நான் பொதுவாவே பகல்ல வெளியே போகும் போது கூலிங் கிளாஸ் யூஸ் பண்ணுவது உண்டு பத்து வருஷமாக, சிலர் அதை நான் ஸ்டைலுக்காக போட்டுருப்பதாக சொல்லி கடுப்பேத்துவார்கள், என் நெருங்கிய நண்பர்களுக்கும், என்னோடு வேலைபார்ப்பவர்களுக்கும் அதன் காரணம் நல்லாவே தெரியும்....
பன்னிகுட்டிக்கு சமர்ப்பணம்....
காரணம் நான் வேலை பார்க்கும் இடம், ஏசி அறை, ஆபீசிலும், ரூமிலும் ஏசி என டார்க்கான, கூலிங்கான இடத்தில் இருப்பதால் வெளியே வரும் நேரங்களில் கிளாஸ் கண்டிப்பாக தேவைப்படுகிறது, கூலிங் கிளாஸ் இல்லாவிட்டால் கண்கள் பலமாக கூசுகிறது, அனுபவபட்டவர்களுக்கு இது நல்லாவே தெரியும்.
எத்தனையோ விலை உயர்ந்த கூலிங்கிளாஸ் இருந்தாலும், என் உயிர் நண்பன் ஜவகர் என்ற ராஜா, எனக்கு ஒரு கிறிஸ்துமஸ் தினம் ஒரு கிளாஸ் கிப்ட் தந்தார் எட்டு வருஷம் முன்பு, அதைத்தான் இப்போதும் உபயோகித்து வருகிறேன், அந்த கிளாஸ் மீது எனக்கு அம்புட்டு காதல்...!!! எத்தனையோ நண்பர்கள் அதை என்னிடம் இருந்து வாங்கி கொள்ள பிரியப்பட்டும் கொடுக்காத ஒரு பொருள் இந்த கண்ணாடிதான்...!!!
நான் வெளிநாட்டில் இருந்து லீவில் வரும் போதெல்லாம், என் பால்ய சிநேகிதன் ராஜகுமாருடன்தான் ஊர் சுற்றுவது வழக்கம், அவனுக்கு போலியோ பாதிப்பால் இரண்டு கால்கள் செயல் இழந்து விட்டது சிறு குழந்தையிலேயே...[[நம்ம கெ ஆர் விஜயன் அவனை மீட் பண்ணி இருக்கார்]]
அவனைத்தான் என் பைக்கின் பின்புறம் அமர்த்தி ஊர் சுற்றுவேன், அவனும் வேறு யாருடனும் வெளியே போகமாட்டான், என்னுடன் மாத்திரமே வருவான், [[இப்போ அவன் த்ரீ வீலர் வச்சிருக்கான் அந்த வண்டியில்தான் ஊர் சுற்றல்]]
அப்படி இருக்கும் ஒருநாள், கன்னியாகுமரி எனக்கு அருகில் என்பதாலும் நண்பர்கள் பலர் அங்கே வேலைபார்ப்பதாலும் அங்கேதான் கிடந்து சுற்றுவோம், நான் எப்போதும் போல கூலிங்கிளாஸ் சகிதம் போவதை பார்த்த நண்பன் ராஜகுமார்....
கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் எதிரில் தேவி ஒயின்ஷாப்புக்கு எதிரே நானும் ராஜகுமாரும் டூரிஸ்டுகளை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்தோம், அப்போது வாட்ச், பெண்களுக்கான வளையல், கம்மல். செயின் இப்படி கையில் வைத்து விற்பனை செய்யும் பையன் ஒருவன், நாங்களும் சுற்றுலா பயணி என எண்ணியவாறே எங்களிடமும் வந்தான்.
