Sunday, October 30, 2011

அரபியின் வழிப்பறி...!!!

 பஹ்ரைனில் நடந்த உண்மை சம்பவம்.

எட்டு வருஷம் முன்பு, மாலை நான்குமணி டியூட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் போவேன். டிரான்ஸ்போர்ட் இருந்தாலும் காத்திருப்பது எனக்கு பிடிக்காத காரணத்தால் நடந்துதான் போவது வழக்கம். ஆட்களையும் கடைகளையும் ரசித்தவாறு செல்வதுண்டு.


அப்படி போகும் போது எல்லா நாட்களிலும் நான் போகும் அதே நேரம் ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியே போவதை எல்லாநாளும் கவனிப்பேன், பார்க்க தமிழ் ஆண்டி மாதிரி இருக்கும்.


அருகில் வரும்போது எப்போதும் நான் ஆச்சர்யகாக பார்ப்பது அவர் போட்டிருக்கும் தங்கச்செயினை, செயின்'ன்னு சொல்றதை விட தங்கவடம் இல்லை இல்லை சைக்கிள் செயின் மாதிரி ஒரு செயின் இடுப்புவரை நீளமாக அணிந்திருப்பார்கள், எனக்கு பார்க்க பார்க்க ஆச்சர்யமா இருக்கும்!!!!


சும்மா தெனாவட்டா ஆம்பிளை மாதிரி அலட்சிய பார்வையும், அகங்கார நடையுமாக செல்லும் அவர்களை அதிசயமாகத்தான் எல்லாரும் பார்ப்பார்கள். இத்தனைக்கும் எல்லாநாளும் விதவிதமான சேலையில் வருவதை பார்ப்பதற்கு [[வயசு அம்பதுக்கும் மேல்]] அழகாதானிருக்கும்...!!!


ஒருநாள், எனக்கும் அவர் வீட்டிற்கும் இடையே ஒரு நூறு அடி தூரத்தில் நான் வந்துகொண்டிருக்கும் போது, அந்தப்பெண் கதவை பூட்டி வெளியேறுவதை கவனித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தேன்....


திடீரென ஒரு அரபி அந்த அம்மா மீது பாய்ந்து, செயினை இழுக்க முயல அது கட்டியாக இருந்தமையால் அறுபடவில்லை, இதற்கிடையில் சுதாரித்த அந்த அம்மா, அரபியை கட்டி பிடித்துக்கொண்டு ஹெல்ப் ஹெல்ப் என்று அலற, நான் ஓடினேன் வேகமாக, நான் அருகில் வருமுன் சுதாரித்த அரபி, அந்த அம்மாவை உதறி தள்ளிவிட்டு ஓடிவிட்டான்...!!!


ஆண்டவா என் செயின் பத்திரமா இருக்கு'ன்னு மூச்சு வாங்கிட்டு நின்னாங்க, நான் அருகில் போயி என்னாச்சுன்னு கேக்க, தமிழ்ல பொரிஞ்சாங்களே பார்க்கணும் [[ஹா ஹா ஹா ஹா]] என் ஹஸ்பண்ட்டுக்கு போன் பண்ணனும் மொபைல் தரமுடியுமான்னு கேக்கவும் கொடுத்தேன் சத்தமா விஷயத்தை சொல்லி அழுதாங்க...


அப்புறமா மெதுவா கேட்டேன், நானும் உங்களை பலமாசமா பார்த்துட்டுதான் இருக்கேன் இம்புட்டு பெரிய தங்க செயினை போட்டுட்டு ஒய்யாரமா போற நீங்கள் மாட்டுவீங்கன்னு, என்னை முறைத்துவிட்டு வீட்டினுள் போயிடுச்சு...


அந்த அரபி செயினை பிடுங்கும் போது அருகில் நெறைய இந்தியா'காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்...!!! அவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே ஒழிய அரபியை பிடிக்கவில்லை, ஏன் அரபிகள் கூட அங்கே நின்று கொண்டுதான் இருந்தார்கள் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை...!!!


