Friday, February 4, 2011

மோகினி

மும்பை ஏர்போர்டில் பணி புரிந்த சமயம். எங்கள் ரூமில் இருந்த நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் யாராவது ஊரில் இருந்து வந்தால் அவர்களை அரவணைத்து வேலையும் வாங்கி கொடுத்து ஆதரிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான் இது. அப்படி வந்த நண்பர்கள் சிலருக்கு ஏர்போர்டில் வேலை வாங்கி கொடுத்தோம். ஏர்போர்டில் இருந்து எங்கள் ரூமிற்கு நடந்து வர போக இருபது நிமிஷம் ஆகும். அப்படி போயி வரும் நண்பர்கள் அடிக்கடி குளிர் காய்ச்சலில் படுக்க [சீதோஷ்ணம்] தொடங்கினர். நாங்களும் ஆஸ்பத்திரி கொண்டு போயி குணமாக்குவது வழக்கம். அந்த நேரம் பக்கத்து அம்மன் கோவில் பூசாரி  ஒருவர் சொன்னார்.... இந்த காய்ச்சல் சாதாரணமானது அல்ல அவர்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். ஒரு நண்பனை ஒரு நாள் அவரிடம் அழைத்து சென்றோம். அவரும் அருள் [ங்கே] வந்து மங்காத்தா ஆடினார் ஆடி விபூதியை அள்ளி வீசினார். பின்பு சொன்னார் டாய் உன்னை பிடித்திருப்பது மோகினி பிசாசு என்று. எப்பிடி சாமின்னு கேட்டோம். அவர் சொன்னார் இவன் வேலைக்கு போயிட்டு நேத்து ராத்திரி வீடு திரும்பும் போது வரும் வழியில் இருக்கே ஒரு பெரிய ஆலமரம் அதுல இருந்த மோகினி இவனை பிடிச்சிருக்காள் என்றார். காய்ச்சல் நண்பன் இன்னும் கிடு கிடு என நடுங்க தொடங்கினான்....
எல்லா நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் ஒரு உள் வட்டம் உண்டல்லவா..? அப்பிடி எனக்கு மாரி என ஒரு நண்பன் உண்டு அவனை நாங்கள் டுவென்டி'ன்னு கூப்பிடுவோம். அவனுக்கும் எனக்கும் ஆர்வம் பொத்துகிடிச்சி மோகினியை பார்க்க [யப்பா] அவன் கங்கை கொண்டான் பக்கம் இத்திகுளத்தை சேர்ந்தவன் . நிறைய பேய் கதை[பொய்] சொல்லுவான் அவனும் நானும் திட்டம் தீட்டினோம் மக்கா இன்னைக்கு நாம மோகினியை பார்க்க போறோம்னு. அவன் சொன்னான் மோகினி சரியாக ராத்திரி பனிரென்ன்டு மணிக்குதான் வரும் என்றான். சரியாக 11:30 மணிக்கு கிளம்புகையில் நண்பன் சொன்னான் மனோ இப்பிடி வெறுங்கையோட போனா மோகினி நம்மளை அடிசிரும் என சொல்லிட்டு என் கையில ஒரு அருவாளை தூக்கி கொடுத்தான் அவன் ஒரு கத்தியை எடுத்து கொண்டான். என்ன அருவா கத்தின்னு கேக்குறீங்களா...?மும்பையில அப்போ  இந்து முஸ்லிம் சண்டை நடந்துட்டு இருந்த நேரமாகையால் பாதுகாப்புக்கு அது எங்களுக்கு தேவையாக இருந்தது [இப்போ அதெல்லாம் இல்லை] கிளம்பியாச்சு மோகினியை பார்க்க பாழ் அடஞ்ச்ச பங்களாவும் அருகில் உள்ள ஆலமரத்தையும் நோக்கி. . . .
                 நாங்கள் போயி அருகில் உள்ள பாழ் அடைஞ்ச பங்களா அருகில் மறைவாக ஆலமரத்தை காணும் வகையில் படுத்து கொண்டோம் அருவாளை அழுத்தி பிடித்துக் கொண்டே. நேரம் மெதுவாக பயமாக கரைய ஆரம்பித்தது. மணி 12 நடு நிசி ஒரே ஊளைசத்தம் ஆந்தை கூவை வவ்வால் எல்லாம் கிடந்து உறுமிக்கிட்டே இருக்கு நாங்கள் மூச்சை கூட மிக மெதுவா விட்டவாறே காத்திருந்தோம். மணி 12:30 மோகினி சேச்சியை காணவில்லை, மணி 1:00 காணவில்லை. நண்பன் மெதுவாக சொன்னான். மோகினி நிர்வானமாதான் சுத்தும் எனவே நாமும் நிர்வாணமாக ஆலமரத்தை சுத்தினால் நாமும் பேய்தான் என எண்ணிக்கொண்டு மோகினி வெளியே வரும் வா என்றான். ஆத்தீ நான் மாட்டேன் என அலற [மெதுவா] நான் மட்டும் போறேன் நீ இங்கேயே இருந்து பாரு என சொல்லிவிட்டு