Monday, March 7, 2011

மருத்துவம்

கொஞ்சம் கை மருத்துவம் பார்ப்போமா...
பனிரெண்டு மணி நேரமும் கணினி வேலை என்பதால், எனக்கு பல மாதங்களாக கண் எரிச்சலாகவே இருந்து வந்தது. ஒரு நாள் தற்செயலாக இதை மதுரை பொண்ணிடம் சொன்னேன். உடனே மருந்து சொன்னார்!!! அதாவது வெள்ளரிக்காயை சிலைஸ் பண்ணி [[நாலு பீஸ்]] தூங்கும் போது ஒவ்வொரு கண்ணிலும் ஒரு சிலைஸ் வச்சிட்டு தூங்கவும். முழிப்பு வந்ததும் அதை களைந்து விட்டு, அடுத்த இரண்டு பீசை எடுத்து கண்ணில் வைத்து விட்டு தூங்கவும் என, செய்து பார்த்தேன் ஆச்சர்யம்!!! காலையில் எழும்பும் போது கண்களில் நல்ல குளிர்ச்சியாக இருந்தது நல்ல ஃபிரஷ்  ஆக இருந்தது!!!! இதை இப்போது தினமும் செய்து வருகிறேன்.....கணினி வேலை பார்க்கும் நண்பர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்குமேன்னு இந்த பதிவை போட்டுருக்கேன் மதுரை பொண்ணிற்கு நன்றி கூறிக்கொண்டு....
 
அடுத்து, மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது..? நான்கு வருஷம் முன்பு என் செல்போன் நீரில் விழுந்து விட்டது அதை பார்த்த அரபி நண்பன் சொன்னான். உடனே பேட்டரியை கழற்றி விட்டு அரிசி சாக்கினுள் போனை குத்தி வைக்க சொன்னான். போடா கேனப்பயலேன்னு திட்டிட்டு கடைக்கு கொண்டு போயி பத்து தினார் அழ வேண்டியதா போச்சு. ஆனால் அரபி சொன்னது உண்மைதான் போல...!!! அண்மையில் ஒரு பதிவில் ஒரு பதிவர் பயனடைந்து விட்டு பதிவிட்டு இருந்தார். அரசி மூட்டை உபயம் சக்சஸ் என்று.... உடனே மொபைல தண்ணிக்குள்ளே தூக்கி வீசிராதீங்க.
 
தலைமுடி உதிகிறதா கவலையே வேண்டாம். தேங்காய் எண்ணையை சூடாக்கி சூடானதும் கொஞ்சூண்டு வெந்தயத்தை அள்ளி போட்டு பொறிஞ்சதும் வெந்தயத்தை களைந்து விட்டு, ஆற வைத்து ஒரு பாட்டலில் வைத்து கொண்டு தினமும் தேய்த்து வாருங்கள். முடி கொட்டாது, முடி சும்மா கரு கருன்னு இருக்கும். இது என் சொந்த அனுபவம்.
 
டிஸ்கி : அப்பாடா இனி யாரும் என்னை மக்களுக்கு பயனில்லாத பதிவே இவன் போடுறதில்லைன்னு சொல்ல முடியாதே....
 

51 comments:

  1. அருமையான குறிப்புகள்.அடிக்கடி இப்படி தெரிந்த டிப்ஸ்களை கொடுங்கள்.உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
  2. ரொம்ப பயனுள்ள பதிவு . வெள்ளரிக்காய் இல்லாத சமயத்தில் மல்லி விதைகளை நீரில் ஊற வைத்து சிறு மூட்டையாய் கட்டி கண்களில் வைக்கலாம். அப்பாடா ஒரு கருத்துரையிட எனக்கும் சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் தொடருங்கள் ...........

