Wednesday, September 28, 2011

கன்யாகுமரி மாவட்டம்....!!!


கன்னியாகுமரி மாவட்டம், (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின்மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். முப்பதொன்று
இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும்வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறது. முந்தைய பல
2006 டிசம்பர் 26 அன்று தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.






மக்கள் வகைப்பாடு

2001 - வது ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 1,676,034 ஆகும். இதில் 65.27% நகர் புற மக்கள் தொகையாகும்.

வரலாறு

கன்னியாகுமாரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன்பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது. என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது
இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின்சேரர்கள்வசம் வந்ததாகத் தெரிகிறது.

ஆட்சிப்பகுதியாக இருந்து பின்
தற்போது கல்குளம்விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட (வேனாடு) திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால் துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக்கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி.1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.


ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேனாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்தனர். இதன் விளைவாக கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரைவிஸ்வநாத நாயக்கரின்ரவி வர்மாமார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேனாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார்.

குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றிகொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்களத்தை விட்டு பின்வாங்க வேண்டியிருந்தது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேனாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர். வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. அதன் பிறகு 1956 - 1961 ஆகிய ஆண்டுகளுக்குள் அதன் ஆளுமைதமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் பாணியில் தமிழகத்துடன் இணைந்தது.

புவியியல்

இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம் ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம்ரப்பர்மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல்வாழைதென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும்மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன.


இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது. என அறியப்பட்டது. பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து
மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில்பவழப்பாறைகளின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பால வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.




தட்பவெப்ப நிலை

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர்டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 249 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனில் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில்அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.


ஆறுகள்

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணிவள்ளியார்பாழார் ஆகியன.

தாவர மற்றும் விலங்கு வகைகள்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றிகாட்டுப் பன்றிபல்லி வகைகள், பல இன கொக்குநாரைநீர்க்கோழிமலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.


மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள்மான்கள்சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள்காட்டு எருமைகரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர்பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.



இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலைஅசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்ஷூக்களினால் மருத்துவ மற்றும்ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது,அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.


மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமானஅகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில்அகஸ்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால்,அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது.


மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும்அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணிவர்ம சாஸ்திரம் ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையைபயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு

தமிழ்மலையாளம் ஆகிய மொழிகள் இம்மாவட்டத்தின் முக்கியமாக வழக்கத்திலுள்ளவை.

சமயம்

இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். மேலும் சில இஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு. இம்மாவட்ட கிறிஸ்தவர்களின் சதவிகிதம், அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம். மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ பணிப்பரப்பாளர்கள்ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர்.


 இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.

இம்மாவட்டத்தின் மக்கள் சாதிமத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த இக்கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக பரவியதாகத் தெரிகிறது. இக்கலவரத்தில் ராஜாக்கமங்கலம்ஈத்தாமொழிபிள்ளைத்தோப்புநாகர்கோவில்ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொருளாதாரம்

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்


[தொகு] முக்கிய பயிர்வகைகள்

  1. அரிசி - 400 ச.கி.மீ
  2. தென்னை - 210 ச.கி.மீ
  3. ரப்பர் - 194.78 ச.கி.மீ
  4. மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
  5. வாழை - 50 ச.கி.மீ
  6. பருப்பு - 30 ச.கி.மீ
  7. முந்திரி - 20 ச.கி.மீ
  8. பனை - 16.31 ச.கி.மீ
  9. மாம்பழம் - 17.70 ச.கி.மீ
  10. புளி - 13.33 ச.கி.மீ
  11. கமுகு - 9.80 ச.கி.மீ
  12. பலா - 7.65 ச.கி.மீ
  13. கிராம்பு - 5.18 ச.கி.மீ


கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள இல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம்செந்துளுவன்ரசகதளிபாளயம்கொட்டான்துளுவம்மட்டி, உட்பட பல வகையானவாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜாஜெவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி

கல்வியறிவு விகிதத்தில் (100%) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

கல்லூரிகள்

  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
  2. சுயநிதி கல்லூரிகள் - 4
  3. Colleges for special education -8
  4. தொழில் கல்லூரிகள் - 20


குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள்

  1. மழலையர் பள்ளிகள் - 83
  2. ஆரம்ப பாடசாலைகள் - 413
  3. நடுநிலைப் பள்ளிகள் - 147
  4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
  5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
  6. மொத்தம் 884


சுற்றுலா தலங்கள்


33 comments:

  1. அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே

    ReplyDelete
  2. அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே...!!!

