ஆரம்ப காலகட்டத்தில் நான் டிரைனிங் வெயிட்டராக [பஹ்ரைன்] பணியில் இருந்த சமயம் நடந்த சம்பவம். எங்கள் ஹோட்டலில் அவுட்டோர் கேட்டரிங் உண்டு. எங்கள் ஹோட்டலில் goozi எனப்படும் முழு ஆட்டை அவித்து ஒரு மாதிரியான ஸ்டைலில் சமைப்பார்கள். அது பஹ்ரைன் அரபி ஷேக்'குகள் மத்தியில் எங்கள் அயிட்டத்துக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு. அப்போது ஒரு அரபி ஷேக் வீட்டில் அவுட்டோர் கேட்டரிங் ஆர்டர் வந்தது. நூறு பேருக்கான அரேஞ்மென்ட்.
என்னை கேப்டனாக பிரமோட் பண்ணி ஏற்பாடு பண்ண சொன்னார் எஃப் & பி மேனேஜர். மொத்தம் பத்து வெயிட்டர் தேவை இருப்பதோ ஒன்பது பேர்தான் இருந்தார்கள். ஆனால் இன்னுமொரு பங்களாதேஷ் வெயிட்டர் இருந்தான் அவனை வெளியே எங்கேயும் பார்ட்டிக்கு அனுப்பமாட்டார்கள் காரணம் ரொம்ப ரஃப்பா நடந்து கொள்வான். அன்று வேறு வழி இல்லாமல் நான் சமாளித்து கொள்கிறேன்னு கூட்டிட்டு போனேன் [[பிரமொஷனையே நாசம் பண்ணுவான்னு அப்போ எனக்கு தெரியாம போச்சி]] மேனேஜர் அவனிடம் சொல்லியே அனுப்பினார் மனோஜ் என்ன சொல்கிறானோ அதன் படி நடக்க வேண்டும் இல்லையெனில் பனிஷ்மென்ட் உண்டு ஜாக்குரதன்னு.
ஷேக் [[கமர்ஷியல் மினிஸ்டர்]] வீட்டின் முன்புறமுள்ள கார்டனில் புஃபே டின்னர். நான் நான்கு கவுன்டராக பிரித்து செட் பண்ண சொன்னேன் நம்ம பங்காளியை வாட்ச் பண்ணிட்டேதான் இருந்தேன். திடீரேனே ஷேக் ஓடி வந்து இங்கே மேனேஜர் யாருன்னு கேட்டார். நாந்தான்னு சொன்னேன். என்னை கூட்டிக்கொண்டு போயி கார்டனில் வளர்க்கும் தேனீக்கள் எந்தெந்த செடியின் கீழ் இருக்கிறது என்பதை காண்பித்து சொன்னார் சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் படி சொன்னார். நானும் ஓகே சார் நான் மேனேஜ் பண்ணிக்குறேன்னு சொன்னேன். உடனே எனக்கு பங்காளி நியாபகம்தான் வந்தது. நான் எல்லா ஸ்டாஃபையும் அழைத்து தேனீக்கள் இருக்கும் இடத்தையும் நாம் எப்பிடி நடந்தால் அவைகள் அமைதியாக இருக்கும் என்பதையும் சொல்லி விளக்கினேன். அப்புறமா பங்காளியை தனியே கூப்பிட்டு, நாசர் ரொம்ப கவனமா இரு என்ன ஆனாலும் தேனீக்கள் இருக்கும் பக்கம் நீ போகவே கூடாது இது என் ஆர்டர் என சொன்னேன் அவனும் ஓகே சார்'ன்னு விரச்சிகிட்டே சொன்னான்.
