Tuesday, October 25, 2011

வாங்க கேசியோ கத்துக்கலாம்...!!!

நான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[!]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன வயசுலே இருந்தே எனக்கு கீபோர்ட் படிக்கணும்னு தீராத ஆசை, காதல். 


இது எனது கீபோர்ட்.

சர்ச்'ல கீபோர்ட் பிளே பண்ணுரவிங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும், நமக்கும் இப்படி முடியலையேன்னு, கல்யாணமாகி நான் பஹ்ரைன் வரும் வரை அது கைகூடவில்லை, பஹ்ரைன் வந்தும் சர்ச் போகும் போது அங்கே கீபோர்ட் வாசிப்பவர்களை பார்க்கும் போது ஆசையாக இருக்கும்.

என் மனைவியின் அண்ணன் சபை போதகராக இருப்பதால், அவர் கற்றுக்கொள்ள கிளம்பினார், மியூசிக் மாஸ்டரிடம், மாதம் இருபது தினார் மாசத்துக்கு நான்குநாள் டியூஷன். ஒரு கீபோர்ட் சொந்தமாக வாங்கினார். கிளாஸ் ஆரம்பம்.

யமகா கீபோர்ட் வந்ததும், எனக்கும் படிக்க ஆசை வர, பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை, மச்சான் சொன்னார் கவலைப்படாதே நான் உனக்கு சொல்லி தருகிறேன்னு சொன்னதும் அல்லாமல், அவர் அங்கே படித்து விட்டு வருவதை எனக்கு சொல்லித்தர ஆரம்பித்தார்.


ஒன் டூ த்ரீஃபோர் என சொல்லி சரிகம பதனிச படிக்க ஆரம்பித்தேன், முதலில் வலது கைமட்டுமே பிராக்டிஸ் நடந்தது, இப்படியே ஒரு ரெண்டு வருஷம் வலது கை பிராக்டிஸ் செய்தும் எந்தபலனும் இல்லை. ஒரு முன்னேற்றமும் இல்லை, நான் வலது கையால் வாசிப்பேன அல்லாமல் சர்ச்'ல பிளே பண்ணத்தெரியாது...?

பிறகு அதே பிராக்டிஸ் இடது கைக்கு மாறியது, என் மச்சான் எவ்வளவோ முயற்சி செய்தும் [[மூனுவருஷம்]] இடது கை பிராக்டிஸ் செய்யமுடியாமல் போயிற்று, அவர் ஆர்வம காட்டாமல் விட்டு விட்டார், ஆனால் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு டிரம்ஸ் கற்று கொடுக்கவே ஐயா டிரம்ஸ்'ல இன்ட்ரெஸ் எடுத்து போகவே நான் அனாதையானேன்.


ஆனாலும் கற்றுக்கொள்ளும் வெறி அடங்கவில்லை, எப்போதும் கீபோர்ட் என் ரூமில் வைத்திருப்பேன், நான் என் மச்சானைவிட நல்லா வாசிப்பது தெரிந்துகொண்டு என் மச்சானுக்கு கடுப்பு வேற ஹி ஹி அதுக்கு நான் என்ன செய்ய... அப்புறம் சும்மா தெரிஞ்சதை வைத்து இசை வெள்ளத்தில் மிதப்பேன்.

இப்படி இருக்க எங்கள் சர்ச்சில் ஒரு அண்ணன் சொன்னார் என் ஆர்வத்தை பார்த்துட்டு, கன்னியாகுமரி'யில இருந்து ஒரு ஆள் புதிதாக பஹ்ரைன் வந்து இருக்கிறார், அவர் பார்டைமாக கீ போர்ட் கற்று தருகிறார் மாசம் பத்து தினார்தான் பீஸ் வாங்குறார்னு சொன்னதும் நானும் மச்சானும் அவரை போயி பார்த்தோம். ஓகே சொல்லிவிட்டார்.


அடுத்து அவர் வந்து என்னெல்லாம் படிச்சீங்க சொல்லுங்கன்னு கேட்டுட்டு, அவரும் சொல்லி தந்தார் ஒரு வருஷம். ஆக நான்கு வருஷம் ஆச்சு ஒரு முன்னேற்றமும் இல்லை, அதையும் மச்சான் நிப்பாட்டிட்டாரு.