உடைகளை களைந்து என்னிடம் [மொத்த நிர்வாணம்] கொடுத்து விட்டு கத்தியை மட்டும் கையில் வைத்து கொண்டு போனான். எனக்கு திகில், அவன் மெதுவாக ஆலமரத்தை சுத்த ஆரம்பித்தான். எனக்கு இப்போ அவன் மனுஷனா பேயான்னு சந்தேகம் வந்து நடுங்க ஆரம்பிச்சிட்டேன். சத்தம் போட்டு கூப்பிடவும் முடியாது, மோகினியையும் காணலை மண்ணாங்கட்டியும் காணலை ஆனா நண்பன் பேயா தெரிய ஆரம்பிச்சிட்டான் ஏன்னா  பேய் வேஷம் மாறியும் வரும்னு பெரியவங்க[நாசமா போவ] சொல்லியிருக்காங்க. எனக்கு இவன் மேலேயே சந்தேகம் வலுக்க அருவாளை பின்னாடி  இருந்து உருவினேன் வலது கையில் இறுக்கமாக பிடித்து கொண்டேன். அவன் அசராமல் நடந்து கொண்டிருந்தான். பிறகு அவனே சத்தமாக சொன்னான் மனோ மோகினியும் இல்லை ஒரு "......." இல்லைன்னு சொல்லிட்டு என்ன கூப்பிட்டான் எலேய் நீயும் வான்னு, எனக்கோ பயம் பயபுள்ள பக்கத்துல வந்து வித்யாசமா எதும்  சமிக்சை தெரிஞ்சா அருவாளை வீச ரெடியானேன். நானும் தைரியத்தை வரவச்சி [கிடு கிடு] அவனை கூப்பிட்டேன் நீ இங்கே வான்னு, வந்தான் அருவா பிடி இறுகியது, வந்தவன் கத்திய கீழே போட்டுட்டு உடைகளை அணிந்தான் நான் ரெடியா....அருவாளோடு ஒதுங்கி நின்றேன். ஆக்கங்கெட்ட கூவ ஒன்னையும் காணலைன்னு சொன்னான். சொல்லிட்டு கிளம்ப நான் ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னால் போனேன். வெளிச்சத்துக்கு வந்த பின்தான் பயம் போயி அருவா பின்னுக்கு போனது. சரி வந்ததே வந்துட்டோம் த லீலா [THE HOTEL LEELA] ஹோட்டல்ல[ஃபைவ் ஸ்டார்] இளநி களவாண்டு குடிப்போம்னு கம்பி எம்பி சாடி செவ்வெளனி ஒரு குலைய வெட்டி, என்னது யாரு ஹோட்டல் செக்கூர்ட்டியா...? நம்ம கையில சீவலப்பேரி அயிட்டம்லா இருக்கு பக்கத்துல வருவானாக்கும். பக்கத்துல ஒரு குளம் உண்டு [இப்போ அந்த இடம் பெரிய கார்பார்க்கிங்] அங்கே போயி இளநிய வெட்டி குடிச்சுட்டு மோகினி கதைய சொல்லி சிரிச்சி அவனை பேயாக நான் நினச்ச கதையும் பேசி சிரி சிரின்னு சிரிக்கும் போது சொன்னான். இனி என் வாழ்கையில உன்ன மாதிரி ஒருத்தன்கிட்டே அருவாளை கொடுக்க மாட்டேன்னு சபதம் செய்தான் [ஹா ஹா ஹா] அப்பிடியே ரூம் வந்து படுத்து விட்டோம். 
       மறுநாள் பெரும் பரபரப்பு.....எங்க ரூமில் என்னாச்சுடான்னு  எழும்பினேன். மனோ நம்ம காளியப்பனுக்கு காலையிலே குளிர் காய்ச்சல், அதான் பூசாரிகிட்டே கூட்டிட்டு போகணும் நீயும் வான்னான். சரின்னுட்டு நம்ம டுவென்டி'யையும் எழுப்பிட்டு கூட போனோம். காளியப்பன் குளிர்  காய்ச்சல்'ல நடுங்கிட்டு இருந்தான். பூசாரி வீட்டு சாமி படம் முன்பு இவனை உக்காரவச்சி அவர் சாமி ஆடினார்  ஆக்ரோஷமாக. விபூதியை வீசினார் பின்பு கேட்டார் அவனிடம் நேற்று ராத்திரி எங்கேயும் போனியான்னு. காளியப்பன் சொன்னான் ஆமா சாமி நான் நேற்று பாத்ரூம் போக குளத்து பக்கம் போனேன் அங்கே இருட்டுல ரெண்டு பேயிங்க உக்காந்து என்னத்தையோ வெட்டி வெட்டி தின்னுட்டு இருந்துச்சி அதை பாத்து நான் பயந்துட்டேன் சாமீன்னு கதருனான். நம்ம நண்பன் டுவென்டி என் கையை அழுத்தினான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் சிரித்துகொண்டோம். "அந்த பேயே நாங்கதானே" அங்கே சொன்னால் களவாணித்தனம் [இளநி] வெளியே வந்துருமே...வெளியே வந்து நானும் டுவெண்டியும் சிரிச்ச சிரிப்பு இருக்கே......அட ஆக்கங்கெட்ட கூவைகளா.................
                     

