உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பிங்கள். அது உங்களுக்கு புத்துயிர்பையும், புத்துணர்வையும் ஊட்டும். வாழ்க் கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்து பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங் கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ் க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…
1.சரியான சாப்பாட்டு நேரம்
ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.
2.போதுமான உறக்கம்
தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தேவை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.
3.தூய்மை நேரம்
தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மை பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.
4.அன்றாட வேலைகள்
அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.
5.உங்கள் விருப்பத்துக்கு…
நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.
6.ஆதரவுக் கரங்கள்
நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.
7.தனிப்பட்ட நேரம்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.
8.இந்தக் கணம் முக்கியம்
நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.
நன்றி : உங்களுக்காக.
8.இந்தக் கணம் முக்கியம்
ReplyDeleteநீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது./
மிகப் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.
மனோவானந்தா போதனைகள் அருமை ...........
ReplyDeleteஅனைவருக்குமே பயன்தரும்
ReplyDeleteஅருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த்.ம 2
கருத்து கந்தசாமி. நல்ல கருத்துக்கள். எப்படி ஓய் உம்மால் மட்டும் இதெல்லாம் சாத்தியமாகிறது.
ReplyDelete////////
ReplyDelete.சரியான சாப்பாட்டு நேரம்
////////
எனக்கு எல்லா நேரமும் சாப்பாட்டு நேரம்
என்ன செய்ய அப்படியே பழகிட்டேன்..
///////
ReplyDeleteபோதுமான உறக்கம்
//////////
இருக்கிற பதிவெல்லாம் படிச்சிட்டுப்போன எங்கய்யா வருது தூக்கம்....
///////
ReplyDeleteதூய்மை நேரம்
////////
தினமும் எனக்கு 10 நிமிடம் போதும்
/////////
ReplyDeleteஅன்றாட வேலைகள்
//////////
அங்க எப்படி பாத்திரம் பண்டத்தோடு நிருத்திக்கீறிங்களா..
இல்ல துணி மணி வெலுப்பு கூடவா...
//////
ReplyDeleteஉங்கள் விருப்பத்துக்கு…
/////////
அப்படின்னு இதுவரைக்கும் ஒன்னும் மில்லை...
//////
ReplyDeleteஆதரவுக் கரங்கள்
/////////
நிறைய பேருக்கு நான் இருக்கேன்...
எனக்குன்னு யாருன்னு இன்னும் கண்டுபிடிக்கல...
ஆனால் கண்டிப்பாக இருக்கும்...
தற்போதைக்கு நண்பர்கள் சில...
/////
ReplyDeleteதனிப்பட்ட நேரம்
////////
அப்ப டிவியை என்ன செய்யலாம்...
//////
ReplyDeleteஇந்தக் கணம் முக்கியம்
//////
நான் கிளம்புகிறேன்...
தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் // அப்ப ஒருமுறை மட்டுமா?
ReplyDeleteஅடேயப்பா தளம் இப்போ ரொம்ப அழகா இருக்கே
ReplyDeleteஅடேயப்பா தளம் இப்போ ரொம்ப அழகா இருக்கே
ReplyDeleteடி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.// பகல்ல தூங்கக்கூடாதா?
ReplyDeleteநன்றாகக் குளிப்பதற்கு// நல்ல குளியல்,கெட்ட குளியல்லுன்னு இருக்கா என்ன?
ReplyDeleteசின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை/ அப்ப 'அந்த' வேலையை?
ReplyDeleteநலம் தரும் குறிப்புகள்.
ReplyDeleteநீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள்/// அதுக்கு காஜல் அகர்வால் ஒ(த்)துக்கனுமே?
ReplyDeleteஉங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும்// ஓ இம்சைகளுக்கு இப்படி ஒரு பேரோ?
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு/// இது வேறையா?
ReplyDeleteவீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை// எப்பவுமே பிளாக் பத்தி யோசிக்கிற மாப்ள சிபி க்கு இது பொருந்துமா?
ReplyDeleteப்ளாக் ஒனர் காணோம் ஓடுளே...
ReplyDeleteஉண்மையிலேயே நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க அண்ணே..