அப்புறம் புஃபே கவுன்டர் ரெடி பண்ணினார்கள். சாப்பாடும் ஸ்டார்ட் ஆகிருச்சி ஆனால் நான் மட்டும் பங்காளியை வாட்ச் பண்ணிட்டே இருந்தேன். பாழாய் போனவன் எப்பவும் தேனீ பக்கம்தான் ஓடிட்டு இருந்தான். நான் ஓடி ஓடி போயி அவனை தடுப்பேன். எனக்கு அவனோடு போராடுற போராட்டமே இனி இவனை எங்கேயும் கொண்டு போக கூடாதுன்னு கருமிகிட்டேன்.
கிளைமாக்ஸ் வந்துச்சு, அரபி ஷேக்குகள் சந்தோஷமாக ரசிச்சி சாப்புட்டுட்டு இருந்தாங்க அவர்களும் சாப்பாட்டை முடித்து விட்டு இனிப்பு வகைகள் சாப்புட்டு இருக்கும் போது அது நடந்தது. பங்காளி என்னை விட கொஞ்சம் தூரத்தில் இருந்தான். நான் அவனை வாட்ச் பண்ணிட்டுதான் இருந்தேன். அவன் ஒரு பெரிய பாத்திரத்தில் [[செப்பண்டிஸ்] இருந்த சுடு தண்ணியை கொஞ்சம் தூரமாக வீசி எறிந்தான். நானும் பிள்ளை நல்லா வேலை செய்கிறான்னு நினைக்கவும் அதிர்ந்து போனேன் அவ்வவ்வ்வ்வ்....... அவன் சுடு தண்ணி வீசினது தேனீக்கள் இருக்கும் பக்கம். ஐயோ தேனீக்கள் படையெடுக்க ஓடுன ஓட்டம் இருக்கே [[எங்களை விடுங்க]] அரபி ஷேக்குகள் ஓடின ஓட்டம் இருக்கே இப்போ நினச்சாலும் வயிறு குலுங்க சிரிப்பு வரும். ஆமாங்க பாம்ப் போட்டா எப்பிடி ஓடுவீங்க அதே ஸீன்'தான் நடந்துச்சி.
நாங்களும் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடி வெளியே வந்துட்டோம். நான் பங்காளியை திட்டோ திட்டுன்னு திட்டினேன். என்னடா இப்பிடி பண்ணுனேன்னு அதுக்கு அவன் கூலா சொல்லுறான் நீ என்னைத்தானே அங்கே போகாதேன்னு சொன்னே தண்ணி ஊத்த கூடாதுன்னு [[ அவ்வ்வ்வவ்]] சொல்லலையே....
அப்புறம் மேனேஜருகிட்டே பாராட்டு பத்திரம் வாங்கி டவுசர் கிழிஞ்சது தனிகதை....
vadai
ReplyDeleteபஜ்ஜி....
ReplyDeleteaattu kari
ReplyDeletethalai kari
ReplyDeleteஒட்டகம்....
ReplyDeletekudal koottu
ReplyDeleteaattu kaal soup
ReplyDeleteeeral
ReplyDeletemano. madayanai nambi pathavi pari ponatho.... paavam
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeletemano. madayanai nambi pathavi pari ponatho.... paavam//
அடபாவி மக்கா.....
//FOOD said...
ReplyDeleteபாவம் மனோ!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அவ்வ்வ்வவ்வ்வ்வ்... ஹஹா... சூப்பர் பதிவு ரசித்தேன்
ReplyDelete//FOOD said...
ReplyDeleteபங்காளியை நம்பி பரிதாப நிலை அவருக்கு.//
அந்த கேப்டன் பிரமோஷன் இருக்கே அது அதைவிட பரிதாபம் ஹா ஹா ஹா...
//மதுரை பொண்ணு said...
ReplyDeleteஅவ்வ்வ்வவ்வ்வ்வ்... ஹஹா... சூப்பர் பதிவு ரசித்தேன்//
ஹா ஹா ஹா ஹா ஷேக்குமார்கள் ஓடின ஓட்டம் இருக்கே காண கண் கோடி வேணும் செம செம ஓட்டம்...