    ReplyDelete
  4. என்ன தல இப்போ நீங்க மருத்துவர் ஆகிட்டீங்க போல இருக்கு ....... நல்ல தகவல்

    ReplyDelete
  5. //டிஸ்கி : அப்பாடா இனி யாரும் என்னை மக்களுக்கு பயனில்லாத பதிவே இவன் போடுறதில்லைன்னு சொல்ல முடியாதே.

    இப்படின்னு தெரிந்திருந்தா உங்களுக்கு டாக்டம் பட்டம் குடுத்திருப்போமே

    ReplyDelete
  6. என்னாது இது.???

    என்னாது இது.???

    மனோ பக்கம் வேற காத்து வீசுது.. சோ பேட்..

    ReplyDelete
  7. ஹிட்ஸ் கவுண்டரையே வெறித்துப் பார்க்கும் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு இது.

    ReplyDelete
  8. என்ன அடுத்த டாக்டர் ஆகலாம்ன்னு கனவா அது டாக்டர் விஜய் இருக்கும் வரை முடியாது

    ReplyDelete
  9. மிக்க நன்றி நண்பா.ஆனால் இங்கு எப்போதுமே வெள்ளரிக்காய் கிடைக்காது.இருப்பினும் நான் கூறியதை மதித்து செய்து பார்த்து உள்ளீர்கள்.நன்றி.

    ReplyDelete
  10. பயனுள்ள பகிர்வு... நன்றி.

    ReplyDelete
  11. என்னது இந்த வெந்தயத்தை தலைக்கு தேய்ச்சா ஒன்னும் ஆகிராதே.. மக்கா எதுவும் உள் குத்து இல்லையே.. ஏன் சொல்றேன் என்றால் நாளை பின்ன நான் தலையில் கை வச்சு சோகமா உக்கார்ந்தா தலையில் கை வச்சுக்க முடி இருக்கனும்ன்ல..

    ReplyDelete
  12. மக்கா அந்த அரிசி மூடை படம் வந்து உங்களோட ஒரு வேளை சாப்பாடாமே.. பேசிகிறாங்க..

    ReplyDelete
  13. //சாகம்பரி said...
    ரொம்ப பயனுள்ள பதிவு . வெள்ளரிக்காய் இல்லாத சமயத்தில் மல்லி விதைகளை நீரில் ஊற வைத்து சிறு மூட்டையாய் கட்டி கண்களில் வைக்கலாம். அப்பாடா ஒரு கருத்துரையிட எனக்கும் சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி.//

    அட இது புது தகவலா இருக்கே!!!

    ReplyDelete
  14. //March 7, 2011 6:07 AM
    மதுரை பொண்ணு said...
    மக்கா அந்த அரிசி மூடை படம் வந்து உங்களோட ஒரு வேளை சாப்பாடாமே.. பேசிகிறாங்க//

    இதை இன்னும் கக்கு மாணிக்கம் பாக்கலை போல...
    அவருதான் என்னை அரிசி மூட்டைன்னு திட்டுற பார்ட்டி அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  15. ஆஹா....மிகவும் பயனுள்ள பதிவு..... இந்த குறிப்புகளுக்கு நாஞ்சில் சாரே guarantee கொடுத்து இருக்கிறார்.

    ReplyDelete
  16. //மதுரை பொண்ணு said...
    என்னது இந்த வெந்தயத்தை தலைக்கு தேய்ச்சா ஒன்னும் ஆகிராதே.. மக்கா எதுவும் உள் குத்து இல்லையே.. ஏன் சொல்றேன் என்றால் நாளை பின்ன நான் தலையில் கை வச்சு சோகமா உக்கார்ந்தா தலையில் கை வச்சுக்க முடி இருக்கனும்ன்ல..//

    வெந்தயத்தை இல்லை மக்கா வெந்தயம் பொரிச்ச தேங்காய் எண்ணெய்....

    ReplyDelete
  17. //ராஜகோபால் said...
    என்ன அடுத்த டாக்டர் ஆகலாம்ன்னு கனவா அது டாக்டர் விஜய் இருக்கும் வரை முடியாது//

    நம்மை வளர விடாம தடுக்குரதுக்குன்னே வெறி பிடிச்சி அலையுறாங்கைய்யா...

