முந்தா நாள் எனக்கு இமெயிலில் ஒரு பதிவு வந்தது கலியுகம் என்ற பெயரில், வாசித்து விட்டு எதேச்சையாக பார்க்கும் போது ஒரு போன் நம்பர், பார்த்தால் அந்த நம்பர் பஹ்ரைன் நம்பர் அடடா நம்ம பக்கத்துலேயே ஒரு பதிவரானுட்டு!!!!! அவர் தளத்தில் போயி படிச்சி கமெண்ட்ஸ் போட்டுட்டு அந்த நம்பரில் போன் செய்தேன். ஹலோ யார் பேசுறது தினேஷ்தானே...? மறுமுனை : ம்ம்ம்ம்ம்ம் ஆமா நாந்தான் நீ......ங்.......க......? நான் : நான் நாஞ்சில் மனோ பேசுறேன் எப்பிடி இருக்கீங்க...? ம. முனை : அப்பிடியா [நல்ல உறக்கம்] நான் உங்க பதி......., நான் : என்ன உறக்கமா பரவாயில்லை நான் அப்புறமா பேசுறேன்... ம முனை : ச.....ரி....ங்க... கட்...
சாயங்காலம் எழு மணிக்கே தூக்கமா கிழிஞ்சுது போ'ன்னு நினச்சுட்டே என் வேலையில் மூழ்கி விட்டேன்...
அடுத்த நாள் [நேற்று] மறுபடியும் போன் செய்தேன் ஹலோ தினேஷ் எப்பிடி இருக்கீங்க...?
ம முனை : நான் நல்லாயிருக்கேன் சார் நீங்க எப்பிடி இருக்கீங்க..? நேற்றைக்கு ராத்திரி நான் உங்களுக்கு போன் செய்தேன் வேற யாரோ போன் [கம்பெனி மொபைல்] எடுத்தாங்க....
நான் : ஓ அப்பிடியா, இப்பிடி தொடர்ந்து விசாரிப்புக்கு பின் என் ஹோட்டல் அட்ரஸ் கேட்டார் சொன்னேன். அந்தபக்கம் வந்தால் வருவதாக சொன்னார் காலையில். நானும் ஆமா இவுரு சொன்னதும் வந்துற கிந்துற போறாரு நெனச்சிட்டு போனை வச்சிட்டேன்.
அட சாயங்காலம் மறுபடியும் போன் [[மும்பை பார்ட்டிய போட்டு தள்ள ஆட்டோ விட்டுருவாரோனு பயம்]] ஹலோ சார் ஒரு வேலை விஷயமா மனாமா வந்துருக்கேன் அப்பிடியே அங்கே வரட்டுமான்னு கேட்டார். சரி வாங்கன்னு சொல்லி அட்ரசும் கொடுத்தேன். காரில் வருவதாக சொன்னார் அப்பிடியே ஒரு அரை முக்கால் மணி நேரம் ரோடு கன்பியூஷனாகி ஏழெட்டு நேரம் திரும்ப திரும்ப போனில் மாட்லாடி வந்தே விட்டார்....!!!
ஆளு என்னை மாதிரியே ஆறரை அடி உயரம் [!!!] என்னை மாதிரியே நல்ல செவப்பு [!!!] கலர்'ல இருந்தார்.
[[சரி விடுங்க ஹி ஹி ]] எங்க ஹோட்டலுக்கு வெளியே நின்றுதான் பேச முடிந்தது காரணம் ஜி எம் மற்றும் அரபி பயலுக [கெஸ்ட் தான்] ஆபீசில் இருந்தார்கள் [அந்த நேரம் பாத்தா வரணும்]
பல விஷயங்களை பற்றி பேசினோம், மொக்கையன் செல்வா பற்றி, இம்சை ராஜா பாபு பற்றி, அட்ரா சக்கை, பன்னிகுட்டி, சித்ரா மேடம், ஜெய்லானி, பிரவீன் டெரர், சவுந்தர் இப்பிடி நெறைய பேசினோம். சித்ரா மேடம் பற்றி அவர் பதிவுகள் பற்றி தினேஷ் ரொம்ப சிலாகித்து சொன்னார்...இதேர்கிடையில் அந்த அரபி பயலுக போய் விட, உள்ளே வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு நிறைய பதிவின் நுணுக்கங்கள் சொல்லி தந்தார். நேரமில்லாததாலும் நான் டியூட்டியில் இருப்பதாலும் ரொம்ப நேரம் அளவளாவ முடியவில்லை. வியாழன் அன்று சந்திப்பதாக பிரிந்தோம்.
