Tuesday, March 8, 2011

தமிழனை ஓரங்கட்டும் வட இந்திய ஊடகம்

தமிழனை ஓரங்கட்டும் வட இந்திய ஊடகம்...

வட இந்தியர்களுக்கு தமிழரை பற்றிய அறியாமையும் இருக்கிறது என்றே எனக்கு கருத தோன்றுகிறது.
 இது இன்று நேற்றல்ல காலம் காலமாக நடந்து வரும் அநியாயம்.
ஒரே ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள். நமது பாட புத்தகத்தில் வரலாறு புக்கில் அனைத்து
வட இந்திய மன்னர்கள், போராட்ட தியாகிகள் பற்றியும் அவர்கள் செய்த தொண்டும்  வீரம் பற்றியும் நம்
பாட புஸ்தகத்தில் உண்டு. அம்பேத்கர் முதல் கொண்டு திலகர் வரை நமக்கு தெரியும் அதே வேளை ....
வட இந்தியாவில் போயி கேட்டு பாருங்கள்...காமராஜரை, அண்ணாவை, கட்டபொம்மனை,
வவுசி'யை,மருது பாண்டியரை,கொடிகாத்த குமரனை, சேரனை, சோழனை, பாண்டியனை....தெரியுமான்னு...?
ஒரு நாதாரிக்கும் தெரியாது..[[மெத்த படிச்சவனுக்கும் தெரியுமோ தெரியாதோ]]
இதுக்கு முக்கிய காரணமே நம்ம ஆட்சியாளர்கள்தான்....தமிழை செம்மொழி ஆக்கியவர்கள் முதலில்
வட இந்திய பாட புஸ்தகத்தில் [[எப்பவோ செய்திருக்க வேண்டியது]] தமிழை பற்றி தமிழனை பற்றி தமிழன் வரலாறை பற்றி குணத்தை பற்றி,
வீரம், விவேகம்,காதல்,பற்றி சொல்ல தவறி விட்டார்கள்...[[அப்படி சொல்லபட்டால் வருங்கால
சந்ததியினர் இதை அறிந்து நம்மையும் மதிப்பார்கள்]]
ஆகவேதான் இன்றைக்கு தமிழன் சாகும் போது, தமிழை தமிழனை பற்றி தெரியாத சில மானங்கெட்ட  வட இந்தியா மீடியாக்கள்.. கண்டு கொள்வதில்லை..!!!! அதே வேளை சீக்கியனும், மற்ற வட இந்தியனும் சாகும் போது மட்டும் குய்யோ முய்யோ'ன்னு கத்துரானுக..
மொத்தத்தில் தமிழன் பெருமையை உணர்த்த, குறிப்பாக வட இந்தியாவில், நம் ஆட்சியாளர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்!!!!!!!
 
டிஸ்கி : நண்பன் கக்கு மாணிக்கத்தின் பதிவை படிச்சுட்டு எனக்கு வந்த கோபம் இது. அவருக்கு நான் போட்ட கமெண்ட்ஸ்'தான் இது. கொஞ்சம் விரிவு படுத்தி போட்டுருக்கேன்.
 
டிஸ்கி : நான் மும்பை'வாசி எனக்கு தெரியும், அனுபவித்து இருக்கிறேன். உதாரணமா தமிழன் என்று  சொன்னாலே ஒரு அடி கூடுதலாகவே கிட்டும் போலீசிடமிருந்து கூட......

52 comments:

  1. மொழியென்பது எல்லைத்தாண்ட வேண்டும்..
    எல்லைத் தாண்டாமல் பார்த்துக் கொண்டது நாம்தான்..
    ஒரு வேளை இந்தியை நாம் படித்திருந்தால் தமிழை அவர்கள் படித்திருக்க ஒரு வாய்ப்பு வந்திருக்குமோ என்னவோ..

    ReplyDelete
  2. நிச்சயமாக் பல தமிழ் வீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள் பிரபாகரன் போல

    ReplyDelete
  3. நம் மாநில தலைவர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதில் நியாயம் இல்லை.. நாம் படிக்கும் வரலாற்றைதான் அவர்கள் படிக்கிறார்கள்..
    வா.உ. சி. கொடிக்காத்தகுமரன்.. பாரதி..
    காமராஜர் இவர்களின் வரலாற்றை படிக்காத யாரும் இந்தியராக இருக்கமுடியாது..