ஹி ஹி.. என்ன மனோ சாரு.. ஒரே காமெடியா.??? என்னதான் இருந்தாலும் உங்க பங்காளிகிட்ட ரகசியமா தண்ணிய தேனீ மேல ஊத்துனு நீங்க சிக்னல் காமிச்சிருக்க கூடாது.. நீங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு பச்ச புள்ள மேல பழிய போடுறீங்களே.!! நியாயமா.??
ReplyDelete//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஹி ஹி.. என்ன மனோ சாரு.. ஒரே காமெடியா.??? என்னதான் இருந்தாலும் உங்க பங்காளிகிட்ட ரகசியமா தண்ணிய தேனீ மேல ஊத்துனு நீங்க சிக்னல் காமிச்சிருக்க கூடாது.. நீங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு பச்ச புள்ள மேல பழிய போடுறீங்களே.!! நியாயமா.??//
யோவ் என்ன காமெடியா....
என்னை அழ வச்சிட்டான்ய்யா பங்காளி ஹே ஹே ஹே ஹே...
இந்த மாதிரி சுவாரஸ்யமா தான் எழுதச்சொன்னேன் ஆரம்பத்தில் . அதெல்லாம் விட்டுட்டு வெறும் மொக்கை போட ஆரம்பிச்சாச்சு .இப்பவாவது குண்டுக்கு புத்தி வந்ததே. இதுதான் நல்லா இருக்கு மனோ. இனிமே 'கவிதை' எல்லாம் எழுதி எங்களை கடுப்பேத்தினா...........கொண்டுபுடுவேன்
ReplyDeleteநான் ஏதோ புரட்சி வெடித்து அரபுகள் ஓடிய கதையோ என்று வந்தால் தேனீக்கள் படையெடுப்பு. ரசித்தேன். :- )
ReplyDeleteசிரிக்காமலும் இருக்க முடியல.
ReplyDeleteஓஹோ..அந்த தேனீ கடிச்சதுல வீங்குன உடம்பாண்ணே இது?
ReplyDeleteஅதெல்லாம் சரி மாம்ஸ் எல்லாம் ஓடுனாங்க சரி நீர் உருண்டீர் என்பதை சொல்லாததட்க்கு கண்டனங்கள் ஹிஹி!
ReplyDeleteபாழாய் போனவன் எப்பவும் தேனீ பக்கம்தான் ஓடிட்டு இருந்தான். நான் ஓடி ஓடி போயி அவனை தடுப்பேன்// hahaa....
ReplyDeleteippa avar enga ???
வடிவேலு செந்தில் காமடியை
ReplyDeleteநினைவுறுத்தினாலும்
சிவபூசையில் கரடி நுழைந்தார்போல்
ஒரு நல்ல நிகழ்வைக் கெடுத்த
அந்த உதவியாளர் மீது வந்த கோபம் அடங்க
வெகு நேரம் ஆனது
படங்களுடன் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
[[பிரமொஷனையே நாசம் பண்ணுவான்னு அப்போ எனக்கு தெரியாம போச்சி]]//
ReplyDeleteவணக்கம் சகோதரம், சொந்தச் செலவிலையே சூனியத்தை தேடின மாதிரி, வம்பை விலை கொடுத்து வாங்கின மாதிரி.....உங்களுக்கு நீங்களே ஆப்பை அழைத்துக் கொண்டு போனீங்களே!
இது நியாயமா?
கூடமாடா ஏதாவது ஹெல்ப் வேணும்னா எனக்கு ஒரு போனைப் போடுறது.
ஹெலிகாப்டரிலை வந்திட மாட்டன்;-))
என்னடா இப்பிடி பண்ணுனேன்னு அதுக்கு அவன் கூலா சொல்லுறான் நீ என்னைத்தானே அங்கே போகாதேன்னு சொன்னே தண்ணி ஊத்த கூடாதுன்னு [[ அவ்வ்வ்வவ்]] சொல்லலையே....//
ReplyDeleteசும்மா இருந்த நம்ம சகோவின் பொழைப்பை நாசம் பண்ணி விட்டான்...
