பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது.
என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் இதோ சில டிப்ஸ்…
* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.
* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.
* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.
* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.
* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.
* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.
* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.
* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.
நன்றி : உங்களுக்காக.
நாட்டின் கண்களுக்கான பகிர்வு நன்று.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணே!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteM.R said...
ReplyDeleteஎண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்
அந்த சிரசை மட்டுமல்ல ஒட்டு மொத்த தோற்றத்தையும் அழகாக காட்ட உதவும் முடியைபற்றியபதிவு."முடி"இன்ஆரோக்கியத்தை பற்றிய தங்கள் பதிவு உபயோகம்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ் மனம் ,இன்ட்லி voted
ReplyDeleteஒன்னுமே புரியல உலகத்துல!
ReplyDelete( கூந்தல்ல அதிகமா சிக்கல் இருந்தா பல் இல்லாத சீப்பால சீவலாம் என்பது அடியேனின் கருத்து)
பெண்களுக்கான போஸ்டா? அண்ணிக்கிட்ட சொல்லவாடா அண்ணா ?
ReplyDeleteஅண்ணே பதிவு போட்டீங்க நல்ல இருக்கு அதுல ஏன் அண்ணே பயமுறுத்துற படமா இருக்கு!!
ReplyDeleteபதிவை படிச்சு முடிக்கிறதுக்குள்ள ரெண்டு வாட்டி உச்சா வந்துடுச்சு பயத்துல (ஹா ஹா ஹா)
வேப்பலை அடிச்சாதான் சரியா வரும்ன்னு நெனைக்கிறேன். கெளம்பிட்டேன்..
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎன்ன கொடும சார் இது, நீங்க போட்டு இருக்கிற படத்த பாத்தா முடி வளர்க்கிற ஆசையே போயிடும் போலிருக்கே
ReplyDeleteஅறிவை வளர்க்க ஐடியா சொல்வீர்ன்னு பார்த்தா மயிர் செழிக்க ஐடியா சொல்கிறீர். எல்லாம் சேர்க்கை தான் காரணம்.
ReplyDeleteஇன்றைய பெண்களுக்கு இந்தக் குறிப்புகள் எதற்கு என்பதுதான் சிந்தனையாக இருக்கிறது..???
ReplyDeleteஇவ்வளவு நீண்ட முடிகொண்ட பெண்களை இதுபோன்ற படங்களில்தான் பார்க்கமுடிகிறது..
அழகிய பதிவு. வாழ்த்துக்கள். எல்லாரும் பாப் கட்டிங் வெட்டுறாங்கன்னா... இதெல்லாம் போட்டோவுலதான் பாக்கணும்...
ReplyDeleteஹையோ ஹம்மா .....
ReplyDeletehahaha..:)usefull
ReplyDeleteமேலே சொன்ன எல்லாத்தையும் கலந்து குளிச்சா..?
ReplyDeleteஅளவுக்கு மீறினால் அசிங்கம் பாஸ் ..பெண்கள் முடி விசயத்திலும்...
ReplyDeleteஇப்போ யாருக்கும் நீண்ட முடி வேண்டாம்னு தான் நினைக்கிறாங்க. குட்டியா ஃப்ரீ ஹேர் விடுவது தான் ஃபேஷன்னு சொல்றாங்க.
ReplyDeleteநிறய ஆண்களுக்கு வழுக்கை விழுது, அதுக்கு எதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அப்பு.
அருமையான தகவல்கள் பெண்களுக்கு அழகான படங்கள் மாப்பூ!
ReplyDeleteநான் கண்ண மூடிட்டு வந்தேன்...
ReplyDeleteஒலகம் இருண்டு போச்சு!
#யாரும் பாக்கலியே?
(ஓட்டு போடலை.... போய்யா... இதே மாதிரி எழுதுனா நல்ல ஓட்டு கூட கெடையாது)
நன்றி மனோ தங்களின் குறிப்புகளுக்கு. அந்த படங்களில் உள்ளவர்களின் கூந்தலை பார்க்கும் போது நமக்கும் அந்த மாதிரி முடி இருக்காதா என்ற ஆதங்கம் எழுகிறது.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteடிப்ஸ்க்கு மிக்க நன்றிங்க...
ReplyDeleteஅண்ணே நல்ல பதிவு..என்னை மாதிரி கல்யாணம் ஆகாத பசங்களுக்கு..இதை படிச்சுட்டு இப்பவே கலக்கமாக இருக்கு....
ReplyDeleteபொண்ணுங்க சமாச்சாரத்திற்கெல்லாம் அசத்தலான பதிவு போட எப்படி அண்ணே கத்துக்கிட்டிங்க?
ReplyDeleteபெண்கள் ஆதரவு உங்களுக்குதான்...
ReplyDeleteபெண்களுக்கு மட்டும்தானா,, ஆண்களுக்கும் முடி உதிருதுதானே,, பதிவு நல்லாயிருக்கு,,
ReplyDeleteடிப்ஸ் எல்லாம் சரிணா. எதுக்கு இப்படி படத்தப் போட்டு பயப்படுத்துறீங்க ?
ReplyDeleteமுட்டையின் வெள்ளைக்கருவ எடுத்து தலைல போட்டா ஒருவித வாசம் அடிக்காதா ?
ReplyDelete// கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteஅறிவை வளர்க்க ஐடியா சொல்வீர்ன்னு பார்த்தா மயிர் செழிக்க ஐடியா சொல்கிறீர்.//
ROFL :)) வாய்விட்டுச் சிரித்தேன் :)))))))))
//அந்த படங்களில் உள்ளவர்களின் கூந்தலை பார்க்கும் போது நமக்கும் அந்த மாதிரி முடி இருக்காதா என்ற ஆதங்கம் எழுகிறது.//
ReplyDeleteஓவர் நக்கல்ங்க :)))))))
கண்ணுன்னு சொல்லிட்டு முடிய காட்டுறிங்க
ReplyDeletet.m 14
ReplyDeleteஎன்ன ...
ReplyDeleteதொடர் டாகுட்டர் -ஆவே
மாறிடீங்க ???
தாய்க்குல டாக்டர் தலிவர் மனோ வாழ்க ஹி ஹி
ReplyDeleteஎன்ன தலிவா எங்கட மொட்டை மண்டையில் முடி வளர எதும் ஜடியா இருக்கோ..இருந்தால் சொல்லுங்கோ.
அடேயப்பா... இவ்வளவு நீளமா???
ReplyDeleteபார்ப்பதற்கு நல்லா இருக்கு மக்களே...
நல்ல பகிர்வு நண்பரே...
ReplyDeleteஓட்டிட்டேன்
ReplyDeleteகோமாளி செல்வா said...
ReplyDelete// கே. ஆர்.விஜயன் said...
அறிவை வளர்க்க ஐடியா சொல்வீர்ன்னு பார்த்தா மயிர் செழிக்க ஐடியா சொல்கிறீர்.//
ROFL :)) வாய்விட்டுச் சிரித்தேன் :)))))))))//
ரெண்டுபேரையும் தோலை உரிச்சிபுடுவேன்....
அனைத்து டிப்ஸூம் அருமை சார்...
ReplyDeleteஅண்ணே பின்னிட்டிங்க!
ReplyDeleteயோவ் எங்கையா இந்த படங்களை எடுத்தனீர்
ReplyDeleteவணக்கம் அண்ணே,
ReplyDeleteபெண்களின் கூந்தல் அழகினைப் பராமரிப்பதற்கேற்ற சூப்பரான பதிவு.
சூப்பர் டிப்ஸ்
ReplyDelete