எனக்கு தாகம் அடங்கவில்லை எப்பிடியாவது கற்று கொள்ளனும்னு, இப்பிடி ஒரு ஆறுமாசம் கழிஞ்சது, மறுபடியும் இதே மாதிரி ஒருவர் கிடைச்சார் அவரும் கன்னியாகுமரிதான், அவர் வந்து சொன்ன முதல் வார்த்தை, முதலில் படித்தவகளை முற்றிலும் மறந்து விடுங்கள் நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் எனக்கூறினார்.


என் மச்சான் கொஞ்சம் மேதாவி'தனம் காட்டினது அவருக்கு பிடிக்கவில்லை, அவரும் வாராவாரம் வந்து நோட்ஸ் குடுத்து டியூசன் எடுப்பார், அப்படி இருக்க ஒருநாள், சும்மா ஊர்பேச்சு வரும் போது எனக்கு எந்த ஊர்னு கேட்டார், என் ஊர் பெயரை கேட்டதும், எங்க அக்காளை அங்கேதான் கட்டி கொடுத்திருக்கொம்னு சொன்னார்.

பெயர் விலாசம் கேட்கும்போது, எங்க பெரியப்பா மகனுக்குதான் கட்டிகுடுத்துருப்பது தெரிஞ்சது, ஆக சொந்தக்காரனாகி விட்டார், எங்கே எனக்கு சீக்கிரமா கத்து தந்துருவாறோன்னு நினைச்ச மச்சான், கொஞ்சம் தில்லுமுல்லு காட்ட, இவருக்கு கோபம், வெளிகாட்டி கொள்ளவில்லை....


அப்புறம் மச்சான் நிறுத்திகொண்டார் காரணம் பிராக்டிஸ்'ன் கடுமை அப்பிடி, மாஸ்டர் பெயர் ராபர்ட், எனக்கு வாராவாரம் என் ரூமிற்கே வந்து டியூஷன் எடுத்தார், பனிரெண்டு மணிநேரம் வேலை முடிந்தும் நேரத்தை பொருட்படுத்தாமல், பிராக்டிஸ் செய்யசொன்னார்....

நிற்க : கேசியோ படிப்பவர்கள் தினமும் ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பிராக்டிஸ் செய்யவேண்டும் [[நான் என் பெட் அருகில் எப்போதும் தயார் நிலையில் வைத்து இருப்பேன் எப்பல்லாம் முழிப்பு வருதோ அப்பெல்லாம் பிராக்டிஸ் செய்வேன்]]


நிற்க : நாம் எம்புட்டு பிராக்டிஸ் செய்யுறோமோ அவ்வளவு சீக்கிரம் கேசியோ படிக்கலாம் "மாஸ்டர் நல்லவராக" இருந்தால்....

மிகவும் கஷ்டமான நோட்ஸ் தரும்போது சுனங்குவேன், சுனங்கும் அந்த இடத்தில்தான் அடுத்த ஸ்டெப்பே இருக்குன்னு உற்சாகப்படுத்துவார், இப்போ இன்னொரு விஷயம் என்னான்னா ராபர்ட் எனக்கு கேசியோ கற்று தருவது ஊரிலும், எங்கள் சபையிலும் எல்லாருக்கும் தெரிந்து விட்டதால், மாஸ்டருக்கு எப்பிடியும் எனக்கு கற்று தந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கிட்டார் [[பாவம் ஹி ஹி]]


நிற்க : இப்படி கஷ்டமான நோட்ஸ் பிராக்டிஸ் வரும்போது இடையில் படிக்காமல் பலர் ஓடி போகிறார்கள் என்று மாஸ்டர் வருத்தப்படுவார்.  ஆக எங்கே நமக்கு கஷ்டமான நோட்ஸ் பிராக்டிஸ்'க்கு வருதோ அந்த இடத்தில் அழகான இசையின் மாற்றமும் இருக்கும், அந்த மாற்றத்தின் ருசியை அறிந்து விட்டால், வாசிக்க வெறியே வந்துரும் இன்னும் இன்னும் ஆவலை தூண்டும்.

ராத்திரி பகலாக விழுந்து விழுந்து பிராக்டிஸ் செய்தேன், சொல்லமறந்துட்டேன், இந்த மாஸ்டர் ஆரம்பத்துலையே இரண்டு கைகளுக்குமே பிராக்டிஸ் கொடுத்தது ஆச்சர்யம் அதை பின்னால் சொல்கிறேன்.