    ReplyDelete
  4. அது என்னவோ பல்வேறு காலகட்டத்தில் தமிழக மூவேந்தர்கள் பல முறை வடக்கு நோக்கி படையெடுத்தும் ஆட்சியில் நிலைக்கமுடியால் போய்விட்டது..

    ReplyDelete
  5. // உதாரணமா தமிழன் என்று சொன்னாலே ஒரு அடி கூடுதலாகவே கிட்டும் போலீசிடமிருந்து கூட//

    இப்படி கோடி கோடியா கொள்ளை அடிச்ச ...அடிக்க மட்டுமா செய்வாங்க கொலை கூட பண்ணுவாங்க மக்கா ...

    எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் சொல்லி நமக்கு எதுவும் புரியாத மாதிரி ஆகி வச்சிட்டாங்க ..நாதரி பசங்க ..அவங்க கொள்ளை அடிக்கிறதுக்கு நாம அடி வாங்க வேண்டியதா இருக்கு ...
    (ஆமா மக்கா உங்களுக்கு அடி பலமா விழுந்திருக்கு போல ..எழுத்தில் வேகம் தெரியுது ..சொம்பு ரொம்ப நசுங்கிருச்சோ ...)

    ReplyDelete
  6. தமிழகம் தென் மூலையில் அமைந்து விட்டால் என்னவோ நம் மொழி தென் இந்தியால் மட்டுமே நின்று விட்டது..

    மத்திய பகுதியில் அமைந்திருந்தால் இந்தி போன்று இந்தியா முழுவதும் பரவ வழிகிடைத்திருக்கும்..

    ReplyDelete
  7. ///
    March 8, 2011 6:33 AM
    இம்சைஅரசன் பாபு.. said...

    // உதாரணமா தமிழன் என்று சொன்னாலே ஒரு அடி கூடுதலாகவே கிட்டும் போலீசிடமிருந்து கூட//

    இப்படி கோடி கோடியா கொள்ளை அடிச்ச ...அடிக்க மட்டுமா செய்வாங்க கொலை கூட பண்ணுவாங்க மக்கா ...

    எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் சொல்லி நமக்கு எதுவும் புரியாத மாதிரி ஆகி வச்சிட்டாங்க ..நாதரி பசங்க ..அவங்க கொள்ளை அடிக்கிறதுக்கு நாம அடி வாங்க வேண்டியதா இருக்கு ...
    (ஆமா மக்கா உங்களுக்கு அடி பலமா விழுந்திருக்கு போல ..எழுத்தில் வேகம் தெரியுது ..சொம்பு ரொம்ப நசுங்கிருச்சோ ...)
    ///////


    தமிழ் என்று சொல்லி தம்மை இங்கேயே தங்க வைத்து விட்டது உண்மைதான்..
    தமிழுக்கு தனித்தன்மை உண்டு அதை உலகம் முழுவதும் பரப்பினால்தானே பெருமை..

    ReplyDelete
  8. நாஞ்சிலார், உண்மை தான். அரசியல் வாதிகளுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்????

    ReplyDelete
  9. என்னய்யா நம்ம கடையில போண்டா பஜ்ஜி எல்லாம் கவிதை அரசர் விக்கிராறு ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  10. //(ஆமா மக்கா உங்களுக்கு அடி பலமா விழுந்திருக்கு போல ..எழுத்தில் வேகம் தெரியுது ..சொம்பு ரொம்ப நசுங்கிருச்சோ ...)//

    நீர்தாம்யா கரெக்ட்டா கண்டு பிடிக்கிறீரு....

    ReplyDelete
  11. வடக்கு, தெற்கு பார்காமல் எழுத வேண்டியது இயல்பாக வர வேண்டும். இல்லை நம் ஊடகங்கள் வடக்கை பகிஷ்கரிக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  12. மிகவும் ஆழ்ந்து யோசிக்க வைக்கும் கருத்துப்பகிர்வு அண்ணே.,!!!

