மக்களின் துயரம்
தெரியாத உனக்கு
ஏன் இந்த அரியணை ஆசை....
கொத்து கொத்தாய்
தமிழ் மணிகள்
செத்த போது...
கலங்காத நீ
மூன்று சீட்டுக்காக
பாஷை தெரியாத...
உன் மைந்தனை
பேச்சு வார்த்தைக்கு
அனுப்பிய சூட்சுமம் என்ன...
கொள்ளையடித்த ராசனை
கதிரவன் என
கொண்டாடிய நீ...
அவனை அந்தரத்தில்
விட்டு விட்டு
ஆனந்தத்தில் திளைப்பதென்ன...
கோடம்பாக்கம்
ரியல் எஸ்டேட்
என எல்லா ஸ்தலத்திலும் உன்....
ஆக்டோபஸ் கரம்
பரவி கிலி ஏற்படுத்துகிறாய்
மக்களுக்கு பயம் ஏற்படுத்துகிறாய்...
இலவசம் இலவசம் என
மக்களை சிந்திக்க விடாமல்
டாஸ்மாக்கை மிளிர வைக்கிறாய்...
தமிழை தமிழ்நாட்டை
உன் [சொந்த] மக்களுக்காக
இருள வைத்து விட்டாயே.....
எண்ணிக்கொள் நாட்களை
வீறு கொள்ளும் வேங்கை மனம்
மக்களின் ஓட்டாக மாறி.....
உன் அரியாசனத்தை
சரிக்கும் அந்த நாள்
இதோ உன் வாசற்படியில்.....
நான் தான் ஃபர்ஸ்ட்டா.???
ReplyDeleteஇதுக்கு பேரு கவிதையா.???
ReplyDelete//ஏன் இந்த அரியணை ஆசை....//
ReplyDeleteவினாக்குறி வேண்டும்.. நிறுத்தற்குறியல்ல
//செத்த போது...
ReplyDeleteகலங்காத நீ//
ஒரே சொற்றொடர் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது..
//செத்த போது...//
ReplyDelete//கொண்டாடிய நீ...//
//என எல்லா ஸ்தலத்திலும் உன்....//
//மக்களின் ஓட்டாக மாறி.....//
தொடரபோகும் வரிகளுக்கு நிறுத்தற்குறியிடப்பட்டுள்ளது...
//அனுப்பிய சூட்சுமம் என்ன...//
ReplyDelete//ஆனந்தத்தில் திளைப்பதென்ன...//
விடுப்பட்டுள்ளன வினாக்குறிகள்..
//உன் [சொந்த] மக்களுக்காக//
ReplyDeleteகவிதைகளில் இப்படி பகர அடைப்புகள் பயன்படுத்தலாமா.???
//ஆனந்தத்தில் திளைப்பதென்ன...//
ReplyDeleteஅவரே ஆட்சி கவிழ்நிடுமோன்னு முழிக்கிறார் அவர போய் ஆனந்தத்துல இருக்கார்னு சொல்றீங்களே.!!
//உன் அரியாசனத்தை
ReplyDeleteசரிக்கும் அந்த நாள்
இதோ உன் வாசற்படியில்.....//
அந்த நன்னாளுக்காகக் காத்திருக்கிறோம்!கலக்கிட்டீங்க மனோ!
//கோடம்பாக்கம்
ReplyDeleteரியல் எஸ்டேட்//
இருவேறு துறைகளை குறிப்பிடும்போது தொடர்குறி தேவையில்லையா.???
//பரவி கிலி ஏற்படுத்துகிறாய்//
ReplyDeleteபுரியலையே.!!!
//வீறு கொள்ளும் வேங்கை மனம்
ReplyDeleteமக்களின் ஓட்டாக மாறி//
வேங்கைக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்கிறாப்புல தெரியலையே.!!
//உன் அரியாசனத்தை
ReplyDeleteசரிக்கும் அந்த நாள்
இதோ உன் வாசற்படியில்.//
ஓ.. நீங்க பச்சையா.. எனக்கு மஞ்சளும் புடிக்கல பச்சையும் புடிக்கல.. என்ன பண்ணலாம்.??? சரி உங்க பக்கத்துல ஒரு சீட் போடுங்க நானும் அங்கயே வந்துடுறன்..
//கலங்காத நீ
ReplyDeleteமூன்று சீட்டுக்காக
பாஷை தெரியாத...
உன் மைந்தனை
பேச்சு வார்த்தைக்கு
அனுப்பிய சூட்சுமம் என்ன...//
இதையேதான் நானும் கேட்கனும்னு நினைச்சேன் ஆனால் நம்ப கேட்க்கிறது அவிங்க காதுல விளவா போதுன்னு விட்டுட்டேன்.
Eavan seytha kalaikar ku ena . . Avaruku family than mukeyam. .
ReplyDeleteமக்களின் துயரம்
ReplyDeleteதெரியாத உனக்கு
ஏன் இந்த அரியணை ஆசை....
.... நல்ல கேள்வி! மக்கள் நலனுக்காக அரசியல்வாதிகள் என்று தான் உழைக்கப் போகிறார்களோ?
ஆகா... மனோ சார் பிளாக் நிறம் மாறுகிறது.. வாழ்த்துக்கள்.
