கடல் தாண்டி வந்தியா
ஆசாபாசங்களை
பெட்டியில் வைத்துப் பூட்டு....
பிரிவின் மனவலியை
மறைத்து வைத்து
இன்முகம் காட்டு...
கண்ணில் சுரக்கும்
கண்ணீரை அடிக்கடி
பாத்ரூம் போயி கழுவு...
கைபேசியில் ஒப்பாரி வைக்கும்
மனைவிக்கும் குழந்தைக்கும்
பயந்து ஒளியும் கைபேசி...
நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
இன்னும் கூடுதலாக
மனம் அழுகிறது...
காலம் கோலம்
எது மாறினாலும்
முதலாளிகள் மாறப்போவதில்லை...
கண்ணீரை நெகிழ்ந்து
கதறலை அமிழ்ந்து
மனதை ஒளித்து வைத்துக்கொள்...
இந்த கண்ணீருக்கு
மட்டும் ஒரு
சங்கம் இல்லை....
இருந்தால் உலகம்
தாங்காது எனவேதான்
ஞானிகள் யாரும் யோசிக்கவில்லை...
ஏ சமுத்திரமே
எத்தனை முறைதான் உன்னை
கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...
கண்ணீர் பழகிவிட்டது
பிரிவுகள் வழக்கமாகி விட்டது
பாஸ்போர்ட், விசா இல்லாத
உலகம் வேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!
டிஸ்கி : படங்கள் யாவும் நான் வேலை செய்யும் ஹோட்டல் மேலிருந்து எடுத்தது.
மும்பைய விட்டு பறந்தாச்சா???
ReplyDeleteஹோட்டல் மேலே எடுத்ததா ,அப்போ ஹோட்டல் கீழே இருந்து எடுக்கலயா
ReplyDeleteஆமினா said...
ReplyDeleteமும்பைய விட்டு பறந்தாச்சா??? //
ஆமாங்கோ....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஹோட்டல் மேலே எடுத்ததா ,அப்போ ஹோட்டல் கீழே இருந்து எடுக்கலயா//
எலேய் அண்ணா என்னா நக்கலாடா ராஸ்கல்.....
வாழ்த்துக்கள் மனோ.
ReplyDeletehttp://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
சொந்த ஊரின் பிரிவு வேதனையை உங்கள் அனுபவம் உணர வைக்கிறது ....
ReplyDeleteRathnavel said...
ReplyDeleteவாழ்த்துக்கள் மனோ.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html //
நன்றி அய்யா.....
koodal bala said...
ReplyDeleteசொந்த ஊரின் பிரிவு வேதனையை உங்கள் அனுபவம் உணர வைக்கிறது ....//
கவலையான உலகமய்யா...
அசத்தல் தல...
ReplyDeleteஅர்த்தமுள்ள கவிதை
ReplyDelete//நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
ReplyDeleteஇன்னும் கூடுதலாக
மனம் அழுகிறது...// என்ன சொல்ல? :-(
//பாஸ்போர்ட், விசா இல்லாத
ReplyDeleteஉலகம் வேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!//
அருமை மனோ!
பிரிய மனமில்லாவிடினும் பிரியத்தானே வேண்டியிருக்கிறது மக்கா! என்ன செய்வது...
ReplyDeleteவலிகள் தெரியுது,,,நேற்று பேஸ் புக்கில் பார்த்தேன் கொஞ்சம்!
ReplyDeleteநோ நோ செண்டிமெண்ட்
ReplyDeleteஸ்டார்ட் மியூசிக்
தனனே தானானே:)
Laptop Mano Alalama..no no no
ReplyDeleteஆமாம் இது எந்த ஏரியா அண்ணே ஹித்தா மீனாசல்மானா
ReplyDeleteஉங்க மனக்கஷ்டத்தை அழகான கவிதையில சொல்லியிருக்கீங்க. படிக்கும் எங்களுக்கே கஷ்டமா இருக்கு,அனுபவிக்கும் உங்கள் வேதனையை உணரமுடிகிறது.
ReplyDeleteஅண்ணே அழுவாதீங்க கண்ணு துடசிக்கங்க....நாங்கல்லாம் இருக்கோம்ல...முடிஞ்சா மொராக்கோ காரிய நெனச்சிக்கங்க ஹிஹி!
ReplyDeleteஉங்கள் கவிதைக் கண்ணீர் முத்துக்களில்
ReplyDeleteஎன் நிலையையும் பார்த்தேன் மக்களே,
அன்றோர் விக்கிரமாதித்தன்
இன்றோ கோடானுகோடி விக்கிரமாதித்தர்கள்.
அதில் நானும் ஒருவனே....
வீட்டை விட்டு பிரிந்து வரும் அந்த நொடி...
ஏட்டினில் எழுத முடியா சோகம்.....
விமானம் தாய்நாட்டில் தரையிறங்கும் போது இருந்த
மன குதூகலம்
அயல்நாட்டில் பணி நிமித்தம் இறங்கையில்
வற்றிப்போவது அடிக்கடி...
என்ன செய்வது மக்களே...
காலம் நம்மை செய்வித்த கோலம்
அனுபவித்தே தீர வேண்டும்.