    ReplyDelete
  18. //தம்பி கூர்மதியன் said...
    என்னாது இது.???

    என்னாது இது.???

    மனோ பக்கம் வேற காத்து வீசுது.. சோ பேட்..//

    ஹா ஹா ஹா நாங்களும் கலந்து லந்து குடுப்போம்ல...

    ReplyDelete
  19. கம்ப்யூட்டர் மேட்டர் ஏற்கனவே கேள்விப்பட்டதுன்னாலும் அதுக்கு இவ்வளவு எஃபக்ட் இருக்கும்னு முன்னாடியே தெரியாம போச்சே.....? நல்ல வேள சொன்ன மக்கா.... !

    ReplyDelete
  20. மாப்பு அடுத்து சேலத்துல ஒரு கிளினிக்கு, ராஜ்டீவில ப்ரோக்ராம் அப்பிடி இப்பிடின்னு டெவலப் பண்ணிட வேண்டியதுதானே?

    ReplyDelete
  21. anna super anna.......

    nanum kelvi pattu iruken anna
    very useful

    ReplyDelete
  22. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    டாகுடர் மனோ வால்க......!//

    யோவ் மெல்ல சொல்லும்யா....
    நம்ம எனிமி டாகுடர் விஜய்ய கூப்புடுறதா நினச்சி வந்துர போறான....

    ReplyDelete
  23. அதாவது பட்டது என்னவென்றால் ...இன்னில இருந்து சேலம் சித்த வைத்தியர் மாதிரி ..மனோ அவர்கள் பெஹரைன் சித்த வைத்தியர் என்று அன்போடு அழைக்க பெறுவீர் ...

    ReplyDelete
  24. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மாப்பு அடுத்து சேலத்துல ஒரு கிளினிக்கு, ராஜ்டீவில ப்ரோக்ராம் அப்பிடி இப்பிடின்னு டெவலப் பண்ணிட வேண்டியதுதானே?//

    ஏன் சவுதில வச்சா என்னவாம்....

    ReplyDelete
  25. அனைத்து மருத்துவ தகவல்களும் மிகவும் எளிமையாகவும்.... சுவாரஸ்யமாகவும் உள்ளது அண்ணா..!!! தொடரட்டும் தங்கள் சேவை.

    ReplyDelete
  26. //இம்சைஅரசன் பாபு.. said...
    அதாவது பட்டது என்னவென்றால் ...இன்னில இருந்து சேலம் சித்த வைத்தியர் மாதிரி ..மனோ அவர்கள் பெஹரைன் சித்த வைத்தியர் என்று அன்போடு அழைக்க பெறுவீர் ...//

    இதுக்கு பதிலா என்னைய தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சிருக்கலாம்....ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  27. நாட்டுக்கு பயனுள்ள பதிவு நாஞ்சிலார்........நாளைய சரித்திரம் உங்களையும் நினைவில் கொள்ளும் ஹிஹி!

    ReplyDelete
  28. நிறைய பனனுள்ள தகவல்கள். தொடருங்க...

    ReplyDelete
  29. நல்ல பதிவு மக்கா

    ReplyDelete
  30. //விக்கி உலகம் said...
    நாட்டுக்கு பயனுள்ள பதிவு நாஞ்சிலார்........நாளைய சரித்திரம் உங்களையும் நினைவில் கொள்ளும் ஹிஹி!//

    என்னாது சரித்திரமா.....யோவ் திட்டுறதா இருந்தா ஓரமா கூப்பிட்டு நாலு திட்டு திட்ட வேண்டியதுதானே அதை விட்டுபுட்டு சரித்திரம் பூகோளம்'னுட்டு அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  31. மதுரை பொண்ணுக்கும், நாஞ்சில் மனோவுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துகள் -டிப்ஸ்க்கு.

