இந்த அணுமின் நிலையம் குறித்து பலரும் பல தகவல்களை வெளியிட்டு வரும் இந்த சூழ்நிலையில், நாட்டு மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள நமது மதிப்பிற்குரிய டாக்டர் அப்துல் கலாம் நமது தினமலர் வாசகர்களுக்காக எழுதியுள்ள கட்டுரைகள் தினமலர் நாளிதழிலும் இணைய தளத்திலும் வெளியிட்ப்பட்டது. இதை நீங்கள் படித்திருப்பீர்கள். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும், அது தொடர்பாக கிளப்பப்பட்டுள்ள சந்தேகங்கள் தேவையற்றது என்பதும் இந்த கட்டுரைகள் உங்களுக்கு தெளிவாக்கி இருக்கும்.
[[மக்கள் பாதுகாப்பு பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல், திரும்ப திரும்ப அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது இருக்கிறதுன்னு திரும்ப திரும்ப சொல்றாங்களே உள்குத்தா இருக்குமோ...?? [[கலாமுக்கு கவர்னர் பதவி கன்பார்ம் எழுதி வச்சிக்கோங்க]] அப்புறம் நாட்டு வளர்ச்சி நாட்டு வளர்ச்சின்னு சொல்றது இப்போதைய விலைவாசி உயர்வு இன்னும் உயரும்னு சொல்றாயிங்களா...???]]
திருநெல்வேலி: பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க.வினரை சந்திப்பதற்காக, அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குல காலை 10.58 மணிக்கு வந்தார்.
[[ஒருவேளை ஒத்திகை பார்க்க வந்திருப்பாரோ...?]]
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு, முதல்வர் ஜெயலலிதா இன்று ஆஜராகவில்லை. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.
[[ கைது ஆகிரப்புடாதுன்னு உஷார் ஆகிட்டாங்களா இல்லை சோசியக்காரன் ஏதும் கிளப்பி விட்டுட்டானா...?]]
ஆமதாபாத்: 5 நாள் அரசுமுறை பயணமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சீனா செல்கிறார். அவருடன் 20 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றும் சீனா செல்கிறது. குஜராத் சீனா இடையே உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[[உங்களை போல ஒரு ஆளுதான் இந்தியாவுக்கு தேவை, அடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஹி ஹி அட நம்புங்கப்பா...!!!]]
வதோதரா: வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, கறுப்பு பணம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் பேசிய அவர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவதில், மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எதிர்வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இதுகுறித்து கேள்வி எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
[[காங்கிரஸ் அரசும் செவிடன் காதில் சங்கும் சரி, இவிங்க ஆட்சிக்கு சங்கும் ரெடி ஆகிறது...!!!]]
சென்னை : "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி, மம்தா பானர்ஜி கடுமையாகக் கூறியிருக்கிறாரே' என்ற கேள்விக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "நோ கமென்ட்ஸ்' என பதில் அளித்தார்.
[[ஏதாவது சொல்லப்போயி, திகார் சிறையின் கதவு இருக்கமா பூட்டிட்டா இன்னா பண்றது நைனா....??]]
சென்னை: ""தமிழக மீனவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி, மீன் பிடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இலங்கை அரசுடன் பிரதமர் கடுமையாகப் பேச வேண்டும்'' என, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
[[அட, நீங்களும் கடிதமா எழுதுறீங்க உருப்பட்ரும் போங்க, ஏற்கனவே சிங்'டிக்கு காது கேக்காது, இனி கண்ணும் தெரியாது கடிதத்தை படிப்பதற்கு, அதற்கு பதிலாக நீங்களே கடுமையா பேசலாமே...?]]
திருப்பூர்:திருப்பூரில் பெய்த கனமழையால், நொய்யல் ஆற்றில், நேற்று அதிகாலை 1.30 மணி முதல், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில், பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.நேற்று மாலை வரை, மூன்று பேர் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன; ஐந்து பேர் உடல்கள் தேடும் பணி நடந்து வருகிறது. 6,000 பேர் வீடுகள் இழந்து, முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
[[அட படைத்தவனே, பெய்யாட்டா ஒரேயடியா பெய்யாம போகவேண்டியது, பெய்ஞ்சா ஒரேயடியா அழிவை கொண்டு வருது மழை, மக்கள் பாவம்ய்யா...]]
நன்றி : படங்களுக்கு உதவிய கூகுளுக்கும், தினமலருக்கும்.
சீனா சென்ற நரேந்திர மோடியை
ReplyDeleteமோடி தர்மன் ஆக்கிடப்போறாங்க?
ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா பார்த்து...
ReplyDeleteஇன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கார்ட்டூன்ல “கூடங் கலாம்” என்று போட்டிருக்கிறார்கள்!
ReplyDeleteஎனக்கு ஓன்னு புரியலை என்ன நடக்குது மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்குமா?
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அண்ணே,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
வீட்டில எல்லோரும் எப்படி இருக்காங்க?
லாப்டாப் எல்லாம் சூப்பரா இருக்கா?
வணக்கம் பாஸ்,
ReplyDeleteஒவ்வோர் செய்திகளுக்கும் சூப்பரான அருவா மொக்க போட்டிருக்கிறீங்க.
ரசித்தேன்.
//
ReplyDelete[[உங்களை போல ஒரு ஆளுதான் இந்தியாவுக்கு தேவை, அடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஹி ஹி அட நம்புங்கப்பா...!!!//
அடக்கொடுமையே....