    ReplyDelete
  13. நியாயமான கருத்துக்கள் மனோ, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நம்ம சுயமரியாதை பற்றி அவங்களுக்கு என்ன சார் தெரியும் . அப்புறம் எப்படி நம்ம வரலாறு தெரியும் .

    திமுகவிற்கு 121 தொகுதிகளை ஒதுக்கி சுயமரியாதையை காத்த சோனியாவுக்கு கலைஞர் பாராட்டு http://www.sureshkumar.info/2011/03/121.html

    ReplyDelete
  15. சிந்திக்க வேண்டிய விஷயம். விழித்துகொண்டால் விவேகம்தான். நல்ல பகிர்விற்கு மனோவிற்கு ஒரு ஷொட்டு!

    ReplyDelete
  16. சொம்பு நசுங்கியதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  17. Sorry, I don't know how to type in Tamil in here. So resorting to national language now!

    Once I went with my colleagues(all desis, mostly northies and some tamil folks and some Americans). During the lunch one of the northie friends said South Indians didn't participate in freedom struggle. What an outrageous statement it was? That too coming from a well educated person. I gave it back to him then and there.
    Now think about what not so educated north indian will be thinking of South Indians in general.

    This article partly explains the reason behind their ignorance. - Sri

    ReplyDelete
  18. தலைவா நான் பார்த்தவரையில் வட இந்தியருக்கு அரசியல் ஞானம் நம்மை விட அதிகம். அவர்கள் தென்னகத்தை பற்றி நன்றாக பெருமையாகத்தான் சொல்கிறார்கள். ஊடகத்தை விடுங்கள். ஊடகங்கள் தன் பணியை சரியாக செய்தால் உலகம் திருந்திவிடுமே.?

    ReplyDelete
  19. நீங்க சொல்றது உண்மைதான் ஆனா மும்பை இன்றும் பல தமிழர்களுக்கு வாழ்வளிக்கும் ஊராகத்தான் உள்ளது

    ReplyDelete
  20. //ஒரு வேளை இந்தியை நாம் படித்திருந்தால் தமிழை அவர்கள் படித்திருக்க ஒரு வாய்ப்பு வந்திருக்குமோ என்னவோ.//

    எத்தன வடக்கூர்காரங்க மலையாளம், கன்னடம், தெலுகு படிச்சிருக்காங்கன்னு சொல்ல முடியுமா? இவிங்கெல்லாம் இந்தியும் படிக்கறாங்களே. அதுக்காகக் கேட்டேன்.

    ReplyDelete
  21. // நாம் படிக்கும் வரலாற்றைதான் அவர்கள் படிக்கிறார்கள்..
    வா.உ. சி. கொடிக்காத்தகுமரன்.. பாரதி..
    காமராஜர் இவர்களின் வரலாற்றை படிக்காத யாரும் இந்தியராக இருக்கமுடியாது.//

    **During the lunch one of the northie friends said South Indians didn't participate in freedom struggle. What an outrageous statement it was? That too coming from a well educated person. I gave it back to him then and there.**

    ஐயகோ, அந்த வடக்கூர்காரர் இந்தியர் இல்லையா?

    ReplyDelete
  22. //தமிழகம் தென் மூலையில் அமைந்து விட்டால் என்னவோ நம் மொழி தென் இந்தியால் மட்டுமே நின்று விட்டது..

    மத்திய பகுதியில் அமைந்திருந்தால் இந்தி போன்று இந்தியா முழுவதும் பரவ வழிகிடைத்திருக்கும்..//

    மத்திய மாகாணங்களில் பேசப்படும் மொழிகளான மராத்தி, ஒரியா, பெங்காலி, குஜராத்தி போன்ற மொழிகள் எதுவும் ஸ்டேட்ட வுட்டு ஸ்டேட் தாண்டி வளர்ந்திருக்கிற மாதிரி தெரியலைங்களே?

    ReplyDelete
  23. ஊடகங்கள் - வியாபார ஸ்தலம். It is not an unbiased source.