78 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. காளியப்பனுக்கு பிடிச்சது மனித பேய்தான் என்பது இப்போதாவது தெரியுமா?

    ReplyDelete
  3. மோகினி.... செம கலக்கல்

    ReplyDelete
  4. இந்த காட்சியெல்லாம் எந்த படத்திலே பாஸ் வருது..
    கதை நல்லா இருக்கே
    அடிக்கடி இதுபோல பேய் கதையா சொல்லுங்க பாஸ்.. கவிதை படிச்சி ரொம்ப போர் அடிக்குது..

    ReplyDelete
  5. //காளியப்பனுக்கு பிடிச்சது மனித பேய்தான் என்பது இப்போதாவது தெரியுமா?//

    தெரியாது...

    ReplyDelete
  6. //அடிக்கடி இதுபோல பேய் கதையா சொல்லுங்க பாஸ்.. கவிதை படிச்சி ரொம்ப போர் அடிக்குது.. //

    உங்களுக்கும் மோகினி ட்ரீட்மெண்ட்தான் வேணுமா....ஹா ஹா ஹா...

    ReplyDelete
  7. கலக்கிட்டீங்க படிக்கும் போதே சிரிப்பு வருது. உங்க எடத்துல இருந்திருந்தா அவ்ளோதான்!!!