நான் ஒருவன் மாத்திரமே ஓடி வந்துள்ளேன், மெதுவா ஒரு மலையாளி அண்ணாச்சிக்கிட்டே கேட்டதுக்கு, ஏதாவது பிரச்சினைன்னா யாருப்பா போலீஸ்கிட்டே போயி அழுறது, அடுத்து பிடிபடும் அரபியின் ஆட்கள் வந்து மொய் வைக்கும் போது என் கதி...?? [[யதார்த்தம்தான்]]


ஆடம்பரம் வேணும்னா இப்பிடியா நகை அணிவது...?? என் நெருங்கிய சொந்தத்தில் என் அண்ணி ஒருவர் இப்படி நகைகள் அணிந்து பெருமையா நடந்து செல்வது வழக்கம், மும்பையில் இருந்து ஊர்போனவர், தான் கொண்டுவந்த எல்லா நகைகளையும் அணிந்து கொண்டே விருந்துக்கு போக நெல்லை பஸ்நிலையத்தில் காத்திருந்தாராம்...


எப்பிடி தெரியுமா...? முந்தானையை தலையோடு கூட சேர்த்து நகைகளை மறைத்தவாறே நின்னாராம், குழந்தைகளை பார்த்துவிட்ட உறவுக்காரர் ஒருவர் அருகில் போயி பார்த்துவிட்டு, ஊருக்கே டமாரம் அடித்ததும் அல்லாமல், இங்கே நெல்லையில பயங்கரமா களவு நடந்துட்டு இருக்கு, கொலையும் நடந்துட்டு இருக்குன்னு குண்டையும் போட்டுட்டு போயிருக்கார்.


வெடவெடத்துப்போன அண்ணி அலறியடிச்சி திரும்ப ஊருக்கே ஓடினாராம், இதை இப்பவும் சொல்லி சிரிப்போம்....

நான் தெரியாமதான் கேக்குறேன் இம்புட்டு ஆடம்பரம் தேவையா....???!!! இதில் கேரளா பெண்களை பாராட்டுவேன், எவ்வளவு நகை இருந்தாலும், ஒன்னு ரெண்டு சின்ன சின்ன செயின்கள்தான் அணிகிறார்கள், ம்ஹும் நம்ம தமிழ்பெண்கள் ரொம்பதான் அலப்பறை செய்கிறார்களோன்னு தோணுது...!!!


அடுத்தநாள் வேலைக்கு செல்லும் போது, அந்த அம்மா அதேபோல வீட்டை பூட்டி வெளியேறினார்கள், அருகில் வந்ததும் குட் ஆஃடர் நூன் என்றார், நான் வணக்கம்னு சொல்லிட்டே செயினை பார்த்தேன் ஹி ஹி, என்ன பாக்குறீங்க செயினை கழற்றி எங்க சொந்தகாரங்க வீட்டுல பத்திரப்படுத்திட்டோம்னு சொன்னாங்க, 


ம்ம்ம்ம் செயின் இல்லாமல் இப்போதான் அழகா இருக்கீங்க மேடம், இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும், புரிஞ்சி சிரிச்சுட்டு வெக்கத்துல ஒரு ஓட்டம் ஓடுனாயிங்க பாருங்க ஹா அழகு....!!!!

50 comments:

  1. இருந்தாலும் மக்கா உங்களுக்கு தைரியம் அதிகம்,

    அப்புறம் அந்த அரபி செயின் திருடனை எங்காவது பார்த்தீர்களா?

    ReplyDelete
  2. இப்போ இந்த மாதிரியான தடித்தடியான செயின்கள் - பெண்கள் கழுத்திலிருந்து "தாதா"க்களின் கழுத்துக்கு மாறிடுச்சே.

    ReplyDelete
  3. அண்ணே போட்டோ சூப்பரு

    ReplyDelete
  4. நம்ம பெண்களுக்கே நகை மோகம் அதிகம்தான்.அனுபவ அடிப்படையில் நல்ல அறிவுரை!

    ReplyDelete
  5. அண்ணே அழகா சொல்லிட்டு வந்தீங்க இருந்தாலும்..ஏதோ மிஸ்ஸிங்!

    ReplyDelete
  6. மீண்டும் வேதாளமா? ஒரே பொண்ணுங்க படமா இருக்கே.....படிச்சிட்டு வந்து...

    ReplyDelete
  7. வீரத்தமிழன் தான் ஒத்துக்கிறோம். உலகிலேயே அதிகளவில் தங்கம் தனியாரினால் வாங்கப்படுவது இந்தியாவில்தான் என்று ஒரு தகவல் கூறுகிறது.