    ReplyDelete
  32. வேற வேலை இல்லைன்னு நாள் முழுக்க face book ல குந்திகினு அரட்ட அடிசிகினுருந்தா கண்ணு ,வாயி இன்னம் உள்ளதெல்லாம் எரிச்சல்தான் வரும் கண்ணு. மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டா நம்ம ஜெயலானிய கேட்டா சொல்லுவாரு எப்படி சரி பண்றதுன்னு. ஏன்னா அவருதான் வாஷிங் மெஷின்ல அடிகடி மொபைல் போனை போட்டு வாஷ் பண்ணும் பேர்வழி.
    யோவ் , வெந்தயம் தலைக்கு தேய்கிற எண்ணையில போடுறது நம்ம பாட்டி காலத்து வழக்கம் .வேண்ணா நம்ம மகளிர் அணிய கேட்டுக்கோ நைனா.. என்னமோ புச்சா தெரிஞ்ச மேரிக்கி படம் போட்டு எழ்திகினா இன்னா பெர்ரிய டுபுக்கா ..ஆக்காங்!

    ReplyDelete
  33. //கக்கு - மாணிக்கம் said...
    வேற வேலை இல்லைன்னு நாள் முழுக்க face book ல குந்திகினு அரட்ட அடிசிகினுருந்தா கண்ணு ,வாயி இன்னம் உள்ளதெல்லாம் எரிச்சல்தான் வரும் கண்ணு. மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டா நம்ம ஜெயலானிய கேட்டா சொல்லுவாரு எப்படி சரி பண்றதுன்னு. ஏன்னா அவருதான் வாஷிங் மெஷின்ல அடிகடி மொபைல் போனை போட்டு வாஷ் பண்ணும் பேர்வழி.
    யோவ் , வெந்தயம் தலைக்கு தேய்கிற எண்ணையில போடுறது நம்ம பாட்டி காலத்து வழக்கம் .வேண்ணா நம்ம மகளிர் அணிய கேட்டுக்கோ நைனா.. என்னமோ புச்சா தெரிஞ்ச மேரிக்கி படம் போட்டு எழ்திகினா இன்னா பெர்ரிய டுபுக்கா ..ஆக்காங்!//

    நான் அங்கிட்டு வந்தேன்...மகனே கழுத்தை கடிச்சி வச்சிருவேன் ஆமா...

    ReplyDelete
  34. புரண்டு படுக்கும் போது வெள்ளரிக்காய் கீழ விழுந்துடாது ? (கட்டிவச்சாலும்தான்)#டவுட்டு

    ReplyDelete
  35. ////கக்கு - மாணிக்கம் said...
    மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டா நம்ம ஜெயலானிய கேட்டா சொல்லுவாரு எப்படி சரி பண்றதுன்னு. ஏன்னா அவருதான் வாஷிங் மெஷின்ல அடிகடி மொபைல் போனை போட்டு வாஷ் பண்ணும் பேர்வழி.//

    விடுங்க ..நம்ம மனோ ஒரு அரிசி மூட்டைன்னு சொல்லாம சொல்லுறாரு..ஹி..ஹி... :-))

    ReplyDelete
  36. வெள்ளரி காயை உள்ளுக்குள்ளே தின்னா கண்ணுக்கும் ,தலைக்கும் நல்லதுதானே எப்படி ஒரே கல்லுல மூனு மாங்கா ஹா..ஹா..

    ReplyDelete
  37. thakaval arumai.. vellari udane payanbatukku varum.......vaalththukkal

    ReplyDelete
  38. வணக்கம் நாட்டு மருத்துவம் பற்றிய நச்செனும் தகவல்கள் அருமை. இது பற்றி விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு மருத்துவ அறிவு அதிகமாக இல்லை. ஆதலா. ஐ ஆம் சாறி.

    ReplyDelete
  39. மருத்துவ குடிதாங்கி எங்கள் ஆருயிர் ஐயா மனோ அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ....................

