Sunday, September 11, 2011

கூடங்குளம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் நம் பதிவர் "கூடல் பாலா"....!!!

அணுமின் நிலையத்தை மூடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் மக்கள் கூடங்குளத்தில், இதில் நம் சக பதிவர் "கூடல் பாலா"வும் பங்கெடுத்துள்ளார். பதிவர்களாகிய நாமும் நம்மாள் முடிந்த ஆதரவினை கொடுக்கவேண்டும்.

அரசின் இறுக்கத்தை தளர்த்த வேண்டும். ஜப்பானில் அணு நிலையத்தால் அவர்கள் படும்பாடு என்னான்னு நமக்கு நல்லாவே தெரியும், இன்னும் ஜப்பான் வெளியிடாத ரகசியங்களும் இருக்கு என்பதே உண்மை...!!!

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டிய அரசாங்கம், அதற்கு ஆபத்து வந்தால் அதை தடுக்கும் உபகரனமில்லாமல் அதை கட்டிக் கொண்டிருக்கிறது, அங்கே வசிக்கும் நாமென்ன பூனையா, நாயா அல்லது குரங்கா சோதனை செய்ய...???

பல மாநிலங்கள் விரட்டிவிட்ட இந்த திட்டத்தை ஏமாளிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என இங்கே கொண்டு வந்திருகிறார்கள், ஆரம்பத்திலே இருந்தே மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், செவிசாய்க்காத அரசு தொடர்ந்து உலையை கட்டி வருகிறது...

அரசாங்கத்தின் முக்கியபுள்ளிகள் தலைநகரில் இருப்பதால் அவர்களுக்கு அச்சமுமில்லை, மக்களை குறித்த கவலையுமில்லை, நாடு எரியும்போது பிடில் வாசித்தவனின் வம்சத்தில் வந்தவர்களுக்கு ஈவு இரக்கம் கிடையாதுன்னு வரலாறே சாட்சி சொல்லுது...!!!

பதிவர்களே இந்த போராட்டத்தில் நம் சக பதிவரும் நண்பனுமான "கூடல் பாலா" பங்கெடுத்திருப்பது பதிவர்களாகிய [[பதிவுலகம்]] நமக்கு பெருமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உடனே நெட்டை ஓப்பன் செய்யுங்கள் உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள், இதற்கும் போராட அண்ணா ஹசாரே வரவேண்டாம், நாம் ஒவ்வொரு பேரும் அண்ணா ஹசாரே'யாக மாறுவோம், வெற்றிமாலை சூடுவோம் நன்றி......
 
கொசுறு : கூடங்குளம் மக்கள் போராட்டத்தை மறைக்கவே பரமக்குடியில்  கலவரம் உண்டாக்கப்பட்டதான்னு மைல்டா நண்பன் ஒரு டவுட்டு சொல்றான், ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 
கூடல் பாலா லிங்க் : http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_08.html#more
 
 

16 comments:

  1. அண்ணே பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. //கூடங்குளம் மக்கள் போராட்டத்தை மறைக்கவே பரமக்குடியில் கலவரம் உண்டாக்கப்பட்டதான்னு மைல்டா நண்பன் ஒரு டவுட்டு சொல்றான், ஆண்டவனுக்கே வெளிச்சம்.//

    எனக்கும் அதே டவுட் உண்டு.

    கூடல் பாலாவுக்கு நம் மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிப்போம்.

    ReplyDelete
  3. கூடல் பாலாவுக்கு நம் மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிப்போம்.

    ReplyDelete
  4. பாலா அண்ணாக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பு அண்ணாச்சி கூடல்பாலாவின்
    தார்மீக போராட்டத்திற்கு வாழ்த்துக்களும்
    வெற்றிக்கனியை பறிக்க பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
  6. வணக்கம் பாஸ்,

    பாலா அண்ணாவின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும், எங்களாலான பங்களிப்புக்களை நாமும் வழங்குவோம்.

    ReplyDelete
  7. பாலாவுக்கு நம் ஆதரவு தெரிவிப்போம் நண்பரே

    ReplyDelete
  8. என் ஆதரவு உண்டு

    ReplyDelete
  9. நாமென்ன பூனையா, நாயா அல்லது குரங்கா சோதனை செய்ய...???

    ReplyDelete
  10. ஒன்றுபடுவோம்!
    ஓரணியில் திரள்வோம்!!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் பாலா...
    நன்றி மனோ...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் பாலா...
    நன்றி

    ReplyDelete
  13. பாலாவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. http://josephinetalks.blogspot.com/2011/09/tirunelveli-kudankulam.html

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!