மருத்துவம் சேவை அல்ல!, கொள்ளை...!!!
உயிருக்கு ஆபத்தான நிலை வருகின்ற போது காப்பாற்றிய மருத்துவரை கடவுளை வணங்குவதை போல் வணக்குவது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் இயல்பு காரணம் நம்மால் பசியாற உணவு கொடுக்க முடியும் வெயிலில் ஒதுங்க நிழல் கொடுக்க முடியும் மானத்தை மறைக்க ஆடை கொடுக்க முடியும் ஆனால் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை காப்பாற்றி கொண்டு வர இயலுமா?
வலியால் துடிப்பவனை வலி மறக்க செய்ய முடியுமா? நிச்சயம் ஆகாது அது ஒரு மருத்துவரால் தான் முடியும் அதனால் தான் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் அவர்களை வைத்து பார்க்கிறோம்
ஆனால் கடவுளின் தூதர்களான மருத்துவர்கள் இன்று தங்களது பொறுப்பையும் தகுதி தாரதரத்தையும் மக்களின் நம்பக தன்மையும் உணர்ந்து நடக்கிறார்களா? இல்லை என்று சொல்வதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது ஆனால் அது தான் உண்மை.
பல மருத்துவர்கள் தங்களது தொழிலை மற்றவர்களின் ஆபத்தான நேரத்தில் பணம் பறிக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள் இதற்கு விதி விலக்காக சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் இவர்களது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது
சென்ற மாதத்தில் ஒரு நாள் எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவருக்கு இரு சக்ர வாகனத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு கால் எலும்புகள் ஒடிந்து விட்டன உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் அதற்கு 85 ஆயிரம் செலவாகும் என்றார்கள் அந்த ஆபத்தான நேரத்தில் யோசிப்பதற்கு யாருக்கு தோன்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு சொல்லி கடன் உடன் பட்டு பணத்தை கட்டி விட்டார்கள்.
பிறகு அந்த நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காட்டி இதற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தப் போது 35 ஆயிரம் இருந்தால் முடித்து விடலாம் என்றார்கள் நாகர்கோவிலுக்கும் பாண்டிச்சேரிக்கும் தொலைவு சற்று அதிகம் தான் அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.
இது உதாரனத்திற்கு நான் சுட்டிக் காட்டிய சிறிய சம்வம் இதை விட கசப்பான கொடுமையான சந்தர்ப்பங்கள் பலவற்றை தினசரி மக்கள் அனுபவித்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் எடுத்து போனால் குறைந்த பச்சம் ஐநூறு ரூபாயாவது தேவை படுகிறது சாதாரண காய்ச்சலுக்கே ஒரு நாளையில் இத்தனை ரூபாய் செலவு என்றால் சாதாரண ஏழை ஜனங்களால் அதை எப்படி சமாளிக்க முடியும்..??
இன்றும் நம் நாட்டில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாத மக்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்களால் அபாய நேரத்தில் மருத்துவ மனை வாசலை கூட மிதிக்க முடியாத நிலை தான் இந்த நிமிடம் வரை இருக்கிறது.
எழைகளுக்காகத்தான் அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றனவே அங்கே சென்று இலவச சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலர் சிந்திப்பது நியாயம் தான் ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் உண்மையான நிலையை நேரில் சென்று பார்க்கும் போது ஆரோக்கியமான மனிதர்களே தலை சுற்றி விழுந்து விடுவார்கள் நாய் கடிக்கு ஊசி போட வேண்டும் என்றால் கூட செவிலியர்களுக்கு தனியாக பணம் கொடுத்தால் தான் நடக்கும் இல்லை என்றால் மருந்தே குளிர் சாதன பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாலும் இல்லை என்று இறக்கமே இல்லாமல் சொல்லிவிடுவார்கள் நடந்து நடந்து நாய் போல குறைத்து சாக வேண்டியது தான் ஏழைகளின் தலை எழுத்தாக இருக்கிறது.
அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய்,அறுபதாயிரம் ரூபாய்,ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள்...!
ஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பது தானே பொருளாகும் உயிரை பார்த்து செய்ய வேண்டிய மருத்துவம் பணத்தை பார்த்து செய்தால் அதில் மனிதாபிமானம் என்பது எங்கே இருக்கும்.
ஆகவே அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் ஒன்று சகித்துக் கொண்டு வாழ வேண்டும் அல்லது வேறு வழியே இல்லை சாக வேண்டும் இது தான் நமது நாட்டின் ஆரோக்கிய வாழ்வின் எதார்த்த நிலை ஆங்கில வைத்தியம் என்று இல்லை மாற்று மருத்துவ முறைகளான அனைத்துமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது என்று சொன்னால் அதிலும் தவறு இல்லை
மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் ஒரு புறம் என்றால் மருந்துகளின் விலை ஏற்றம் இன்னொரு புறம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெறும் ஒன்பது ரூபாய்க்கு விற்ற metrogyl Gel என்ற மருந்து இன்று முப்பது ரூபாய் எதற்க்காக அதன் விலை இத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று யாரும் கேட்க முடியாது.