ஒரே வருஷம்தான் வெரிகுட் என சொல்லி அவர் பாட நான் கேசியோ [[கீபோர்ட்]] வாசிக்க அமர்களமாக ஆசீர்வதித்து, இனி போயி சர்ச்ல தைரியமா பிளே பண்ணுன்னு சொன்னார், 

அடுத்தவாரமே சர்ச்சில் எனது அரேங்கேற்றம், நண்பர்கள், சர்ச் மெம்பர்கள் போதகர், சொந்தங்கள் எல்லாம் வாயடச்சி போனார்கள், எப்பிடிய்யா படிச்சே எனக்கும் சொல்லிதான்னு நச்சரிப்பு வேற, இதுல என் மச்சானுக்குதான் காதுல புகை, காசு குடுத்து படிக்கப்போனவரு அவரு, ஆனால் படிச்சதோ நான் ஹி ஹி...

கீபோர்ட் வாசிப்பது ஒன்லி ஃபோர் சர்ச்'க்கு மட்டும்தான் என்பது நான் கொண்ட உறுதி, இங்கே நடன பார்களில் கீபோர்ட் வாசித்தாலே செம காசு, இருந்தாலும் மனம் கொண்ட வைராக்கியம் அதேபோல் இப்பவும் இருக்கிறது.


சரி இனி விஷயத்துக்கு வருவோம், இந்த கீபோர்ட் கத்துகுடுக்கும் மாஸ்டர்'கள் சிலர் வெறும் காசுக்காக காலம் தாழ்த்துகிரார்கள், ராபர்ட் போன்ற மாஸ்டர்கள் காசுக்காக அல்ல, உண்மையான ஈடுபாட்டுடன் செய்கிறார்கள், பாருங்கள் என் மச்சான் மூணு வருஷம் படித்தும் பொது இடத்துல வாசிக்க இயலவில்லை, முதலிலேயே இரண்டு கையிலும் பிராக்டிஸ் கொடுக்கலாமே அதை பணத்துக்காக அவர்கள் செய்வதில்லை..!!!

அடுத்த மாஸ்டர், அவரும் பணத்துக்காக சரியாக சொல்லிகுடுக்கவில்லை...!!!!

நிற்க : நீங்கள் கற்றுகொள்ளப்போகும் மாஸ்டர், பணத்துக்காக செயல் படுகிறாரா, அற்பணிப்புடன் செயல் படுகிறாரா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.


நான் எப்போதும் கீபோர்ட் ரூமில் வைத்திருப்பேன், ஊருக்கு கொண்டு வந்தாலும் திரும்ப கொண்டு போயிருவேன், நன்கு படித்த பின்னரும் நாள்தோறும், பயிற்சி செய்வேன் காரணம் ரெண்டுநாள் கேப் வந்துச்சுன்னா விரல்கள் இறுக்கமாகி விடும், அடுத்து கீபோர்ட் வாசிப்பவர் நகங்களே வைக்கக்கூடாது, காரணம் உணர்வுகள் விரலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது, ஏ ஆர் ரஹ்மானும் மற்ற இசை அமைப்பாளர்களும், கண்ணை மூடிக்கொண்டு கீபோர்ட் வாசிப்பதை கவனித்தீர்களா..?? அது அந்த உணர்வுதான்...!!! 


போனதடவைக்கும் முந்தின முறை லீவில் போனபோது என் மகனுக்கும் இரண்டு கைகளிலும் பிராக்டிஸ் மற்றும் சிலபாடல்களும் சொல்லிகுடுத்துட்டு, அவனை டியூஷன் அனுப்ப சொல்லிட்டு வந்துட்டேன், முதல்நாள் கிளாஸ் போனவனிடம் மாஸ்டர் கேட்டிருக்கிறார், உனக்கு கீபோர்ட் பற்றி ஏதாவது அடிப்படை தெரியுமான்னு கேட்க, இவன் எனக்கு கொஞ்சம் பாடல்கள் பிளே பண்ண தெரியும்னு சொல்ல...

