Friday, September 9, 2011

அரசன் என்பவன் [[ள்]] புளியம்பழம் போல இருக்கவேண்டும்....!!!???

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.
""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்....!!!


ஒரு ஜோக்...

காலையில் நாயை கையில் பிடித்து வாக்கிங் வருபவரிடம் ஒரு குடிகாரன்...

குடிகாரன் : என்ன காலையிலேயே ஒரு கழுதை கூட வர்ற...
வாக்கிங் வந்தவர் : உனக்கு கண்ணு தெரியலையா அது நாய்'டா வெண்ணை...
குடிகாரன் : நான் கேட்டது நாய்'கிட்டேடா டுபுக்கு....



25 comments:

  1. என்ன கொடும இது.....மனோல்லாம் இப்படி பதிவு போடுற அளவுக்கு யாருய்யா கொடும செய்ஞ்சது.....

    ReplyDelete
  2. நகைச்சுவை படித்து விட்டு சிரித்தேன்

    மனம் விட்டு ஹா ஹா

    ReplyDelete
  3. அருமையான தத்துவ கதை

    இதே போல் வீட்டிலும் ஆடம்பரம் ,தேவையில்லாத செலவை குறைத்தால் கூடுமானவரை கடனில்லாமல் வாழலாம்
    அருமை நண்பரே

    ReplyDelete
  4. உங்க பிறந்த நாளுக்கு நாங்களும் புளியம்ப்பழத்தையே அனுப்பலாமா சகோ?

    ReplyDelete
  5. விக்கியுலகம் said...
    என்ன கொடும இது.....மனோல்லாம் இப்படி பதிவு போடுற அளவுக்கு யாருய்யா கொடும செய்ஞ்சது.....//


    ராஸ்கல் ம்ஹும்....

    ReplyDelete
  6. M.R said...
    நகைச்சுவை படித்து விட்டு சிரித்தேன்

    மனம் விட்டு ஹா ஹா

    ReplyDelete
  7. M.R said...
    நகைச்சுவை படித்து விட்டு சிரித்தேன்

    மனம் விட்டு ஹா ஹா//



    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  8. M.R said...
    அருமையான தத்துவ கதை

    இதே போல் வீட்டிலும் ஆடம்பரம் ,தேவையில்லாத செலவை குறைத்தால் கூடுமானவரை கடனில்லாமல் வாழலாம்
    அருமை நண்பரே//

    சரியாக சொன்னீர்கள் மக்கா...

    ReplyDelete
  9. ராஜி said...
    உங்க பிறந்த நாளுக்கு நாங்களும் புளியம்ப்பழத்தையே அனுப்பலாமா சகோ?//



    ஏன் ஒரு ஃபிரிஜ், வாஷிங் மெஷின், டீவி, லேப்டாப் இது எல்லாம் கூட அனுப்புனா வாங்க மாட்டேன்னா சொல்லப் போறேன் ஹே ஹே ஹே ஹே....புளியம்பழம் அனுப்புனா ஒரு லாரி நிறைய அனுப்புங்க ஹி ஹி வித்து காசாக்கிருவேன்...

    ReplyDelete
  10. செம கலக்கல் பாஸ்,,,,,
    ஹா ஹா

    ReplyDelete
  11. தெனாலிராமன் என்ன சொல்றார்ன்னுதான் வந்தேன்.நீங்க என்னமோ கலர் கலரா பிலிம் காட்டுறீங்களே:)

    ReplyDelete
  12. //விக்கியுலகம் said...

    என்ன கொடும இது.....மனோல்லாம் இப்படி பதிவு போடுற அளவுக்கு யாருய்யா கொடும செய்ஞ்சது.....//

    மனோ இப்ப பத்தாம் கிளாஸ் பாசாக்கும்:)

    ReplyDelete
  13. மெனு பார் மிரட்டல் !

    ReplyDelete
  14. ஆகா புளியம்பழத்தை வைத்து அழகிய அரசியல் ஆலோசனைகள் .
    அருமை வாழ்த்துக்கள் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

    ReplyDelete
  15. கேட்டறியாத தெனாலிராமன் கதை.நல்ல தத்துவம்.அரசர் மட்டுமல்ல நாமும் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.

    ReplyDelete
  16. டெம்ப்ளேட் சூப்பர் மக்கா..

    ReplyDelete
  17. நீங்க வாக்கிங் போவிங்களா ?

    ReplyDelete
  18. அருமையான நகைசுவை

    ReplyDelete
  19. இந்திய விடுதலையும் ஆயுத புரட்சி மூலம் ஏற்பட்டது தான். இதனால் இலங்கை போராட்டத்தை தவறு என்று கூறக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்றார் சம்பத்..//

    உண்மைதான் மக்கா,,,

    ReplyDelete
  20. விக்கியுலகம் said...

    என்ன கொடும இது.....மனோல்லாம் இப்படி பதிவு போடுற அளவுக்கு யாருய்யா கொடும செய்ஞ்சது.....

    அடங்கொய்யால

    ReplyDelete
  21. அழகான கதையை தத்துவத்துடன் சொல்லியிருக்கிறீங்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை!

    ReplyDelete
  22. கதை அருமை......

    ஜோக் செம

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!