கேட்டாலும் இந்த ஜனநாயக நாட்டில் பதில் கிடைக்காது விலை ஏற்றம் செய்யும் அளவிற்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த மருந்து கம்பெனி சொல்லுமே ஆனால் இது வரை தரமற்ற மருந்தை எதற்காக விற்றீர்கள் என்று நான் கேட்டால் அது ஜனாயக விரோதமாகி விடும் இது தான் நம் நாட்டின் இன்றைய நிலை
இந்த நிலையில் தான் நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் மருந்துகளின் விலை குறைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான் அம்மா நீங்கள் வேண்டுகோள்விடும் நிலையில் இல்லை கட்டளை இடும் நிலையில் உள்ளிர்கள்...
ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் ஆனால் என்ன செய்வது நான் வெறும் அலங்கார பொம்மை தானே என்று சொல்விர்கள் நிஜம் தான் அலங்கார பொம்மைகள் அவசியத்திற்கு உதாவாது என்று எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு நப்பாசை சொல்லி தான் பார்ப்போமே என்று...
நன்றி : உஜிலாதேவி.
http://ujiladevi.blogspot.com/2011/09/blog-post_06.ஹ்த்ம்ல்
//
ReplyDeleteமருத்துவம் சேவை அல்ல!, கொள்ளை...!!!//
உண்மை
நான்தான் first a?
ReplyDeleteவாங்க லேப்டாப் டாக்டர்
ReplyDelete//
ReplyDeleteஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள்
//
கண்டிப்பா
//
ReplyDeleteஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பது தானே பொருளாகும் உயிரை பார்த்து செய்ய வேண்டிய மருத்துவம் பணத்தை பார்த்து செய்தால் அதில் மனிதாபிமானம் என்பது எங்கே இருக்கும்.
//
நல்ல கேள்வி
அண்ணே உஜிலாதேவிக்கு நன்றி!...இப்போ வெப்சைட்ட விட்டுட்டு ப்லொக்ல இருந்து பதிவு போட ஆரம்பிச்சிட்டீங்களா...என்ன ஒரு கலிகாலம் இது ஹிஹி!
ReplyDeleteஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் ////////
ReplyDeleteமிகவும் சரியானதும் உண்மையானதுமான கோரிக்கை!
வேற எதுவாக இருந்தாலும் பேரம் பேசலாம், ஆனால் இது உயிர் விடயமாச்சே, அதனால் கேட்டதை கொடுத்து தானே ஆகனும் என்று மருத்துவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்.
ReplyDeleteபள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அடிக்கும் கொள்ளையைவே இவர்களால் தடுக்க முடியல. இவங்க எங்கே இந்த விடயத்தில் செயல்படபோறாங்க.
அண்ணே
ReplyDeleteஇது எல்லா எடத்துலயும் நடக்குறது இல்லை சில இடங்களில் தவிர்க்கவும் முடிவது இல்லை.
அந்நியாம்தான்.
ReplyDeleteஇப்பொழுது சென்னையில் எல்லாம் pacakage rate என்று வாங்குகிறார்கள். எங்கம்மாவிர்க்கு சென்ற வருடம் கால் எலும்பு முறிந்துவிட்டது என மருத்துவமனைக்கு சென்றபோது.ஒரு வாரம் மற்றும் ஆப்பரேஷனுக்கு pacakage rate வாங்குவோம் என்று சொல்லி 75000/- வாங்கினார்கள்.
//அம்மா நீங்கள் வேண்டுகோள்விடும் நிலையில் இல்லை கட்டளை இடும் நிலையில் உள்ளிர்கள்..//
இதனை கூட அவருக்கு யாராவது எடுத்துச்சொல்ல வேண்டும் போல் இருக்கு.
பல இடங்களில் இப்படிதான் கொள்ளை நடக்கின்றது ,,
ReplyDeleteதட்டி கேட்கவேண்டிய அரசாங்கம் கை கட்டி வேடிக்கை பார்ப்பது தான் மிகவும் கொடுமை ..
நல்ல பகிர்வு ...
மருத்துவ கொள்ளைக்கு பயந்தே, சிறு சிறு உபாதைகளுக்கு மருந்து கடைகளை நாட வேண்டி உள்ளது. நல்ல பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteபூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலதான்
குண்டுவெடித்தவுடன் இதை அனுமதிக்க முடியாது எனப் பேசும்
உள்துறை அமைச்சர்
ஊழலை ஒப்புக் கொள்ளமுடியாது எனச் சொல்லியே
பிரமதமராக வண்டியோட்டும் பிரதமர்
எல்லாம் இந்தியாவின் சாபக்கேடு
த.ம 5
மருத்துவத்தை காசு பார்க்கும் தொழிலாக ஆகிவிட்டது என்ன செய்ய...