    ReplyDelete
  8. சூப்பர் மனோ, அனுபவங்கள் அருமை. மனோவின் இன்னொருபக்கத்தை இந்த எழுத்தில் பார்த்தேன், சபாஷ்.

    ReplyDelete
  9. //வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  10. //கலக்கிட்டீங்க படிக்கும் போதே சிரிப்பு வருது. உங்க எடத்துல இருந்திருந்தா அவ்ளோதான்!!! //

    ஹா ஹா ஹா நன்றி மக்கா....

    ReplyDelete
  11. //சூப்பர் மனோ, அனுபவங்கள் அருமை. மனோவின் இன்னொருபக்கத்தை இந்த எழுத்தில் பார்த்தேன், சபாஷ்.//

    ரொம்ப நன்றிங்க....

    ReplyDelete
  12. //ஆக்கங்கெட்ட கூவை//

    நம்மூர் பேச்சு வழக்கு சொல் இணையத்தில் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது

    ReplyDelete
  13. அட ஆக்கங்கெட்ட கூவைகளா.................


    .....அய்... நம்ம ஊரு பேச்சு! ..

    ReplyDelete
  14. செம கலக்கல்.

    ஹா... ஹா... ஹா..!

    ReplyDelete
  15. ”அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
    அஞ்சாத பொருளில்லை அவனியிலே”....
    பயத்தையும் சிரிப்பையும் கலந்து கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  16. அனுபவங்களை ரொம்பவும் யதார்த்தமா பேச்சு வழக்கில் சொல்லியிருக்கீங்க அருமை பாஸ்..

    ReplyDelete
  17. //"அந்த பேயே நாங்கதானே"//

    அப்போ அதுக்கு பேரு மனோ பிசாசு தானே வரும்

    ReplyDelete
  18. //நம்மூர் பேச்சு வழக்கு சொல் இணையத்தில் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது //

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  19. அட ஆக்கங்கெட்ட கூவைகளா.................


    .....அய்... நம்ம ஊரு பேச்சு! ../////


    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  20. ஆர்னிகா நாசர் ரேஞ்சுக்கு எழுதறீங்க.கலக்குங்க.

    ReplyDelete
  21. //செம கலக்கல்.

    ஹா... ஹா... ஹா..!//

    நன்றி மக்கா.......

    ReplyDelete
  22. //அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
    அஞ்சாத பொருளில்லை அவனியிலே”....
    பயத்தையும் சிரிப்பையும் கலந்து கலக்கிட்டீங்க//

    கவிதை கவிதை சூப்பர் சென்னை பித்தன்.......

    ReplyDelete
  23. //அனுபவங்களை ரொம்பவும் யதார்த்தமா பேச்சு வழக்கில் சொல்லியிருக்கீங்க அருமை பாஸ்.. //

    நன்றி மக்கா மாணவன்.....

    ReplyDelete
  24. //அப்போ அதுக்கு பேரு மனோ பிசாசு தானே வரும் //

    மனோ பிசாசு மட்டும் வராது, நாஞ்சிலும் சேர்ந்தே வரும் பரவாயில்லையா.....ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  25. //ஆர்னிகா நாசர் ரேஞ்சுக்கு எழுதறீங்க.கலக்குங்க//

    நன்றிகள் அண்ணா.....
    ஆமா என்னாச்சு பேரை மாத்திட்டேங்க......[இனியவன்]

    ReplyDelete
  26. மக்கா தன் அனுபவத்தை அழகாக கூறியுள்ளிர்கள்.

    ReplyDelete
  27. பேய்கத சொல்றாமாதிரி காமடி கத சொல்லிபுட்டீங்களே ஹி ஹி

    ReplyDelete
  28. கதை??அப்ப சரிங்கண்ணா!

