Wednesday, July 6, 2011

நாகர்கோவில் ஜங்சன்.....

முந்தய பதிவின் தொடர்சி.......

அப்புறமா ஒரு வழியா வந்து சேர்ந்தார் விஜயன், முகமெல்லாம் வீங்கி இருந்தது [[அடி பலமோ]] சரி மறுபடியும் ஓடினோம் அந்த வங்கிக்கு, இந்த முறை நெட் ஓகே ஆகி இருந்தது....




என் மனைவியின் பெயரிலேயே அவருடைய கணக்கில் பணம் போட்டு டி டி எடுத்து தந்தார் [[ஹே ஹே ஹே ஹே இன்கம்டாக்ஸ் விஜயனுக்கு ஹி ஹி ஹி]] 

அப்புறமா மும்பை செல்ல ரயில் டிக்கெட்'ட்டுக்காக நெட்டில் தேடி கொண்டிருந்தார். கிடைக்கவே இல்லை பல முறை முயற்ச்சி செய்தபின் கிடைத்தது வெயிட்டிங் லிஸ்டில் ஓகே......

இதுக்கிடையில் தம்பி "மாப்பிளை"ஹரீஷ் வந்து கொஞ்சம் ரப்சர் பண்ணிட்டு இருந்தான் ஹி ஹி....ஜாலியா பேசி சிரிச்சிட்டே இருந்தோம்.

அடுத்து சாப்பாடு, யோவ் அன்னைக்கு கூட்டிட்டு போன ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வேண்டாமய்யா காலை பிடிச்சி கெஞ்சி கேட்டதாலே கொலைவெறி சாப்பாட்டுக்கு கூட்டிட்டு போகலை [[அப்பாடா தப்பிச்சிட்டேன்ப்பா]]

வாழை இலை போட்டு மீன் குழம்பு சாப்பாடு சும்மா அருமையா இருந்துச்சி, சிம்பிளா இருந்தாலும் சூப்பர் சாப்பாடு, நாகர்கோவில் போறவங்க அங்கே போயி சாப்பிட்டு பாருங்க விஜயன்'கிட்டே அட்ரஸ் கேட்டுக்கோங்க ஹி ஹி...

மறுபடியும் அவர் கடைக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு, இ டிக்கெட் காப்பி எடுக்க இன்னொரு கடைக்கு போனோம், அங்கே விஜயனின் தோழி'தான் இருந்தார். காப்பி எடுத்து தந்தார் சந்தோசமாக....

இனி அடுத்து மொபைல் சரி செய்ய வேண்டுமே, ரெண்டு மொபைல், ஒன்னு அண்ணனுடையது மற்றது என்னுது, அண்ணன் மொபைல் சரி பண்ணிட்டோம் பேட்டரி புதுசு போட்டோம்..

அடுத்து, வைரஸ் உள்ளே இருக்கு என்பதால், மொத்தமாக எல்லாவற்றையும் அழித்து விட்டு  கிளியராக்கி தந்தான் கடைக்காரன்.

எனது போனில் ஸ்கிரீன் அவுட் ஆகியதால் அதை நல்லபடியா செய்ய 1500 ரூபா கேட்டான் நான் வேண்டாம் மும்பையில் போயி பார்த்து கொள்கிறேன் என்றேன் காரணம், இங்கே எல்லாவற்றிற்கும் விலை குறைவு [[ 650 ரூபாதான் ஆச்சு இங்கே]]

சூப்பரா என் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து நாகர்கோவில் பஸ்டாண்டில் கொண்டு போயி விட்டார் நண்பன் விஜயன்......மிக்க நன்றி மக்கா........!!!

இனி அந்த இ டிக்கெட்டுனால [[தெரியாமையால்]] நான் ரயிலுக்குள்ளே கைப்பிள்ளை ஆனது எப்பிடின்னு சொல்றேன்.......

ரயில் பயணம் தொடரும்..............!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு குட்டி கவிதை....


அடி.... இத்தனை அன்பை 
மறைத்து வைத்து
எப்படி வாழ்ந்தாய் 
என் அன்பே 
என்னை பிரிந்து...!!!