    ReplyDelete
  24. தமிழனின் தனிப்பட்ட அடையாளங்களை அழிக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது .
    அவன் தன்னை தமிழன் என்று சொல்வதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறது இந்தியா அரசு .
    மற்ற இனங்களை பற்றி கவலை இல்லை அவர்களால் ஆபத்து இல்லை .
    ஆனால் தமிழன் ஏற்கனவே ஒரு கடல் வல்லரசாக இருந்தவர்கள் (சோழர் காலத்தில்) தனி திராவிட நாடு கேட்டவர்கள்.
    அறிவு முதிர்ச்சி கலாசார பின்னணி அதிகம் கொண்டவர்கள் . நம்மை வெறுப்பதற்கு இது எல்லாமும் தான் காரணம் .
    ஒரு பாதுகாப்பான தூரத்தில் நம்மை வைத்திருக்க ஆசை படுகிறார்கள் நம் தனி அடையாளங்களை அழித்துவிட்டு தேசிய நீரோட்டத்தில்
    நம்மை கரைத்துவிட முயற்சி செய்வார்கள் . நம்மை தென்னிந்திய மாநிலங்களும் வெறுக்கிறது இதற்க்கு வேறென்ன காரணம் இருக்க முடியும் .
    அண்டை மாநிலங்களுடன் எப்போதும் நாம் பிரச்னையுடன் இருக்க வேண்டும் என்று மதிய அரசு விரும்புகிறது .............

    ReplyDelete
  25. என்ன செய்ய நம்மிடம் ஒற்றுமை இல்லையே!!

    ReplyDelete
  26. யோசிக்க வைக்கும் பகிர்வு.

    ReplyDelete
  27. சகோ நெஞ்சில் நஞ்சிலா நாஞ்சிலார்,
    அருமையாகச் சொன்னீர்கள். தமிழ் நடிகர்களையும் (ரஜினிகாந்தையும்
    சேர்த்துத்தான்) இவர்கள் செய்யும் கேலி சொல்லி மாளாது.
    வட நாட்டினர் மட்டுமல்ல நம்ம பக்கத்து மாநிலத்தார் எல்லோருமே
    இப்படி வெறுக்கிறார்கள் என்றால் ஏன் என்று நம்மையும் சுய சோதனை
    செய்து பார்க்கும் கட்டத்தில் இருக்கிறோம்.

    ReplyDelete
  28. /உதாரணமா தமிழன் என்று சொன்னாலே ஒரு அடி கூடுதலாகவே கிட்டும் போலீசிடமிருந்து கூட//

    அங்க மட்டுமல்ல எல்லா ஊர்லியும் தான்...

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றி மனோ

    பல விஷயங்கள் இருக்கு சொல்ல எப்படின்னு தான் தெரியல!

    ReplyDelete
  30. நமிதா: "என்ன மச்சான் இப்டி சொல்ல்ட்டே. நான் இங்கே வந்து டாமில் நல்லா பேசுது. உங்க ஆளுங்கே அங்கே வந்தா ஹிந்தி பேசுறது இல்லே. இன்னா பண்து நாங்கோ"

    ..இலங்கைல இத்தனை தமிழன் செத்தானே..ஒரு வடக்கத்திய சேனல் அதை பத்தி பெருசா போட்டுச்சா? ஆருசி மர்டர் கேஸ், ஜெஸ்ஸிகா லால் மர்டர் கேசுதான் அவனுங்களுக்கு பெருசு.

    ReplyDelete
  31. கேளுங்க..கேளுங்க... நல்லா கேளுங்க...

    ReplyDelete
  32. இரண்டாம் உலகப் போரில் இடுபட்டு போர் தழும்புகள் வாங்கிய மஞ்சள் துண்டுவை,காபரா டான்ஸ் ஆடியே தமிழன் தலையில் மசாலா அரைக்கும் கொமலவல்லியையும் வட இந்திய நாதாரிகளுக்கு நன்றாகவே தெரியும்

    ReplyDelete
  33. என்ன சொல்றீங்க நீங்க இப்ப டூஜி ராசாவால டோட்டல் இந்தியாவே தமிழ்நாட்ட பத்தி தான் பேசறாங்க படிக்கிறாங்க. நாங்க உலக அளவிலே கொண்டுபோயுட்டு இருக்கோம். நீங்க இன்னும் இந்தியா பத்தி பேசிட்டிருக்கோம் என்னவோ போங்க..

