Friday, October 14, 2011

கேரளாவின் கள்ளன் போலீஸ்...!!!


கேரளாவில் நடந்த உண்மை சம்பவம். நண்பன் சொன்னது, அவன் வீட்டருகில் உள்ள வீட்டில், கணவனுக்கு கல்ஃபில் வேலை என்பதால் அந்த பெண்ணும் இரண்டு ஆண் [[சிறிய]] குழந்தைகளும் வசித்து வரும் வேளையில் ஒரு நாள் மத்தியான வேளையில்,
இடுப்பில் மூன்று வயது குழந்தைய சுமந்த படி கூட ஒரு பன்னிரண்டு வயது குழந்தையுமா வந்த தமிழ் பெண் ஒருத்தி குடிக்க தண்ணீர் கேட்டுருக்கிறாள்,அந்த வீட்டம்மா மிகவும் இரக்கம் குணம் உள்ள பெண்ணாம், தண்ணீர் எடுக்க உள்ளே போனவள் இரக்கப் பட்டு தண்ணீருக்கு பதில் சர்பத் உண்ட்டாக்கி மூணு கிளாசில் ஊற்றி கொண்டு வெளியே வர, அங்கே பன்னிரண்டு வயது பிள்ளைய காணவில்லை! எங்கே அவள் என வீட்டம்மா கேட்க, அவள் போய் விட்டாள் என்று சொல்லி, சர்பத்தை மூன்று வயது குழந்தைக்கு ஊட்டி விட்டு மீதி இரண்டு கிளாஸ் சர்பத்தையும் அவளே குடித்து விட்டு, நன்றி சொல்லி போய் விட்டாள்.


இரவு அந்த வீட்டம்மா குழந்தைகளின் டியூஷன் ஹோம் ஒர்க் சாப்பாடெல்லாம் கொடுத்து தூங்க வைத்து விட்டு தூங்கி விட்டாள். அந்த வீட்டில் இரண்டு பெட் ரூம் உண்டு, ஒரு பெட் ரூமில் பிள்ளைகளும் அவளும் உறங்குவது வழக்கம் இன்னொன்று கணவன் வரும் போது உபயோகிக்க, அது சும்மாவே கிடக்கும், 


அந்த வீட்டம்மா நன்றாக உறங்கும் வேளையில், ஒரு அனர்த்தம் போல உணர்ந்திருக்கிறார், காதை கூர்மையாக்கி கேட்க ஏதோ யாரோ பேசும் பேச்சு லேசாக கேட்டிருக்கிறது, மெதுவாக எழுந்த இவள் பேனை அனைத்து இருக்கிறாள், 


ஃபேனை அனைத்ததும் பேச்சு சத்தம் பக்கத்து பெட் ரூமில் இருந்துதான் வருகிறது என்பதை தெரிந்து கொண்ட பெண்மணி, மெதுவாக[[தைரியமா]] அங்கே போயி லைட்டை போட்டு விட்டு ரூமை நோட்டம் விட, பெட்டுக்கு கீழே ஒரு கால் மட்டும் தெரிந்திருக்கிறது, சத்தம் போடாமல்  லைட்டை மறு படியும் அனைத்து விட்டு வெளியேறி, கதவை வெளியே பூட்டி விட்டு,  அக்கம் பக்கம் உறவினர்களுக்கு போன் செய்ய, 


போலீஸ் வரவழைக்கப் பட்டது. போலீஸ் கதவை திறந்து சோதனை செய்யும் போது உள்ளே கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தது அந்த பன்னிரண்டு வயது சிறுமி!!!


போலீஸ் அந்த சிறுமியை வைத்தே அந்த கும்பலை மடக்க, அவர்கள் நம்ம சினிமா வில்லனை போல தண்டி தடியாக இருந்ததும் அல்லாமல், காரில் ஆயிதங்களும் இருந்திருக்கிறது, 
எல்லாரையும் பிடிச்சி உள்ளே தள்ளி விட்டது போலீஸ். பிடிபட்ட கொள்ளை கும்பல் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. கேரளாவில் நிறைய இடங்களில் இப்பிடி கை வரிசையை காட்டியிருக்கிறார்களாம்...

இன்னும் இதேபோல் நிறைய கும்பல் இருப்பதாகவும் நண்பன் சொன்னான்....!!!

டிஸ்கி : என் பதிவின் மீள்பதிவு.
----------------------------------------------------------------------------------------------


கூடங்குளத்தில் அமைதியாக போராடிக்கொண்டிருந்த மாற்று திறனாளிகளை போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர், இதை அருகில் இருந்து பார்த்திருக்கிறார் பதிவர் "வைறை சதீஷ்"யின் அப்பா, மத்திய அரசை திருப்தி படுத்த போலீசார் கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கிறார்களோ என்னும் ஐயம் வருகிறது...!!!


அமைதியாக போராடுபவர்களை போலீஸ் தாக்குவதை வன்மையாக, அக்கறையோடு கண்டிக்கிறது "நாஞ்சில் மனோ" வலைத்தளம். 


நண்பன் "கூடல் பாலா"வின் இன்றைய செய்தி கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...
http://koodalbala.blogspot.com/2011/10/blog-post_15.html

நண்பன் சூர்யா ஜீவாவின் "ஆணிவேர்" இன்றைய செய்தி கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்..


33 comments:

 1. என்னவெல்லாம் நடக்குது?

  ReplyDelete
 2. ஆஹா!

  என்னாவொரு நூதனம்!

  ReplyDelete
 3. என்னா ஒரு பிளானிங்,உசாரய்யா உசாரு!