ராஜகுமார், பையன் வைத்திருக்கும் கண்ணாடிகளை பார்த்தவன், மக்கா எனக்கும் ஒரு கண்ணாடி வாங்கித்தா என்றான், விலை கேட்டோம் நூறு ரூபாய் என்றான், பின்னே அவனிடம் உள்ளூர் பார்ட்டி நாங்கள் என சொல்லியும் நம்பாமல் பேரம் நடக்கும் போதே, பக்கத்து லாட்ஜில் மேனேஜராக இருக்கும் நண்பன் வந்தான், வந்து பார்த்துட்டு நூறு ரூவாயா..? இது உள்ளூர் ஆளுங்கடா'ன்னு சொன்னதும்...
பத்து ரூபாய்க்கு தந்துவிட்டு போனான், நாங்களும் குமரியை சுற்றி பார்த்து ச்சே ச்சீ கன்னியாகுமரியை சுற்றி பார்த்து மங்களம் பாடிகிட்டு ஊருக்கு வந்துட்டு இருந்தோம், எங்கள் ஊர் பக்கம் நாங்கள் பைக்கில் நெருங்கவே, எங்களுக்கு சொக்காரனும், நண்பனுமான முருகேசன் அண்ணன் வழியில் நின்று கைகாட்டவே நின்றோம்.
அவர் ராஜகுமாரின் கண்ணாடியை [[புதுசா]] அதிசயமாக பார்த்தவர், எங்கே அந்த கண்ணாடியை காட்டுடேய் என்று சொல்லி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தார், கண்ணில் போட்டும் சுற்றும் முற்றும் பார்த்தார், பிறகு கழட்டி ராஜகுமாரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்....""வெளிநாட்டு கண்ணாடின்னா சும்மாவா அட்டகாசமா இருக்குடேய்""ன்னு சொன்னாரே பார்க்கலாம்...!!!! எ யப்பா இப்பவும் சொல்லி சிரிப்போம்....!
சரி வீட்டு பக்கம் வந்ததும் என் அண்ணன் அங்கே பாலத்தில் உக்காந்து இருந்தான் நண்பர்களுடன், அவன் ராஜகுமார் கண்ணில் கண்ணாடியை பார்த்த அதிசயத்தில் சொன்ன டயலாக், எலேய், மனோ'தான் மானம் வெக்கம் இல்லாம காண்ணாடி போட்டுருக்காம்னா உனக்கு என்கேலேய் போச்சு மானம் வெக்கமெல்லாம்...?? நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
------------------------------------------------------------------------------------------
சென்னிமைலை சிபி செந்தில் குமாருக்கு சமர்ப்பணம்....
அமெரிக்கா எனக்கு பேரிக்கா எனக்கூறும் "விக்கி உலகம்" விக்கிக்கு சமர்ப்பணம்....
இது யாருக்கு சமர்ப்பணம்'ன்னு உங்கள் பார்வைக்கு விடுகிறேன்....
--------------------------------------------------------------------------------------------
விஜயன் ஆபீசர் ஒளிச்சி வச்சிருந்த பெல்ட்டை பார்த்துட்டாரோ...???
[[ மனதில் மலரும் அருவி ]]
ஹிஹி கருப்பு கண்ணாடி ரகசியம்!!
ReplyDeleteசமர்ப்பணங்கள் எல்லாம் வில்லங்கமாவே இருக்கே!
ReplyDeletehio first vadai pochey...:(
ReplyDeleteசமர்ப்பணம் எல்லாம் அமர்க்களம் அண்ணாச்சி!
ReplyDeleteமைந்தன் சிவா said... 1 2
ReplyDeleteஹிஹி கருப்பு கண்ணாடி ரகசியம்!!//
ரகசியம் ஒன்னுமில்லைய்யா ஒப்பன்தான்...
மைந்தன் சிவா said...
ReplyDeleteசமர்ப்பணங்கள் எல்லாம் வில்லங்கமாவே இருக்கே!//
வில்லங்கமா பார்த்து என்னை கலவர படுத்தாதீங்கப்பா...
த.ம.3
ReplyDeletesiva said...
