Sunday, July 10, 2011

நாஞ்சில் எக்ஸ்பிரஸ்'ல் நான் வாங்கிய பல்பு...

நான் மும்பையில் இருந்து ரயிலில் பிரயாணம் பண்ணுகையில் என்னருகில் அழகான ஒரு இளம் பெண்ணும் அவருடன் இரண்டு குழந்தைகளும் பிரயாணம் செய்தனர் என்னுடன், இரு குழைந்தைகளும் என்னோடு அழகாக சேர்ந்து கொண்டனர்....!!!



என்ன, குழந்தைகள் என்னிடம் கேட்ட கேள்விகள்தான் கொடூரமா இருந்தது, உதாரணத்துக்கு ஒரு கேள்வி, அங்கிள் தண்டவாளத்துல ரயில் போகுதா...??? இல்லை நாம போறோமா...??? அடுத்து, பக்கத்துல இருக்குற தண்டவாளம் ஏன் நம்ம கூடவே நிக்காம ஓடி வருதே அது ஏன்...??? [[விட்ருங்கடா அழுதுருவேன்]]

ஈரோடு ரயில் நிலையம்....

நல்ல வசதியான குடும்பம்தான் போல......நல்ல சிரிச்சி சகஜமா பேசிட்டு வந்துட்டு இருந்தோம்....ரயில் திருப்பதி தாண்டி வந்துட்டு இருக்கும் போது, மாம்பழம் விற்கும் பெண் கத்தி கொண்டே வந்தாள்... மாம்பழம்......... மாம்பழம்........ மாம்பழம்............அம்பது ரூபாய்க்கு மூனெய்......

ஈரோடு....

அந்த பெண் எங்கள் அருகில் வரவும், இந்த பெண் கேட்டாள் மாம்பழம் என்ன விலையென, மூன்று மாம்பழம் அம்பது ரூவா என பதில் வந்தது. மாம்பழம்'னு சொன்னதும் எனக்கு நம்ம ஆபீசர் நினைவுக்கு வர, மாம்பழத்தை ஆராச்சி செய்தேன், ஆமாம்ய்யா ஆபீசர் சொன்னா மாதிரியே பழத்துல பவுடர் பூசி இருந்தது....!!!

இந்த லிங்க் படிச்சி பாருங்க ஆபீசர் என்னா சொல்லி இருக்காருன்னு.....

ஈரோடு....இந்த கடையில் பயங்கர கூட்டம் இட்லிக்காக......??? நானும் அதிசயமா வாங்கி சாப்பிட்டேன் ம்ஹும் பாத்ரூம் நாறியே போச்சி....

இந்த பெண் [[பயணி]] கேட்டாள் இந்தா மூணு பழம் முப்பது ரூபாய்க்கு தர்றியா...??? அதெல்லாம் வராது என சொல்லி போய் விட்டாள் வியாபாரி....நான் சும்மா இருக்கபூடாதா அதிக பிரசங்கி, ஆபீசர் எழுதிய ரசாயன கல் வெச்ச மாம்பழம் சாப்பிடுவதால் கேன்சர் வரும், பாருங்க பவுடர் எல்லாம் இருக்கு ஒரு மணமும் இல்லை பழத்துல அதனால சாப்பிட கூடாது என்று சொல்லி, ஆபீசர் எழுதுன பிரகாரம் அதன் குண நலன்களை எடுத்து சொன்னேன்...!!!!

அந்த கடை அவ்வ்வ்வ்வ்வ்வ்....அடுத்த முறை இந்த வழியா வந்தால் இந்த கடைக்காரனுக்கு கட்டாயம் டின் உண்டு....

அந்த அம்மினியும் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார். ஆஹா நம்ம ஆபீசர் எழுதுனது இம்புட்டு வேகமா ஒர்க் அவுட் ஆகுதேன்னு சந்தோசப்ப்படுமுன்....அந்த மாம்பழம் வியாபாரி முப்பது ரூபாய்க்கு பழத்தை கொடுக்க வேகமாக எங்களை நோக்கி ஓடி வந்தார், அதுக்கிடையில் இந்த பெண் சத்தமாக ஏய் இந்தா நாப்பது ரூபாக்கு தா என கேட்கவும், மாம்பழ வியாபாரி வாயடைத்து போனாள்....!!!

ஈரோடு வருமுன் செல்வாவுக்கு போன் பண்ணினேன். எங்கே அந்த ராஸ்கல் வந்துருவானொன்னு பயந்துட்டே எடுத்த போட்டோ.....