ReplyDelete//கொத்து கொத்தாய்
ReplyDeleteதமிழ் மணிகள்
செத்த போது...
கலங்காத நீ
மூன்று சீட்டுக்காக
பாஷை தெரியாத...
உன் மைந்தனை
பேச்சு வார்த்தைக்கு
அனுப்பிய சூட்சுமம் என்ன...//
இது கவிதையோ அல்லது வேறு எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் சொன்ன செய்திகள் சரியாக படிப்பவரை தாக்குவது உண்மை.
மனோ கண்ணு.........நீறு நொம்ப நொம்ப பெர்ரீய சரக்கு தான்(தடி ) செல்லம்.
கலக்கல் சார்..இதை நான் கவிதைன்னு ஒத்துக்கிறேன்.
ReplyDeleteஅண்ணே என்ன இதெல்லாம் .....
ReplyDeleteச்சே .........என்னமா திங் பண்ணி இருக்கீங்க .................
கலின்ஜர் கண்ணை துறந்துடீங்க .................
எனக்கு ஒரு சந்தேகம் பக்கார்டி சாப்ட்டா கவிதை வருமா ?
மனதின் ரணம் வார்த்தைகளாய் வலிக்கிறது நண்பா!
ReplyDeleteமக்கா திடீர்னு சீரியஸ் ஆன உங்கள நம்ம கட்சிக்கு வரவேற்கிறேன்!
//உன் அரியாசனத்தை
ReplyDeleteசரிக்கும் அந்த நாள்
இதோ உன் வாசற்படியில்.....//
அந்த நன்னாளுக்காகக் காத்திருக்கிறோம்!
நரிகள் கூட்டம்
ReplyDeleteஅரங்கேற்றத் துடிக்கும் மன்னர் ஆட்சி...
http://maheskavithai.blogspot.com/2011/01/blog-post_20.html
mee the first....present anney note panikkonga..
ReplyDeleteவணக்கம் சகோதரம், கவிதை இன்றைய யதார்த்த நிலையினைச் சொல்லுகிறது, ஆனால் தேவையான இடங்களில் குறியீட்டு முறையினைக் கையாண்டு, கவி வரிகளை பிரித்து எழுதினால் அழகாக இருக்கும், இன்னும் முயற்சி செய்து எழுதினால் உங்களிடம் ஒளிந்திருக்கும் கவிஞன் வெளியே தெரிவான் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteமக்களின் துயரம்
ReplyDeleteதெரியாத உனக்கு
ஏன் இந்த அரியணை ஆசை?
கொத்து கொத்தாய்
தமிழ் மணிகள்
செத்த போது
கலங்காத நீ
மூன்று சீட்டுக்காக
பாஷை தெரியாத...(இங்கே விடை தொக்கி நிற்கிறது/ மறைந்திருக்கிறது) மிகுதி விடயங்களை இன்னோர் வரியில் எழுதியிருந்தால் சிறப்பாக இருக்கும்.)
உன் மைந்தனை
பேச்சு வார்த்தைக்கு
அனுப்பிய சூட்சுமம் என்ன?
கொள்ளையடித்த ராசனை
கதிரவன் என
கொண்டாடிய நீ...
அவனை அந்தரத்தில்
விட்டு விட்டு
ஆனந்தத்தில் திளைப்பதென்ன?
கோடம்பாக்கம்
ரியல் எஸ்டேட்
என எல்லா ஸ்தலத்திலும் உன்
ஆக்டோபஸ் கரம்(ஆக்டோபஸ்ஸை இன்று ஊகித்து அறிவதற்கு பயன்படுத்துகிறார்கள், இங்கே மக்கள் பணத்தில் வாழ்வோரின் கரத்தினை ஆக்டோபஸ் கரம் எனச் சொல்லுவது ஏற்க முடியாத ஒரு விடயம். ஆக்டோபஸ் கரத்திற்கு பதிலாக உன் பேராசை பிடித்த கரம்/ ஊழலில் திளைத்த கரம் இப்படிப் பொருத்தமான வார்த்தைகளைச் சேர்த்திருக்க வேண்டும்,
பரவி கிலி ஏற்படுத்துகிறாய்
மக்களுக்கு பயம் ஏற்படுத்துகிறாய்!
இலவசம் இலவசம் என
மக்களை சிந்திக்க விடாமல்
டாஸ்மாக்கை மிளிர வைக்கிறாய்!
தமிழை தமிழ்நாட்டை
உன் [சொந்த] மக்களுக்காக
இருள வைத்து விட்டாயே!
எண்ணிக்கொள், நாட்களை
வீறு கொள்ளும்
வேங்கை மனம்;
மக்களின் ஓட்டாக மாறி!
உன் அரியாசனத்தை
சரிக்கும் அந்த நாள்
இதோ உன் வாசற்படியில்!!!
அரியணை சரிக்கப்படும் நாளை எண்ணிக் காத்திருந்தாலும், அதனை இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து எழுதியிருந்தால் வாசகர் உள்ளங்களை வெல்லும் என்பதில் ஐயமில்லை.
நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறீங்க. எல்லாமே சூப்பர் கேள்விகள்.
ReplyDelete