ReplyDeletehio first vadai pochey...:(//
ஆஹா பயபுள்ளை வடைக்கு ஏங்குதே...!
சேட்டைக்காரன் said...
ReplyDeleteசமர்ப்பணம் எல்லாம் அமர்க்களம் அண்ணாச்சி!//
நன்றிலேய் தம்பி....!
சென்னை பித்தன் said...
ReplyDeleteத.ம.3//
ஹா ஹா ஹா ஹா நன்றி தல....
கண்ணாடி இதுக்குதான் போடுறியா சரி சரி நடத்து.
ReplyDeleteநல்ல ஸ்டைல் கூலிங்கிளாஸ் ம்ம்ம்ம்....
ReplyDeletekumarapuram anil said...
ReplyDeleteகண்ணாடி இதுக்குதான் போடுறியா சரி சரி நடத்து.//
சரிங்கன்னே...
kumarapuram anil said...
ReplyDeleteநல்ல ஸ்டைல் கூலிங்கிளாஸ் ம்ம்ம்ம்....//
நன்றி அண்ணே...
ஆஃபீஸர் படம் தினம் போடறீங்க.பெல்ட்டைக் கண்டா அவ்வளவு பயமா?
ReplyDeleteஆகா நேரு மாமா யாருக்கு பத்தவைக்றார் ?
ReplyDeleteவிஜய் க்கும் பன்னிகுட்டி மாமாவுக்கும் என்ன சமந்தம்
ராமராஜன் கலர் சட்டை உங்களுக்கு சூப்பரா இருக்கு அண்ணா
அந்த கூலிங் கிளாஸ் அருமை
அந்த கும்பிடு போடுபவர்
ReplyDeleteநெளிவு சுளிவு வளைவு தெரிந்தவர் போல
நம்ம லேப்டாப் மனோ அண்ணாச்சி போல :)
என்னமோ சொல்றீங்க, நம்பிட்டோம்... நீங்க கருப்பு கண்ணாடி போடுறதே பொண்ணுங்களை சைட் அடிக்கன்னு ஒரு சாரார் பேசிக்கிறாங்களே அது உண்மையா?
ReplyDeleteஅடங்கொன்னியா டேய் டேய் டேய் உன்னைய பத்தி எனக்கு தெரியும்... ஏன்டா புழுகுற...கொய்யால பிகர நீ பாக்கும்போது தெரியக்கூடாதுன்னு தானே இத போட்டு இருக்கே...என்னமா பீலா உட்ரான்யா...இதுக்கு ஒரு ஹிஸ்டரி வேற கொய்யால...ஆமா ஹிஸ்டரின்னா வரலாறுதானே...ஹிஹி!
ReplyDeleteசென்னை பித்தன் said... 29 30
ReplyDeleteஆஃபீஸர் படம் தினம் போடறீங்க.பெல்ட்டைக் கண்டா அவ்வளவு பயமா?//
பயம்னாலே எனக்கு பயம் அவ்வ்வ்வ்...
siva said...
ReplyDeleteஆகா நேரு மாமா யாருக்கு பத்தவைக்றார் ?//
அவர் பத்த வச்சதுனாலதானே பிரிட்டிஷ்'காரன் ஒடுனான் ஹே ஹே ஹே ஹே...
விஜய் க்கும் பன்னிகுட்டி மாமாவுக்கும் என்ன சமந்தம்//
அவருடைய பின்னூட்டத்துக்கு வெயிட் பண்ணுங்க...
ராமராஜன் கலர் சட்டை உங்களுக்கு சூப்பரா இருக்கு அண்ணா
அந்த கூலிங் கிளாஸ் அருமை//
ஹா ஹா ஹா ஹா.....
siva said...
ReplyDeleteஅந்த கும்பிடு போடுபவர்
நெளிவு சுளிவு வளைவு தெரிந்தவர் போல
நம்ம லேப்டாப் மனோ அண்ணாச்சி போல //
அவ்வ்வ்வ் முடியல....
suryajeeva said...