    ReplyDelete
  8. நம்ம பொன்னுகளுக்கே சாரி பெண்ணுகளுக்கே பட்டதாம்யா தெரியும்

    ReplyDelete
  9. ஆனாலும் வே இம்புட்டு தைரியம் மக்கா

    ReplyDelete
  10. நா அரபிய சொன்னேன்

    ReplyDelete
  11. பாராட்டுக்கள் மனோ அண்ணே..

    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறோம் தொடரட்டும் உங்கள் சேவை..

    ReplyDelete
  12. தைரியம் அதிகம்... போட்டோல்லாம் அழகழகா இருக்கு போங்க....

    ReplyDelete
  13. :-)

    #யோவ், நீயாவது சண்டைக்கு வாய்யா!

    ReplyDelete
  14. // முதவேட்டு

    October 30, 2011 10:49 PM
    Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    இருந்தாலும் மக்கா உங்களுக்கு தைரியம் அதிகம்,

    அப்புறம் அந்த அரபி செயின் திருடனை எங்காவது பார்த்தீர்களா?
    //

    அவர் ஈரோடுல ..........!! வேண்டாம் நான் ஏதும் சொல்லல

    ReplyDelete
  15. ம்ம்ம்.... நல்லா இருக்கு
    புகைச் சித்திரமும்
    எழுத்து நடையும் .... கலக்கல் (:

    ReplyDelete
  16. //ம்ம்ம்ம் செயின் இல்லாமல் இப்போதான் அழகா இருக்கீங்க மேடம், இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும்//
    அங்கயும் உள்குத்தா அவ்வவ்! :-)

    ReplyDelete
  17. உங்க சொந்தக்கதைய வெச்சே நிறைய சினிமா எடுக்கலாம் போல இருக்கே?

    ஆடம்பரம் தேவையில்லைதான்.நன்றாக சொன்னீங்க.

    ReplyDelete
  18. திருடர்கள் எங்கேயும் இருக்கிறார்கள்...
    என்கிட்டே தான் இருக்கின்னு இப்படி
    பம்மாத்து காட்டினா சாதாரணமா போறவனுக்கும்
    கொஞ்சம் சலனம் ஏற்படத்தான் செய்யும்....

    செயின் இல்லாம அழகா இருக்கீங்கன்னு சொன்னீங்க
    பாருங்க .... அங்க தான் நீங்க நிக்குறீங்க மக்களே...

    ReplyDelete
  19. தம்பி.. இதோ வந்துட்டேன், 3 போஸ்ட்க்கு வர முடியல.. ஒன் பை ஒன் கமிங்க்

    ReplyDelete
  20. Rombathaam thairiyam anne ungaluku... Arabi ungalai thaakka vandhirundhaal enna panni iruppeenga anne

    ReplyDelete
  21. ராஜி said... 55 56
    Rombathaam thairiyam anne ungaluku... Arabi ungalai thaakka vandhirundhaal enna panni iruppeenga anne//

    ஓடுறதுக்கு கத்துத்தரனுமா என்ன ஹி ஹி பறந்து ஓடியிருப்பேன்...

    ReplyDelete
  22. ஹா ஹா நீங்க யாரு உள்குத்து மன்னராச்சே ஹே ஹே

    உங்கள் நல்ல குணத்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  23. யோவ்... சண்டைக்கு வாய்யா!

    ReplyDelete
  24. ஹா ஹா இனி நகையை அள்ளி போட்டுட்டு வர்றவங்க இந்த பதிவ படிச்சாங்கன்னா சைக்கிள் ஜெயின் தான் ஞாபகத்திற்கு வரும்...