  ReplyDelete
 4. கலி முத்திடுத்து எல்லாம் நடக்கும்

  ReplyDelete
 5. மிக கடுமையான சட்டங்கள் இயற்றி உடனுக்குடன் தண்டனை தந்தாலொழிய மக்கள் திருந்த மாட்டார்கள். 

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 6. சரி தான், என்ன எல்லோரும் மீள் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க? மீள் பதிவு வாரமா இது?

  ReplyDelete
 7. உசாரு உசாரு
  அண்ணாச்சி விழிப்புணர்வு பதிவு
  இனி யாரும் வந்தாலும் கவனமா இருப்போம் :)

  ReplyDelete
 8. கள்ளர்கள் எப்படியெல்லாம் வாரானுங்கய்யா!

  ReplyDelete
 9. எச்சரிக்கை பதிவு நன்றி நண்பரே

  தமிழ் மணம் ஏழாவது வாக்கு

  ReplyDelete
 10. அவர்களுடைய மோட்டிவ் என்னவாயிருக்கும்?.. எப்போவும் உசாராக இருக்கணும்.

  ReplyDelete
 11. //
  இன்னும் இதேபோல் நிறைய கும்பல் இருப்பதாகவும் நண்பன் சொன்னான்....!!!


  //

  அதில் தலைவர் யாரு ?

  ReplyDelete
 12. கட்டில் அடியில் கால் தெரிந்ததும் கத்தாமல் புத்திசாலி தான் அந்த மலையாள பெண்.ஆனால் படிக்கும் போது திக் திக் என்று இருந்தது.ரொம்ப ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 13. ரொம்ப கவனமா இருக்கோணும் ....

  ReplyDelete
 14. எண்டே குருவாயூரப்பா!

  ReplyDelete
 15. நானும் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.,

  ReplyDelete
 16. என்னமா பிளான் பண்றாங்க?

  ReplyDelete
 17. கூடங்குளம் போலிஸ் அராஜகம் கண்டனத்திற்குரியது.

  ReplyDelete
 18. அண்ணாச்சியும் மீள்பதிவு போட்டுவிட்டார் இந்த படகு வீட்டுக்குப் போய் வாங்கோ அண்ணாச்சி!

  ReplyDelete
 19. கலக்குங்க தலைவரே, இத தனி பதிவாவே போட்டிருக்கலாமே

  ReplyDelete
 20. அமைதியாக போராட்டம் நடத்தும் அப்பாவி மக்கள் மீது போலீஸ் அராஜகம் கண்டனத்திற்கு உரியது!

  ReplyDelete
 21. அந்த அம்மாவின் தைரியத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை....

  ReplyDelete
 22. "பதிவுகளை இலவசமாக பெற"..... அரசியல்ல சேரப்போறீங்களா அண்ணாத்த?

  ReplyDelete
 23. நூதனமான திருட்டு....தமிழேன்டா....

  ReplyDelete
 24. கூடங்குளத்தில் மாற்று திறனாளிகளை கடுமையாக தாக்கிய போலீசார்க்கு எதிராக எங்க கண்டனங்களையும் வன்மையாக தெரிவிக்கிறோம்.

  ReplyDelete
 25. நம்ப முடியவில்லை!
  யாரை நம்புவது..?

  கூடங்குளம் பற்றி நானும்
  கவிதை எழுதியுள்ளேன் பாருங்கள்

  identity


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. உள்நோக்கத்தோட தான் வாரங்கய்யா...
  நாம தான் கவனமா இருக்கணும் போல..

  ReplyDelete
 27. இதெயெல்லாம் நம்ப வேண்டாம். மலையாளீகள் எப்பவும் தமிழ் மக்களை வேலைக்காரன், கூலிக்காரன், கள்ளன், ரவுடி, இப்படி தான் பார்பாங்க. மலையாள படம் பாருங்கோ, உங்களுக்கு புரியும். உங்கள் நண்பர் இதை சொல்லி இருந்தா, இன்னும் விசாரியுங்கள். கண்டிப்பாக நான் பார்க்கவில்லை, கேள்வி பட்டேன்னு சொல்லுவார். மலையளீகளோட குணம் இது. நான் 5 வருடம் மலையகளோட இருந்து இருக்கேன்.

  இந்த கதையில் அந்த அம்மா வீட்டம்மா மிகவும் இரக்கம் குணம் உள்ள பெண்ணாம், தமிழ் பெண் திருடியம். என்னோட மச்சான், என்னோட பள்ளி நண்பர், எல்லோரும் மலையாளீகள் இருக்கும் அபர்த்மென்ட் குடி இருந்தோம். என்னோட மச்சானையும் இது போல சொன்னாங்கோ. என்னோட பள்ளி நண்பரையும் வேற மாதிரி கதை கட்டி விட்டங்கோ.

  ReplyDelete
 28. நீங்கள் என்றைகாவது மலையாள நண்பர்களிடம் இலங்கை தமிழர் லட்ச கணக்கில் இறக்க காரணம் மலையாளிகள் என்று சொல்லிருகரீர்களா

  ReplyDelete
 29. நீங்கள் என்றைகாவது மலையாள நண்பர்களிடம் இலங்கை தமிழர் லட்ச கணக்கில் இறக்க காரணம் மலையாளிகள் என்று சொல்லிருகரீர்களா///////காரணம் நம் தமிழர்கள் தான். 1. தமிழக அரசியல்வாதிகள் 2.மாறி மாறி கொலை கொண்டு செத்த போராளிக் குழுக்கள் 3) இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் 4) கருணா போன்ற தன்னலவாதிகள் அதன் பின்னால் தான் சிங்களன் மலையாளி எல்லாம் வருவர்!!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!