    ReplyDelete
  29. //மக்கா தன் அனுபவத்தை அழகாக கூறியுள்ளிர்கள்//

    நன்றி மக்கா தூயவன்....

    ReplyDelete
  30. //பேய்கத சொல்றாமாதிரி காமடி கத சொல்லிபுட்டீங்களே ஹி ஹி//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  31. //கதை??அப்ப சரிங்கண்ணா!//

    ஹி ஹி ஹி ஹி..........

    ReplyDelete
  32. உங்கள் பதிவின் எழுத்துக்கள் என்னை அங்கே கொண்டு சென்றது போல் இருந்தது.. நிஜத்தில் நடந்தவையாக இருந்தாலும் அதனை சிலரால் தான் உண்மையாக வெளிப் படுத்த தெரியும்.. அது உங்களுக்கே உரித்தான ஒன்று..நண்பன்டா :)

    ReplyDelete
  33. //உங்கள் பதிவின் எழுத்துக்கள் என்னை அங்கே கொண்டு சென்றது போல் இருந்தது.. நிஜத்தில் நடந்தவையாக இருந்தாலும் அதனை சிலரால் தான் உண்மையாக வெளிப் படுத்த தெரியும்.. அது உங்களுக்கே உரித்தான ஒன்று..நண்பன்டா :)//

    மிகவும் நன்றி மக்கா................
    நண்பேண்டா...

    ReplyDelete
  34. மனோ நீங்க சரியான .............................ஆளுதான். அது என்ன புள்ளி புள்ளியா.....அது சஸ்பென்ஸ்.
    கடைசியிலா சிரிப்பா சிரிக்க .............................நல்லாத்தான் எழுதுறீங்க!

    ReplyDelete
  35. முன்னாளில் இருந்தே நான் உங்க follower தானே உங்கள் புதிய பதிவுகள் என் ரீடரில் தெரிவதில்லையே?

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. சாரி பாஸ்
    இரண்டு நாள் ஊரப்பக்கம் போயிருந்தேன்..
    இப்பயில்ல ஒன்னவதிலிருந்தே நான் லேட்டுதான்...

    ReplyDelete
  38. //மனோ நீங்க சரியான .............................ஆளுதான். அது என்ன புள்ளி புள்ளியா.....அது சஸ்பென்ஸ்.
    கடைசியிலா சிரிப்பா சிரிக்க .............................நல்லாத்தான் எழுதுறீங்க//

    ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா....

    ReplyDelete
  39. //முன்னாளில் இருந்தே நான் உங்க follower தானே உங்கள் புதிய பதிவுகள் என் ரீடரில் தெரிவதில்லையே? //

    உங்க பதிவு எனக்கு கரெக்டா ரீடரில் வருதே.....
    வேணும்னா ஒருக்கா கூட பாலோவர் போட்டு பாருங்க...

    ReplyDelete
  40. //சாரி பாஸ்
    இரண்டு நாள் ஊரப்பக்கம் போயிருந்தேன்..
    இப்பயில்ல ஒன்னவதிலிருந்தே நான் லேட்டுதான்//

    //அட்னஸ் போட்டாச்சி//

    ஊர்ல எல்லோரும் சுகமா மக்கா....?

    ReplyDelete
  41. காமெடியில பெரிய காமெடி இதுதான்..ஹா..ஹா.. பாவம் பூசாரி...ஹா..ஹா..

    ReplyDelete
  42. //காமெடியில பெரிய காமெடி இதுதான்..ஹா..ஹா.. பாவம் பூசாரி...ஹா..ஹா.. //

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.......
    வருகைக்கு மிக்க நன்றி மக்கா......................

    ReplyDelete
  43. //YR WRITING STYLE SLANG IS DIFFER THIS TIME M M KALAKKUNGKA//

    மிக்க நன்றி செந்தில்....

    ReplyDelete
  44. //Mano sema comedy //

    வருகைக்கு நன்றி ஷெரீப்...