ReplyDeleteஎன்னமோ சொல்றீங்க, நம்பிட்டோம்... நீங்க கருப்பு கண்ணாடி போடுறதே பொண்ணுங்களை சைட் அடிக்கன்னு ஒரு சாரார் பேசிக்கிறாங்களே அது உண்மையா?//
ஆஹா....திரைமறைவுல இப்பிடிஎல்லாமா பேசிக்குறாங்க..? அடடடா...
விக்கியுலகம் said...
ReplyDeleteஅடங்கொன்னியா டேய் டேய் டேய் உன்னைய பத்தி எனக்கு தெரியும்... ஏன்டா புழுகுற...கொய்யால பிகர நீ பாக்கும்போது தெரியக்கூடாதுன்னு தானே இத போட்டு இருக்கே...என்னமா பீலா உட்ரான்யா...இதுக்கு ஒரு ஹிஸ்டரி வேற கொய்யால...ஆமா ஹிஸ்டரின்னா வரலாறுதானே...ஹிஹி!//
ராஸ்கல், அவன் அனுபவத்தை சொல்றான், மக்களே நம்பாதீங்க...
கண்ணாடியால் மானம் தொலைத்த பதிவர்!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
சமர்ப்பனங்கள் கலக்கல்!
அண்ணே, எப்பவும் இப்பிடிதானா, இல்ல இப்பிடித்தான் எப்பவுமா..???
ReplyDeleteஹா ஹா ஹா வெளிநாட்டு கண்ணாடின்னா, வெளிநாட்டு கண்ணாடிதான் சூப்பர் அண்ணே...!!!
ReplyDeleteஅன்புநிறை நண்பரே...
ReplyDeleteகடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...
கூலிங்க்ளாஸ் அணிவது ஒரு தனி சுகம் தான்...
சமர்ப்பணங்கள் எல்லாம் சும்மா அசத்துது மக்களே..
ஹா ஹா நான் கூட கண்ணாடி போட்டுக் கிட்டா யாரைப் பார்க்கிறோம்னு தெரியாம பார்க்கலாம்னு நினைத்தேன்
ReplyDeleteஹா ஹா விளக்கம் அருமை
கோகுல் said... 49 50
ReplyDeleteகண்ணாடியால் மானம் தொலைத்த பதிவர்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
சமர்ப்பனங்கள் கலக்கல்!//
அடடா டைட்டில் நல்லா இருக்கே...
துரைராஜ் said...
ReplyDeleteஅண்ணே, எப்பவும் இப்பிடிதானா, இல்ல இப்பிடித்தான் எப்பவுமா..???//
ரெண்டும்தான் ஹி ஹி...
துரைராஜ் said...
ReplyDeleteஹா ஹா ஹா வெளிநாட்டு கண்ணாடின்னா, வெளிநாட்டு கண்ணாடிதான் சூப்பர் அண்ணே...!!!//
ஹா ஹா ஹா ஹா பாவம் முருகேசன் அண்ணன்....
மகேந்திரன் said...
ReplyDeleteஅன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...
கூலிங்க்ளாஸ் அணிவது ஒரு தனி சுகம் தான்...
சமர்ப்பணங்கள் எல்லாம் சும்மா அசத்துது மக்களே..//
நோ பிராப்ளம்....
நன்றி மக்கா....
ஐயா கருப்பு கண்ணாடி சூப்பர்
ReplyDeleteM.R said...
ReplyDeleteஹா ஹா நான் கூட கண்ணாடி போட்டுக் கிட்டா யாரைப் பார்க்கிறோம்னு தெரியாம பார்க்கலாம்னு நினைத்தேன்
ஹா ஹா விளக்கம் அருமை//
அது எம்ஜியார், மூனா கானா ஃபார்முலா...அவிங்க யாரை பார்க்குராங்கன்னு நமக்கு தெரியாது...!!!