நான் பேய் முழி முழிக்க, அந்த பெண் நாப்பது ரூபாய் குடுத்து, மூன்று மாம்பழத்தை வாங்கி தன் முந்தானையில் அந்த பவுடரை துடைத்து விட்டு ஒவ்வொரு பழமாக குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் ஒரு பழத்தை முந்தானையில் துடைத்து விட்டு என் முன்பே திங்க ஆரம்பிச்சிடுச்சி, என்னை கொலைவெறியா பார்த்துட்டே [[அவ்வ்வ்வ்வ்வ்வ்]] பக்கத்து சீட் ஆளுங்கள்லாம் என்னை ஒரு மாதிரியா பார்க்க, நான் ஓடி போயி பாத்ரூமில் நுழைஞ்சி தாள் போட்டுகிட்டேன்.....!!!  [[பச்சபுள்ளையை இப்பிடியா கொடுமை படுத்துறது ம்ஹும்...]]

வெறிச்சோடி கிடக்கும் சாத்தூர்.....

இவங்களையெல்லாம் ஒரு ஆபீசர் இல்லை ஆயிரம் ஆபீசர் வந்தாலும் திருத்த முடியாது போல........!!!!

விருதுநகர் ரயில்வே ஸ்டேசன்.....

விருதுநகர்.......என் முன்னோர்கள் வாழ்ந்த ஊராச்சே அதான் ஒரு போட்டோ....!!!

டிஸ்கி : அடுத்தது நாஞ்சில் மனோ'வின் தத்துபித்துவங்கள்......
[[சாணி, பிஞ்ச செருப்பு, அழுகுன முட்டை, அழுகுன "தக்காளி" இன்னும் இத்யாதிகள் எல்லாம் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களால் எல்லையிலேயே தடை செய்ய பட்டுள்ளது கவனிக்கபடதக்கது]]

54 comments:

  1. சாத்தூருக்கு அப்புறம் கோவில்பட்டி வருமே ..அந்த போட்டோ ஏன் போட வில்லை ..இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ..

    ReplyDelete
  2. யோவ் ஒரு போலீஸ்காரன் வல்கரா என்னை வாட்ச் பண்ணிட்டே வந்தான்யா மதுரையில் இருந்து ஹி ஹி அதான் பயந்துட்டேன் ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  3. இம்சைஅரசன் பாபு.. said...

    சாத்தூருக்கு அப்புறம் கோவில்பட்டி வருமே ..அந்த போட்டோ ஏன் போட வில்லை ..இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ..//

    நானும் வெளிநடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  4. சுவையான ரயில் பயணம் போகும் பாதைகள் படங்கள் அழகு நல்ல தொடர் மனோ . இரவு நேர ரயில் நிலைய படம் அழகானது மிகவும் பிடிச்சுருக்கு எனக்கு.

    ReplyDelete
  5. விருதுநகரில் புகழ் பெற்ற ஒரு ஆலயம் இருக்கு பெயர் உடனடியாக ஞாபகம் வரவில்லை அதைப்பற்றியும் தொடரில் வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா!

    ReplyDelete
  6. அய்யா சீக்கிறம் பயணத்தை முடிங்கய்யா...

    ReplyDelete
  7. பலதடவை சென்னை போய் இருக்கின்றேன் இன்னும் ரயிலில் ஏறியது இல்லை ஏறி அவஸ்தைப் படனும் என்று உங்கள் தொடர் என்னைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  8. புகைப்படக்கருவிக்கு யாரும் ஆப்பு வைக்கவில்லைப் போலும் அதனால்தான் படம் வெளிவருகிறது .

    ReplyDelete
  9. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    இம்சைஅரசன் பாபு.. said...

    சாத்தூருக்கு அப்புறம் கோவில்பட்டி வருமே ..அந்த போட்டோ ஏன் போட வில்லை ..இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ..//

    நானும் வெளிநடப்பு செய்கிறேன்//

    எலேய் ராஸ்கல் ரெண்டு பேரையும் கொண்டேபுடுவேன்......

    ReplyDelete
  10. Nesan said...
    சுவையான ரயில் பயணம் போகும் பாதைகள் படங்கள் அழகு நல்ல தொடர் மனோ . இரவு நேர ரயில் நிலைய படம் அழகானது மிகவும் பிடிச்சுருக்கு எனக்கு.//

    மிக்க நன்றி மக்கா....

