Saturday, September 24, 2011

புத்திசாலி மீன்கள்...!!!

http://siruvarulakam.blogspot.com/2010/12/55.ஹ்த்ம்ல்

தமிழா தமிழா என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதும் நண்பர் ராதா கிருஷ்ணன், குழந்தைகளுக்கென சிறுவர் உலகம் என்னும் தலைப்பில் அழகான நீதிக்கதைகள் எழுதி வருகிறார், என்னை அவை மிகவும் கவர்ந்தது, அந்த தளத்தின் லிங்க்தான் மேலே இருப்பது, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி குடுங்கள் பிரயோஜனமாக இருக்கும்.

ஒரு கிராமத்தில் ஆழமற்ற குட்டை ஒன்று இருந்தது.

அதில் பல மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.அவற்றில் ஒரு மீன் அதிக புத்திசாலி,மற்றொன்று ஆழ்ந்த சிந்திக்கும் திறன் கொண்டது.மூன்றாவது மக்கு .

ஒருநாள் சில மீனவர்கள் குட்டை நீரை கால்வாய் அமைத்து பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டு பயந்த ஆழ்ந்த சிந்தனை உள்ள மீன் 'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் விரைந்து கால்வாய் வழியே தப்பி வேறு இடம் சென்றிடுவோம்' என்றது.

ஆனால் மக்கு மீனோ இங்கேயே இருக்கலாம்' என்றது.புத்திசாலி மீன்'சமயம் வரும்போது புத்திசாலித்தனமாக தப்பி விடுவோம்' என்றது.

ஆனால்..ஆழ்ந்த சிந்தனைக் கொண்ட மீன் அந்த இடத்தை விட்டு..கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.

தண்ணீர் வடிந்ததும் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்தனர்.

மக்கு மீன் மற்ற குட்டையில் இருந்த மீன்களுடன் சேர்ந்து வலையில் சிக்கியது.

புத்திசாலி மீனோ வலையின் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

வலையை எடுத்துச் சென்று குளத்தில் கழுவும் போது புத்திசாலி மீன் வலையிலிருந்து தன் பிடியை விட்டு விரைவில் குளத்தில் நுழைந்து தப்பித்தது.

மக்கு மீனோ வலையில் சிக்கி இறந்தது.

சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நன்றி : சிறுவர் உலகம்.


33 comments:

  1. புத்திசாலி பதிவன் தம்பி நீ!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. ///// மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.////

    அண்ணாச்சி அந்த மீனில் வரும் அந்த சுழியை எடுத்து விட்ட கதைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்ணு நெனக்கிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    ReplyDelete
  3. கதைக்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  4. புத்திசாலி மீன்கள்...!!!


    உங்களுடைய மேற்கண்ட இடுகை/இடுகைகள் தற்பொழுது திரட்டப்பட்டது

    உங்கள் புதிய இடுகைகள் தமிழ்மணத்தில் சரியாக சேர்க்கப்பட்டுள்ளது
    உங்கள் புதிய இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரிவதற்கு குறைந்தது 5 நிமிடம் ஆகும். தமிழ்மணத்துக்கு தகவல் அனுப்பியதற்கு நன்றி.

    இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

    - புத்திசாலி மீன்கள்...!!!
    - பிரஷர் உள்ள கனவான்களே இங்கே வாங்கோ....!!!
    - பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களுக்காக....!!!
    - அரசியல் தலைவர்கள் & வலையுலக பதிவர்கள் சந்திப்பு...!!!
    - அநியாயம் செய்யும் மருத்துவமனைகள்...!!!

    சன்னலை மூடு

    ReplyDelete
  5. மக்கா சாதிச்சுட்டேன் தமிழ்மணம் இனச்சுட்டேன். ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  6. சிறுவர்களுக்கா ?

    ReplyDelete
  7. ♔ம.தி.சுதா♔ said...
    ///// மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.////

    அண்ணாச்சி அந்த மீனில் வரும் அந்த சுழியை எடுத்து விட்ட கதைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்ணு நெனக்கிறேன்..///

    ஹாஹா!

    ReplyDelete
  8. நல்ல அறிமுகம் நண்பரே...

    நல்ல கதையும் கூட...

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் said...
    புத்திசாலி பதிவன் தம்பி நீ!!!!!!!!!!!!!//


    உன் வாயால சொன்னதுக்கு நன்றிடா அண்ணா....