ReplyDeleteடைம் மேனஜ்மென்ட் எல்லோருக்கும் அவசியமான விஷயம் இன்னைக்கு
மக்கா ரொம்ப தேவையான குறிப்புகள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
/யார்பா அது நான் பதிவை படிச்சுபாக்காம கமென்ட் போடறேன்னு சொல்லுறது)/
பதிவிடும் நேரம்
ReplyDeleteபின்னூட்டம் இடும் நேரம்
இவை போக மீதி இருப்பது 14 மணி நேரம் தலைவரே...
அனைவரும் கடைபிடிக்க
ReplyDeleteவேண்டிய ஆலாசனைகள்
நன்றி மனே!
இன்றும் போராட்டம் பற்றி கவிதை எழுதியுள்ளேன்
புலவர் சா இராமாநுசம்
நல்ல அறிவுரைகள்!
ReplyDeleteப்ளாக் நேரம் எப்போ?! :-))
குடும்பத்தலைவனின் இனிய பொன்மொழிகள் ஊருக்கு அலைபேசி எடுக்கும் நேரத்தை விட்டுவிட்ட் மனோவை ஒரு பகல் பாலைவன வெய்யிலில் காயவிடனும்/ஹீ
ReplyDeleteஅண்ணே நீங்க சொன்னா ரைட்டுண்ணே!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு .
ReplyDeleteஅண்ணாச்சி தூக்கமே வரமாட்டுக்கு
ReplyDeleteஅதுக்கு என்ன பண்ண வேண்டும்
//தனிப்பட்ட நேரம்
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.//
அருமை.
நல்ல அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றி.
நல்ல தகவல்கள் பாஸ்...ஆனா..பிரியா இருந்தா உடனே கம்பியூட்டர் முன் போய் பதிவெழுதத்தான் மனசு வருது....................
ReplyDeleteநாங்க குடும்பஸ்தர் ஆகவில்லை பாஸ் என்ன செய்யலாம் ..))))
ReplyDelete/அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.//
ReplyDeleteபுதிய தத்துவம் 10,001
நன்றி உங்களுக்கும்.
ReplyDeleteமுயற்சி பண்றேங்க.... அருமையான பதிவு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க பாஸ்.
ReplyDeleteஏழாவதும் எட்டாவதும் அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
//இந்தக் கணம் முக்கியம்
ReplyDeleteநீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.//
ஏண்ணே, அப்போ அலுவலக நேரத்தில் பதிவுலகைப் பத்தியும் நினைக்கக்கூடாதாண்ணே?
மிகவும் முக்கியமான கருத்துக்கள் அடங்கிய பதிவு ,பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎட்டும் மிக அருமையான அறிவுரை...
ReplyDeleteகுறிப்பிட்ட நேரம் தூக்கம், குறிப்பிட்ட நேரம் உணவு என்பது இப்போது இல்லை...ஆனால் இதை சரியாக முறைபடுத்தினால் உடம்புக்கும், மனதுக்கும் நல்லது.
//செல்போனை அணைத்து விடுங்கள்,//
இதை முக்கியமா நோட் பண்ணிக்கணும்
நன்றி மனோ
நல்லா கேட்டுக்கிட்டோம்க !!!
ReplyDeleteநன்றீங்க !!!
எப்படிண்ணே.....எப்படி உங்களால மட்டும் நைட்டுபுல்லா மட்டையாகிட்டு காலைல கண்ணுமுழிச்சி இப்படியெல்லாம் எழுத முடியுது?
ReplyDeleteஇது எல்லாத்தையும் தஞ்சாவூர்... வேணாம்னே அங்க கல்வெட்டு எல்லாம் ஹவுஸ்புல்லாம்.... அதுனால உங்க ஊர்ப்பக்கமா நல்லதா ஒரு கல்வெட்டு வாங்கி செதுக்கி வெச்சிட்டு பக்கத்துல உக்காந்துக்குங்கண்ணே.......
ReplyDeleteஎல்லாமே கலக்கல் மக்கா
ReplyDeleteஅட்வைஸ்க்கு நன்றீ உங்களுக்கும் :-)
பயனுள்ள பகிர்வு மக்கா!
ReplyDeleteநல்ல அட்வைசு , முயற்சி பண்ணனும்.
ReplyDeleteகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு
ReplyDeleteமுதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா