நண்பனுக்கு ஒரு கவிதை.
உதிரத்தை பாலாக்கி
ஊனை உணவாக்கி
தந்தவளே....
ஊனை உணவாக்கி
தந்தவளே....
எப்போதும் முந்தானை
பிடித்து வரும் என்னை
ஒற்றையாய் விட்டுப் போனதென்ன....
யய்யா யய்யா என
அழைத்தவளே - இனி
அந்த சத்தம் என்று கேட்பேன்...
பொத்திப் பொத்தி
வளர்த்து என்னை ஆகாயத்தில் பறக்க
பழக்கி விட்டு ஓடி மறைந்து, விண்மீனாய் மாறினது என்ன....
உனது அன்பின் நேசத்திற்கு
நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!
நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!
---------------------------------------------------------------------------
ஒரு முறை படகில் ஏறி, யமுனை
நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர்.
அது இரவு நேரம், படகிலே இருந்த சின்ன
அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர்
கவிதை எழுத முற்பட்டார்.
ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை…
பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி
விளையாடியது.
கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை
அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்ததுதான்
தாமதம்.. .
நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக
ஒளிர்வது தொடர்ந்தது. இதைப் பார்த்ததும் தாகூருக்கு
கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.
இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்…?
ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே
தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ.
அதே மாதிரிதான் ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை
அது மறைத்து விடும்.
நன்றி : கல்யாண்ஜி.
வடை!
ReplyDeleteஇருங்க படிச்சிட்டு வாரேன்!
ReplyDeleteசம்பவத்தைவிட, கவிதை அழகு!
ReplyDelete#ஜூப்பர்..
தம்பி!!!!!!!!!!!!!!!
ReplyDelete///சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteதம்பி!!!!!!!!!!!!!!!///
மனோ அண்ணாச்சியவிட நீங்க மூத்தவரா? அப்போ உங்களுக்கு வயசு 45++ ஆ?
#உங்களுக்கு 35 to 40 னு தானே கணிச்சேன்....
என்றா இது...கவித கொட்டுர...ஸ் ஸ் அபா ஆனா நல்லாத்தான்யா இருக்கு...ஹிஹி!
ReplyDeleteஇப்போத்தான் தமிழ்மனம் வேலை செய்யுது அப்பு!
ReplyDelete#இணைச்சாச்சு...
இணைச்சாச்சு.....
கவித...கவித ...
ReplyDeleteகவிதை, சம்பவம் இரண்டுமே அற்புதம்.
ReplyDeleteவெளங்காதவன் said...
ReplyDelete///சி.பி.செந்தில்குமார் said...
தம்பி!!!!!!!!!!!!!!!///
மனோ அண்ணாச்சியவிட நீங்க மூத்தவரா? அப்போ உங்களுக்கு வயசு 45++ ஆ?
#உங்களுக்கு 35 to 40 னு தானே கணிச்சேன்....//
ஹி ஹி அதான் முகத்தை வச்சு வயசை கணிக்கக் கூடாது ஹி ஹி....
விக்கியுலகம் said...
ReplyDeleteஎன்றா இது...கவித கொட்டுர...ஸ் ஸ் அபா ஆனா நல்லாத்தான்யா இருக்கு...ஹிஹி!//
என்றா பசுபதி மாச மசன்னு நின்னுட்டு இருக்கே போய் ஒரு துக்ளா வாங்கிட்டு வா....
வெளங்காதவன் said...
ReplyDeleteஇப்போத்தான் தமிழ்மனம் வேலை செய்யுது அப்பு!
#இணைச்சாச்சு...
இணைச்சாச்சு.....//
நன்றி
நன்றி
நன்றி
நன்றி.......
கவிதை அன்பின் உருவான அம்மாவிற்கு சமர்ப்பணமாக தரலாம் ,அவ்வளவு அழகு நண்பரே .
ReplyDeleteடிஸ்கி :-
நான் சொன்னது பெற்ற தாயை
==============================
இரண்டாவது நல்ல தத்துவம் நண்பரே
உண்மைதான் ஈகோ கண்களை மறைக்கும் ,உறவை கெடுக்கும் .
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ் மணம் ஐந்து
ReplyDeleteஇன்ட்லி வாக்களிக்க சென்றால் இந்த இடுக்கை ஏற்கனவே இணைத்தாயிர்று என்று வருகிறது நண்பரே
பிறகுவந்து வாக்களிக்கிறேன் .
தமிழ் மணம் ஒட்டு போட்டாச்சு
வயிற்றின் கருவறையில் சுமந்து
ReplyDeleteகாலமெலாம் நெஞ்சில் சுமக்கும்
அன்பின் உருவுக்கு அழகிய கவிதை.
ஈகோ பற்றிய செய்திக்கதை விளக்கம்
அருமை மக்களே..
கவிதையும் கதையும் அழகு
ReplyDeleteஅசத்தல் பாஸ்
ReplyDeleteநல்ல பகிர்வு பாஸ்!
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு.....தலைப்புக்கும் கவிதைக்கும் மேட்ச் ஆகுற மாதிரி என் மூளைக்கு தெரியலையே......
ReplyDeleteஅம்மாவ பாத்து மகன் சொல்றது மாதிரியான கவிதைக்கு நண்பனுக்கு ஒரு கவிதை என்ற தலைப்பு ஏன்?
ஒரு வேள உங்க பிரன்ட்க்கு ஆப்பு வச்சீங்களோ? :-)
ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை
ReplyDeleteமறைத்து விடும்.//
அழகான வரிகள்.
மனோ அண்ணா தானா இது
ReplyDeleteகவிதை படிக்கும் போது ஒரே அழுகையா வருது
தத்துவம் ஹி ஹி ஹி சூப்பர்
மனம் கவர்ந்த கவிதை
ReplyDeleteதொடர்ந்து தர அன்புடன் வேண்டுகிறேன்
சூப்பர் பகிர்வு!
ReplyDeleteகவிதை,கல்யான் ஜி ,மற்றும் தாகூர், மனோ இந்த நால்வர் காம்பினேசன் ரொம்ப அருமை.
ReplyDeleteநல்ல நண்பர்களை பிடிக்கிறதே கஷ்டமா இருக்கு,
ReplyDeleteஅருமையான பகிர்வுகள் ........
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteகவிதை கலக்கல் பாஸ்,
அதே போல ஈகோவினை இல்லாதொழிப்பதற்கான விளக்கமும் சூப்பர் பாஸ்,
உனது அன்பின் நேசத்திற்கு
ReplyDeleteநாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!//
நெஞ்சைத் தொடும் வரிகள்...
ஒருவர் மீது நாம் அன்பு செலுத்தத் தொடங்கினால் ஞாபகப் பரிசாக எவற்றையாவது சேகரித்து வைத்து அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்போம் என்பதனை மேற்படி வரிகள் விளம்பி நிற்கிறது.
கவிதையும் கதையும் அழகு... பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteரெவெரி
உனது அன்பின் நேசத்திற்கு
ReplyDeleteநாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!//
நெஞ்சைத் தொடும் வரிகள்...
ஒருவர் மீது நாம் அன்பு செலுத்தத் தொடங்கினால் ஞாபகப் பரிசாக எவற்றையாவது சேகரித்து வைத்து அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்போம் என்பதனை மேற்படி வரிகள் விளம்பி நிற்கிறது.
அம்மா கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...
ReplyDelete