    ReplyDelete
  40. "கக்கு - மாணிக்கம் said...

    வேற வேலை இல்லைன்னு நாள் முழுக்க face book ல குந்திகினு அரட்ட அடிசிகினுருந்தா கண்ணு ,வாயி இன்னம் உள்ளதெல்லாம் எரிச்சல்தான் வரும் கண்ணு. மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டா நம்ம ஜெயலானிய கேட்டா சொல்லுவாரு எப்படி சரி பண்றதுன்னு. ஏன்னா அவருதான் வாஷிங் மெஷின்ல அடிகடி மொபைல் போனை போட்டு வாஷ் பண்ணும் பேர்வழி.
    யோவ் , வெந்தயம் தலைக்கு தேய்கிற எண்ணையில போடுறது நம்ம பாட்டி காலத்து வழக்கம் .வேண்ணா நம்ம மகளிர் அணிய கேட்டுக்கோ நைனா.. என்னமோ புச்சா தெரிஞ்ச மேரிக்கி படம் போட்டு எழ்திகினா இன்னா பெர்ரிய டுபுக்கா ..ஆக்காங்!"

    >>>>>>>>>>>>>>

    "MANO நாஞ்சில் மனோ said...
    நான் அங்கிட்டு வந்தேன்...மகனே கழுத்தை கடிச்சி வச்சிருவேன் ஆமா... "

    >>>>>>>>>>>>>>>>>>>>>>

    ஆத்தா ஐயோ பயமா இருக்கு இவங்க பேசுறத பாத்தா!!

    ReplyDelete
  41. புதிய டாகுடறு அண்ணன் மனோ வாழ்க...

    ReplyDelete
  42. //ஜெய்லானி said...
    வெள்ளரி காயை உள்ளுக்குள்ளே தின்னா கண்ணுக்கும் ,தலைக்கும் நல்லதுதானே எப்படி ஒரே கல்லுல மூனு மாங்கா ஹா..ஹா..//

    மருத்துவத்துக்கே மருத்துவம் சொல்றதுல உம்மை அடிச்சிக்க ஆளே இல்லை ஒய்.....

    ReplyDelete
  43. //FOOD said...
    பஹ்ரைனில் கிளினிக் கல்லா கட்டுதா?//

    அய்யா ஆபீசரு என் கடைக்கும் ரெய்டு வந்துராதீங்க...
    வேணும்னா ஒரு ரெண்டு கிலோ வெள்ளரிக்காய் அனுப்பி வச்சிர்றேனுங்க...

    ReplyDelete
  44. ரொம்ப பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  45. //பலே பிரபு said...
    புரண்டு படுக்கும் போது வெள்ளரிக்காய் கீழ விழுந்துடாது ? (கட்டிவச்சாலும்தான்)#டவுட்டு//

    அப்போ ஆணிதான் அடிக்கணும்....

    ReplyDelete
  46. வெள்ளரிக்காய் மருத்துவம் நானும் செய்துகொண்டிருக்கிறேன். பலன் நிச்சயம்.

    //டிஸ்கி : அப்பாடா இனி யாரும் என்னை மக்களுக்கு பயனில்லாத பதிவே இவன் போடுறதில்லைன்னு சொல்ல முடியாதே....//

    அதானே பார்த்தேன்.. மனோவா கொக்கா..

    ReplyDelete
  47. முதலும் மூன்றாவதும் ட்ரை பண்ணி எழுதவேண்டும்.. வெள்ளரியை வெட்டி வச்சு கட்டிட்டா என்ன?? திருப்ப முழிச்சு ரெண்டுதடவை வைப்பதற்கு பதில்???

    ReplyDelete
  48. முருங்கக்காய்? இல்ல... சும்மா கேட்டேன்.

    ReplyDelete
  49. சித்த வைத்தியர் சின்னாளப்பட்டி மனோ வாழ்க

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!