    ReplyDelete
  3. இம்புட்டு விசயம் இருக்கா? ஊர் பெருமையை புட்டு புட்டு வைக்கிறீங்க போல!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றிங்க...பாண்ட் சைஸ் கொஞ்சம் அதிகமாகி போடுங்களேன்..

    ReplyDelete
  5. அறிந்து கொண்டேன் நண்பரே

    voted

    ReplyDelete
  6. இயற்கை எழில் கொஞ்சம் மாவட்டம். பகிர்வுக்கு நன்றி நன்றி

    ReplyDelete
  7. இந்த ஊருக்கு ..அதாங்க கன்னியாகுமரிக்கு போகனும்ன்னு ரொம்ப ஆசை ..என் வாழ் நாளில் ஒரு தடையாவது போகணும் அண்ணே ஹி ஹி ...

    ReplyDelete
  8. நன்றிங்க சார்

    ReplyDelete
  9. உங்க மாவட்டமாச்சே!
    முளகுமோடு போனதுண்டா?

    ReplyDelete
  10. எங்க தாத்தா/பாட்டி பிறந்த ஊர் அழகிய நாகர்கோவில் பற்றிய பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  11. இம்சைஅரசன் பாபு.. said...
    இந்த ஊருக்கு ..அதாங்க கன்னியாகுமரிக்கு போகனும்ன்னு ரொம்ப ஆசை ..என் வாழ் நாளில் ஒரு தடையாவது போகணும் அண்ணே ஹி ஹி ...//

    எலேய் அண்ணனை அழ வச்சிராதே ஹி ஹி....

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...
    உங்க மாவட்டமாச்சே!
    முளகுமோடு போனதுண்டா?//

    கேள்வி பட்டுருக்கேன் போனதில்லை தல....

    ReplyDelete
  13. angelin said...
    எங்க தாத்தா/பாட்டி பிறந்த ஊர் அழகிய நாகர்கோவில் பற்றிய பகிர்வுக்கு நன்றி .//

    அப்போ நீங்க இப்போ எங்கே இருக்குறீங்க ஏஞ்சலின்???

    ReplyDelete
  14. S.Menaga said...
    பகிர்வுக்கு நன்றிங்க...பாண்ட் சைஸ் கொஞ்சம் அதிகமாகி போடுங்களேன்..//

    போட்டுட்டேன் நன்றி மேனகா....

    ReplyDelete
  15. விக்கியோட விஎட்நாம் பதிவுக்கு போட்டியா பலே பலே...

    ReplyDelete
  16. எலிசபெத் மகாராணி இருக்கற ஊர்லதான் u.k

    ReplyDelete
  17. என்ன தலைவரே விக்கிபீடியா மாதிரி தெரியுது...

    ReplyDelete
  18. அருமையான, பயனுள்ள பதிவு மனோ.
    வாழ்த்துக்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. இந்தியாவின் ஒரு மாவட்டததை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது நன்றி..

    ReplyDelete
  20. அருமையான தகவல்கள்
    அறிய பல விசியங்களை ஒன்றாய் தொகுத்தமைக்கு பாராட்டுக்களும்
    நன்றி மனோ அண்ணாச்சி

    ReplyDelete
  21. angelin said...
    எலிசபெத் மகாராணி இருக்கற ஊர்லதான் u.k//

    அதானே குயின் இருக்கிற இடத்தில்தானே குயினும் இருக்கும் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  22. அருமையான தகவல்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. thanks good information..good work carry on.....

    ReplyDelete
  24. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய அருமையான தகவல்கள். நிறைய விவரம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  25. கன்னியாகுமரி மாவட்டம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அருமையான பதிவு பாஸ்.

    ReplyDelete
  26. கன்னியாகுமரி மாவட்டம் supper

    ReplyDelete
  27. கன்னியாகுமரி மாவட்டம் supper

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!