உன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடித்தாலும் தாகம்
தணியவில்லையடி...
உன்னை மறக்க
நினைக்கும் நினைவலைகள்
உன்னோடு சாம்பலாகி விட்டதோ
ஆழியில் கரைந்து விட்டதோ...
உன்மத்தம் பிடித்தவனாய்
இருப்பது போல் உணர்கிறேன்
உன் நினைவின் நிறைவு
என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...
எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....
உன் நினைவை சுமந்து
தினம் தினம்
நான் எரிந்து போவதற்கா
என்னை உயிரோடு வாழ விட்டாய்....
நீ வாங்கிய சத்தியம்
என்னில் எரிமலையாய்
அது நான் உறங்கும்
கல்லறையிலும் தொடரும்...
இதற்க்கு [நமக்கு]
சாட்சியாக அந்த
ஒற்றை பனை மரம்
ஜீவித்தும் இருக்கும்....
.
முதல் மழை
ReplyDelete>>உன்மத்தம் பிடித்தவனாய்
ReplyDeleteஇருப்பது போல் உணர்கிறேன்
ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது
>>சாட்சியாக அந்த
ReplyDeleteஒற்றை பனை மரம்
ஜீவித்தும் இருக்கும்....
ஃபினிஷிங்க் டச்ல கூட மக்கா கள் இறக்கும் மரம் தான் சிக்குச்சா.. அடங்கொ
ஒரு ஆளை லவ் பண்ணுனா பரவால்லை. நாலஞ்சு ஃபிகரை லவ் பண்ண வேண்டியது.. ஒரே ஒரு கவிதையை 5 காப்பி ஜெராக்ஸ் எடுத்து தர வேண்டியது.. மக்கா... ஏய்யா இப்படி?
ReplyDeleteகுடித்தாலும் தாகம்
ReplyDeleteதணியவில்லையடி ----அப்படி என்னதான் குடிச்சே..
உன்னோடு சாம்பலாகி விட்டதோ --- அப்ப ஆள் அவுட்டா?
ReplyDeleteஎன்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...-- அப்ப நீங்க ஜி.எச் - ல அட்மிட் ஆயிருக்கிங்களா?
ReplyDeleteநண்பா... சும்மா கலாய்த்தல்...
ReplyDeleteமற்றபடி காதலியின் பிரிவின் வலி கவிதையில் தெரிக்கிறது... அருமையான கவிதை..
ReplyDeleteஅசத்தலான கவிதை..
ReplyDeleteமாப்ள எங்க இருக்க..
ReplyDeleteபார்யா..
ReplyDeleteஇது பதிவு போட்டு எங்கையோ ஊர் சுத்துது...
9...
ReplyDelete10...
ReplyDeleteவழக்கம் போல பதில் சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்...
ReplyDeleteஹே ஹே.. பெரிய இம்ப்ரூவ்மண்ட்.. பத்தி நல்லா பிரிச்சிருக்கேளே.!!
ReplyDeleteகுறியீடுகள் மிஸ்ஸிங்.. அத வுடுங்க..
வீட்டம்மாக்கு இந்த கவிதைய காமிச்சீங்களா.???
உங்கள இங்கிட்டு இருந்து அங்கிட்டு போயி வேலை பாக்க சொன்னா மனைவிய உட்டுபுட்டு வேற ஒரு ஆள புடிச்சு.. அவங்கள சாக வேற அடிச்சிருக்கீங்களே.!! பாவம் அவுங்க..
//அது நான் உறங்கும்
கல்லறையிலும் தொடரும்...//
எப்ப நடக்கும்.? எப்ப நடக்கும்.?
//இதற்க்கு [நமக்கு]
சாட்சியாக அந்த
ஒற்றை பனை மரம்
ஜீவித்தும் இருக்கும்....//
இதுல குழந்தை வேறயா.??? வீட்டம்மாவுக்கு துரோகம் பண்றீங்க தாத்தா.!!
//ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது//
ReplyDeleteஅடடே மப்புள இவ்ளோ நல்ல கவிதையெல்லாம் எழுத வருமோ??
///ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது///
ReplyDelete----------jothi said...
ரிபீட்டோய் ........
என்னயா? கவிதைய பத்தி பேசாம தண்ணிய பத்தி பேசுறிங்க.. இன்னைக்கு எல்லோரும் மப்பு போல...
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
// இதுல குழந்தை வேறயா.??? வீட்டம்மாவுக்கு துரோகம் பண்றீங்க தாத்தா.!!//
ReplyDelete------தம்பி கூர்மதியன் said...
ரிபீட்டோய் ரிபீட் ....
////
ReplyDeleteஉன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடித்தாலும் தாகம்
தணியவில்லையடி.../////
ஓ.. நீங்க அதுக்காகத்தான் குடிக்கிறிங்களா...
///
ReplyDeleteஎனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....////
செம டச்சிங்..
போங்க யாரும் இல்ல நானும் கிளம்பியாச்சி...
ReplyDeleteகவிதை அருமை..
ReplyDeleteஅதை விட நண்பர்கள் வெளிக்கொண்டு வந்த பல உண்மைகள் அருமையிலும் அருமை...
சோ "கவிதைக் காட்டில் ஒரு கலாய்ப்பு".. இது தான் சரியான தலைப்பு.. எப்புடி...??
இதுக்குத்தான் தம்பி சிபியோட விமர்சனத்த அதிகமா படிக்காத மாம்ஸ்னு சொன்னேன் கேட்டாத்தானே!
ReplyDeleteஉன் நினைவில்
ReplyDeleteஉள்ளம் உருகியேவடித்த
உங்கள் கவியினிலே
உண்மைக்கதைகளுடன்
உள்ளத்து உணர்வுகளும்
அழகாக வெளிப்பட்டுள்ளது
அருமை அருமை....
நல்லா எழுதி இருக்கீங்க...
ReplyDeleteதமிழ்மணத்துல வோட்டு போடுறதுக்குள்ள விடிஞ்சிரும் போல....
கவிதை நன்றாக உள்ளது.
ReplyDeleteகவிதா..கவிதா...அடச்சே கவித கவித...ஹி ஹி
ReplyDeleteநல்ல கவிதை, நாஞ்சிலார்.
ReplyDeleteஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது//
நிசமா, மனோ அங்கிள்.
உன்மத்தம் பிடித்தவனாய்
ReplyDeleteஇருப்பது போல் உணர்கிறேன்
உன் நினைவின் நிறைவு
என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...
பிரிவின் துயரம் சொல்லும் கவிதை... மனோ
அருமையான கவிதை...
ReplyDeleteஎனை துடிக்க வைத்து விட்டு
ReplyDeleteநீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....
உன் நினைவை சுமந்து
தினம் தினம்
நான் எரிந்து போவதற்கா
என்னை உயிரோடு வாழ விட்டாய்....//
வணக்கம் சகோதரம், இக் கவிதையினை இரு பொருளில் தந்துள்ளீர்கள். உங்களைப் பெற்ற அன்னைக்காகவும், உங்கள் மனங் கவர்ந்த நாயகிக்காகவும் இக் கவிதை புனையப்பட்டது போல இருக்கிறது. வாழ்த்துக்கள் மனோ.
அவள் நினைவைச் சுமந்து வாழ்வதுவே சுகம் என கவிஞர்கள் எழுதி வரும் காலத்தில், நீங்கள் மட்டும் எரிந்தபடி வாழ்கிறார்கள். காதல் பிரிவின் வலியினையும், ஒரு உறவை இழந்த சோகத்தினையும் கவிதையில் சுட்டியுள்ளீர்கள்.
உன் நினைவு- மனோவின் கவிதையின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாய் மனதைத் தொடுகிறது!