    ReplyDelete
  11. Nesan said...
    விருதுநகரில் புகழ் பெற்ற ஒரு ஆலயம் இருக்கு பெயர் உடனடியாக ஞாபகம் வரவில்லை அதைப்பற்றியும் தொடரில் வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா!//

    அட அப்பிடியா...??? நான் கல்பனா பாப்பாவை பார்க்க [[விருதுநகர்]] போகும் போது கேட்டு சொல்றேன்......

    ReplyDelete
  12. # கவிதை வீதி # சௌந்தர் said...
    அய்யா சீக்கிறம் பயணத்தை முடிங்கய்யா...//

    யோவ் அதான் முடிஞ்சிடுச்சுன்னு டிஸ்கி போட்டுருக்கேனே பிச்சிபுடுவேன் பிச்சி....

    ReplyDelete
  13. Nesan said...
    பலதடவை சென்னை போய் இருக்கின்றேன் இன்னும் ரயிலில் ஏறியது இல்லை ஏறி அவஸ்தைப் படனும் என்று உங்கள் தொடர் என்னைத் தூண்டுகிறது.//

    கரிக்ட்டா செட் பண்ணி போங்க என்ன...

    ReplyDelete
  14. Nesan said...
    புகைப்படக்கருவிக்கு யாரும் ஆப்பு வைக்கவில்லைப் போலும் அதனால்தான் படம் வெளிவருகிறது .//

    ஹா ஹா ஹா ஹா மக்கா....

    ReplyDelete
  15. FOOD said...
    //இம்சைஅரசன் பாபு.. said...
    சாத்தூருக்கு அப்புறம் கோவில்பட்டி வருமே ..அந்த போட்டோ ஏன் போட வில்லை ..இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ..//
    போட்டோ போட்டாலும் சண்டைக்கு வாறீக, போடாட்டாலும் சண்டைக்கு வாறீக! என்னதான் செய்யறது?//

    ஆபீசர் செக்யூரிட்டி ரூம்ல போட்டு நாலு மிதி குடுங்க அப்பத்தான் இவன் சரியாவான் போல......

    ReplyDelete
  16. FOOD said...
    சாரி பாபு, நீங்க கேட்டது, ஊரோட போட்டோவா? நான் உங்கள் போட்டோன்னு நினைச்சேன்!ஹா ஹா.//

    ஹலோ ஆபீசர், தம்பி வல்கர் வாண்டட்ல இருக்கான் தெரியாதா உங்களுக்கு ஹி ஹி....காட்டி குடுத்துராதீக.....

    ReplyDelete
  17. அண்ணே.... ஒரு பல்பு இல்லை... நிறைய பல்பு வாங்கியிருகிங்க.

    ReplyDelete
  18. விருதுநகர் பெயர்ப்பலகை போட்டோவை எடுக்கும்போது செம மப்புல இருந்தீகளா???

    ReplyDelete
  19. நல்ல பயண அனுபவம்.. தொடருங்கள்.

    ReplyDelete
  20. பல்புகளின் மொத்த வியாபாரியின் பதிவுக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் ஹிஹி!

    ReplyDelete
  21. ஈரோடு வந்தும் என்னை அழைக்காததை வன்மையாக கண்டித்து மைனஸ் ஓட்டு போடறேன் தம்பி

    ReplyDelete
  22. நமக்கு தெரிந்ததை , நல்லதை மற்றவர்களுக்கு சொல்வதில் தவறே இல்லை அண்ணாச்சி , நீங்க தயங்காம நல்லவைகளை தொடருங்க

    ReplyDelete
  23. சுவையான ரயில் பயணம் போகும் பாதைகள் படங்கள் அழகு நல்ல தொடர்

    ReplyDelete
  24. நல்ல பயண அனுபவம்.. தொடருங்கள்.

    ReplyDelete
  25. அடுத்து மதுரை ஸ்டேஷன் வரும் மறக்காம போட்டோ போடுங்க ஸ்டேஷன்-ஐ பார்த்து 4 -5 மாசம் ஆகுது, இன்னும் ரெண்டு மாசம் ஆகும் ஊருக்கு போக

    ReplyDelete
  26. சுவாரசிகமான ரயில் கதை,,,,
    வாழ்த்துக்கள்,,,,

    ReplyDelete
  27. அங்கிள், வெல்டன் இப்படித் தான் நிறைய பல்பு வாங்கோணும். ஓக்கை. அதை மறக்காம இங்க வந்து சொல்லணும்.
    மக்களுக்கு எதையும் சொல்லி விளங்க வைக்க முடியாது. அனுபவித்து திருந்தினா தான் உண்டு.

