Wednesday, September 7, 2011

ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!

என் மகனின் வகுப்பு தோழனும், நண்பனுமாகிய ஒரு உ பி மாநில பையனின் மரணம். பள்ளியில் பரீட்சை எழுதும் போதே லேசாக காய்ச்சல் அடித்திருக்கிறது, சாயங்காலம் ஆஸ்பத்திரி கொண்டு போக மலேரியா, அட்மிட் பண்ண சொன்னார்கள், அடுத்த நாள் பையன் இறந்து போனான்.

பார்க்கப் போனேன் வீட்டுக்கு, உடம்பை கிடத்தி வச்சிருந்தார்கள் கடும் கூட்டம் அதில், என் மகனும் அவன் இன்னொரு நண்பனுமாக உடம்பை பார்க்க முடியாமல் சுற்றி சுற்றி வந்ததை பார்த்த போது, அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நினைக்கும் போது என் கை தானாகவே நெஞ்சை அழுத்திக்கொண்டது.

காரணம் நேற்றுதான் கூட இருந்து பரீட்சை எழுதிவிட்டு விளையாடிவிட்டு வந்து இருக்கிறார்கள். இதுவும் தவறான சிகிச்சையின் மரணம் என சண்டை நடந்தது.....!!!  [[வரும் காலங்களில் என் மகனும் இதைப் பற்றி, நண்பனின் மரணம், பிரிவு  பற்றி பாரத்தோடு பதிவு எழுதக்கூடும்]]

நண்பனின் அக்காவும், நண்பனின் தங்கச்சியுமாகிய லட்சுமியின் மரணம். மலேரியா காய்ச்சல் முத்தி போயி ஆஸ்பிட்டல் கொண்டு போக, தவறான சிகிட்சையால் மரணம், ஈமை காரியங்கள் முடியும் வரை கூட இருந்தேன் கண்ணீருடன்......

அடுத்து எங்கள் "கிருபாசனம்" [[மும்பை, தாராவி]] சபையின் பாஸ்டரும், அப்போஸ்தலருமான  அய்யா குமாரதாஸ் அவர்களின் மரணம். இந்த தடவை நான் ஊர் [[இந்தியா]] வரக் காரணமே அவர்தான். காரணம் மும்பையில் எனக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்க அவர் உதவி செய்வதாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவரை போயி பார்த்தேன், சரி நீ ஊர் போயி பணம் கொண்டுவா ஏற்பாடு செய்யலாம் என்றார்.

நான் ஊர்[[கன்னியாகுமரி]] வந்து பணம் ஏற்பாடு செய்யுமுன் அவர் சீரியஸாக ஆஸ்பத்திரியில், சரியாகிவிடும் என மும்பை வந்தேன் ஆனால், அவர் எனக்கு முந்தி  கொண்டார் ஆம் இறந்து போனார். எனக்காக பிரார்த்திக்கும் உயிர்களில் அவர் மிகவும் முக்கியமானவர், என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.


என்னோடு பஹ்ரைனில் வேலை செய்து, எனக்கு சாப்பாடெல்லாம் பொங்கி தந்து பிரியமாக இருந்து[[என் ஊர்காரன்]], நல்ல நண்பனாக இருந்து விசா பிரச்சினையால் எட்டு வருஷம் ஊர் போகாமல், அவுட் பாசில் ஊர் போனான் கண்ணன். ஊரில் மனைவியுடன் சிறு பிரச்சினை வரவே, மனைவியின் ஊரிலேயே தங்கினான்.

அப்படி இருக்கையில், எங்க [[சொந்த]] ஊருக்கு வருவதற்காக லெப்பை குடியிருப்பிலிருந்து பழவூர் [[நெல்லை]] பக்கம் பைபாஸ் சாலையில் பைக்கில் ஓவர் [[கடும் போதையாம்]] ஸ்பீடில் வந்து இன்னொரு பைக்கில் மோத, அதில் பின்னால் இருந்த பெண்ணுக்கு இடுப்பு முறிய, கண்ணன் அம்பதடி தூரம் தூக்கி வீசப்பட...

