பொதுவாக பஹ்ரைனில் வேலை செய்யும் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு, ரெண்டு பேருக்கு ஒரு ரூம் வீதம் ஹோட்டல் நிர்வாகம் கொடுப்பது உண்டு, அப்படி தங்கியிருந்த ஆரம்ப காலத்துல நடந்த ஒரு சிரிப்பு சம்பவம்.
ஒரு நாள் அடுத்த ரூம் பாட்னர்களின் பார்ட்டி நடந்தது. பொதுவாக ரூம்ல தங்கி இருக்கும் மலையாளிகள் சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் கூட அவிங்க அவிங்க பெட்டியை பூட்டி சாவியை மறைத்து வைப்பது வழக்கம்.
நாலுபேர் கொண்ட பார்ட்டி, பார்ட்டி தொடங்கியது [[நான் ரொம்ப நல்லவன் முதல்லயே சொல்லிர்றேன், தக்காளி ரேஞ்சுக்கு நினச்சிராதீங்க]] முதலாவது ரவுண்ட் ரெட் லேபல் உள்ளே போனது, ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாயிக்க தொடங்கினார்கள்.
கூட வேலை பார்ப்பவர்களின், மேனேஜர்களின் டவுசர்கள் துகுலுரியப் பட்டன. ஜாலியாக பேச்சு நடந்து கொண்டிருந்தது, இரண்டாவது ரவுண்ட் போகவும் கரண்டும் உயிரை விட்ருச்சி....
எலக்ட்ரீசியன கூப்பிட்டு சரி செய்து விட்டு, டான்ஸ் ஆரம்பம் ஆச்சு, மூணாவது ரவுண்ட்ல கொஞ்சம் தள்ளாட்டம் ஆரம்பிச்சது, நாலாவது ரவுண்ட் எல்லாரும் நிக்கமுடியாமல் சோபாவில் உக்கார்ந்து கொண்டே நடனம் [[நடனமா அது..??]] செய்தார்கள்.
ஐந்தாவது ரவுண்ட் ரெண்டுபேர் மட்டையாகி சாய்ந்தார்கள், சாப்பாடு அவர்கள் வாயில் வலுகட்டாயமாக திணிக்கப் பட்டது. அதில் ஒருத்தன் ஆம்பிலேட்டும் போட்டுட்டான். எல்லாரும் சாப்பிட்டு [[எங்கே எல்லாம் அப்பிடியேதான் கிடந்தது]] கிளம்பினோம். நான் ஒருத்தனை தூக்கிட்டுதான் போனேன்.
அப்போது அதே ரூமில் தங்கியிருந்த நண்பன் அலறினான், என்னடான்னா டேய் சூட்கேஸ் சாவியை காணோம்டா'ன்னு சொல்ல தேடினோம் தேடினோம் கிடைக்கவே இல்லை, ரூமை சல்லடையாக போட்டு தேடியும் கிடைக்கவில்லை, சரி நாளை தேடலாம்னு சொன்னாலும் அவன் கேட்கவில்லை நாங்கள் போனபின்பும் விடிய விடிய தேடியும் சாவி கிடைக்கவில்லை.
இப்படியிருக்க, ஒரு ஆறேழு நாள் கழிச்சி இன்னொரு ரூம்ல பார்ட்டி நடந்தது. அங்கேயும் நாலு நண்பர்கள்தான், அவர்கள் சீட்டு விளையாடி கொண்டே சரக்கடித்தார்கள் [[எனக்கு சீட்டு விளையாட்டை கண்டாலே வாந்தி வாந்தியா வரும்]] முதல் ரவுண்டு போச்சு...
சீட்டு விளையாட்டு ஜோரா நடக்குது, அதில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தான் நம்ம சாவி தொலைத்த நண்பன். இரண்டாவது ரவுண்ட் போக சீட்டு கட்டை வேகமா போட்டு விளையாடினார்கள், மூன்றாவது ரவுண்டும் போச்சு உள்ளே, சாவி தொலைத்தவன் ஒரு மாதிரியா செருமினான்.
மூணாவது ரவுண்டும் உள்ளே போனது, சீட்டின் வேகமும் கூடியது, நாலாவது ரவுண்ட் கிளாசில் ஊற்றி ஒரு சிப் குடித்த சாவி நண்பன், ஆங் என சொல்லி இருக்கையை விட்டு எழும்பினான் சீட்டை கீழே போட்டுவிட்டு, இதோ இப்போ வாறேன்னு சொல்லிட்டு அவன் ரூமை நோக்கி ஓடினான்...