சரி பிளே பண்ணு பார்ப்போம்னு சொல்லவும், என்மகன் சூப்பரா வாயால் பாடி "இரண்டு கையால்" பிளே செய்ய, வாத்தியாருக்கு ஆச்சர்யம், இது யார் சொல்லி தந்தார்கள் என கேட்க இவன் எங்க அப்பா சொல்லி தந்தார்கள் என சொல்ல, அப்போ உங்க அப்பாவுக்கு கீபோர்ட் தெரியுமான்னு கேட்டுருக்கிறார். ஆமாம் எங்க அப்பாவுக்கு தெரியும் சர்ச்ல அப்பாதான் ஆர்கன் பிளேயர்னு சொல்ல, ஒரு வருஷத்துக்கு மேலே உள்ள நோட்ஸ் குடுத்து படிக்க சொல்லி இருக்கிறார். என்ன இசை தெரிஞ்சவன் இருக்கான்னு தெரிஞ்சா இவங்க பணம் பப்பு வேகாதுன்னு இவர்களுக்கு நன்றாக தெரியும்.


ஆறேமாசத்தில் என் மகன் படித்து முடித்துவிட்டான், இப்போ சர்ச்ல சார்தான் கீபோர்ட் பிளேயர், நான் ஊருக்கோ, மும்பையிலோ சர்ச் போனால், கீபோர்ட் வாசிப்பவர்கள் நெர்வஸ் ஆகிவிடுவார்கள், இசையில் சின்ன தப்பு நடந்தாலும் இசை படித்தவர்களுக்கு கோபம் வந்துரும், எங்கே தப்பு செய்கிறார்கள், எந்தப்பாட்டுக்கு எந்த ஸ்கேல் போடணும்னு, நமக்கு தெரியும்...

இசை தெரியாதங்களுக்கு தப்பை உணரமுடியாது, மும்பையில் சர்ச் உள்ளே நுழைந்ததுமே, மியூசிக் வாசிக்கும் தம்பிகள் தங்களுக்குள்ளே கிசுகிசுப்பார்களாம் நாஞ்சில்மனோ வந்தாச்சுடோன்னு, இதை என் மகன் சொல்லி சிரிப்பான், பசங்க எல்லாரும் பேஸ்புக், டுவிட்டர், பஸ், வலைதளங்களில் இருப்பதால் அவர்களுக்கும் நான் நாஞ்சில்மனோ'தான்....!!!


இன்ட்ரெஸ்ட் இருக்கா துணிஞ்சி போயி படியுங்க, ரொம்ப ஈசிதான், நல்லா பிராக்டிஸ் பண்ணுங்க, படிச்சிட்டீங்கன்னா அதன் சுவையே வேறு, ஊரில் இருக்கும் போது எங்கள் வீட்டில் இசை மழைதான், என் மகன் கீபோர்ட் வாசிக்க நாங்கள் பாடல்களை பாட'ன்னு செமையா இருக்கும், என் மகளும் படிக்கவேண்டும் என்றாள், சின்ன பொண்ணு கைவிரல் இன்னும் கொஞ்சம் வளரனும், அடுத்தமுறை லீவுக்கு போகும் போது என் வீட்டில் மூனாவதாக ஒரு இசையாளினி ரெடியாக்கப்படுவாள்.

டிஸ்கி : மேலே சொல்லியுள்ளது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

டிஸ்கி : விக்கி'க்கு வார்னிங், இன்ட்லி இன்ட்லி இன்ட்லி ஹி ஹி....

"மனோ"தத்துவம் : வாயை அகலமாக்கினால் அடி உறுதி....!!!!






28 comments:

  1. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்ப உறவுகளிற்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    நேசமுடன் அம்பலத்தார்.

    ReplyDelete
  2. கீய் போர்டு வாசிப்பது தனி கலை அதுவும் உமக்கு கை வந்த கலையா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கீபோர்ட் வாசிப்பவர் நகங்களே வைக்கக்கூடாது, காரணம் உணர்வுகள் விரலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது, ஏ ஆர் ரஹ்மானும் மற்ற இசை அமைப்பாளர்களும், கண்ணை மூடிக்கொண்டு கீபோர்ட் வாசிப்பதை கவனித்தீர்களா..?? அது அந்த உணர்வுதான்...!!! //

    very nice & interesting .
    Thank you for sharing.

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்களது குடும்ப உறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பல்கலை வித்தகராக இருப்பீர்கள் போலிருக்கே! ஜுனியர் மனோ இப்பவே கலக்கறாரா?

    தீபாவளி வாழ்த்து!

    ReplyDelete
  6. முதல் இசை
    முதல் ஸ்வரம்
    முதல் ராகம்
    முதல் தாளம்
    முதல் பல்லவி
    முதல் சரணம்
    ஸ்ஸ்ஸ் அப்பாடி
    அண்ணே உங்கள மாதிரி முடியல அண்ணே

    ReplyDelete
  7. இனிய பகிர்வு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நீங்கள் வாசித்த ஆடியோவும் இங்கே போட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. டேய் இந்தப்பதிவை நான் படிச்சிட்டு சாயந்தரமா பதில் போட்டா போறுமா..!