உன் கரம் என்னை
பற்றும் வேகத்தில் 
எனக்கு புரிகிறதடி 
உன் பாசமும் காதலும்.....!!!!

- - - - - - - - - - - - - - -  - - - - - - - - - - - - - - - 

41 comments:

  1. நம்ம ஊர்ல நெட்டுல டிக்கட் புக் பண்றத விட ஸ்டேஷன்ல சீக்கிரமா எடுத்திடலாம் ......நம்ம நெட் மற்றும் irctc ரெண்டுமே மந்தம் .....

    ReplyDelete
  2. koodal bala said...
    வடைங்கோ//

    சாப்பிடுங்கோ......

    ReplyDelete
  3. koodal bala said...
    நம்ம ஊர்ல நெட்டுல டிக்கட் புக் பண்றத விட ஸ்டேஷன்ல சீக்கிரமா எடுத்திடலாம் ......நம்ம நெட் மற்றும் irctc ரெண்டுமே மந்தம் .....//

    என்னத்தை சொல்ல ம்ஹும்....

    ReplyDelete
  4. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா...ரைட்டு...//

    ஹி ஹி ஹி ஹி லேப்ட்டு....

    ReplyDelete
  5. உங்கள் மனைவிக்கு நீங்க எழுதிய கவிதை (தெரியுமைய்யா??)சூப்பர்.

    ReplyDelete
  6. கவிதை அருமை,யாருக்காக எழுதியிருந்தாலும்!

    ReplyDelete
  7. //வாழை இலை போட்டு மீன் குழம்பு சாப்பாடு சும்மா அருமையா இருந்துச்சி, சிம்பிளா இருந்தாலும் சூப்பர் சாப்பாடு, நாகர்கோவில் போறவங்க அங்கே போயி சாப்பிட்டு பாருங்க விஜயன்'கிட்டே அட்ரஸ் கேட்டுக்கோங்க ஹி ஹி...//
    அப்போ, விஜயன் சார், எங்களுக்கும் சாப்பாடு வாங்கித் தர மாட்டாரா?

    ReplyDelete
  8. ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

    ReplyDelete
  9. அண்ணே கேரி forward!

    ReplyDelete
  10. அனுபவ கட்டுரை விறு விறு சுறு சுறு
    இன்னும் நீங்க எங்கே எல்லாம் திரு திருன்னு முழிச்சீங்கன்னு தெரியல,

    நாங்களும் ஆர்வமா இருக்கோம் அண்ணே

    ReplyDelete
  11. கவிதை கூட அனுபவ கவிதைதானோ!!??

    ReplyDelete
  12. கவிதை வேறா?பயங்கரக் குஷிலதான் இருக்கீங்க!

    ReplyDelete
  13. வேடந்தாங்கல் - கருன் *! said...
    Anne vanakkam ne..

    July 6, 2011 8:43 PM
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    kavithai nalla iruu anne//

    அண்ணே வணக்கம் அண்ணே. நன்றி அண்ணே....

    ReplyDelete
  14. கே. ஆர்.விஜயன் said...
    உங்கள் மனைவிக்கு நீங்க எழுதிய கவிதை (தெரியுமைய்யா??)சூப்பர்.//

    ஹே ஹே ஹே ஹே ஹே......!!!

    ReplyDelete
  15. FOOD said...
    கவிதை அருமை,யாருக்காக எழுதியிருந்தாலும்!//

    ஹே ஹே ஹே ஹே நன்றி ஆபீசர்....!!!

    ReplyDelete
  16. FOOD said...
    //வாழை இலை போட்டு மீன் குழம்பு சாப்பாடு சும்மா அருமையா இருந்துச்சி, சிம்பிளா இருந்தாலும் சூப்பர் சாப்பாடு, நாகர்கோவில் போறவங்க அங்கே போயி சாப்பிட்டு பாருங்க விஜயன்'கிட்டே அட்ரஸ் கேட்டுக்கோங்க ஹி ஹி...//
    அப்போ, விஜயன் சார், எங்களுக்கும் சாப்பாடு வாங்கித் தர மாட்டாரா?//

    சாப்பாட்டுக்கே சாப்பாடா ஹே ஹே ஹே ஹே, அதெல்லாம் சூப்பரா வாங்கி தருவாரு ஆபீசர்...ரொம்ப நல்ல மனசு அவருக்கு உங்களை மாதிரி....!!!