நானும் அவன் பின்னால் அவனுக்கு தெரியாமல் போனேன், பயபுள்ள எங்கேயோ கைவிட்டான். எடுத்தது சாவியை, என்னடான்னு கேட்டேன் சாவி கிடச்சிருச்சுன்னு சொல்றான், நண்பர்களிடம் வந்து சொல்லி சிரி சிரின்னு சிரிச்சோம்...
என்னா நடந்துச்சுன்னா, முதல் நாள் பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் இவன், எங்கே ஓவரா குடிச்சி மட்டையாகிருவோமோ'ன்னு பயந்து யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் சாவியை மறைத்து வைக்க, பார்ட்டி முடிஞ்சதும் அடிச்ச மப்புல சாவி வச்ச இடத்தை மறந்துட்டான்.
இப்போ நடந்த பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் நியாபகம் வந்துருச்சி பயபுள்ளைக்கு, இப்பவும் யாராவது ஏதாவது தொலைச்சா எங்களுக்கு இவன் நியாபகம்தான் வரும், அப்படியே யாராவது எதையாவது தொலைச்சா முதல் கேள்வி நீ நேற்று எத்தனை பெக் அடித்தாய் என கேட்பது இப்பவும் எங்களுக்குள்ளே வழக்கமாக இருக்கிறது...!!!
"மனோ"தத்துவம் : அநேகமாயிரம் கார்கள் உருண்டோடினாலும், ரோடுகள் கவலைப்படுவதில்லை...!!! [[டியூட்டிக்கு ரோட்டில் நடந்தே போவோர் சங்கம்]]
முதல்......
ReplyDeleteநல்லா தான் சாவி விளையாடுது...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said... 1 2
ReplyDeleteமுதல்......//
முதல் பேக் ஸாரி பெக்.....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநல்லா தான் சாவி விளையாடுது...//
சாவி விளையாடலை நண்பன் விளையாடிட்டான்...ஹி ஹி...
ஐயோ ஐயோ ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteArun Kumar said... 9 10
ReplyDeleteஐயோ ஐயோ ...//
ஹா ஹா ஹா ஹா பதிவை படிச்சதும் போதை எறிடிச்சாக்கும்....
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteமனோ தத்துவத்துக்கு சாவி கொடுத்து வைத்த பகிவுக்குப் பாராட்டுக்கள்.//
ஹா ஹா ஹா ஹ்ஹா நன்றி மேடம்...
He...he....ithu ellam namakku
ReplyDeletesagajam thane....
கலைஞரை விடவே மாட்டீங்களா.
ReplyDeleteஅப்ப சாவி தொலைப்பவர்கள் இப்படித்தானா பாஸ்
ReplyDeleteமனோ தத்துவம் சூப்பர்.,
ReplyDeleteஐயோ ஐயோ ...சாவி.......சாவி....
ReplyDeleteஇதுதான் வெற்றியின் கீ வோர்டா?
ReplyDeleteநல்ல "மனோ"தத்துவம் ,ஹா ஹா
ReplyDeleteதமிழ் மணம் 7
அட இவ்வளவு ரவுண்ட் போயும் நம்மாளு ஸ்டெடியா இருக்காரே அதுக்குதான்யா தமிழ் மணத்தில குத்திட்டு போறேன்யா... ஹி ஹி ஹி
ReplyDeleteஅண்ணனோட மப்பு தத்துவத்துக்கு நன்றி!
ReplyDeleteகுடிச்சிட்டு தொலைஞ்ச பொருள் கிடைக்கலேனா
ReplyDeleteஅதுக்கு முதல் நாள் எவ்வளவு குடிச்சிட்டு
ஒளிச்சு வச்சேமோ அதே அளவு இன்னைக்கு
குடிச்சிட்டு தேடினா நிச்சயம் கிடைச்சிடும் என்பது
இந்தப் பதிவைப் படைச்சதும்
ிமிகத் தெளிவாகப் புரியுது.சரியா ?
த.ம 10
சூப்பர் பாஸ்! :-)
ReplyDeleteஞாபக சக்தியை மீட்டெடுக்க இப்பிடியெல்லாம் வழியிருக்கா? மைண்ட்ல வச்சுக்கிடுறேன்!
NAAI-NAKKS said... 17 18
ReplyDeleteHe...he....ithu ellam namakku
sagajam thane....//
ஹே ஹே ஹே ஹே....