அவன் மட்டும் எங்க கையிலை கிடைச்சான்.............................................................................................................................................லத்திகா டீவிடியை 25 தடவை பார்க்க வைச்சு..............
பார்சல் பண்ணிட மாட்டோமா என்ன?
(இது பன்னிக்குட்டி ராம்சாமியின் வசனம்)
சகோ, நீங்கள் கதை சொன்ன விதம், மொழி நடை, பொருத்தமான இடங்களில் வசனங்களைக் கையாண்டு பதிவிற்கு உணர்வூட்டிய விடயம் அனைத்துமே அருமை.
ReplyDeleteநன்றி மனோ.
ReplyDeleteஎவ்வளவு சீரியசான விஷயத்தையும் நகைச்சுவையாக சொல்லி விடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் மனோ
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
ReplyDeleteதங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
Rathnavel said...
ReplyDeleteநன்றி மனோ.
எவ்வளவு சீரியசான விஷயத்தையும் நகைச்சுவையாக சொல்லி விடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் மனோ -- ரிப்பீட்டு..
ஹா...ஹா...
ReplyDelete>>
ReplyDeleteஎன்னை கேப்டனாக பிரமோட் பண்ணி ஏற்பாடு பண்ண சொன்னார் எஃப் & பி மேனேஜர்
ஆஃப் அடிக்க சொன்னாரா? அடங்கொய்யால..
நல்ல மேனேஜரு நல்ல ஸ்டாபு, நல்ல வேலைக்காரன் பிரமாதம் சார் :-))))))))
ReplyDeleteஅதுக்கு அவன் கூலா சொல்லுறான் நீ என்னைத்தானே அங்கே போகாதேன்னு சொன்னே தண்ணி ஊத்த கூடாதுன்னு.....
ReplyDelete//////////////////////
ஆமாம் மக்கா அவன் சரியாதான் சொல்லிருக்கான் பாவம் .நீங்க தண்ணி கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லீருக்கனும் அந்த பக்கம் போகக்கூடாதுன்னு .............அத விட்டுட்டு சின்னபையன போட்டு திட்டுறது நல்லாவா இருக்கு ................
:-))
ReplyDelete//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஇந்த மாதிரி சுவாரஸ்யமா தான் எழுதச்சொன்னேன் ஆரம்பத்தில் . அதெல்லாம் விட்டுட்டு வெறும் மொக்கை போட ஆரம்பிச்சாச்சு .இப்பவாவது குண்டுக்கு புத்தி வந்ததே. இதுதான் நல்லா இருக்கு மனோ. இனிமே 'கவிதை' எல்லாம் எழுதி எங்களை கடுப்பேத்தினா...........கொண்டுபுடுவேன்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்....
//சுவனப்பிரியன் said...
ReplyDeleteநான் ஏதோ புரட்சி வெடித்து அரபுகள் ஓடிய கதையோ என்று வந்தால் தேனீக்கள் படையெடுப்பு. ரசித்தேன். //
வருகைக்கு நன்றி சுவனபிரியன்....
Chitra said...
ReplyDeleteசிரிக்காமலும் இருக்க முடியல.////
உங்க சிரிப்புதான் அக்மார்க்....
//செங்கோவி said...
ReplyDeleteஓஹோ..அந்த தேனீ கடிச்சதுல வீங்குன உடம்பாண்ணே இது?//
அடபாவி இப்பிடியெல்லாமா ரோசிப்பீங்க....
//விக்கி உலகம் said...