    ReplyDelete
  25. ஆஹா அம்பது வயசுலயும் வெக்கதொட ஓட வச்சிட்டீங்களே... ஹா ஹா நீங்க பெரிய ஆள் தான் சகோ... தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  26. அடுத்தநாள் வேலைக்கு செல்லும் போது, அந்த அம்மா அதேபோல வீட்டை பூட்டி வெளியேறினார்கள், அருகில் வந்ததும் குட் ஆஃடர் நூன் என்றார்,//

    அலச்சியமா பாத்தவங்கள.. அழகா குட் ஆப்டர் நூன் சொல்லவச்சிட்டீங்க... :-)

    ReplyDelete
  27. //எட்டு வருஷம் முன்பு, மாலை நான்குமணி டியூட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் போவேன்.//

    தொப்பைய குறைக்க நடந்தத என்ன அழகா மேட்ச் பண்ணீங்க தலைவரே

    ReplyDelete
  28. யோவ் அது ஏன்யா நதியா படம் மட்டும் உம்ம ப்ளாக்ல அடிக்கடி வருது? அவனவன் ஹஞ்சிக்கா அஞ்சலின்னு போயிட்டு இருக்கான்.....

    ReplyDelete
  29. அப்புறம் அந்த அரபிய புடிச்சு டோஸ் விட்டீங்களா ஒரு செயினைக் கூட ஒழுங்கா அறுக்க தெரியலேன்னு....?

    ReplyDelete
  30. மடியில கனமில்லாம இருக்கனும்கரிங்க!ரைட்டு அப்புறமென்ன வழியில பயம்!

    ReplyDelete
  31. இங்கே லண்டன்ல கூட நிறைய செய்ன் snatching நடக்குது .நீங்க இங்கே மைக்ரேட் பண்ணா நிறைய பேருக்கு உதவியா இருக்கும்

    ReplyDelete
  32. தங்கம் விலை ஏறிடிச்சு ...அலர்ட் ..

    ReplyDelete
  33. \\\இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும், புரிஞ்சி சிரிச்சுட்டு வெக்கத்துல ஒரு ஓட்டம் ஓடுனாயிங்க பாருங்க ஹா அழகு\\\ ஓ....ஹோ !

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. அந்த திருடன் முந்திட்டானே, இதுல உள்குத்து இல்லை...

    ReplyDelete
  36. ////ம்ம்ம்ம் செயின் இல்லாமல் இப்போதான் அழகா இருக்கீங்க மேடம், இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும், புரிஞ்சி சிரிச்சுட்டு வெக்கத்துல ஒரு ஓட்டம் ஓடுனாயிங்க பாருங்க ஹா அழகு....!!!!////

    ரணகளத்திலையும் கிளுகிளுப்பை பாருங்க.....ஹி.ஹி.ஹி.ஹி.......

    நல்ல விழிப்புணர்வு பதிவு பாஸ்

    ReplyDelete
  37. இது போல எத்தனை நடந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் ஏனோ குறைவதில்லை..... :)

    தங்களின் அனுபவத்தினை பகிர்ந்தது நன்றாக இருக்கிறது...

    ReplyDelete
  38. ம்ஹும் நம்ம தமிழ்பெண்கள் ரொம்பதான் அலப்பறை செய்கிறார்களோன்னு தோணுது...!!!//வாஸ்தவம்தான்.நல்லதொரு படிப்பினை!

    ReplyDelete
  39. பெண்களுக்கு நாங்கள் இளைப்பில்லை என்று இப்போ ஆண்களும் வட வடமாகச் செயின், ப்ரேஸ்லட் போடுகிறார்களே?!!

    ஆனாலும் நீங்கள் ஹீரோ தான்!!

    ReplyDelete
  40. மனோ,
    அழகு அழகுன்னு பல இடத்துல வர்ணிச்சிருக்கிங்க...
    சரி அது இருக்கட்டும்,
    நம்ம கேரளா அண்ணன் சொன்னதுதான் சூப்பர்.

    உங்க வீரத்தை நான் பாராட்டுறேன்.

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் மனோ

    ReplyDelete
  42. திருடனுக்கு பயந்து இப்போது சிலபேர் யானை கட்டும் சங்கிலி பருமனில் செயின் போடுகிறார்கள்.

    ReplyDelete
  43. நடந்த விஷயத்தை நீங்கள் விளக்கும் விதம் ரொம்ப அழகு.

    ReplyDelete
  44. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

    ReplyDelete
  45. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத் தான் இந்த ஆடம்பர விடயங்களும்,
    அதனை அனுபவ விளக்கப் பகிர்வாக நீங்கள் தந்திருக்கிறீங்க.

    இப் பதிவின் ஊடாக உங்களின் உதவும் குணத்தினை அறிந்து மெய் சிலிர்த்தேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!