ReplyDeleteஇவர்களை திருத்த முடியாது மக்கா...
உண்மை .
ReplyDeleteஉண்மை .
ReplyDeleteஉண்மை .
ReplyDeleteநாம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் மாசுபட்டு பல காலம் ஆகி விட்டது.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே..
ReplyDeleteபல இடங்களில் இதுதான் நடக்கிறது..
எல்லாத்தையும் பொறுத்துக்கறதுதான் நம்ம தலைவிதின்னு ஆகிட்டுது.. இப்பல்லாம் டாக்டர்கள் கிட்ட போகணும்ன்னாலே பயமாருக்கு.
ReplyDeleteஉயிர் போகும் நேரத்திலும் பணம் பார்க்க நினைப்பது கேவலம் ((
ReplyDeleteSagala kala dr. Dr....
ReplyDeleteமுதலில் பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் . ஏனெனில் மிகசிறந்த இடுகை இந்த மருத்துவர்கள் இருக்கிறார்களே இவர்கள் அடிக்கும் கொள்ளை எப்படி யாரால் ஹிருத்தப்படும் என தெரிவதில்லை எங்கும் எதிலும் கொள்ளை இதனால் பாதிக்கபடுவது மக்கதான் அதும் ஏழைமக்கள் மக்கள் என்ற மகத்தான் சக்தி விழிப்படையவில்லை எனின் நம்மை அழித்துவிடுவார்கள் விழி ஏழு ....
ReplyDeleteஇந்த மருத்துவ கொள்ளை அனைவரும் அறிந்ததே ..
ReplyDeleteசுக பிரசவம் என்பதே அரிதாகி கொண்டிருக்கிறது ...
அருமையான பதிவு...பாராட்டுகள்.
ReplyDeleteசுகாதாரம்- கல்வி உள்ளிட்டவற்றை அரசாங்கமே பொதுச்சேவையாக வழங்க வேண்டும். அப்போதுதான் கொள்ளைகள் தவிர்க்கப்படும். அந்த அடிப்படையில் இலங்கையில் கல்வியும்- சுகாதாரமும் (வைத்தியத்துறைக்கும்) அரச சேவைகளாக இருப்பது குறிப்பிடக்கூடியது. அதற்குள்ளும் ஊழலும்- குளறுபடிகளும் இருந்தாலும். மக்களில் 70 வீதமானோர் பொதுச்சேவைகளிலேயே மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ReplyDeleteமிகவும்..யதார்த்தநிலையை சொல்லுகின்றபதிவு..பாஸ்
ReplyDeleteஅங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல மருத்துவர்களையும் சில மருத்துவமனைகளைப் பற்றியும் கேள்விப்பட முயன்றாலும், பெரும்பாலும் இத்தகைய வியாபாரமயமாக்கபட்ட மருத்துவமனைகளின் அலப்பறைகளே அதிகம் தெரிய வருகின்றன. துரதிருஷ்டவசமானது; கண்டிக்கத்தக்கது. (விரைவில் எனது சொந்த அனுபவம் குறித்தும் எழுத விருப்பம்.)
ReplyDeleteமருந்து துறை இருப்பது உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கீழ், சுகாதார துறையின் கீழ் அல்ல... இது மாறினாலே அனைத்தும் மாறி விடும்...
ReplyDeleteஎம்முயிரை உன்னிடம்
ReplyDeleteபணயம் வைத்தால்
அதைவைத்து நீ பந்தயமா
நடத்துகிறாய்?!!
மனித இனத்தின்
கீழினமடா நீ!!
நம்பி வந்தவரை
கழுத்தறுக்கிறாய் அல்லவா!!
நல்ல பகிர்வு. அரசு மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும். பெரிய மருத்துவமனைகள் அரசால் தணிக்கை செய்யப்பட வேண்டும். இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும்செய்யலாம் என்ற நிலை மாறவேண்டும். மக்களும் தேவைப்படும் போது சட்டரீதியான அமைப்புகளை அணுக வேண்டும்.
ReplyDelete//////ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் /////
ReplyDeleteஇது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. (http://nppaindia.nic.in/drug_price95/txt4.html).
//அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.//
ReplyDeleteகொடுமை தான்....
நானும் நிறைய நொந்துருக்கேன் இந்த மாதிரியான கடைநிலை மருத்துவ பிறவிகளால் நடத்தப்படும் மருத்துவமனை என்ற மயானமனையால் :-(
உயிர் போகிற தருணம் தான் மருத்துவர்களின் டார்கெட்.
ReplyDeleteவேதனையான விஷயம்....
ReplyDeleteஎல்லாரும் சொல்றது போல.. இது உண்மைதான்..
ReplyDeleteஇதனை தடுக்க பொதுமக்கள் என்ன செய்யலாம்னு யாரவது சொல்லுங்க..