ஆஸ்பத்திரியில் நான்கு நாள் கிடந்து உயிரை விட்டுருக்கிறான். இரண்டு பெண் பிள்ளை வேறு இருக்கிறது, சரி, அந்த இடுப்பு முறிஞ்ச பெண் என்ன பாவம் செய்தாள்...? [[வாகன ஓட்டிகள் தன் உயிர் மட்டும் முக்கியமில்லை, அடுத்தவர் உயிருக்கும் நாம்தான் உத்திரவாதம்னு நினச்சி வண்டி ஓட்டுங்க]]

எத்தனையோ முறை நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை செய்வதுண்டு குடிச்சிட்டு வண்டி ஓட்டுவது இன்பமாகத்தான் இருக்கும், அதேவேளை நொடியில் இன்பம் மாறி துன்பம் சடுதியில் நேரும்னு, கேட்டாதானே....!!!


அடுத்தது நம்ம "உணவு உலகம்" ஆபீசர் அருமை நண்பர் சங்கரலிங்கம் அவர்களின் தாயாரின் மரணம். ஏற்கனவே ஆஸ்பத்திரியில் வைத்து சரியாகி வீட்டுக்கு போயி, மறுபடியும் முடியாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி வச்சிருக்குறதா ஆபீசர் சொன்னார்.

அவர் குரலில் இருந்த வருத்தம் எனக்கும் புரிஞ்சது, அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் பேசுவார் போனில், அப்புறமா ரெண்டுநாள் கழித்து இம்சை அரசன் பாபு சாட் பண்ணி சொன்னார், இப்பிடி ஆபீசர் அம்மா இறந்து போனாங்க மனோ, நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லிருங்கன்னு, மனம் நொய்ந்து போனேன் தளர்ந்து போனேன்.

ஆபீசரோடு சந்தோசத்தில் பங்கு கொண்ட எனக்கு, துக்கத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என மனசுக்கு சங்கடமாக இருந்தது. நேற்றுதான் போன் பேசினேன் ஆபீசருக்கு, அவர் அவங்க அம்மா பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆச்சர்யமான விஷயம் சொன்னார் நம்பவே முடியவில்ல...!!!

நாப்பது வருஷத்துக்கு முன் காசி போயிருந்த போது ஆபிசரின் அப்பா, அம்மாவுக்கு வாங்கி குடுத்த "கண்ணாடி வளையல்" [[நோட் பண்ணிக்குங்க கண்ணாடி வளையல், அதுவும் நாப்பது வருஷம் முன்பு]] ஒன்று, இது வரை உடையலையாம்....!!! உடலை சிதை மூட்டுமுன் அந்த வளையலை கழற்றி இருக்கிறார்கள்,  அப்பவும் உடையலையாம்....!!! எவ்வளவு அன்பு இருந்திருந்தால் கண்ணாடி
வளையல்குள்ளும் பாசம் இருந்திருக்கும்  பாருங்க, அன்பு இருந்தா கண்ணாடிக்கு கூட உயிர் வந்துரும் இல்லையா.....?

ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!

நான் இந்தியா பலமுறை லீவில் வந்திருந்தாலும், இந்த தடவைதான் ரொம்ப சந்தோசமாவும் இருந்தேன், இந்த தடவைதான் ரொம்ப துக்கமாவும் கவலையாகவும் திரும்பியும்  இருக்கேன். மறுபடியும், ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா....?




35 comments:

  1. உண்மைதான். பிரியமானவர்களின் இழப்பு மிகக் கொடுமையானது.

    ReplyDelete
  2. நெஞ்சடைத்தது நண்பா!...குழந்தையின் மரணம் எல்லாவற்றையும் துடைத்து எடுத்து செல்லக்கூடியது!

    ReplyDelete
  3. எல்லோருடைய வாழ்விலும் இப்படியெரு சம்பவங்கள் இருக்கிறது...

    இயற்க்கை என்றால் பராவாயில்லை.. இப்படி சரியான சிகிச்சை தராமல் இப்படி நடப்பது கொலைதான்...

    எதிர்காலங்களில் மருத்துவ மனைகளில் சீறிய முறையில் சிகிச்சைகள் அமைய வேண்டும்

    ReplyDelete
  4. மரணம் எந்த உருவில் எவரிற்கு வந்தாலும் வேதனை தருவதுதான். மனதை நெகிழவைத்த பதிவு

    ReplyDelete
  5. மக்கா தலைப்பே ஆயிரம் கதை சொல்லுது..
    மனதை நெகிழச்செய்யும் பதிவு..