    ReplyDelete
  45. சிரிச்சு முடில மனோ.

    பேய் பாக்கப் போன பேய்களையே
    பாத்துப் பயந்த பேய் !

    ReplyDelete
  46. மோகினி..அப்பப்பா..சிரித்து முடியல.

    ReplyDelete
  47. பாஸ் இது பேய்படம்னு வாசிக்க ஆரம்பிச்சன் ஆனா காமெடி படமா இருக்கே
    பாவம் பூசாரியே கன்பியுஸ் ஆயிட்டாரு போல

    ReplyDelete
  48. அவரும் அருள் [ங்கே] வந்து மங்காத்தா ஆடினார்// நாங்க காசு வச்சுதான் மங்காத்தா ஆடுவோம்.

    ReplyDelete
  49. நான் ரெடியா....அருவாளோடு ஒதுங்கி நின்றேன்//கொலை கேஸ்ல மாட்டாம தபிச்சுடோம்னு சந்தோசப்படுங்க.

    ReplyDelete
  50. இந்த பதிவை படிக்கும் போது நீங்க நல்லா கதை சொல்லிவிங்கனு நினைக்கிறேன்;ஆதாவது.....நீங்க....ஒரு....நல்ல....எழுத்தாளரா....ஆயிடுவிங்க....ஆயிடுவிங்கனு.. சொல்றேன்.ஹி..ஹி..சரியா சொன்னேனா?.

    ReplyDelete
  51. //சிரிச்சு முடில மனோ.

    பேய் பாக்கப் போன பேய்களையே
    பாத்துப் பயந்த பேய் !///

    ஹா ஹா ஹா ஹா என்னத்தை சொல்ல ஹா ஹா ஹா......

    ReplyDelete
  52. //சிரிச்சு முடில மனோ.

    பேய் பாக்கப் போன பேய்களையே
    பாத்துப் பயந்த பேய் //

    பாருங்க என்னல்லாம் நடந்துருக்குன்னு....

    ReplyDelete
  53. //பாஸ் இது பேய்படம்னு வாசிக்க ஆரம்பிச்சன் ஆனா காமெடி படமா இருக்கே
    பாவம் பூசாரியே கன்பியுஸ் ஆயிட்டாரு போல//

    பூசாரி குளத்துல போயி பார்த்துருப்பாரோ ஹா ஹா ஹா...

    ReplyDelete
  54. //அவரும் அருள் [ங்கே] வந்து மங்காத்தா ஆடினார்// நாங்க காசு வச்சுதான் மங்காத்தா ஆடுவோம்//

    ஒரு பேச்சிக்கு சொன்னேன் மக்கா.....

    ReplyDelete
  55. //கொலை கேஸ்ல மாட்டாம தபிச்சுடோம்னு சந்தோசப்படுங்க.//

    இப்பவும் அருவா பேச்சு வந்தாலே நண்பர்களிடம் இந்த நியூஸ் பிரபலமாத்தான் இருக்கு ஹி ஹி ஹி...

    ReplyDelete
  56. //இந்த பதிவை படிக்கும் போது நீங்க நல்லா கதை சொல்லிவிங்கனு நினைக்கிறேன்;ஆதாவது.....நீங்க....ஒரு....நல்ல....எழுத்தாளரா....ஆயிடுவிங்க....ஆயிடுவிங்கனு.. சொல்றேன்.ஹி..ஹி..சரியா சொன்னேனா\\\