    ReplyDelete
  34. எப்போதுமே வாடா இந்தியர்களுக்கு தமிழன் என்றாலே இளக்காரம்தான்.

    இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
    கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

    ReplyDelete
  35. உங்க உணர்வு எல்லாத்தமிழனுக்கும் இருக்கணுமே!

    ReplyDelete
  36. மூணு நாளா நம்ம பொட்டிக்கி வாந்தி பேதியாயி ஒரே பேஜாரா பூட்சி நைனா. இப்பத்தா அல்லான் நினுகித்து .அத்தான் வர்ல கண்ணு.


    நல்லாத்தான் அல்லாருக்கும் ரோஷமிருக்கு . ஆனா இன்னாத்த பண்ணிகிறது? நம்க்கு வாச்ச தலைக எல்லாம் பேமானிகளா கீதே இன்னாத்தான் பண்ணிகிறது?
    இத்தோ அடுத்த எளிகிசினும் வந்தாச்சி அல்லாரும் ஒட்டு குதிகின்னு இத்த மறந்து பூடுவோம்.

    ReplyDelete
  37. அடடா.. இது ஏன்டா கூர் உனக்கு தோணல.!!

    ReplyDelete
  38. உங்க கோபத்துக்கு இணையாக பின்னூட்டங்கள் யோசிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  39. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் சிறந்திருக்கும்.மஞ்சத்துண்டு டெல்லி வரை போக முடிந்தும் அத்தனையையும் கெடுத்துடுச்சு.பஞ்சம் பொழைக்கப்போனாவே மதராஸின்னு இளக்காரம்.இப்ப சொல்லிக்கவே வேணாம்.

    ReplyDelete
  40. --------------------------------
    வெற்றியின் பக்கங்கள் said...

    //ஒரு வேளை இந்தியை நாம் படித்திருந்தால் தமிழை அவர்கள் படித்திருக்க ஒரு வாய்ப்பு வந்திருக்குமோ என்னவோ.//

    எத்தன வடக்கூர்காரங்க மலையாளம், கன்னடம், தெலுகு படிச்சிருக்காங்கன்னு சொல்ல முடியுமா? இவிங்கெல்லாம் இந்தியும் படிக்கறாங்களே. அதுக்காகக் கேட்டேன்.
    --------------------------------

    நல்ல பின்னூட்டம்.

    ReplyDelete
  41. அனைத்து ஊடகங்களும் வடக்கை மூலமாகக் கொண்டிருப்பதும், அந்த ஊடகங்களில் பணிபுரிபவர்களின் பாரா முகமும் தான் இதற்குக் காரணம். அவர்களிடம் நாம் ஏன் கையேந்த வேண்டும். தெற்கில் ஏன் ஒரு வலிமை வாய்ந்த ஆங்கில ஊடகம் இல்லை?

    ReplyDelete
  42. -------------------------
    உதாரணமா தமிழன் என்று சொன்னாலே ஒரு அடி கூடுதலாகவே கிட்டும் போலீசிடமிருந்து கூட//
    -----------------------

    நம் மீது உள்ள அச்சம் தான் இதற்குக் காரணம். மற்றவர்கள் நம்மை எதிர்த்தால் நாம் வளர்கிறோம் என்று பொருள்.

    ReplyDelete
  43. மக்கா நீ சொல்றது சரிதாம்ல, நான் டெல்லில இருந்திருக்கேன், எல்லாத்தையும் அனுபவிச்சிருக்கேன்......!

    ReplyDelete
  44. அது போக இந்த ரயில்வே பட்ஜெட்டில் நமக்கு உருப்படியா ஒன்னும் பண்ண மாட்றாங்க.ஏன் கண்டுகுறது இல்லை என்பது தான் உண்மை.ஏதோ பிச்சை போடுற மாதிரி எதாச்சும் பண்ணுவாங்க..

    ReplyDelete
  45. thavarai naam vaithu kondu aduthavargalai en neengal kutram saatukireergal??

    ReplyDelete
  46. en manathil ulla karuthukalai unkalin varthaikalin vazliyaka ketkiren.......

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!