கடல் நடுவில் நானிருக்கையில்
சிலநேரம் அலைபேசி குறிகள் கிடைக்க வில்லையென்றால்
மனம் பதறுவது .....
வேண்டாம் நண்பா...
இதோ நான் இன்னும் பத்து நாட்களில் தாயகம் செல்கிறேன்.
மீண்டும் நீங்கள் தாயகம் வரும் நாளிற்காய்...
உங்கள் குடும்பத்தில் ஒருவனாய்....
இந்த நண்பனும்........
பிரிவுத்துயரை இத்தனை வலிமையாக
ReplyDeleteஎளிய வார்த்தைகளில் அனுபவிப்பவர்கள் அன்றி
வேறு எவரும் கவிதையாக்குவதும் கடினம்
நாம் ஆறுதல் சொல்லி தேற்ற முயல்வதும் கடினம்
மனம் கனக்கச் செய்யும் பதிவு
கவலையை கவிதையாய் ஆக்கியிருக்கீங்க ..(
ReplyDeleteகடலுக்கு ஒப்புமை கவிதையின் தலைப்பு இலக்கியத்தரம் மனோ!
ReplyDeleteஅண்ணே படங்கள் சூப்பர் அண்ணே
ReplyDeleteஉங்கள் கைவண்ணம் அசத்தலா இருக்கு ஹீ ஹீ ( அந்த பக்கம் ஏதும் பிகருங்க போகல்லையா)
குட்டி குட்டு சுவராசிய கவி சூப்பர் பாஸ்
ReplyDeleteஏ சமுத்திரமே
ReplyDeleteஎத்தனை முறைதான் உன்னை
கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...
அழுத்தமான வரிகள்.
ஆழமான சிந்தனை
அருமை நண்பரே.
சொந்த பந்தங்களை விட்டு விட்டு வெளிநாட்டில் வேலை செய்வோரின் உள்ளகுமுறலை வார்த்தைகளால் வடித்துள்ளீர்கள்..
ReplyDeleteபடித்ததும் மனம் கணத்துவிட்டது
நட்புடன்
சம்பத்குமார்
எல்லாம் நல்லாயிருக்கு,,
ReplyDelete//பாஸ்போர்ட், விசா இல்லாத
உலகம் வேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என//
ஹ்ம்ம்ம்
வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லோருக்கும் இதே நிலைதான்,, என்ன செய்ய?
ReplyDeleteபிரிவின் வேதனை சொல்லும் கவிதை...
ReplyDeleteஎன்ன செய்வது... பணம் தேடும் வாழ்வில் கண்ணீரே மிச்சம்...
வணக்கம் அண்ணாச்சி,
ReplyDeleteகவிதையில் நீங்க தேறிட்டீங்க.
உணர்வின் வலிகளுக்கு கவிதை மூலம் மருந்திட்டிருக்கிறீங்க பாஸ்,
உறவுகளைப் பிரிந்து தூர தேசத்தில் வாழும் ஒருவனின் உணர்வுகளை அவனின் ஊரோடு இணைக்கும் உறவுப் பாலமாக உங்கள் கவிதை அமைந்துள்ளது.
கவிதையில் கவலையை வரவைத்துவிட்டீர்கள்!
ReplyDeleteகைபேசியில் ஒப்பாரிவைக்கும் மனைவிக்கும்!
கொன்னூட்டீங்க உணர்வுகளின் அற்புதமான வரிகள் மாப்பூ! வரவர உங்க பதிவைப்படிக்கும் போது இந்த நாட்டைவிட்டு மனைவியோடு போய்விடலாமோ என்று மனசு வலிக்குது அண்ணா! ம் என்ன செய்வது துயரங்கள் இப்படி வலையில் போகின்றது !
பிறந்த மண்ணை...உற்றார் உறவுகளை பிரிவது...கஷ்டம் தான்...எத்தனை முறையாயினும் ..எவ்வளவு வயசானாலும்...
ReplyDeleteஇன்னும் ஒரு வருஷம் தானே...அடுத்த முறை பிரிவதற்கு...
கொஞ்சநாளைக்கு அப்படித்தான்ணே இருக்கும்!
ReplyDeleteஎலேய்ய் இனி மறுக்கா இப்படி அழுவாச்சி பதிவு போடறத பாத்தேன்.... பிச்சிபுடுவேன் பிச்சி.........
ReplyDeleteபாஸ்போர்ட், விசா இல்லாத
ReplyDeleteஉலகம் வேண்டும்////
அழகிய வரிகள்
//ஆசா பாசங்களை
ReplyDeleteபெட்டியில் வைத்துப் பூட்டு//
யாரு தல அந்த ஆசா? அவங்க பாசங்களை நாங்க ஏன் பூட்டணும்?
//நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
ReplyDeleteஇன்னும் கூடுதலாக
மனம் அழுகிறது.//
என்ன ஓய் யாரது ஆறுதல் தறது ? பிச்சுபிடுவேன் பிச்சு :-)
அழப்படாது ..சொல்லிட்டேன் ஆமா..!! அதுக்காக குளிக்காம , பல்லு விளக்காம வேலைக்கி வரப்பிடாது ஜாக்கிரதை :-))
படங்கள் வித்தியாசமாக இருக்கு.
ReplyDelete