Monday, July 25, 2011

அரசின் கவனத்திற்கு...





அதிரைக்காரன் said...


அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன்இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம்செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com
கடந்த எனது பதிவில் மேற்கொண்டவாறு கமெண்ட்ஸ் போட்டுருந்தார் நண்பர் அதிரைக்காரன், அவர் வேண்டுகோளில் இருந்த நியாயம் என்னையும் உசுப்பேத்தியதால், நானும் இதை மீள் பதிவாக போட்டு என் வலைதள நண்பர்களுக்கு தெரிய தருகிறேன்...!!

26 comments:

  1. வணக்கம் அண்ணாச்சி, காத்திரமான ஒரு அறிவிப்பு பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. நிச்சயமாக இந்த மாணவனுக்கு உதவிகள் போய்ச் சேர வேண்டும். அரசு அதற்கு ஆவண செய்ய வேண்டும். ஊடகங்களின் புரட்சியால் நிச்சயமாக அந்த மாணவனுக்கு வளமான ஒரு எதிர்காலம் அமையும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ஒரு அப்டேட், அந்த மாணவர், உதவிகள் கிடைத்து அக்கல்லூரியில் சேர்ந்துட்டார், இனி வரும் வருடங்களுக்கு உதவுவதாக அவரைத் தொடர்பு கொண்ட பிரபாகர் தெரிவித்துள்ளார்! https://plus.google.com/102573684903499622557/buzz

    ReplyDelete
  3. ஊடகங்களின் புரட்சியால் நிச்சயமாக அந்த மாணவனுக்கு வளமான ஒரு எதிர்காலம் அமையும் .

    ReplyDelete
  4. ///////
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஒரு அப்டேட், அந்த மாணவர், உதவிகள் கிடைத்து அக்கல்லூரியில் சேர்ந்துட்டார், இனி வரும் வருடங்களுக்கு உதவுவதாக அவரைத் தொடர்பு கொண்ட பிரபாகர் தெரிவித்துள்ளார்! https://plus.google.com/102573684903499622557/buzz
    ///////


    உதவிக்காக இங்கே காத்திருக்க வேண்டியதில்லை....அவருக்கு ஒரு நன்றியை பறைச்சாற்றுவோம்...

    பாராட்டுக்கள் மனோ...

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி அண்ணே

    ReplyDelete
  6. நம்ம நாட்டோட நிலைமையை பாருங்க ஒரு பக்கம் பணத்த கொண்டுபோய் உண்டியளிலும், வங்கிகளிலும் கொட்டுரானுங்க ஒரு பக்கம் எல்லா தகுதிகள் இருந்தும் பணம் இல்லாமல் படிக்க முடியாமல் இருக்கிறது வெட்க படுவோம் இந்த நாட்டில் பிறந்ததற்கு. கண்டிப்பாக உதவி செய்வோம்

    ReplyDelete
  7. //சசிகுமார் said...

    நம்ம நாட்டோட நிலைமையை பாருங்க ஒரு பக்கம் பணத்த கொண்டுபோய் உண்டியளிலும், வங்கிகளிலும் கொட்டுரானுங்க ஒரு பக்கம் எல்லா தகுதிகள் இருந்தும் பணம் இல்லாமல் படிக்க முடியாமல் இருக்கிறது வெட்க படுவோம் இந்த நாட்டில் பிறந்ததற்கு. கண்டிப்பாக உதவி செய்வோம்


    இந்த நாட்டுல பிறந்ததிற்கு பெருமை படணும் ஏன்னா உங்களை மாதிரி உதவும் உள்ளங்கள் வேறு எங்கும் கிடையாது..

    ReplyDelete
  8. மனோ!ஆக்கபூர்வமான சமூக கண்ணோட்டம்.அதிரைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இந்த பதிவை நானும் மீள் பதிவை போடல்லாம்ன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க போட்டுடீங்க!!!

    ReplyDelete
  10. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஒரு அப்டேட், அந்த மாணவர், உதவிகள் கிடைத்து அக்கல்லூரியில் சேர்ந்துட்டார், இனி வரும் வருடங்களுக்கு உதவுவதாக அவரைத் தொடர்பு கொண்ட பிரபாகர் தெரிவித்துள்ளார்! https://plus.google.com/102573684903499622557/buzz//

    மிக்க நன்றி மக்கா....!!!

    ReplyDelete
  11. நல்ல ஒரு நடவடிக்கை பாஸ் ,முயற்சி வெற்றியடைய சிறியேனின் வாழ்த்துக்களும் ...

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அட ஒரு நல்ல விடயம்.. அத்தோடு நாங்களும் சும்மா கும்மியடிகலன்னு நிருபிச்சிட்டிங்க வாழ்த்துக்கள் மனோ..
    இப்படியான விடயங்களுக்கு நாங்களும் ஏதாவுதல் செய்ய உங்கள் பதிவு தூண்டி இருக்கிறது..

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  14. அது ஒன்றுமில்ல மாப்பிள..
    ஒரே கருத்த கொப்பி பேஸ் செய்திட்டேன் அதுதான் ஒன்றை டெட் பன்னி விட்டேன் அடிக்கடி சிபியிட்ட போறதால வந்த வினை....!!!

    ReplyDelete
  15. இவருக்கு தேவையான பண உதவி செய்யப்பட வேண்டும் .. நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள் ராஜா.. மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள். நன்றி மனோ பகிர்வுக்கு.

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றிண்ணே..சேரவேண்டியவங்களுக்கு சேரட்டும்

    ReplyDelete
  17. பன்னிக்குட்டி ராமசாமி பின்னூட்டத் திலிருந்து நல்லது நடந்திருப்பதாகத் தெரிகிறது.தொடரட்டும்!

    ReplyDelete
  18. இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...

    ReplyDelete
  19. நல்ல எதிர்காலம் அவருக்கு அரசு வழங்கனும்! 

    ReplyDelete
  20. சிறப்பான பணி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. பகிர்வுக்கு நன்றி சார்!!

    உங்க வீட்டம்மாவுக்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  22. நானும் இந்த பதிவை தொட்டிருக்கிறேன்..அனைவரும் தொட நன்றிகள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!