Friday, September 16, 2011

கன்யாகுமரி மாவட்டம் சில செய்திகள்...!!!

குமரி மாவட்டம் -பொன்விழா ஆண்டு -சில துளிகள்
சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இந்த வருடம் 50 ஆண்டுகள் ஆகிறது.
எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள்.


* இந்திய திரு நாட்டின் தெற்கு முனை – முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்

* கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.

* தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.

* பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.

* தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)


* ‘ஆசிரியர் மாவட்டம்’ என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.

* இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்...!!!

* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)

* கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.

* சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.

* சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.

* இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம்.

* மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் ‘நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!” என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம்.

* தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.

* தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் – நாகர்கோவில்).

டிஸ்கி : நாஞ்சில் மனோவை உங்களுக்கு தந்ததும் [[கொன்னதும்]] இந்த மாவட்டம்தான்....!!! எவம்லேய் அங்கே குனியுறது...???


நன்றி : http://nagercoil.wordpress.com/page/212/

31 comments:

  1. தமிழ்மணம் கோர்த்து விடுங்கோ மக்கா...

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பரே

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. தமிழ் மனத்திலே இணைத்து விட்டேன் நண்பரே

    ReplyDelete
  4. தமிழ் மணம் ஒன்று

    ReplyDelete
  5. அண்ணே! இதை எழுதி 6 வருஷமாச்சு :)
    http://cdjm.blogspot.com/2005/11/blog-post.html

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி !!

    ReplyDelete
  7. சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
    மறைந்த சுந்தர ராமசாமி
    எழுத்தாளர் ஜெயமோகன் & எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
    மலையாள & தமிழ் நடிகர் பிருதிவிராஜ்
    இவர்களும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தானே அண்ணாச்சி?

    குமரி மாவட்டத்துக்காரர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. குமரி மாவட்டத்தை பற்றிய அருமையான தகவலை தந்தமைக்கு நன்றி நண்பரே

    நேரடி ரிப்போர்ட்

    இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

    ReplyDelete
  9. பல புதிய தகவல்கள் மனோ! என் ஆருயிர் நண்பரின் சொந்த மாவட்டம் என்பதால் எனக்கும் குமரி.மாவட்டம் பிடித்த இடம்தான். டிஸ்கி : ரொம்ப நல்லாஇருக்கு. கொழுப்பு இன்னம் கொறயவில்லை உமக்கு !

    ReplyDelete
  10. /// ஜோ/Joe said...
    அண்ணே! இதை எழுதி 6 வருஷமாச்சு :)
    http://cdjm.blogspot.com/2005/11/blog-post.ஹ்த்ம்ல் /////


    ஜோ ..கண்டுக்காதீங்க மனோ நம்ம ஆள்தானே !!

    ReplyDelete
  11. தெரியாத ஊரை தெரிந்த ஊரைப்போல் ஆக்கிவிட்டிர்கள்
    உங்கள் அசத்தல் தகவலகளால்....
    சூப்பர் பாஸ்

    ReplyDelete
  12. அறிந்துகொண்டேன் நன்றி பாஸ் அப்புறமாய் அங்கால பக்கம் வர பாக்கிறன் ))))))))))

    ReplyDelete
  13. வாழைப்பழம், பலாப்பழம் பார்த்தேன்... மூனாவதா மாம்பழம் இருக்கும்ன்னு பார்த்தா நீங்க இருக்கீங்க...

    ReplyDelete
  14. அருமையான தகவல் .அயல் நாட்டில் இருக்கும் நாங்கள் இதுவரை அறியாத தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  16. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  17. தகவல் கொண்டு வந்த மனோ அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  18. குமரி மாவட்டம் பற்ரி அறிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. //
    நாஞ்சில் மனோவை உங்களுக்கு தந்ததும் இந்த மாவட்டம்தான்
    //
    அதுதான் அது செய்த ஒரே தப்பு

    ReplyDelete
  20. குமரி மாவட்ட பெருமையை மட்டும் சொன்னாப் போதாதா?..நீரு பிறந்ததையும் சொல்லணுமா?

    ReplyDelete
  21. அருமையான தகவல் .
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  22. நல்ல தகவல்கள் நிறைய தகவல்கள் புதிதும் கூட

    ReplyDelete
  23. குமரி மாவட்டத்தைப் பற்றி குவித்த பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. இதில் பல எனக்கு தெரியாத தகவல்கள் மக்கா..

    ReplyDelete
  25. உலகத்தர பதிவர் நாஞ்சில் பிரதாப் கூட அங்கதான் பிறந்தார். :))

    ReplyDelete
  26. அடிக்கடி பவர்கட் ஆவது அங்கேதான் போல மனோ!நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  27. அடிக்கடி பவர்கட் ஆவது அங்கேதான் போல மனோ!நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  28. நாஞ்சில் பிரதாப் said...
    உலகத்தர பதிவர் நாஞ்சில் பிரதாப் கூட அங்கதான் பிறந்தார். :))//

    eley tambi, nee enn guru'ley.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!