[பிரதமருக்கு அனுப்பும்  சேவ் ஃபிஷர்மென்  அதில் எனது கையெழுத்தின் நம்பர் 1558  ]]

32 comments:

  1. மீனவர்களின் நிலைமிகவும் வருந்தக் கூடியது...
    இயற்கை ஆபத்தில் தப்பிக்கும் இவர்களு க்கு மனிதன் செய்யும்இ ன்னல் தான் எவ்வள வு... //Save Fishermen// கோரிக்கை வெற்றியடையட்டும்

    ReplyDelete
  2. மீனவர்களின் நிலைமிகவும் வருந்தக் கூடியது...
    இயற்கை ஆபத்தில் தப்பிக்கும் இவர்களு க்கு மனிதன் செய்யும்இ ன்னல் தான் எவ்வள வு... //Save Fishermen// கோரிக்கை வெற்றியடையட்டும்

    வழிமொழிகிறேன்..
    பாட்டு ரசிகன் பாணியில் நானும்...

    ReplyDelete
  3. மனசைக் கனக்க வைக்கிறது உங்கள் கவிதை! மீனவர்களின் வாழ்வில் விடிவு கிட்டட்டும்

    ReplyDelete
  4. அநேகமான தளங்களில் எல்லோருமே உண்ர்வுகளைக் கொட்டி வைக்கிறார்கள்.இந்த ஒற்றுமை நிலைத்தாலே நமக்கு வெற்றிதான் மனோ !

    ReplyDelete
  5. ஜெயிக்கும் வரை போராடுவோம்

    ReplyDelete
  6. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  7. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  8. இன்னும் கலக்குவோம் டிவிட்டரில் ....

    ReplyDelete
  9. கருவாடு ஆகிட்டுருக்கிற மீனவனுக்கு அஞ்சலி நல்லாயிருந்தது...

    ReplyDelete
  10. வழிமொழிகிறேன்..

    என் கையெழுத்து 49 & 78 அண்ணா.

    இனியாவது அந்த நாய்களுக்கு உரைத்தால் சரி.

    ReplyDelete
  11. அரசின் கண்கள் திறக்கிறதா பார்ப்போம், அதுதான் குருட்டுக்கண்களாயிட்டே, எப்படி திறக்கும்? ஆட்சிகள் மாறவேண்டும், இளைஞர்கள் வரவேண்டும், ராகுல்??

    ReplyDelete
  12. ஒன்றுபடுவோம்...
    வெற்றி பெறுவோம்...

    ReplyDelete
  13. //எனக்கு நீ அனுப்பிய
    மீன் பொடியை
    நான் எப்படி
    உண்பேன் மக்கா
    அது
    உன் உயிரல்லவா......
    //

    உருக்கமான கவிதை அண்ணா ..

    ReplyDelete
  14. பாட்டு ரசிகன்
    சௌந்தர்
    மாத்தி யோசி
    ஹேமா
    விக்கி உலகம்
    கருண்
    ஜோ
    ஜெய்லானி
    குறட்டை புலி
    பலே பிரபு
    வசந்தா நடேசன்
    சே.குமார்
    செல்வா
    எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மக்கா வருகை தந்து கமென்ட் இட்டமைக்கு, மறுபடியும் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்..........தொடர்ந்து போராடுவோம்.........

    ReplyDelete
  15. மீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்...

    ReplyDelete
  16. படிக்கும் போதே மனம் கனக்கிறது..என்ன செய்ய?

    ReplyDelete
  17. படிக்கும் போது மனம் வலிக்கிறது ...
    நம் காலம் வெல்லும் ...

    ReplyDelete
  18. ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்

    ReplyDelete
  19. உறவில் கலந்த நட்பு
    உழைக்கப் போகையிலே
    உயிர் பிரிந்த்மையால்
    உதவிக் கரமிழந்து
    உறவுகள் படும் பாட்டை
    உம் உணர்வில் இருந்தி
    உரைத்தவிதம் நன்று

    ReplyDelete
  20. கவிதையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்த விதம் அருமை.

    ReplyDelete
  21. உங்களின் உணர்வுக்கும் பங்களிப்புக்கும் நன்றி நண்பரே

    தொடர்ந்து குரல்கொடுப்போம்.....

    ReplyDelete
  22. //எனக்கு நீ அனுப்பிய
    மீன் பொடியை
    நான் எப்படி
    உண்பேன் மக்கா
    அது
    உன் உயிரல்லவா.....// நெகிழ வைக்கும் வரிகள், மனோ சார்.

    ReplyDelete
  23. See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post.html

    ReplyDelete
  24. உருக்கமான கவிதை.நெகிழ வைக்கும் வரிகள்.

    ReplyDelete
  25. அருமையான கவிதை நண்பரே....

    ReplyDelete
  26. மேலும் மீனவர்களுக்காக உத்வேகமுடன் குரல் கொடுங்கள். கவி வடிவில் வலி சொன்ன விதம் அருமை .

    ReplyDelete
  27. அருமை anna

    ReplyDelete
  28. கலங்கடுத்துவிட்டீங்க... குரல் ஒலிக்கட்டும்.

    ReplyDelete
  29. நண்பரே எங்க ஆளைக்கானோம்..
    லீவோ?

    ReplyDelete
  30. லேட்டா போச்சு மனோ. சாரி கொஞ்சம் வெளிவேலைகள் அதான்...!!

    ReplyDelete
  31. மீனவன் செத்துக்கொண்டிருக்கிறான் கடலில்,முதல்வ்ர் பேசிக்கொண்டிருக்கிறார் மடலில்.

    ReplyDelete
  32. ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக மிக நன்றி மக்காஸ்.......

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!