    ReplyDelete
  10. ம.தி.சுதா♔ said...
    ///// மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.////

    அண்ணாச்சி அந்த மீனில் வரும் அந்த சுழியை எடுத்து விட்ட கதைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்ணு நெனக்கிறேன்..//


    நன்றி மக்கா, மாத்திட்டேன்....

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    கதைக்கு நன்றி அண்ணே!//


    ஹி ஹி உன்னை நம்பவே மாட்டேன்...

    ReplyDelete
  12. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா சாதிச்சுட்டேன் தமிழ்மணம் இனச்சுட்டேன். ஹி..ஹி..ஹி..//


    நன்றிலெய் மக்கா....

    ReplyDelete
  13. சென்னை பித்தன் said...
    பகிர்வுக்கு நன்றி.

    நன்றி தல....

    ReplyDelete
  14. suryajeeva said...
    சிறுவர்களுக்கா ?//


    நம்ம குழந்தைகளுக்கு ஹி ஹி....

    ReplyDelete
  15. கோகுல் said...
    ♔ம.தி.சுதா♔ said...
    ///// மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.////

    அண்ணாச்சி அந்த மீனில் வரும் அந்த சுழியை எடுத்து விட்ட கதைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்ணு நெனக்கிறேன்..///

    ஹாஹா!//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  16. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல அறிமுகம் நண்பரே...

    நல்ல கதையும் கூட...//


    நன்றி நண்பா....டெல்லி வந்தா தாஜ்மகால் சுற்றி காட்டனும் சரியா???

    ReplyDelete
  17. //நன்றி நண்பா....டெல்லி வந்தா தாஜ்மகால் சுற்றி காட்டனும் சரியா???//

    அட டெல்லி-ல எங்க இருக்கு தாஜ்மஹால்? ஓ! மும்தாஜ் வந்துவிட்டால் பதிவு படிச்சீங்களா? :)

    ReplyDelete
  18. Ippathaan enakku sariyan blog spot kidaithullathu !!!
    Thanks......
    Ine naan nalla kathai padippene.....

    ReplyDelete
  19. கதையின் மூலம் கருத்துப்பதிவா? நன்று.

    ReplyDelete
  20. ஹய்யா ஜாலி... தமிழ்மணம், இண்ட்லி எதுவுமே வேல செய்யல........

    ReplyDelete
  21. ////புத்திசாலி மீனோ வலையின் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது./// அது எப்பிடியுங்கோ மீன் கையிற கெட்டியாய் புடிக்கும் (கதையா கேட்டா ரசிக்கணும் கேள்வி எல்லாம் கேட்க்கப்படாது ஹிஹி )

    ReplyDelete
  22. புத்திசாலி மீனா, சரி மீன் அருமை...

    ReplyDelete
  23. //
    தமிழா தமிழா என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதும் நண்பர் ராதா கிருஷ்ணன், குழந்தைகளுக்கென சிறுவர் உலகம் என்னும் தலைப்பில் அழகான நீதிக்கதைகள் எழுதி வருகிறார், என்னை அவை மிகவும் கவர்ந்தது, அந்த தளத்தின் லிங்க்தான் மேலே இருப்பது, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி குடுங்கள் பிரயோஜனமாக இருக்கும்///

    இன்னும் கல்யாணம் ஆகாத என்னை மாதிரி பசங்க...இப்ப வாசிக்கமுடியாதே........ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  24. நல்ல கதை.
    பகிர்வுக்கு உங்களுக்கும் எழுதிய தமிழா... தமிழா... அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. கதையும் நன்று!
    அறிமுகமும் நன்று!

    நன்றி மனோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. நல்ல கதை நண்பா

    ReplyDelete
  27. முன்பெல்லாம் இப்படி குழந்தைகளுக்கு முறையாக அறக் கருத்துகளை சொல்லி புரியவக்கப்பட்டு நன்றாக வளர்க்க அது வுதவியது இன்று விரைதொடும் காலத்தில் இதற்கு வழி இல்லாமல் போனது இடுகைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  28. நல்ல பகிர்வு மனோ. தள அறிமுகம் பலருக்கும் பயனாகும்.

    ReplyDelete
  29. கதை நன்றாக இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. குழந்தைகளின் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளுகின்ற குதூகலமான கதை.

    ReplyDelete
  31. சிந்தனையும், புத்தி சாதுர்யமும் உள்ளவன் நன்றாக வாழுவான் என்பதனை நீதியாக உரைக்கும் அருமையான மீன் கதை..

    பகிர்விற்கு நன்றி பாஸ்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!