    ReplyDelete
  28. //இம்சைஅரசன் பாபு.. said...

    சாத்தூருக்கு அப்புறம் கோவில்பட்டி வருமே ..அந்த போட்டோ ஏன் போட வில்லை ..இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ..//

    நானும் வெளிநடப்பு செய்கிறேன்//

    நானும் வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  29. என்னருகில் அழகான ஒரு இளம் பெண்ணும் அவருடன் இரண்டு குழந்தைகளும் பிரயாணம் செய்தனர் என்னுடன், இரு குழைந்தைகளும் என்னோடு அழகாக சேர்ந்து கொண்டனர்....!!!//

    பிள்ளையோட வர்ற பொண்ணைக் கூட விட்டு வைக்கிறாங்க இல்லையே..

    கொடுமை சரவணா. அவங்க அழகான அம்மாவா. இல்லை அழகான பொண்ணா. எடுங்கடா அந்த அருவாளை.

    ReplyDelete
  30. நம்ம மனோ அண்ணாச்சிக்கு மாம்பழம் கொடுக்காது, காட்டிக் காட்டிச் சாப்பிட்ட அந்த பெண்ணின் செயலினை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ரயிலில் குட்டீஸ் கூட வாங்கிய பல்புகளை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.
    ரசித்தேன் பாஸ்.

    ReplyDelete
  31. சுவையான ரயில் பயணம்.

    ReplyDelete
  32. தாங்கள் ஊர் வந்து சென்றது பதிவர்கள் கூட்டத்தில்
    கலந்துகொண்டது குறித்து ஒரு பயண அனுபவமாக மட்டும் அல்லாமல்
    ஒரு விமர்சன கண்ணோட்டத்துடன் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்
    பயணக் கட்டுரை மிக மிக அருமை

    ReplyDelete
  33. பயணங்கள் முடிவதில்லை.
    பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.

    ReplyDelete
  34. இருட்டுனாலும் விட மாட்டோம்னு படமா எடுத்து தள்ளியிருகீக

    ReplyDelete
  35. FOOD said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    FOOD said...
    சாரி பாபு, நீங்க கேட்டது, ஊரோட போட்டோவா? நான் உங்கள் போட்டோன்னு நினைச்சேன்!ஹா ஹா.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஹலோ ஆபீசர், தம்பி வல்கர் வாண்டட்ல இருக்கான் தெரியாதா உங்களுக்கு ஹி ஹி....காட்டி குடுத்துராதீக.....//


    ஆஹா, அப்படியா!
    காட்டிக் கொடுக்கவே மாட்டோம், இது ஆணை.//

    அடிச்சும் கேப்பாக......

    ReplyDelete
  36. தமிழ்வாசி - Prakash said...
    அண்ணே.... ஒரு பல்பு இல்லை... நிறைய பல்பு வாங்கியிருகிங்க.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  37. சிவகுமார் ! said...
    விருதுநகர் பெயர்ப்பலகை போட்டோவை எடுக்கும்போது செம மப்புல இருந்தீகளா???//

    ஊத்தி தந்ததே நீங்கதானே, ஹி ஹி மாட்டிக்கிட்டார்....

    ReplyDelete
  38. வேடந்தாங்கல் - கருன் *! said...
    நல்ல பயண அனுபவம்.. தொடருங்கள்.//

    மிக்க நன்றி வாத்தி.....

    ReplyDelete
  39. விக்கியுலகம் said...
    பல்புகளின் மொத்த வியாபாரியின் பதிவுக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் ஹிஹி!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

    ReplyDelete
  40. சி.பி.செந்தில்குமார் said...
    ஈரோடு வந்தும் என்னை அழைக்காததை வன்மையாக கண்டித்து மைனஸ் ஓட்டு போடறேன் தம்பி//

    டேய் அண்ணா உன் நம்பர் உடனே கிடைக்கலை....

    ReplyDelete
  41. A.R.ராஜகோபாலன் said...
    நமக்கு தெரிந்ததை , நல்லதை மற்றவர்களுக்கு சொல்வதில் தவறே இல்லை அண்ணாச்சி , நீங்க தயங்காம நல்லவைகளை தொடருங்க//

    மிக்க நன்றி மக்கா....