    உள்குத்து புரியுது மக்கா ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  57. அப்படிதான் நான் நம்ம பெருந்துறையில் தென்னந்தோப்பு பக்கத்துல வீடு எடுத்து சப்கான்ரக்ட்டார் நான் வேலைசெய்யற பசங்க எல்லாரும் கூட நானும் அங்கதான் படுப்போம் ஒருநாள் நைட்டு வீரமனின்னு ஒருபையன் அலரியடிச்சுகிட்டு எங்க கிட்ட ஓடியாந்தான் என்னடான்னு கேட்டா ஓடம்பல்லாம் நடுங்குச்சி அவனுக்கு படிக்கட்டுல யாரோ உட்கார்ந்திருந்தாங்க லைட்டு போட்டு பார்த்தா யாருமே இல்லன்னுட்டான் பயமக்க எவனையும் தூங்கவிடலை காலைல பார்த்தா காச்சல் அதிகமாகிடுச்சு அவனுக்கு பசங்கஎல்லாம் பயப்பட ஆரம்பிச்சுட்டாணுக நேரா கடைக்கு போய் நம்ம ஆஞ்சநேயர் ஐயப்பனும் இருக்குற படம் ஒன்னு வாங்கி வந்து நம்ம பூசாரி அதாங்க நாந்தேன் ஒரு பிரம்சாரிய பூசை ஒன்னு போட்டு பேய ஒட்டிநேனுங்க

    ReplyDelete
  58. //அப்படிதான் நான் நம்ம பெருந்துறையில் தென்னந்தோப்பு பக்கத்துல வீடு எடுத்து சப்கான்ரக்ட்டார் நான் வேலைசெய்யற பசங்க எல்லாரும் கூட நானும் அங்கதான் படுப்போம் ஒருநாள் நைட்டு வீரமனின்னு ஒருபையன் அலரியடிச்சுகிட்டு எங்க கிட்ட ஓடியாந்தான் என்னடான்னு கேட்டா ஓடம்பல்லாம் நடுங்குச்சி அவனுக்கு படிக்கட்டுல யாரோ உட்கார்ந்திருந்தாங்க லைட்டு போட்டு பார்த்தா யாருமே இல்லன்னுட்டான் பயமக்க எவனையும் தூங்கவிடலை காலைல பார்த்தா காச்சல் அதிகமாகிடுச்சு அவனுக்கு பசங்கஎல்லாம் பயப்பட ஆரம்பிச்சுட்டாணுக நேரா கடைக்கு போய் நம்ம ஆஞ்சநேயர் ஐயப்பனும் இருக்குற படம் ஒன்னு வாங்கி வந்து நம்ம பூசாரி அதாங்க நாந்தேன் ஒரு பிரம்சாரிய பூசை ஒன்னு போட்டு பேய ஒட்டிநேனுங்க //

    பூசாரி சாக்குறதை.....ஹா ஹா ஹா ஹா......
    இங்கேயும் நம்ம ரூம் பக்கம் ஒன்னு சுத்திட்டு இருக்குய்யா பூசாரி,
    விரட்ட வாரும்....

    ReplyDelete
  59. உண்மையில் பேயை பார்க்க நள்ளிரவில் சுடுகாட்டுக்கு போன அனுபவம் எனக்கும் உண்டு அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் ஒற்றுமை என்னன்னா நானும் பம்பாயில் தான் இருந்தேன் .........

    ReplyDelete
  60. //உண்மையில் பேயை பார்க்க நள்ளிரவில் சுடுகாட்டுக்கு போன அனுபவம் எனக்கும் உண்டு அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் ஒற்றுமை என்னன்னா நானும் பம்பாயில் தான் இருந்தேன்//

    அப்போ நாமெல்லாம் மோகினி குடும்பம்தானா......

    ReplyDelete
  61. //எல்லா நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் ஒரு உள் வட்டம் உண்டல்லவா..? அப்பிடி எனக்கு மாரி என ஒரு நண்பன் உண்டு அவனை நாங்கள் டுவென்டி'ன்னு கூப்பிடுவோம். //

    ஏன் டுவேன்டின்னு கூப்பிடுவீங்க ?