போகும் போது அவர் சொன்னார். [வியாழன் சந்திப்பு உறுதி ஆகிவிட்டது]
மனோ உங்களை சந்திச்சது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா [எனக்கும்தான்] நம்ம ஊர் குடும்பத்தை விட்டு பிரிஞ்சி தனியா இருக்குற நமக்கு வலை தள நண்பர்கள் நட்பு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமான்னு அவர் நெஞ்சில் கை வைத்து சொல்லும் போது...... என் கண் கசிந்தது....
ஆம் எனக்கும்தான்....
என்னை தேடி வந்த உறவு இது...
என்னதான் சொந்த பந்தம் இருந்தாலும் நண்பனை போல வருமா என்ன...?
நன்றி மக்கா தினேஷ்....
வியாழன் இரவு ஒன்பது மணிக்கு சந்திப்போம் [எனக்குதான் லீவு கிடையாதே]
>>> தினேஷ்-மனோ கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில்...?
ReplyDelete//> தினேஷ்-மனோ கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில்...///
ReplyDeleteஊரை விட்டு ஓடிரனுமா....
நான் முதலாவதாக(இதுவரையிலும் கூட) பேசியது பதிவர் "மாணவன்" உடன், சிங்கப்பூரில் இருந்து போன் செய்து பேசினார். கடந்த 17 அன்று, 17.25 நிமிடங்கள். முதலாவதாக பேசியதால் நான் இதை எப்போதும் மறக்க மாட்டேன். ரொம்ப பெருமையாக இருந்தது. உங்கள் எல்லோரையும் நேரில் பார்க்கும் ஆர்வம் உள்ளது. நிச்சயம் சந்திப்போம் அண்ணா.
ReplyDeletenalla santhippu. pakirvukku nanri. vaalththukkal
ReplyDelete//நான் முதலாவதாக(இதுவரையிலும் கூட) பேசியது பதிவர் "மாணவன்" உடன், சிங்கப்பூரில் இருந்து போன் செய்து பேசினார். கடந்த 17 அன்று, 17.25 நிமிடங்கள். முதலாவதாக பேசியதால் நான் இதை எப்போதும் மறக்க மாட்டேன். ரொம்ப பெருமையாக இருந்தது. உங்கள் எல்லோரையும் நேரில் பார்க்கும் ஆர்வம் உள்ளது. நிச்சயம் சந்திப்போம் அண்ணா.///
ReplyDeleteநிச்சயமாக...நிச்சயமாக...பிரபு....
//nalla santhippu. pakirvukku nanri. vaalththukkal///
ReplyDeleteரொம்ப நன்றி சரவணன்...
உங்கள் சந்திப்பை எங்களோடு பகிர்தமைக்கு நன்றி .
ReplyDeleteமனோ உங்களை சந்திச்சது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா [எனக்கும்தான்] நம்ம ஊர் குடும்பத்தை விட்டு பிரிஞ்சி தனியா இருக்குற நமக்கு வலை தள நண்பர்கள் நட்பு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமான்னு அவர் நெஞ்சில் கை வைத்து சொல்லும் போது...... என் கண் கசிந்தது....
ReplyDelete..... very touching! உங்கள் நட்பு மென்மேலும் சிறக்க, மனமார்ந்த வாழ்த்துக்கள். தினேஷ் எழுதும் கவிதைகள், அற்புதமாக இருக்கும். தவறாமல் வாசிக்கிறேன். மனித நேயம் மிளிரும். :-)
மனோ சார் தினேஷ் அருமையான நபர் .....அவர் கவிதை எழுதுவார் ....என்கிட்டே அவர் ஒரு சாங் கேட்டார் உங்களிடம் இருந்தால் கொடுக்கவும் இல்லை என்றல் அந்த cd பேர் என்னதுன்னு கேட்டு சொல்லவும் ......அது suchindrum தில இருந்து வாங்கியது என்று சொன்னார் .......எனக்கு சரியாக புரியவில்லை ...முடிந்தால் கேட்டு வைக்கவும் .......நான் ஊருக்கு போகும் பொது வாங்கி வந்து அனுப்புகிறேன் ......
ReplyDelete//உங்கள் சந்திப்பை எங்களோடு பகிர்தமைக்கு நன்றி //
ReplyDeleteமிகவும் நன்றி....
//..... very touching! உங்கள் நட்பு மென்மேலும் சிறக்க, மனமார்ந்த வாழ்த்துக்கள். தினேஷ் எழுதும் கவிதைகள், அற்புதமாக இருக்கும். தவறாமல் வாசிக்கிறேன். மனித நேயம் மிளிரும். :-)///
ReplyDeleteரொம்ப நன்றி சித்ரா மேடம்...
