Wednesday, April 6, 2011

கபடநாடகம்

அரசியல்வாதிகளின் கபட நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி உள்ளது. சென்னையில் நடந்த பொது கூட்டத்தில் தமிழக முதல்வரும் சோனியாகாந்திகான் மற்றும் கூட்டணி [ங்கே] தலைவர்ளும் பேசினார்கள் அதில், சோனியாகான் சொல்கிறார் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் "இனி" தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடக்காது என்று!!!!

டிஸ்கி : கொய்யால அப்போ இதுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடெல்லாம் உன் ஆதரவில் நடந்ததாக நீயே ஒப்பு கொள்கிறாய்தானே...?



அடுத்து நம்ம தானை தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்  பேசுகிறார், தமிழ்மொழி இந்தியா ஆட்சி மொழியில் ஒன்றாக  ஆக்க வேண்டும் இதற்க்கு சோனியாகான் உதவ வேண்டும்.

டிஸ்கி : மத்திய அரசின் குடுமியே ஒரு சமயம் உங்க கையில்தானே "ராசா" இருந்திச்சு அப்போ எல்லாம் என்னத்தை புடுங்கிட்டு இருந்தீங்க...?


நதிகளை தேசியமயமாக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், முதல்கட்டமாக, தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, அதற்காக, மாநிலங்களுக்கு நிதியுதவியையும் அளிக்க வேண்டும்.

டிஸ்கி : எடியூரப்பா ஒகனேக்கல் வந்து உங்க கண்ணுல விரல் விட்டு ஆட்டிட்டு போயி, அதை சொல்லி கர்நாடகத்துல ஜெயிச்சி முதல்வரும் ஆயாச்சி. நீங்க இன்னும் பேசிட்டே பேசிட்டே பேசிட்டே கோரிக்கை வச்சிகிட்டே அதுவும் தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவதை கேனைத்தனம் சின்னபிள்ளைதனம்னு வடிவேல் மாதிரி சொல்லலாம்....!!!


1976ம் ஆண்டு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமையை இழந்து விட்டோம். இதனால், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் மீது, இலங்கை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவது அடிக்கடி நடக்கிறது. எனவே, கச்சத் தீவை திரும்பப் பெற உதவிட வேண்டும். இது, உரிமைப் பிரச்னை அல்ல. தழிழக மீனவர்களின் உயிர்ப் பிரச்னை.




டிஸ்கி : இதுதான் நாடகத்தின் உச்சம்!!!!! உங்க குடும்ப பிரச்சினைன்னா டெல்லிக்கு வீல்சேரில் பறக்குறீங்க!!! அதே மீனவனின் பிரச்சினைனா இங்கிருந்து லட்டர் எழுதுறது அறிக்கை விடுறது, காலையில  ஒரு சட்டி இட்லியை முழுங்கிட்டு மதியம் வரை உண்ணாவிரதம் இருக்குறது ச்சேய் ஷேம் ஷேம் பப்பி ஷேம்........போங்கடா நீங்களும் உங்க அரசியலும், கபட நாடகங்களும்.



டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.

51 comments:

  1. ச்சே..இப்ப பாத்து கருண் ஆன்லைனில் இல்லையே...

    ReplyDelete
  2. ஐய்யோ தனி ஆளா போராட வேண்டியிருக்கே...

    ReplyDelete
  3. கருத்துக்களும் டிஸ்கிகளும் அருமை மனோ

    ReplyDelete
  4. final disclaimer is the most funniest one.. :)
    nammbitom

    ReplyDelete
  5. சவுக்கடி மனோ!
    ஓட்டும் போட்டாச்சு!

    ReplyDelete
  6. எத்தனை நல்லமனசு இந்த பதவி ஆசைபிடித்த தாத்தாவிற்கு பூட்டப்பிள்ளைகளுக்கு சொத்துசேர்க்க இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைப்பதா?.

    ReplyDelete
  7. சிவாஜியை விட சிறந்த நடிகர் கலைஞர் என்பார்கள்.

    ReplyDelete
  8. நானும் வந்துட்டேன்...