கலைஞரை மிரட்டுற கார்ட்டூன் தான் சூப்பர்.
ReplyDelete//அதற்கு பதிலாக நீங்களே கடுமையா பேசலாமே...?]]//
ReplyDeleteஅதானே?!!!
அண்ணே நீங்க சொல்லுற எதிர்கால ஜோதிடம் பலிச்சிடுமில்லே...
ReplyDeleteஐ மீன் அடுத்த பிரதமர்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னய்யா சித்தப்பு..ஓவர் சீனா இருக்கே ஹிஹி!
ReplyDeleteயார் அந்த அடுத்த பிரதமர்?
ReplyDeleteமாப்ள டைட்டில் நல்லா இருக்கு ஒரு பதிவு தேத்துய்யா....
நாட்டு நடப்பு கலைகட்டுதுங்க...
ReplyDeleteஇன்றைய செய்திகளுக்கு தங்களின் கமாண்டும் செம அசத்தல்...
//////
ReplyDelete[[அட, நீங்களும் கடிதமா எழுதுறீங்க உருப்பட்ரும் போங்க, ஏற்கனவே சிங்'டிக்கு காது கேக்காது, இனி கண்ணும் தெரியாது கடிதத்தை படிப்பதற்கு, அதற்கு பதிலாக நீங்களே கடுமையா பேசலாமே...?]]
////////
முதல் இந்த கடிதம் எழுதறதுக்கு தடைப் போடனும்...
மக்கா இலவசமா ஒரு மெயில் ஐடி கிரியேட் பண்ணி கொடுங்க பொழைச்சிப் போகட்டும்...
கடிதமா.. கடிதம்...
அதானே -- சும்மா கடுமையாவது பேசலாமே.
ReplyDeleteகலக்கல் அரசியல் பதிவு அதுவும் மோடி போன்றோர் தேவை நாட்டுக்கு!
ReplyDeleteகடிதம் எழுதுவது மற்றவர்கள் கவனத்தை திசை திருப்ப !
ReplyDeleteகலாம் மூக்கை நீட்டறார்னு சிம்பாலிக்கா காமிச்சிருக்கீங்களே! :-)
ReplyDeleteஹி ஹி ஹி...
ReplyDeleteஇந்தியா வந்தால் கைது நடவடிக்கை...
ReplyDeleteநாஞ்சில் மனோவுக்கு, சோனியா எச்சரிக்கை...
#யோவ், நீரெல்லாம் அவ்ளோ பெரிய பீசு இல்லைன்னு, அன்னைக்கு நான் சொல்லிடுறேன்...
//அப்புறம் நாட்டு வளர்ச்சி நாட்டு வளர்ச்சின்னு சொல்றது இப்போதைய விலைவாசி உயர்வு இன்னும் உயரும்னு சொல்றாயிங்களா...???]]
ReplyDelete//
இப்பதான் புரிஞ்சுதா ?
நையாண்டி நடப்பு .. கலக்கல்
ReplyDeleteநாட்டு நடப்பு சிறப்பு.
ReplyDelete//ஏதாவது சொல்லப்போயி, திகார் சிறையின் கதவு இருக்கமா பூட்டிட்டா இன்னா பண்றது நைனா....??//
ReplyDeleteஇது செம்ம!! :-)
வயிறு வலிக்குது, ஏதாவது மாத்திரை இருக்கான்னே?
ReplyDeleteபல தகவல்கள் அதற்கு தங்களுடைய அருமையான குத்துக்கள் சாரி கருத்துக்கள்
ReplyDeleteநகைச்சுவை அருமை!...அதிலும் முதல்ப்படம் அருமையிலும்
ReplyDeleteஅருமை!.....வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ......
செய்திகளும் , அதற்கேற்ற தாள்களின் கருத்தும் அருமையாக இருக்கிறது..
ReplyDeleteஅட மக்கா தினமும் பேப்பர் படிக்கறிங்க போல,,,
ReplyDeleteநம்ம தளத்தில்:
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!
நாட்டு நடப்பு தகவல் நல்லாயிருக்கு,தினமும் செய்தி படிக்கிறீங்க போல..அப்புறம் நம்ம ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறந்துடுச்சா?? சீக்கிரம் சொல்லுங்க..
ReplyDeleteஏழு பதிவா போட வேண்டிய சமாச்சாரத்தை ஒரே பதிவா போட்டு வீனடிச்சிட்டீங்களே மக்கா...
ReplyDeleteஎப்படியோ எனக்கு ஒரே இடுகையில் நிறைய செய்திகளை படித்த திருப்தி...
ReplyDeleteபாஸ்... கலக்கீட்டீங்க போங்க.... எல்லாமே சூப்பர்
ReplyDeleteIppa erkanavey 2-4 hours current cut aakuthu, ithula Kudankulam Anu Minn Nilayam kuudathu nna, poga poga innum 4-5 varusathulla 2-4 hours current iruntha periya visayama poidum pola.
ReplyDeleteTo say that 'Kalam ukku Governor pathavi confirm' is belittling the man. He himself opted out in the race to become the president for the 2nd term.
Also, this kudankulam problem is fast taking religious colours. Little whispers going on in the air is that though there are some legitimate fears abt the project, it being a russian-Indian collab, the Americans with the help of christian priests are fanning it to a bigger problem and a huge controversy.
Already some hindu groups are voicing their opinions in favour of the project, and against the protests & protesters, and they want the project to resume as soon as possible.