//suchindrum தில இருந்து வாங்கியது என்று சொன்னார் .......எனக்கு சரியாக புரியவில்லை ...முடிந்தால் கேட்டு வைக்கவும் .......நான் ஊருக்கு போகும் பொது வாங்கி வந்து அனுப்புகிறேன் ....///
ReplyDeleteபாபு, நானும் தினேஷும் வியாழன் அன்று சந்திக்கும் போது சொல்றேன்னு சொல்லிருக்கார் தினேஷ்...
அவர் பாடலின் வரிகளை சொல்வதால் [போனில்] எனக்கும் புரியவில்லை ஸோ பாடி காட்டினால்தான் தெரியும். ஆபீசில் இருந்து அவர் பாடினால் ஆபீசின் கதி.....[?]
எனவே வியாழன் அன்று உங்களுக்கு பதில் சொல்றேன் மக்கா.....
ம்ம்ம்... எங்களுக்கும் சந்தோஷம் ....
ReplyDeleteஉண்மையில் இந்த பதிவுலகத்தில் நல்ல உறவுகள் கிடைத்தன
ReplyDelete//ம்ம்ம்... எங்களுக்கும் சந்தோஷம் ....//
ReplyDeleteரொம்ப நன்றி மக்கா....
//உண்மையில் இந்த பதிவுலகத்தில் நல்ல உறவுகள் கிடைத்தன//
ReplyDeleteஉண்மைதான் நண்பா.....
உங்கள் சந்திப்பையும் நட்பையும் எங்களோடு பகிர்தமைக்கு நன்றி..
ReplyDeleteலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...
//உங்கள் சந்திப்பையும் நட்பையும் எங்களோடு பகிர்தமைக்கு நன்றி..
ReplyDeleteலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஓட்டா முக்கியம் நட்புதானே முக்கியம் மக்கா....
உங்கள் சந்திப்பையும் நட்பையும் எங்களோடு பகிர்தமைக்கு நன்றி..
ReplyDeleteha ha ha naanthaan uurukaayaa? m m kalakkal santhippu
ReplyDelete//ha ha ha naanthaan uurukaayaa? m m kalakkal santhippu//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா.....
.மிக இயல்பாக சொல்லிச் செல்லுகிறீர்கள்.
ReplyDeleteமுடிவில் உங்களில் மலர்ந்த சந்தோஷம் எங்களுக்குள்ளும்.
வாழ்த்துக்களுடன்....
வாழ்த்துக்கள் இருவருக்கும் ...
ReplyDeleteநாஞ்சிலாரே....வணக்கம்,உங்கள் நட்புக்கு வாழ்த்துகள்.
ReplyDelete//மிக இயல்பாக சொல்லிச் செல்லுகிறீர்கள்.
ReplyDeleteமுடிவில் உங்களில் மலர்ந்த சந்தோஷம் எங்களுக்குள்ளும்.
வாழ்த்துக்களுடன்....//
மிக்க நன்றி சார் வருகைக்கு....
//வாழ்த்துக்கள் இருவருக்கும் ... //
ReplyDeleteநன்றி நன்றி செந்தில்...
//நாஞ்சிலாரே....வணக்கம்,உங்கள் நட்புக்கு வாழ்த்துகள்.///
ReplyDeleteநன்றி நன்றி மக்கா ஜெர்ரி...
வாழ்த்துக்கள் இருவருக்கும்...........
ReplyDeleteநம்மளையும் நெனசுக்கோங்க தல........நானும் உங்க மாதிரிதான்......எதோ உங்கள மாதிரி நாலு பேரு நெனசிக்கிட்டதான் உண்டு......
சந்தோஷமாயிருக்கு மனோ !
ReplyDeleteமனோ,....படிச்ச போது ரொம்ப சந்தோஷமா இருந்தது...தினேஷ் சார் profile இல் ஒரு வரி இருக்கும்...அதை படிச்சு நிறைய வாட்டி ஆச்சர்ய பட்டு இருக்கேன்...நீங்களும் போயி படிச்சு பாருங்க..நிஜமான மனிதம் இருக்கும் அதில்...சுயநலத்தை எதுவும் இல்லாமல் கொடுக்கும் கஷ்டங்கள் தனக்கே கடவுள் கொடுக்கட்டும் நினைக்கிறது ரொம்ப பெரிய விஷயம்...அப்புறம் சித்ரா மேடம் பற்றி..அவங்க பதிவு மட்டும் சிறப்பு இல்ல...அவங்க குணமும் கூட வெகு சிறப்பு சகோதரா...ரொம்ப மகிழ்ச்சி !!