ReplyDeleteஅதெல்லாம் சரி மாம்ஸ் எல்லாம் ஓடுனாங்க சரி நீர் உருண்டீர் என்பதை சொல்லாததட்க்கு கண்டனங்கள் ஹிஹி!//
பப்ளிக் பப்ளிக் ஹி ஹி ஹி ஹி....
//vanathy said...
ReplyDeleteபாழாய் போனவன் எப்பவும் தேனீ பக்கம்தான் ஓடிட்டு இருந்தான். நான் ஓடி ஓடி போயி அவனை தடுப்பேன்// hahaa....
ippa avar enga ???//
ரெண்டு வருஷம் கழிச்சி வண்டி ஏத்தி விட்டுட்டாங்க...
//Ramani said...
ReplyDeleteவடிவேலு செந்தில் காமடியை
நினைவுறுத்தினாலும்
சிவபூசையில் கரடி நுழைந்தார்போல்
ஒரு நல்ல நிகழ்வைக் கெடுத்த
அந்த உதவியாளர் மீது வந்த கோபம் அடங்க
வெகு நேரம் ஆனது
படங்களுடன் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//
ஹா ஹா ஹா ஹா நன்றி குரு.....
//நிரூபன் said...
ReplyDelete[[பிரமொஷனையே நாசம் பண்ணுவான்னு அப்போ எனக்கு தெரியாம போச்சி]]//
வணக்கம் சகோதரம், சொந்தச் செலவிலையே சூனியத்தை தேடின மாதிரி, வம்பை விலை கொடுத்து வாங்கின மாதிரி.....உங்களுக்கு நீங்களே ஆப்பை அழைத்துக் கொண்டு போனீங்களே!
இது நியாயமா?
கூடமாடா ஏதாவது ஹெல்ப் வேணும்னா எனக்கு ஒரு போனைப் போடுறது.
ஹெலிகாப்டரிலை வந்திட மாட்டன்;-))//
இனி உடனே உங்களை கூப்புடுறேன் ஹே ஹே ஹே ஹே நீங்களும் வந்து கும்மி அடிங்க....
//நிரூபன் said...
ReplyDeleteசகோ, நீங்கள் கதை சொன்ன விதம், மொழி நடை, பொருத்தமான இடங்களில் வசனங்களைக் கையாண்டு பதிவிற்கு உணர்வூட்டிய விடயம் அனைத்துமே அருமை.//
மிகவும் நன்றி மக்கா...
//Rathnavel said...
ReplyDeleteநன்றி மனோ.
எவ்வளவு சீரியசான விஷயத்தையும் நகைச்சுவையாக சொல்லி விடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் மனோ//
மிக்க நன்றி அய்யா....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
April 7, 2011 8:00 PM
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Rathnavel said...
நன்றி மனோ.
எவ்வளவு சீரியசான விஷயத்தையும் நகைச்சுவையாக சொல்லி விடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் மனோ -- ரிப்பீட்டு..//
நன்றிலேய் வாத்தி மக்கா....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>
என்னை கேப்டனாக பிரமோட் பண்ணி ஏற்பாடு பண்ண சொன்னார் எஃப் & பி மேனேஜர்
ஆஃப் அடிக்க சொன்னாரா? அடங்கொய்யால..//
அப்பிடி சொன்னாதான் பரவா இல்லையே.. கடைசில டவுசர் உருவபட்டது எப்பிடின்னு எனக்குத்தானே தெரியும் ஹி ஹி ஹி....
//இரவு வானம் said...
ReplyDeleteநல்ல மேனேஜரு நல்ல ஸ்டாபு, நல்ல வேலைக்காரன் பிரமாதம் சார் :-))))))))//
ம்ம்ம்ம் நாகரீகமா திட்டுராறாமாம்.....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஅதுக்கு அவன் கூலா சொல்லுறான் நீ என்னைத்தானே அங்கே போகாதேன்னு சொன்னே தண்ணி ஊத்த கூடாதுன்னு.....