    ReplyDelete
  6. தாங்கள் சொல்லிச் செல்வதைக் கேட்கவே மனம் மிகவும்
    சங்கடப்படுகிறது.தாங்கள் எவ்வளவு சங்கடத்துடன்
    இருப்பீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது
    காலம்தான் காயங்களை ஆற்றும் வல்லமை உடையது

    ReplyDelete
  7. மரணம் என்பது என்றுமே தாங்க முடியாத ஒன்றுதான்;அதுவும் நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் வேதனை அதிகமே.ஆனால் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருபவைதானே?என்ன செய்ய?

    ReplyDelete
  8. மிகவும் வருத்தமான நிகழ்வுகள் !

    ReplyDelete
  9. சங்கர லிங்கம் சார் அம்மா மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன் ...

    ReplyDelete
  10. கூடல்பாலா கவனத்திற்கு, உங்கள் பிளாக்கில் கமெண்ட்ஸ் போடமுடியவில்லை என்னான்னு செக் பண்ணுங்க, ஓட்டு மட்டும் போட்டுட்டு வந்துட்டேன்...

    ReplyDelete
  11. மனதை பிய்த்து எறியும் பதிவு அண்ணா,

    ஆபீசர் சாரோட அம்மா இறந்த தகவல் கொஞ்சம் அதிர்ச்சி.. மிகவும் வருத்தமாக இருக்கிறது..

    ReplyDelete
  12. மிகவும் வருந்தத்தக்க செய்தி நண்பரே

    ReplyDelete
  13. மிகவும் வருத்தமான செய்தி .ஆழ்ந்த .அனுதாபங்கள்

    ReplyDelete
  14. எவ்வளவு மரண செய்திகள்.வருத்தமாக இருக்கு.
    ஆழ்ந்த அனுதபங்கள்.

    ReplyDelete
  15. மரணித்தவர்களின் குடும்பத்திலுள்ளவர்களுக்கு அதனை தாங்கி கொள்ளும் மனதையும் விரைவில் பழைய நிலைக்கு திரும்பவும் என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  16. அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  17. ////இந்த தடவைதான் ரொம்ப துக்கமாவும் கவலையாகவும் திரும்பியும் இருக்கேன்.////

    எல்லாம் ஒரு சீசன் போல இருக்கு அண்ணா என்ன செய்யலாம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

    ReplyDelete
  18. சிந்திக்க வேண்டிய சம்பவங்கள். எல்லாம் விதி விட்ட வழி தான்.

    ReplyDelete
  19. அங்கிள், மனம் கனக்கும் பதிவு. மரணம் என்பது கொடுமை. அதுவும் இளமையில் மரணம் என்பது இன்னும் கொடுமை.

    ReplyDelete
  20. நமக்கு அறிந்தவர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் ஏற்படும் மரணத்தின் வலி மிக அதிகம் மனோ.

    ReplyDelete
  21. முழுதும் படிக்கும் முன்பே நெஞ்சம் பதைக்கிறது.

    ReplyDelete
  22. அப்படியா மனோ....சங்கர லிங்கம் சாரின் தாயார் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  23. மிகவும் வேதனைதான் தெரிந்தவர்களின் பிரிவு!

    ReplyDelete
  24. உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறோம் மனோ.

    ReplyDelete
  25. சங்கர லிங்கம் சார் அம்மா மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன் ...

    ReplyDelete
  26. வணக்கம் அண்ணாச்சி,

    வாழ்வியலைப் பற்றிச் சிந்திக்க வைக்கும் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    ஆப்பிசர் கூட நானும் போனில் பேசினேன் பாஸ்..

    என்னத்தச் சொல்ல...
    வாழ்க்கை என்றால் இப்படியும் இடர்களா என்று விரக்தி கொள்ளத் தான் முடிகிறது.

    ReplyDelete
  27. மனம் வேதனைப் படுகிறது மக்களே
    இழப்பு எவ்வளவு கொடிது......

    ReplyDelete
  28. நிஜம்தான் பாஸ், நெருக்கமானவர்களின் பிரிவோ பிடித்தமானவர்களின் பிரிவோ
    மிக கொடியது..... நானும் அனுபவித்து இருக்குறேன்... :(

    ReplyDelete
  29. ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!/

    ஏக்கம் கொள்ளவைத்த வரிகள்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!