தமிழ் உதயம் said...
ReplyDeleteகலைஞரை விடவே மாட்டீங்களா.//
அப்பாடக்கரை அவ்வளவு சீக்கிரம் விடுவேனா...???
K.s.s.Rajh said...
ReplyDeleteஅப்ப சாவி தொலைப்பவர்கள் இப்படித்தானா பாஸ்//
ச்சே ச்சே எல்லாவ்ரும் அப்பிடி கிடையாது...
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமனோ தத்துவம் சூப்பர்.,//
ரோட்டில் நடப்போர் சங்கம்...
வைரை சதிஷ் said...
ReplyDeleteஐயோ ஐயோ ...சாவி.......சாவி....//
ஐயோ ஐயோ சாவி இல்லை, சூட்கேஸ் சாவி ஹி ஹி...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஇதுதான் வெற்றியின் கீ வோர்டா?//
டேய் அண்ணா.....
M.R said...
ReplyDeleteநல்ல "மனோ"தத்துவம் ,ஹா ஹா
தமிழ் மணம் 7//
இனி நீங்க டாக்டர் தத்துவம்னு போடுங்கா ஹி ஹி....
காட்டான் said...
ReplyDeleteஅட இவ்வளவு ரவுண்ட் போயும் நம்மாளு ஸ்டெடியா இருக்காரே அதுக்குதான்யா தமிழ் மணத்தில குத்திட்டு போறேன்யா... ஹி ஹி ஹி//
நான்தான் நல்லவன்னு சொல்லிட்டேனே ஹே ஹே ஹே ஹே...
விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணனோட மப்பு தத்துவத்துக்கு நன்றி!//
நடப்பு தத்துவம்னு சொல்லுய்யா...
Ramani said...
ReplyDeleteகுடிச்சிட்டு தொலைஞ்ச பொருள் கிடைக்கலேனா
அதுக்கு முதல் நாள் எவ்வளவு குடிச்சிட்டு
ஒளிச்சு வச்சேமோ அதே அளவு இன்னைக்கு
குடிச்சிட்டு தேடினா நிச்சயம் கிடைச்சிடும் என்பது
இந்தப் பதிவைப் படைச்சதும்
ிமிகத் தெளிவாகப் புரியுது.சரியா ?
த.ம 10//
ஹா ஹா ஹா ஹா டெஸ்ட் பண்ணிராதீக குரு ஹா ஹா ஹா ஹா..
ஜீ... said...
ReplyDeleteசூப்பர் பாஸ்! :-)
ஞாபக சக்தியை மீட்டெடுக்க இப்பிடியெல்லாம் வழியிருக்கா? மைண்ட்ல வச்சுக்கிடுறேன்!//
எத்துனாவது ரவுண்ட் அடிக்கப் போறீங்க???
சாவி தொலைப்பு - பய புள்ள 40 வயசுக்கு மேல போனாலே இப்படித்தானோ
ReplyDeleteதத்துவம் கலக்கல்
ஆஹா இனி என்ன காணா போனாலும் கவலை இல்லைய்யா.....
ReplyDeleteதாத்தாவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்??
ReplyDelete"மது" தாத்தா அல்லவா அதான் சம்பந்தம்
ReplyDeleteநல்ல ஜோக்
ReplyDeleteஅண்ணன் சாவிய தொலைச்சிட்டு மறைச்சு வச்சத சொல்ல எப்படியெல்லாம் மேட்ச் பண்ணுறாருப்பா...
ReplyDeleteகுடி குடியைக் கெடுக்கும்- இங்கே
ReplyDeleteகுடி சாவியைக் கொடுக்கும்
சுவை நகச் சுவை!
புலவர் சா இராமாநுசம்
மனோ தத்துவம் அருமை அண்ணே
ReplyDeleteநடைராஜாவா?? வெரி குட்.
ReplyDeleteமனசாட்சி said...
ReplyDeleteசாவி தொலைப்பு - பய புள்ள 40 வயசுக்கு மேல போனாலே இப்படித்தானோ
தத்துவம் கலக்கல்//
நாப்பது வயசா யாருக்கு ஹி ஹி...???
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆஹா இனி என்ன காணா போனாலும் கவலை இல்லைய்யா.....//
ஹா ஹா ஹ ஹா சந்தோசத்தை பாருங்கய்யா...!
S.Menaga said...