//////////////////////
ஆமாம் மக்கா அவன் சரியாதான் சொல்லிருக்கான் பாவம் .நீங்க தண்ணி கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லீருக்கனும் அந்த பக்கம் போகக்கூடாதுன்னு .............அத விட்டுட்டு சின்னபையன போட்டு திட்டுறது நல்லாவா இருக்கு//
அடபாவி மக்கா நீயுமா......
//middleclassmadhavi said...
ReplyDelete:-))///
ஹா ஹா ஹ ஹா....
கேப்டன்னாலே பிரச்சனைதானோ?
ReplyDeleteயோவ் அந்தப் பங்காளிக்கு தண்ணி வாங்கி ஊத்துனியா.... ஊத்திருக்க மாட்ட, அதான் அவனா தண்ணி ஊத்தியிருக்கான்....! அப்புறம் அவனுக்கு என்ன பனிஷ்மெண்ட் குடுத்தீங்க (அவன் கிடக்கட்டும் நேக்கா உனக்கு என்ன பனிஷ்மெண்ட்டு கொடுத்தங்கன்னு மறைச்சுட்ட பாத்தியா?)
ReplyDeleteமக்கா கேப்டன்னா துப்பாக்கிலாம் கொடுப்பாங்களா?
ReplyDeleteயோவ் கேப்டனா வேற ஆயிட்ட, பேசாம தேர்தல்ல நின்னு பாக்கலாம்ல?
ReplyDeleteபெங்காளிக உங்க பங்காளிக மாதிரித்தான் தெரியுது:)
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகேப்டன்னாலே பிரச்சனைதானோ?//
யோவ் நான் ஒன்னும் ஆ ஃ ப் அடிச்சிட்டு போகலை...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteயோவ் அந்தப் பங்காளிக்கு தண்ணி வாங்கி ஊத்துனியா.... ஊத்திருக்க மாட்ட, அதான் அவனா தண்ணி ஊத்தியிருக்கான்....! அப்புறம் அவனுக்கு என்ன பனிஷ்மெண்ட் குடுத்தீங்க (அவன் கிடக்கட்டும் நேக்கா உனக்கு என்ன பனிஷ்மெண்ட்டு கொடுத்தங்கன்னு மறைச்சுட்ட பாத்தியா?)//
பப்ளிக் பப்ளிக் ஹே ஹே ஹே ஹே ஹே....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteமக்கா கேப்டன்னா துப்பாக்கிலாம் கொடுப்பாங்களா?//
ஏன் அருவா தந்தா போதாதாக்கும்....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteயோவ் கேப்டனா வேற ஆயிட்ட, பேசாம தேர்தல்ல நின்னு பாக்கலாம்ல?//
ஸ்டெடியா நிக்க முடியலையே மக்கா...
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteபெங்காளிக உங்க பங்காளிக மாதிரித்தான் தெரியுது:)//
எங்கே போனாலும் நமக்கு குடைச்சல் குடுக்க அவனுக கூடவே வர்றானுங்கய்யா...
சிரிப்பு அடக்க முடில.உங்க போட்டோ இருக்கிறபடியா உங்களைக் கற்பனை பண்ண வசதியா இருக்கு மனோ !
ReplyDeleteஎன்னங்க வடிவேல் சிங்கமுத்து கூட்டனியாக்கிடக்கு நீங்களும் வங்காளி நண்பரும் செய்தகூத்து மொழியில் புலமையில்லை என்றாள் இப்படி முழிக்கத்தான் தோன்றட்டும். காடற்பாறை ரெடி
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDeleteசிரிச்சுக் கிட்டே இருக்கேன்!!
ReplyDeleteமிக சுவாரஸ்யம்!
//ஹேமா said...
ReplyDeleteசிரிப்பு அடக்க முடில.உங்க போட்டோ இருக்கிறபடியா உங்களைக் கற்பனை பண்ண வசதியா இருக்கு மனோ !//
முதல்ல போட்டோவை மாத்தணும் அவ்வ்வ்வ்வ்வ்......