    ReplyDelete
  42. மாலதி said...
    சுவையான ரயில் பயணம் போகும் பாதைகள் படங்கள் அழகு நல்ல தொடர்//

    நன்றி மாலதி...........

    ReplyDelete
  43. மாலதி said...
    நல்ல பயண அனுபவம்.. தொடருங்கள்.//

    நன்றி நன்றி......

    ReplyDelete
  44. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அடுத்து மதுரை ஸ்டேஷன் வரும் மறக்காம போட்டோ போடுங்க ஸ்டேஷன்-ஐ பார்த்து 4 -5 மாசம் ஆகுது, இன்னும் ரெண்டு மாசம் ஆகும் ஊருக்கு போக//

    ஹி ஹி ஹி ஒரு போலீஸ் அண்ணாச்சி செமையா என்னை வாட்ச் பண்ணுனாறு அதான் போட்டோ எடுக்கலை....

    ReplyDelete
  45. vidivelli said...
    சுவாரசிகமான ரயில் கதை,,,,
    வாழ்த்துக்கள்,,,,//

    மிக்க நன்றி விடிவெள்ளி....

    ReplyDelete
  46. vanathy said...
    அங்கிள், வெல்டன் இப்படித் தான் நிறைய பல்பு வாங்கோணும். ஓக்கை. அதை மறக்காம இங்க வந்து சொல்லணும்.
    மக்களுக்கு எதையும் சொல்லி விளங்க வைக்க முடியாது. அனுபவித்து திருந்தினா தான் உண்டு.//

    ஹி ஹி ஹி ஹி இப்போ சந்தோஷமா.....

    ReplyDelete
  47. செங்கோவி said...
    //இம்சைஅரசன் பாபு.. said...

    சாத்தூருக்கு அப்புறம் கோவில்பட்டி வருமே ..அந்த போட்டோ ஏன் போட வில்லை ..இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ..//

    நானும் வெளிநடப்பு செய்கிறேன்//

    நானும் வெளிநடப்பு செய்கிறேன்.//

    அருவா அருவா...............

    ReplyDelete
  48. நிரூபன் said...
    என்னருகில் அழகான ஒரு இளம் பெண்ணும் அவருடன் இரண்டு குழந்தைகளும் பிரயாணம் செய்தனர் என்னுடன், இரு குழைந்தைகளும் என்னோடு அழகாக சேர்ந்து கொண்டனர்....!!!//

    பிள்ளையோட வர்ற பொண்ணைக் கூட விட்டு வைக்கிறாங்க இல்லையே..

    கொடுமை சரவணா. அவங்க அழகான அம்மாவா. இல்லை அழகான பொண்ணா. எடுங்கடா அந்த அருவாளை.//

    அருவாளுக்கே அருவாளா ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  49. நிரூபன் said...
    நம்ம மனோ அண்ணாச்சிக்கு மாம்பழம் கொடுக்காது, காட்டிக் காட்டிச் சாப்பிட்ட அந்த பெண்ணின் செயலினை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ரயிலில் குட்டீஸ் கூட வாங்கிய பல்புகளை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.
    ரசித்தேன் பாஸ்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  50. சே.குமார் said...
    சுவையான ரயில் பயணம்.//

    ஹா ஹா ஹா ஆமாம் ஆமாம்...

    ReplyDelete
  51. Ramani said...
    தாங்கள் ஊர் வந்து சென்றது பதிவர்கள் கூட்டத்தில்
    கலந்துகொண்டது குறித்து ஒரு பயண அனுபவமாக மட்டும் அல்லாமல்
    ஒரு விமர்சன கண்ணோட்டத்துடன் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்
    பயணக் கட்டுரை மிக மிக அருமை//

    முயற்சி பண்ணுறேன் குரு.....

    ReplyDelete
  52. இராஜராஜேஸ்வரி said...
    பயணங்கள் முடிவதில்லை.
    பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.//

    நன்றி மேடம்...

    ReplyDelete
  53. ஸ்பார்க் கார்த்தி said...
    இருட்டுனாலும் விட மாட்டோம்னு படமா எடுத்து தள்ளியிருகீக//

    ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ.....

    ReplyDelete
  54. மாம்பழத்துல கல்லு வச்சு பழுக்க வைக்கிராங்க்ளான்....அந்த குழந்தைய பாத்திங்கன்னா இதயும் சொல்லுங்க...

    மாம்பழம் நாப்புதுருவாய்க்கு மூனேய்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!