அண்ணன் இன்னிக்கு கண்ணாடிய வெச்சே மணியடிச்சிருக்காரே.....
ReplyDelete//////கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் எதிரில் தேவி ஒயின்ஷாப்புக்கு எதிரே நானும் ராஜகுமாரும் டூரிஸ்டுகளை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்தோம், ///////
ReplyDeleteஒயின்ஷாப் எதிர வேடிக்கை?
கண்ணாடி ரகசியம்...
ReplyDeleteநகைச்சுவையாய்...
சமர்ப்பணங்கள் நல்லாயிருக்கு.
அய்யய்யோ அந்த போட்டோவ வேற டாகுடர் கண்ணுல காட்டிட்டீங்களா? ஷங்கரு பாவம்யா..... நண்பன் படத்துல அந்த சீனை வெக்க சொல்லி இனி எஸ்.ஏ.சி டார்ச்சர் பண்ணுவாரே?
ReplyDeleteஆபிசர் உண்மையிலேயே பெல்ட்டை உருவிட்டாரு போல.....?
ReplyDelete8 வருஷமா அந்தக்கண்ணடிய வைச்சிருக்கீங்களா?
ReplyDelete//வேலை பார்க்கும் இடம், ஏசி அறை, ஆபீசிலும், ரூமிலும் ஏசி என டார்க்கான, கூலிங்கான இடத்தில் இருப்பதால் வெளியே வரும் நேரங்களில் கிளாஸ் கண்டிப்பாக தேவைப்படுகிறது, கூலிங் கிளாஸ் இல்லாவிட்டால் கண்கள் பலமாக கூசுகிறது, அனுபவபட்டவர்களுக்கு இது நல்லாவே தெரியும்.///
ReplyDeleteஉள்ளேன் ஐயா..
ஓஹோ.. அதான் அந்த கண்ணாடிய கழட்ட மாட்டேங்கிறிளா.. :))
சின்ன வயசு கண்ணாடி ஞாபகத்தை வரவச்சிட்டீங்களே..
வைரை சதிஷ் said... 67 68
ReplyDeleteஐயா கருப்பு கண்ணாடி சூப்பர்//
ஹா ஹா ஹா ஹா நன்றிங்க்னோ...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணன் இன்னிக்கு கண்ணாடிய வெச்சே மணியடிச்சிருக்காரே.....//
சரக்கு வத்தி போச்சோ ஹி ஹி...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் எதிரில் தேவி ஒயின்ஷாப்புக்கு எதிரே நானும் ராஜகுமாரும் டூரிஸ்டுகளை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்தோம், ///////
ஒயின்ஷாப் எதிர வேடிக்கை?//
பக்கார்டி கிடைக்கலை ஒய்...
சே.குமார் said...
ReplyDeleteகண்ணாடி ரகசியம்...
நகைச்சுவையாய்...
சமர்ப்பணங்கள் நல்லாயிருக்கு.//
குமார், உங்க பிளாக் ஒப்பன் ஆகமாட்டேங்குது நாலஞ்சி நாளாக, செக் பண்ணுங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅய்யய்யோ அந்த போட்டோவ வேற டாகுடர் கண்ணுல காட்டிட்டீங்களா? ஷங்கரு பாவம்யா..... நண்பன் படத்துல அந்த சீனை வெக்க சொல்லி இனி எஸ்.ஏ.சி டார்ச்சர் பண்ணுவாரே?//
ஷங்கருக்கு தலைவேதனை ஆ ஆ ஆ ஆரம்பம்....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆபிசர் உண்மையிலேயே பெல்ட்டை உருவிட்டாரு போல.....?//
அதான் விஜயன் பேய் முழி முழிக்கிறார் ஹா ஹா ஹா ஹா...
RAMVI said...