ReplyDeleteதாத்தாவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்??//
சரியான உள்குத்து இருக்கு, நல்லா பாருங்க மேனகா....
மனசாட்சி said...
ReplyDelete"மது" தாத்தா அல்லவா அதான் சம்பந்தம்//
மது தாத்தா, ஹை இது நல்லா இருக்கே....!
suryajeeva said...
ReplyDeleteநல்ல ஜோக்//
மிக்க நன்றி....
இரவு வானம் said...
ReplyDeleteஅண்ணன் சாவிய தொலைச்சிட்டு மறைச்சு வச்சத சொல்ல எப்படியெல்லாம் மேட்ச் பண்ணுறாருப்பா...//
நீரு இப்பிடி சொல்வீருன்னு முன்னமே எனக்கு தெரியும் ஹி ஹி...
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteகுடி குடியைக் கெடுக்கும்- இங்கே
குடி சாவியைக் கொடுக்கும்
சுவை நகச் சுவை!
புலவர் சா இராமாநுசம்//
நன்றி புலவரே....
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteமனோ தத்துவம் அருமை அண்ணே//
ஹே ஹே ஹே ஹே ஹே...
vanathy said...
ReplyDeleteநடைராஜாவா?? வெரி குட்.//
அங்கிள் நடக்குறாருன்னுதும், சந்தோசம் பொங்குது பாருங்க ம்ஹும்....
மறந்ததும் குடியால்;பின் தெரிந்ததும் குடியால்.ஆகா!
ReplyDeleteநல்லதோர் அனுபவக் கதை அண்ணா
ReplyDeleteபோதையில் பாதை மாறக் கூடாது என்பதனையும், அளவோடு குடித்தால் அதிகம் ரிஸ்க் இல்லை என்பதனையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.
உங்களின் தத்துவமும் அருமை.
எப்பவுமே மொத ரவுண்டு உள்ள போகும்போது கழட்டப்படுவது டேமேஜர்களின் டவுசர்கல்தான்!@பாவம்
ReplyDeleteசென்னை பித்தன் said... 97 98
ReplyDeleteமறந்ததும் குடியால்;பின் தெரிந்ததும் குடியால்.ஆகா!//
என்னாத்தை உலகம் தல இது ஹா ஹா ஹா....
நிரூபன் said...
ReplyDeleteநல்லதோர் அனுபவக் கதை அண்ணா
போதையில் பாதை மாறக் கூடாது என்பதனையும், அளவோடு குடித்தால் அதிகம் ரிஸ்க் இல்லை என்பதனையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.
உங்களின் தத்துவமும் அருமை.//
நன்றி நிரூபன்....ஹி ஹி....
கோகுல் said...
ReplyDeleteஎப்பவுமே மொத ரவுண்டு உள்ள போகும்போது கழட்டப்படுவது டேமேஜர்களின் டவுசர்கல்தான்!@பாவம்//
ஹா ஹா ஹா பாவமென்ன பாவம் அவனுக பண்ணுன அநியாயம் அப்பிடி ஹி ஹி....
மனோ சார் ..,
ReplyDeleteஅங்க ஆபிசர் ப்ளாக்ல நல்ல பதிவுல கும்மியடிச்சிட்டு இருக்கானுவ ..,அருவாள எடுத்தோமா போட்டாமா இல்லாம ,நீங்க இங்க பார்மாலிட்டி பண்ணிட்டு இருக்கீங்க ..,
என்னமோ
ReplyDeleteமொத ரவுண்டு
ரெண்டாவது ரவுண்டு
மூனாவது ரவுண்டு
....ன்னு சொல்றீங்களே. அப்டின்னா என்னாபா அது?
இதில் இருந்து தெரியும் நீதி : தண்ணி அடிப்பது தவறில்லை. அப்படி அடித்தால் மறதி நோய் பறந்துவிடும் என்று இந்த ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற டாகுடர் மனோ சொல்லியியிருக்கிறார்கள்.
ReplyDeleteகடுப்பேத்தாதீங்க யுவர் ஆனர்:)
ReplyDeleteநடப்பதால் மனிதன்(நோயின்றி) பூரணமடைகிறான்!குடிப்பதால்,அதுவும் அளவுக்கு மீறிக் குடிப்பதால் மனிதன் "கோட்டை" விடுகிறான்!(தத்துவம்)ஹி!ஹி!ஹி!
ReplyDeleteமனோ தத்துவம்.. நல்ல ஆராய்ச்சி..
ReplyDelete