//Nesan said...
ReplyDeleteஎன்னங்க வடிவேல் சிங்கமுத்து கூட்டனியாக்கிடக்கு நீங்களும் வங்காளி நண்பரும் செய்தகூத்து மொழியில் புலமையில்லை என்றாள் இப்படி முழிக்கத்தான் தோன்றட்டும். காடற்பாறை ரெடி///
ஹா ஹா ஹா ஹா....
//சென்னை பித்தன் said...
ReplyDeleteசிரிச்சுக் கிட்டே இருக்கேன்!!
மிக சுவாரஸ்யம்!//
ஹா ஹா ஹா ஹா ரைட்டு தல....
பதிவில் தொடங்கி பின்னூட்டம் வரை வழியெல்லாம் சிரிப்பு.
ReplyDelete//சாகம்பரி said...
ReplyDeleteபதிவில் தொடங்கி பின்னூட்டம் வரை வழியெல்லாம் சிரிப்பு.//
ஹா ஹா ஹா ஹா நீங்களும் வந்தாச்சா ஹா ஹா ஹா...
ஹாட் தண்ணினாலே பிரச்சினை தான் போல இருக்கு...உஷார் ஆயிக்கணும்...ஹ்ம்ம்
ReplyDeleteஹா ஹா ஹா ஹா repeatu..
ReplyDelete//டக்கால்டி said...
ReplyDeleteஹாட் தண்ணினாலே பிரச்சினை தான் போல இருக்கு...உஷார் ஆயிக்கணும்...ஹ்ம்ம்//
பத்திரமா இருந்துகோங்க மக்கா...
//siva said...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா repeatu..//
ஹே ஹே ஹே ஹே ரிப்பீட்டேய்.....
Speed Master said...
ReplyDeleteவந்தேன் வாக்களித்து சென்றேன்///
நன்றி....
உங்கள் நண்பரின் பெயர் கோமாளி செல்வா-வா?
ReplyDelete//என்னை கேப்டனாக பிரமோட் பண்ணி ஏற்பாடு பண்ண சொன்னார் எஃப் & பி மேனேஜர்//
ReplyDeleteஅதெல்லாம் சரி, நீங்க கேப்டனாக பிரமோஷன் வாங்கியது நிலைத்ததா இல்லையா?
// முதல்ல போட்டோவை மாத்தணும் அவ்வ்வ்வ்வ்வ்...... //
ReplyDeleteமாத்திட்டா மட்டும் சிரிப்பு வராதா தல அவ்வ்வ்வ்வ்வ்...... !!??
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteஉங்கள் நண்பரின் பெயர் கோமாளி செல்வா-வா?//
அவனா இருந்தாதான் தூக்கி போட்டு மிதிச்சிருப்பேனே....
//பாரத்... பாரதி... said...
ReplyDelete//என்னை கேப்டனாக பிரமோட் பண்ணி ஏற்பாடு பண்ண சொன்னார் எஃப் & பி மேனேஜர்//
அதெல்லாம் சரி, நீங்க கேப்டனாக பிரமோஷன் வாங்கியது நிலைத்ததா இல்லையா?//
கிழிஞ்சி போச்சி, அப்புறம் பின்னாட்களில் கவர் பண்ணிட்டேன்...
எம் அப்துல் காதர் said...
ReplyDelete// முதல்ல போட்டோவை மாத்தணும் அவ்வ்வ்வ்வ்வ்...... //
மாத்திட்டா மட்டும் சிரிப்பு வராதா தல அவ்வ்வ்வ்வ்வ்...... !!??//
ஹா ஹா ஹா ஹா அதானே....
ஓஹோ... நீங்க “கேப்டன்” ஆன கதை, இது தானா?
ReplyDeleteநல்லா கீதுபா...