Friday, October 28, 2011

கத்தாஃபியின் வீழ்ச்சியும், லிபியாவின் வளர்ச்சியும்...!!!

து இல்லை... நடனக் கூடங்கள் கிடையாது... வீதிகளில் கைகோத்த காதலர்களைப் பார்க்க முடியாது... பொது இடங்களில் பெண்கள் பேசுவதுகூட குற்றம். ஆனால், மேற்கத்தியப் பாலியல் படங்களைப் பார்க்க, இணையதள மையங்களில் நிரம்பி வழியும் இளைஞர்கள்... இதுதான் லிபியா!




மம்மர் கடாஃபியின் ஆட்சியில் ஒரு புறம் மக்களின் சுதந்திரமும் ஜனநாயகமும் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்த நிலையில்... மறுபுறம் அவர்கள் உலக நாடுகளை வேட்கையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

கடாஃபி ஒவ்வொரு லிபியனுக்கும் கல்வி முதல் கழிப்பறை வரை எல்லா வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டார். அவற்றைக் கேட்டவர்களுக்கு மரணத்தை மட்டுமே அவர் பதிலாக அளித்தார். ''இந்தப் புவிக்கோளத்தில் ஜனநாயகம் என்பது எங்குமே இல்லை, லிபியா நீங்கலாக!'' என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரமாண்ட விழா ஒன்றில், 'அரசர்களுக்கு எல்லாம் அரசர்’ என்று தனக்குத் தானே பட்டம் சூடிக்கொண்டார் கடாஃபி. உண்மையாகவே தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டார். ஆங்கில நாட்காட்டி முறைக்கு மாற்றாகப் புதிய நாட்காட்டி முறையை அவர் உருவாக்கியதாகட்டும்;

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காண்டலீனா ரைஸைக் காதலிக்கிறேன் என்று சொன்னதாகட்டும்; ஐ.நா. சபையில் உரையாற்ற 15 நிமிஷம் அனுமதி வழங்கப் பட்டபோது 100 நிமிஷங்கள் இடைவிடாது பேசி வெறுப்பேற்றியதாகட்டும்... எல்லாமே அந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள்தான்.


மன்னர் இத்ரிஸிடம் இருந்து 1969-ல் ரத்தமில்லா ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்ததில் தொடங்கி, ஆட்சியில் இருந்த 42 ஆண்டுகளும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் கடாஃபி. ''அப்துல் நாசர் என் வழிகாட்டி. ஸ்டாலினும் ஹிட்லரும் என் முன்மாதிரிகள்!'' என்று சொன்னவர், தனது சித்தாந்தங்கள் அடங்கிய 'பச்சைப் புத்தகம்’ (கிரீன் புக்) உலகின் போக்கையே மாற்றும் என்று நம்பினார்.

உலகின் எண்ணெய் வளத்தில் இரண்டு சதவிகிதத்தைப் பெற்று இருக்கும் லிபியாவில் கிடைக்கும் எண்ணெய், முதல் தரமானது. குறைந்த சுத்திகரிப்புச் செலவுகளே போதும். மேலும், இன்னமும் ஆய்வை விரிவுபடுத்தினால், லிபியா வின் எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த முடியும். இதனால், எப்போதுமே லிபிய எண்ணெய்ச் சந்தையைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தன அமெரிக்க - ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள்.



ஆனால், கடாஃபியோ தேசிய எண்ணெய் நிறுவனம் மூலம் நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை லிபிய அரசு வசம் வைத்துக்கொண்டார். மேலும், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றாக சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எண்ணெய் வர்த்தக உறவை உருவாக்கிக்கொண்டார். 

தவிர, விடுதலைக்காகப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதை கடாஃபி வழக்கமாகக்கொண்டு இருந்ததால், மேற்கு உலகம் எப்போதும் அவரை வெறுப்புடனே பார்த்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் வெளிப்படையாகவே 'பைத்தியக்கார நாய்’ என்று கடாஃபியை வர்ணித்தார். அப்போது, ''அமெரிக்கா உலகின் அழிவு சக்தி. அமெரிக்கர்கள் என்னைப் பாராட்டினால்தான் நான் வெட்கப்பட வேண்டும்!'' என்று சொன்னார் கடாஃபி.


இன்றைய சூழலை அவர் ஓரளவுக்கு யூகித்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ''லிபியா கூடிய விரைவில் புதியதோர் அரசியல் யுகத்துக்குள் நுழையப் போகிறது...'' என்று சொன்ன அவர், நாட்டின் ராணுவம், உள்துறை, வெளியுறவுத் துறைகள் நீங்கலாக, அனைத்துத் துறைகளுக்கும் நேர்மையான தேர்தல் நடத்தத் திட்டமிட்டார்.

எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் வகையில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க இருந்தார். ஆனால் பதவி வெறி, அவர் தவறுகளில் இருந்து அவரை மீள்வதற்கான பாதைகளை வலுவாக அடைத்து விட்டது.

அரபு உலகப் புரட்சியின் தொடர்ச்சியாக லிபிய மக்களும் கிளர்ச்சியில் இறங்கியபோது, அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுடன் எண்ணெய் நிறுவனங்களும் பின்னின்று சவக் குழியைத் தோண்ட... பாதாளத்தில் வீழ்த்தப்பட்டார் கடாஃபி. 'லிபியாவின் சுதந்திரம்’ என்று கடாஃபியின் மரணத்தைக் கொண்டாடுகிறார்கள், லிபிய மக்கள். முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது.


அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அமைத்துள்ள பொம்மை அரசாங்கத்திடம் இருந்து உண்மையான சுதந்திரத்துக்காக இன்னொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் விரைவில் அவர்களுக்கு ஏற்படலாம்!

டிஸ்கி :


நன்றி ஜூனியர் விகடன்.

36 comments:

  1. அருமையான அலசல் அண்ணே

    ReplyDelete
  2. இலவச மின் வசதி, 25% பல்கலைகழக கல்வி வசதி, இலவச மருத்துவம் இவை எல்லாம் வழங்கியவருக்கு இந்த தண்டனை என்றால் ஜனாதிபத்தியம் என்ற பெயரில் நம் நாட்டை விற்க்கும் அரசியல் கொடியவர்களை என்ன சொல்வது! அமெரிக்காவுக்கு குல்லா போட்டிருந்தால் ராஜபக்சே மாதிரி சுகமாக வாழ்ந்திருப்பாரோ?

    ReplyDelete
  3. அருமையான அலசல்!அந்த கடைசி ஸ்டில் அசத்தல்!!!!!

    ReplyDelete
  4. லிபிய அதிபர் (முன்னாள்) கடாஃப்பியை பற்றிய அறிய தகவல்கள்.அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. கடைசியில் கொடுத்துள்ள மன்மோகன் சிங் படத்தை பார்த்து சிரிப்பு இன்னும் ஓயவில்லை. சூப்பர்.

    ReplyDelete
  6. சர்வாதிகாரம் இனி எங்கும் வேர்விட விடக்கூடாது...

    ReplyDelete
  7. யோவ் மனோ..
    இந்த கமாண்ட் என்ன டபுள் டபுளா கணக்கெடுக்குது...

    ReplyDelete
  8. மண்ணு மோகனுக்கும், கடாபிக்கும் என்னையா சம்பந்தம்?

    ReplyDelete
  9. சர்வாதிகாரத்தின்
    சர்வநாசம்......

    ReplyDelete
  10. மது இல்லை... நடனக் கூடங்கள் கிடையாது... வீதிகளில் கைகோத்த காதலர்களைப் பார்க்க முடியாது... பொது இடங்களில் பெண்கள் பேசுவதுகூட குற்றம்.///

    மக்கா, இந்த மாதிரியான ஊர்ல நீங்க இல்லையே??? டவுட்...

    ReplyDelete
  11. MAKKA, சுதந்திரம் இல்லையினா ரொம்ப கஷ்டம் தான்

    ReplyDelete
  12. 'அப்துல் நாசர் என் வழிகாட்டி. ஸ்டாலினும் ஹிட்லரும் என் முன்மாதிரிகள்!'' என்று சொன்னவர், தனது சித்தாந்தங்கள் அடங்கிய 'பச்சைப் புத்தகம்’ (கிரீன் புக்) உலகின் போக்கையே மாற்றும் என்று நம்பினார்.



    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. எத்தனை கொடுங்கோலர்கள் கோர முடிவை சந்தித்தாலும், மற்றவர்கள் அடங்க மாட்டேங்கறாங்களே?

    டிஸ்க்:

    உங்களுக்கு செம லொள்ளு.

    ReplyDelete
  14. மன்மோகன் பிரதமர் என்பதை விட
    தலைச்சிறந்த பொருளாதார நிபுணர்
    என்று கேலிப்படம் ஆகிப்போனதில் மிக வருத்தமே
    அதைவிட அதை பார்த்து சிரிப்பது :(

    ReplyDelete
  15. அண்ணே இந்த கதையெல்லாம் சரி இது என்ன...

    >>>>>>>

    tr: ஏண்டா வென்னைகளா இன்ட்லி ஓட்டு எல்லாம் யார் போடுரதாம் ராஸ்கல்...?? இன்றைய பதிவுல நான், ரமேஷ், பிரகாஷ் இந்த மூன்று ஓட்டுதான் விழுந்துருக்கு, மரியாதையா என்னை மாதிரி எல்லா ஓட்டையும் குத்து...உங்களுக்கு மட்டும் நான் எல்லா ஓட்டும் போடணுமோ...?