ReplyDelete//வாழ்த்துக்கள் இருவருக்கும்...........
ReplyDeleteநம்மளையும் நெனசுக்கோங்க தல........நானும் உங்க மாதிரிதான்......எதோ உங்கள மாதிரி நாலு பேரு நெனசிக்கிட்டதான் உண்டு...... //
நான் உங்க கட்சிதான் மக்கா......
//சந்தோஷமாயிருக்கு மனோ !//
ReplyDeleteநன்றி ஹேமா...
//மனோ,....படிச்ச போது ரொம்ப சந்தோஷமா இருந்தது...தினேஷ் சார் profile இல் ஒரு வரி இருக்கும்...அதை படிச்சு நிறைய வாட்டி ஆச்சர்ய பட்டு இருக்கேன்...நீங்களும் போயி படிச்சு பாருங்க..நிஜமான மனிதம் இருக்கும் அதில்...சுயநலத்தை எதுவும் இல்லாமல் கொடுக்கும் கஷ்டங்கள் தனக்கே கடவுள் கொடுக்கட்டும் நினைக்கிறது ரொம்ப பெரிய விஷயம்...அப்புறம் சித்ரா மேடம் பற்றி..அவங்க பதிவு மட்டும் சிறப்பு இல்ல...அவங்க குணமும் கூட வெகு சிறப்பு சகோதரா...ரொம்ப மகிழ்ச்சி !!//
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் ஆனந்தி....
தினேஷ் நல்ல திறமைசாலிங்க... நல்ல பேசி, பழகுங்க...
ReplyDeleteசின்ன அளவில பதிவர் சந்திப்பு நடத்தி முடிச்சிட்டீங்க... இரண்டு பெருந்தலைகள் சந்தித்தால் நிறைய தலைகள் உருளும் அது உண்மைனு நிரூபிச்சுட்டீங்க..
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இந்திய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்கள் பதிவு அளவிற்கு, இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்களும் ருசிகரம்..
ReplyDelete//தினேஷ் நல்ல திறமைசாலிங்க... நல்ல பேசி, பழகுங்க...
ReplyDeleteசின்ன அளவில பதிவர் சந்திப்பு நடத்தி முடிச்சிட்டீங்க... இரண்டு பெருந்தலைகள் சந்தித்தால் நிறைய தலைகள் உருளும் அது உண்மைனு நிரூபிச்சுட்டீங்க..//
மிகவும் நன்றி மக்கா............
//தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இந்திய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்.. //
ReplyDeleteஉங்களுக்கும் மற்றும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்...
///உங்கள் பதிவு அளவிற்கு, இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்களும் ருசிகரம்..///
ReplyDeleteஹா ஹா ஹா ஹா நன்றி பாரதி....
என்னைப் பத்தி என்ன சொன்னாரு ?
ReplyDelete//என்னைப் பத்தி என்ன சொன்னாரு ?//
ReplyDeleteவடை வாங்கி குடுக்க சொன்னாரு....ஹா ஹா ஹா ஹா...
இனிய சந்திப்பு இனம்புரியா ஆர்பரிப்பு ஆழ்கடல் அலையின் ஆனந்தம் என்னுள் அன்று எல்லாரும் சந்திக்கும் காலம் வரும் காத்திருப்போம் நண்பர்களே வாழ்த்துகூறிய அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்
ReplyDeleteஅடடே லேட்டாயிடுச்சே மக்கா, சொல்லி அனுப்பக் கூடாதா?
ReplyDeleteஅப்புறம் மறுபடி மீட் பண்ணீங்களா? அதையும் போட்ர வேண்டியதுதானே?
ReplyDelete//அடடே லேட்டாயிடுச்சே மக்கா, சொல்லி அனுப்பக் கூடாதா?//
ReplyDeleteதல உள்ளே வந்தாலே சந்தோஷம்தான்....
//அப்புறம் மறுபடி மீட் பண்ணீங்களா? அதையும் போட்ர வேண்டியதுதானே?//
ReplyDeleteஅதை தினேஷ் கவிதையாவே அவர் பதிவில் போட்ருக்கார்.......
[[வெளியே தெரியாத கண்டு பிடிக்க முடியாத மாதிரி எழுதிருக்கார்]]
ஆகா இதுவும் நடக்குதா.
ReplyDelete