    ReplyDelete
  62. அண்ணா சத்தியமா வாய்ப்பே இல்லை அண்ணா .. என்னால இன்னும் சிரிப்ப அடக்க முடியல .. எப்படி இப்படியெல்லாம் .. நான் கற்பனை பண்ணி எழுதுறதைக் காட்டிலும் உண்மை சம்பவத்துல சிரிப்பு வருது ,,, உண்மைலேயே இந்த வாரத்துல நான் படிச்சு அதிகமா சிரிச்சது உங்களோட இந்தப் பதிவுதான் ,,

    ReplyDelete
  63. //ஏன் டுவேன்டின்னு கூப்பிடுவீங்க ? //

    இவனோட அப்பா ஒரு இருவது ரூபாவுக்கு நடத்திய ஒரு காமெடி சம்பவத்தால் வந்த பெயர்.....

    ReplyDelete
  64. //உண்மைலேயே இந்த வாரத்துல நான் படிச்சு அதிகமா சிரிச்சது உங்களோட இந்தப் பதிவுதான் ,, ///

    ஹா ஹா ஹா ஹா நன்றிலே மக்கா....

    ReplyDelete
  65. அடங்கொன்னியா..... மோகினின்ன உடனே கெளம்பி போய்ட்டீங்களே........ எல்லாம் ஒரு கிளுகிளுப்புக்கு.....?

    ReplyDelete
  66. பாவம் அந்த பூசாரி, பேய்களை பக்கத்துல வெச்சுக்கிட்டே ஏமாந்திருக்கான்.........

    ReplyDelete
  67. மோகினின்னு போட்டுட்டு ஒரு படம் கூட போடலேன்னா எப்பிடி? அட்லீஸ்ட் நம்ம நடிகை மோகினி படமாவது போட்டிருக்கலாம்ல?

    ReplyDelete
  68. நல்ல போஸ்ட் மக்கா...... எழுத்துல நல்ல மாற்றம்.....!

    ReplyDelete
  69. ஹா...ஹா... இந்த மாதிரி பேய் நினைச்சு பயந்திருக்கேன். ஒருமுறை என் தம்பிங்களை பயமுறுத்த சுவத்தில சாக்பீஸ் பொம்மை வரைஞ்சு கடைசியில அதை பார்த்து நானே பயந்துட்டேன்!:-)

    ReplyDelete
  70. //அடங்கொன்னியா..... மோகினின்ன உடனே கெளம்பி போய்ட்டீங்களே........ எல்லாம் ஒரு கிளுகிளுப்புக்கு.....? //

    நீரு நம்ம இனமய்யா.....

    ReplyDelete
  71. //பாவம் அந்த பூசாரி, பேய்களை பக்கத்துல வெச்சுக்கிட்டே ஏமாந்திருக்கான்......... //

    ஹா ஹா ஹா ஹா அட கொன்னியா....

    ReplyDelete
  72. //நல்ல போஸ்ட் மக்கா...... எழுத்துல நல்ல மாற்றம்.....! //

    வசிஷ்டர்கிட்டேயே ஆசி வாங்குன ஆனந்தம்........
    நன்றி மக்கா.................

    ReplyDelete
  73. //ஹா...ஹா... இந்த மாதிரி பேய் நினைச்சு பயந்திருக்கேன். ஒருமுறை என் தம்பிங்களை பயமுறுத்த சுவத்தில சாக்பீஸ் பொம்மை வரைஞ்சு கடைசியில அதை பார்த்து நானே பயந்துட்டேன்!:-)//

    ஹா ஹா ஹா ஹா ரிப்பீட்டே......

    ReplyDelete
  74. "அந்த பேயே நாங்கதானே//
    வேப்ப மர உச்சியிலிருந்து
    பேயொன்னு ஆடுதென்று
    விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க
    விளையாட்டாகக்கூட நம்பிவிடாதே நீ நம்பிவிடாதே!!

    என் பதிவைப் படித்துக் கருத்தைப் பதியுங்கள்.நன்றி.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!