    வாழ்க கலைஞர் அணி...

    ReplyDelete
  9. அண்ணன் நாகைப் பிடிங்கிக்கிற மாதிரி கேல்வி கேட்டிருக்காரே! கலக்கல்!

    ReplyDelete
  10. //நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.


    நச்சுனு இருக்கு

    ReplyDelete
  11. டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.-----சமாளிபிகேஷன்..ம்..ம்..

    ReplyDelete
  12. பதிவை போட்டு எங்கய்யா போன..

    ReplyDelete
  13. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    பதிவை போட்டு எங்கய்யா போன..//

    நான் இங்கேதான் ஒய் ஓரமா இருந்துட்டு இருக்கேன்...

    ReplyDelete
  14. // நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.//

    இப்படி போட்டுட்டா எப்படி ..நாங்க நம்பிட்டோம் ..!வேற வழி என்ன மக்க இருக்கு ..அவரை புடிக்கல அப்போ இது தான வழி ..எல்லாம் பயம் காரணமோ ...பயபடதே தம்பி நான் இருக்கேன் ..

    ReplyDelete
  15. "இனி" தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடக்காது என்று!!!//

    இது காலத்திற்கேற்ற வாக்குறுதி பாஸ்,
    தேர்தல் முடிந்ததும் சோனியா இதனைத் தூக்கி குப்பையிலை வீசிடுவா.

    ReplyDelete
  16. சகோதரம்,மனோ, நான் உங்களுக்குத் தந்த ஸிமார்ட் சிஸ்டம் மூலம் தமிழ்வாசி பிரகாசிக்கு வடை, உப்புமா அனுப்பிட்டீங்களா?

    ReplyDelete
  17. கொய்யால அப்போ இதுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடெல்லாம் உன் ஆதரவில் நடந்ததாக நீயே ஒப்பு கொள்கிறாய்தானே...?//

    இது செம டிஸ்கி சகோ...

    இது தான் பக்கவாத அரசியலோ?
    இலங்கைக்கும் சப்போர்ட் பண்ணி, தமிழகத்திற்கும் சப்போர்ட் பண்ணும் சோனியாவின் தந்திர அரசியல்.

    ReplyDelete
  18. எடியூரப்பா ஒகனேக்கல் வந்து உங்க கண்ணுல விரல் விட்டு ஆட்டிட்டு போயி, அதை சொல்லி கர்நாடகத்துல ஜெயிச்சி முதல்வரும் ஆயாச்சி. நீங்க இன்னும் பேசிட்டே பேசிட்டே பேசிட்டே கோரிக்கை வச்சிகிட்டே அதுவும் தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவதை கேனைத்தனம் சின்னபிள்ளைதனம்னு வடிவேல் மாதிரி சொல்லலாம்....!!!//

    இது அமைச்சருக்கு நெத்தியடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  19. எனவே, கச்சத் தீவை திரும்பப் பெற உதவிட வேண்டும். இது, உரிமைப் பிரச்னை அல்ல. தழிழக மீனவர்களின் உயிர்ப் பிரச்னை.//

    கலைஞர் இப்போது றிலீஸ் பண்ணி இருக்கும் தேர்தல் நேர கவர்ச்சிப் பிலிம்.

    ReplyDelete
  20. இதுதான் நாடகத்தின் உச்சம்!!!!! உங்க குடும்ப பிரச்சினைன்னா டெல்லிக்கு வீல்சேரில் பறக்குறீங்க!!! அதே மீனவனின் பிரச்சினைனா இங்கிருந்து லட்டர் எழுதுறது அறிக்கை விடுறது, காலையில ஒரு சட்டி இட்லியை முழுங்கிட்டு மதியம் வரை உண்ணாவிரதம் இருக்குறது ச்சேய் ஷேம் ஷேம் பப்பி ஷேம்........போங்கடா நீங்களும் உங்க அரசியலும், கபட நாடகங்களும்.//

    குடும்ப பிரச்சினை என்னா, அது தனி மனித பிரச்சினை-சுய நலப் பிரச்சினை...
    மீனவர் பிரச்சினை பொது பிரச்சினை,,

    கலைஞரைப் பொறுத்தவரை சுய நலப் பிரச்சினைக்குத் தானே முன்னுரிமை கொடுப்பாரு.