ReplyDelete8 வருஷமா அந்தக்கண்ணடிய வைச்சிருக்கீங்களா?//
ஆமாம் ராம்வி...!!!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDelete//வேலை பார்க்கும் இடம், ஏசி அறை, ஆபீசிலும், ரூமிலும் ஏசி என டார்க்கான, கூலிங்கான இடத்தில் இருப்பதால் வெளியே வரும் நேரங்களில் கிளாஸ் கண்டிப்பாக தேவைப்படுகிறது, கூலிங் கிளாஸ் இல்லாவிட்டால் கண்கள் பலமாக கூசுகிறது, அனுபவபட்டவர்களுக்கு இது நல்லாவே தெரியும்.///
உள்ளேன் ஐயா..
ஓஹோ.. அதான் அந்த கண்ணாடிய கழட்ட மாட்டேங்கிறிளா.. :))
சின்ன வயசு கண்ணாடி ஞாபகத்தை வரவச்சிட்டீங்களே..//
என்னாது இது சின்னபுள்ளதனமா....அவ்வ்வ்வ் நாப்பது தினார் கண்ணாடி ஒய் இது ஹி ஹி....
நன்பேண்டா..
ReplyDeleteநண்பன் குடுத்த கண்ணாடிக்கு ஒரு வரலாறு.. அசத்தல் மக்கா..
ஹா..ஹா...
ReplyDeleteஇது கண்ணாடியின் கதை நல்லா இருக்கு அதுக்கு கீழே இருக்கிற சமர்ப்பணம் விஷயம் சூப்பர் ஹா ஹா ஹா
ReplyDeleteகருப்புக் கண்ணாடி ரகசியத்தப் போட்டுடைத்த மனோ வாழ்க!!!டாகுடர் முடிஞ்சார் போல???????
ReplyDeleteஹா ஹா ஹா! சூப்பர்! :-)
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said... 101 102
ReplyDeleteநன்பேண்டா..
நண்பன் குடுத்த கண்ணாடிக்கு ஒரு வரலாறு.. அசத்தல் மக்கா..//
ஹா ஹா ஹா ஹா
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஹா..ஹா...//
ஹே ஹே ஹே ஹே...
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteஇது கண்ணாடியின் கதை நல்லா இருக்கு அதுக்கு கீழே இருக்கிற சமர்ப்பணம் விஷயம் சூப்பர் ஹா ஹா ஹா//
பன்னிகுட்டி என்னா பொங்கு பொங்கி இருக்கார் பாருங்க ஹி ஹி...
Yoga.s.FR said...
ReplyDeleteகருப்புக் கண்ணாடி ரகசியத்தப் போட்டுடைத்த மனோ வாழ்க!!!டாகுடர் முடிஞ்சார் போல???????//
டாகுடர் பன்னிகுட்டிகிட்டே படுற பாடு இருக்கே முடியல...
ஜீ... said...
ReplyDeleteஹா ஹா ஹா! சூப்பர்! :-)//
ஹா ஹா ஹா ஹா நன்றி...
நல்ல கூத்து !
ReplyDeleteகமென்ட் ஃபார்ம் கூட கூலிங் கிளாஸ் கண்ணாடி மாதிரியே இருக்கு ...
ReplyDeletekoodal bala said... 121 122
ReplyDeleteநல்ல கூத்து !//
என்னய்யா பதிவெல்லாம் எழுதுறது இல்லையா...ஆளையே காணோம்...???
koodal bala said...
ReplyDeleteகமென்ட் ஃபார்ம் கூட கூலிங் கிளாஸ் கண்ணாடி மாதிரியே இருக்கு ...//
ஹா ஹா ஹா ஹா...
கூடங்குளம் நிலவரம் இப்போ எப்பிடி இருக்குய்யா...???
எனக்கு ஒரு கண்ணாடி பார்சல்
ReplyDeleteஉங்க கண்ணாடி பின்னாடி இப்படி ஒரு ப்ளாஷ்பேக் ஆஆஆஆ... இனிமே யாராவது அங்கிளின் கண்ணாடி பற்றிக் கேட்டீங்க தொலைச்சுப் போடுவன். சாக்கிரதை!!!