    ReplyDelete
  11. என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
    உறவினர்களிற்கும் !......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

    ReplyDelete
  12. உண்மையில் இசையைக் கற்றுக்கொள்ள நல்ல கலையை ஊக்கிவிக்கும் ஆசான் இருந்தால் இலகுவில் முன்னேறலாம் .
    மனோவின் இன்னொரு முகத்தை இந்தப்பதிவில் கண்டு கொடேன்.

    ReplyDelete
  13. ஜுனியர் மனோ இப்பவே கலக்கறாரா?


    தங்களுக்கும் தங்களது குடும்ப உறவுகளிற்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. உங்களது திறமைகளை அறிந்து மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  15. நானும் கீபோர்டு வாசிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டு 3 மாஸ்டர் மாத்துனேன்.... 4-5 பாட்டு கத்துக்கிட்டு விட்டுட்டேன்... இனி தூசிதட்டிட வேண்டியதுதாம்ல.....

    ReplyDelete
  16. வேலைல இருந்துட்டே கத்துக்கறது பெரிய விஷயம் மக்கா..... நல்ல வேளை பையனை இப்பவே கத்துக்க வெச்சிட்டீங்க.....!

    ReplyDelete
  17. நண்பா இனிய தீபாவளி வாழ்த்துக்கள். என் வீட்டில் மகனுக்கு வாங்கிய கீபோர்டு உண்டு. எப்படி தான் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உங்க பதிவை பார்த்ததும் படித்து விடலாம் என்று ஒரு நம்பிக்கை. அப்படியே கொஞ்சம் நோட்ஸ்மும் பதிவா கொடுங்களேன்!!!

    ReplyDelete
  18. எனக்கு எல்லாம் புரிஞ்சுது .....ஆனால்,”என் மகன் வாயால் பாடி”அப்படின்னு சொன்னீங்களே அதான் விளங்கல.......

    நீங்க மூக்கால பாடுவீங்களா..

    ReplyDelete
  19. வாங்க கேசியோ கத்துக்கலாம்ன்னு பார்த்ததும் ஆன் லைனில் கத்துக்குடுக்கப் போறீங்களோன்னு ஆசையா வந்தால் ...
    கேசியோ அனுபவம் அருமையாய் சொல்லியிருக்கீங்க

    ReplyDelete
  20. எங்க வீட்ல என் பொண்ணு வாசிப்பா .இப்ப தான் புரியுது நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கறதுக்கான காரணம் .இசை மன அமைதியை தரும் .அனுபவிச்சவங்களுக்கு தான் அது புரியும் .

    ReplyDelete
  21. goma said...
    எனக்கு எல்லாம் புரிஞ்சுது .....ஆனால்,”என் மகன் வாயால் பாடி”அப்படின்னு சொன்னீங்களே அதான் விளங்கல.......

    நீங்க மூக்கால பாடுவீங்களா..//

    அருவாளை எங்கே வச்சேன்......

    ReplyDelete
  22. முயற்சி,ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ளாம் என்பதற்கு நீங்கள் உதாரணம்.....

    ReplyDelete
  23. வணக்கம்,  மனோ தங்களுக்கும், தங்களது குடும்பத்திற்கும் எனது
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. அப்புறம் சும்மா தெரிஞ்சதை வைத்து இசை வெள்ளத்தில் மிதப்பேன்.//
    அதை கேட்க வந்தவங்களை பற்றி தனிப் பதிவு போடுங்க

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  26. வணக்கம் மனோ அண்ணா,
    நலமா?
    உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது,
    உங்களுக்குள் இப்படி ஒரு கலை ஞானமா?

    எனக்கும் சின்ன வயசில் கீபோர்ட் மீதான ஆர்வம் இருந்திச்சு,.
    கொஞ்ச காலம் கத்துக்கிட்டேன்.
    அப்புறமா நாட்டு பிரச்சினையால் கத்துக்க முடியலை.

    ReplyDelete
  27. ஆங்கில நோட்ஸ் வாசிக்க நான்கு விரல்கள் போதும் என்று சொல்கிறது கைட் ஆனால் 5 விரல்கள் என்கிறார்கள் எது ஈசி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!