    >>>>>>>>

    மக்களே பாருங்க இந்த கொடுங்கோலனை ஹிஹி!

    ReplyDelete
  16. ////அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அமைத்துள்ள பொம்மை அரசாங்கத்திடம் இருந்து உண்மையான சுதந்திரத்துக்காக இன்னொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் விரைவில் அவர்களுக்கு ஏற்படலாம்!////

    இதான் பாஸ் உண்மை லிபியாவின் வளங்களை சுரண்ட கடாபியின் அழிவை மேற்குலகம் எதிர்பார்த்திருந்தது.....கடாபியே பதவி ஆசையால் அதை இலகுவாக்கிவிட்டார்...

    ReplyDelete
  17. விக்கியுலகம் said...
    அண்ணே இந்த கதையெல்லாம் சரி இது என்ன...

    >>>>>>>

    tr: ஏண்டா வென்னைகளா இன்ட்லி ஓட்டு எல்லாம் யார் போடுரதாம் ராஸ்கல்...?? இன்றைய பதிவுல நான், ரமேஷ், பிரகாஷ் இந்த மூன்று ஓட்டுதான் விழுந்துருக்கு, மரியாதையா என்னை மாதிரி எல்லா ஓட்டையும் குத்து...உங்களுக்கு மட்டும் நான் எல்லா ஓட்டும் போடணுமோ...?

    >>>>>>>>

    மக்களே பாருங்க இந்த கொடுங்கோலனை ஹிஹி!//

    பத்த வச்சிட்டியேடா பரட்டை.....

    ReplyDelete
  18. எப்படி பாராட்றதுண்ணே தெரியலண்ணே!

    ReplyDelete
  19. //அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காண்டலீனா ரைஸைக் காதலிக்கிறேன் என்று சொன்னதாகட்டும்//

    இது எப்போ..அரசியலில் ஆர்வம் இல்லாததால் நிறைய காமெடிகள் மிஸ் ஆகுதே...

    ReplyDelete
  20. நன்றாக எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  21. நல்ல பதிவு. காண்டலிசா ரைசை காதலித்தாரா? என்னத்தை சொல்ல? காதலுக்கு கண்ணில்லை என்பது இது தானோ?!!

    ReplyDelete
  22. ஆமா மன்னராட்சியலிருந்து கடாபியின் புரட்சி அரசு கடாபியிடமிருந்து இன்றைய மேற்குலக நலன்கள் சார்ந்த புரட்சி. இதிலிருந்து மீள சிலகாலங்களில் மீண்டும் ஒரு புரட்சி. அந்த நாட்டுமக்கள் பகுத்தறிவுடன்கூடிய சிந்தனைத் தெளிவுபெறும்வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

    ReplyDelete
  23. உலகின் கடைசி சர்வாதிகாரியும் கதம் !கதம்!!

    ReplyDelete
  24. நல்லதொரு அலசல். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  25. ஸலாம் சகோ.மனோ,
    கலக்கல் பதிவு..! கை கொடுங்க. செம ஸ்பீடா இருக்கு எழுதிய நடை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ரியல்ல்லி சூப்பர்ப்.

    ReplyDelete
  26. பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  27. நல்ல அலசல் நண்பரே

    ReplyDelete
  28. அடங்கொன்னியா... மனோ அரசியல்ல இறங்குனா கலக்குவாரு போல இருக்கே?

    ReplyDelete
  29. /////விக்கியுலகம் said... 39 40
    அண்ணே இந்த கதையெல்லாம் சரி இது என்ன...

    >>>>>>>

    tr: ஏண்டா வென்னைகளா இன்ட்லி ஓட்டு எல்லாம் யார் போடுரதாம் ராஸ்கல்...?? இன்றைய பதிவுல நான், ரமேஷ், பிரகாஷ் இந்த மூன்று ஓட்டுதான் விழுந்துருக்கு, மரியாதையா என்னை மாதிரி எல்லா ஓட்டையும் குத்து...உங்களுக்கு மட்டும் நான் எல்லா ஓட்டும் போடணுமோ...?

    >>>>>>>>

    மக்களே பாருங்க இந்த கொடுங்கோலனை ஹிஹி!
    //////

    அடப்பாவி..... இதுவேற நடக்குதா..... மைண்ட்ல வெச்சுக்கிறேன்......

    ReplyDelete
  30. கட்டை எடுத்தவன் கட்டையால் சாவான்...


    //'லிபியாவின் சுதந்திரம்’ என்று கடாஃபியின் மரணத்தைக் கொண்டாடுகிறார்கள், லிபிய மக்கள். முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது.//

    ம்.. இது வேதனை தான்

    ReplyDelete
  31. லிபிய மக்களுக்கு தற்போது விடிவு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!