ReplyDeletejaisankar jaganathan said... 129 130
ReplyDeleteஎனக்கு ஒரு கண்ணாடி பார்சல்//
கண்ணாடியேதான் வேணுமா....?
vanathy said...
ReplyDeleteஉங்க கண்ணாடி பின்னாடி இப்படி ஒரு ப்ளாஷ்பேக் ஆஆஆஆ...//
என்னா ஆ ஆ ஆ ஆ...?? ஈ போயிரப்போகுது வாயில ஹே ஹே ஹே ஹே...
இனிமே யாராவது அங்கிளின் கண்ணாடி பற்றிக் கேட்டீங்க தொலைச்சுப் போடுவன். சாக்கிரதை!!!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
This comment has been removed by the author.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... 137 138
ReplyDeleteமனதில் மலரும் அருவி//
அன்றைக்கு ஆபீசர் தந்த மீன்கறி சாப்பாடு இப்பவும் கையில் மணக்குது மேடம், அவர் அன்பு அப்படி...!!!!
எனக்கும் ஆதங்கம் தலீவா ஏன் தான் கூலிங் கிளாஸ் போட்டால் ஸ்டைல் என்று சொல்லி கடுப்பேத்துறாங்க மைலாட்...அதுவும் நானு ஸ்டையில் நாராயணனாக இருப்பதால் கேக்கவே வேண்டாம்
ReplyDeleteகண்ணாடிக்கு காரணங்கள் சூப்பரு. அப்புறம் அந்த கண்ணாடி படங்கள் உங்கள் கைவண்ணம் போல தெரியுதே
ReplyDeleteஸ்டைல் நாராயணன் said...
ReplyDeleteஎனக்கும் ஆதங்கம் தலீவா ஏன் தான் கூலிங் கிளாஸ் போட்டால் ஸ்டைல் என்று சொல்லி கடுப்பேத்துறாங்க மைலாட்...அதுவும் நானு ஸ்டையில் நாராயணனாக இருப்பதால் கேக்கவே வேண்டாம்//
ஹா ஹா ஹா ஹா சரிதான் போங்க...
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகண்ணாடிக்கு காரணங்கள் சூப்பரு. அப்புறம் அந்த கண்ணாடி படங்கள் உங்கள் கைவண்ணம் போல தெரியுதே//
ஆமாய்யா நான் எடுத்ததுதான்...
FOOD said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆபிசர் உண்மையிலேயே பெல்ட்டை உருவிட்டாரு போல.....?//
ஆமாங்க, எதிர்ல ஒரு கை தெரியுதா? அவர் பண்ணின தப்புக்குத்தான் பெல்டை உருவ வேண்டியதா போச்சு.ஆஹா, மனோவாத்தான் வந்து மாட்டிகிட்டாரா!ஹா ஹா ஹா.//
ஹே ஹே ஹே ஹே....
FOOD said...
ReplyDeleteஇன்று நாம் இருவருமே கன்னியாகுமரியில் சந்தித்திருக்கிறோம். என்னே ஒரு ஒற்றுமை!//
ஹா ஹா ஹா ஹா விஜயன் ரூம் போட்டு அழுதுட்டு இருக்காராம்...
FOOD said...
ReplyDeleteகருப்பு கண்ணாடிக்குப் பின்னே ஒரு காவியமே படைச்சிருவீங்க போல இருக்கே!//
ஹா ஹா ஹா ஹா என்னாத்தை சொல்ல ஆபீசர்....
லேப்டாப் கதை மாதிரி இல்லாம என்ன தம்பி கண்ணாடி கதைய இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்ட.....
ReplyDeleteகண்ணாடி.... ரகசியம் வெளியே வந்துருச்சே....
ReplyDeleteகூலான பதிவு ...
ReplyDelete