    ReplyDelete
  17. குடந்தை அன்புமணி said...
    ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? //

    ஐயய்யோ அப்பிடியா இதோ வந்துட்டேன்....

    ReplyDelete
  18. விக்கியுலகம் said...
    அண்ணே கேரி forward!//

    சரிடா அண்ணே.......

    ReplyDelete
  19. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அனுபவ கட்டுரை விறு விறு சுறு சுறு
    இன்னும் நீங்க எங்கே எல்லாம் திரு திருன்னு முழிச்சீங்கன்னு தெரியல,

    நாங்களும் ஆர்வமா இருக்கோம் அண்ணே//

    நன்றி மக்கா......

    ReplyDelete
  20. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    கவிதை கூட அனுபவ கவிதைதானோ!!//

    ஹே ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  21. சென்னை பித்தன் said...
    கவிதை வேறா?பயங்கரக் குஷிலதான் இருக்கீங்க!//

    ஹி ஹி ஹி தல உங்க ஆசீர்வாதம்......

    ReplyDelete
  22. கவிதை கலக்கல் (எங்க சுட்டிங்க )
    ஹா ...ஹா ...ஹா ...ஹா ...ஹா ...ஹா ...



    வலைசரத்தில் இன்று ...
    கண்ணை நம்பாதே

    ReplyDelete
  23. வீடுல அடி விழுந்ததா ?



    வலைசரத்தில் இன்று ...
    கண்ணை நம்பாதே

    ReplyDelete
  24. அண்ணன் இம்சை தாங்கலியே..இதுக்கு இவர் ஃபாரின்லயே இருந்திருக்கலாம்..

    ReplyDelete
  25. மிக நல்லப் பதிவு அண்ணாச்சி
    மனதுக்கு நிறைவாக இருந்தது

    ReplyDelete
  26. //மனதுக்கு நிறைவாக இருந்தது//

    pathivu kuraivaale irukku!!

    ReplyDelete
  27. பயண அனுபவங்களைச் சூப்பராகத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க.

    நாகர்கோவில் வந்தால், கண்டிப்பாக விஜயன் அண்ணாச்சி வீட்டிற்குப் போய் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.

    குட்டிக் கவிதை,

    நீண்ட நாள் பார்க்காதிருந்தவர்கள் நேரில் சந்திக்கையில் ஏற்படும் உணர்வினைக் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது.
    பகிர்விற்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  28. குட்டிக்கவிதை சூப்பர் மனோ  நாகர் கோவில் முகவரியை நமக்கும் அனுப்புங்க வருட இறுதியில் பயணம் போகும் போது ஒரு எட்டில் வெட்டு வெட்டுவோம் சாப்பாடு எப்படி என்று சுவையான தொடராகப் போகின்றது.

    ReplyDelete
  29. அருமையான கவிதைப் பகிர்வுக்கும் அனுபவப் ப்கிர்வுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. கவிதையும் காதலும் தொற்று வியாதி

    ReplyDelete
  31. தொடருங்கள், தொடர்கிறோம்..

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  33. குட்டிக் கவிதை மிக மிக அருமை
    தொடர்ந்தால் அனைவரும் மகிழ்வோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. இறுதியில் கவிதை நச் என்று அழகு.

    ReplyDelete
  35. அனுபவப்பகிர்வும் அன்புக்கவிதையும் அருமை!

    ReplyDelete
  36. கவிதை அருமை...யாருக்காக எழுதியிருந்தாலும...கட்டுரை விறு விறு.. சுறு சுறு..

    ReplyDelete
  37. நம்மூர்ல ஹோட்டல் ராஜத்தை விட்டா ஏதுங்க இஸ்டார் ஹோட்டல்!!!!அதுவும் ஃபைவ் இஸ்டார் :-))

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!