    ReplyDelete
  21. டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.//

    அப்போ நீங்க மூன்றாவது அணியா இல்ல கப்டனோடை கட்சியா சகோதரம்.

    ReplyDelete
  22. ஹா ஹா அதுவும் அந்த கடைசி கார்ட்டூன் கலக்கல்

    ReplyDelete
  23. கருத்துக்கள் அருமை மனோ !

    unmaivrumbi.
    Mumbai.

    ReplyDelete
  24. மத்திய அரசின் குடுமியே ஒரு சமயம் உங்க கையில்தானே...........//////////////
    ///////////////

    அந்த குடுமியை வைத்து குடும்பத்திற்கு எவ்வளவு சம்பாதித்தார்கள் தெரியுமா ?
    நீங்க என்னமோ புதுசா நாட்டுக்கு செய்யணும்ன்னு சொல்றீங்க .இது என்ன புது பழக்கம் ..ஏன் மக்கா உமக்கு வெயிலில் மூளை ஏதும் குழம்பிடுச்சா ?

    ReplyDelete
  25. சரியான கேள்விகள் ,..
    பதிலை கூற தான் இங்கு ஆள் இல்லை ...
    அடிச்சு கெளப்புங்க ...

    ReplyDelete
  26. நல்லா திட்டுங்க. ஏதாச்சும் மாற்றம் வருதான்னு பார்ப்போம்.

    ReplyDelete
  27. ஒவ்வொரு டிஸ்கியும்... சரியான நெத்தியடி..!!! நியாயமான கேள்விகள்.. தல!!!

    ReplyDelete
  28. இந்த பதிவுக்கும் ஒபாமா சோனியா மாதிரி போஸ் கொடுப்பதற்கும் என்ன காரணமோ?

    ReplyDelete
  29. //டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.//
    ஆமா, எங்க ஊர்ல கூட அப்படித்தான் பேசிக்கிறாங்க சார்.

    ReplyDelete
  30. //சம உரிமை, சம அந்தஸ்து இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு வாங்கித்தரப்படும் என இப்போது ராகம் பாடும் சோனியா நினைத்திருந்தால், இப்படி ஒரு நிலைமை வராமலே தவிர்த்திருக்க முடியுமே?//

    ReplyDelete
  31. //டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.///


    தமிழர்களுக்கு குரல் கொடுக்க தமிழுணர்வு இருந்தாலே போதுமே...

    ReplyDelete
  32. நீங்கள் கேட்டதெல்லாம் நியாயமான கேள்விகள்..

    ReplyDelete
  33. கலக்கல் கேள்விகள்...ஆனா இந்த கேள்விகள் அவர்களை கலங்கச் செய்யுமா? தேர்தல் முடிவில் தான் தெரியும்...

    ReplyDelete
  34. யோவ் மாம்ஸ் மொதல்ல நல்ல விதமா ஊருக்கு வந்து சேருய்யா..............பதிவு இந்த மாதிரி போட்டுட்டு இருந்தே எங்க பூனைத்தலைவரு உனக்கும் MLA சீட் கொடுத்துடுவாரு ஹிஹி!

    ReplyDelete
  35. //Chitra said...
    இந்த பதிவுக்கும் ஒபாமா சோனியா மாதிரி போஸ் கொடுப்பதற்கும் என்ன காரணமோ//

    இவங்க ரெண்டு பேரும் ஒரே நேர்கோட்டில்'தான் போகிறார்கள்...

    ReplyDelete
  36. >>டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.

    ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட்டுக்கு மட்டும் ஆதரவா?

    ReplyDelete
  37. புர்ச்சி களீங்கர் ஜீ வால்க... சே..சே த்தூ தூ.... வெறும் களிங்கர் ஜீ வால்க...!

    ReplyDelete
  38. என்ன அரசியலோ ...வெங்காய அரசியல்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!