Friday, May 20, 2011

கலியுகம் திரும்பி வந்தது

ரெண்டு நாள் முன்னாடி ஒரு பதிவில், சிபி'யின் கமெண்ட்ஸ் படிச்சிட்டு இருந்தேன் காபி குடித்தவாறே, அவனின் ஒரு கமேண்ட்சை படிக்கும் போது சிரிப்பு பொத்து கொண்டு வெளியே வர, காபி'யும் வெளியே வந்துருச்சி, கம்பியூட்டர் கீபோர்டு நாறி ஸாரி நனைஞ்சி போச்சு. போதாதுக்கு பதட்டத்துல கையில இருந்த காபியும் கீபோர்டில் விழ, எல்லாநாளும் விரலாலேதானே நம்மை அடிப்பான் இன்னைக்கு எதோ ஒரு திரவத்தை நம்மீது ஊத்துரானே என அலறி அடங்கி மடிந்து போனது என் செல்லம். 

இம்புட்டு நாள் எனக்கு உதவியதுக்கு நன்றி நண்பா....
இந்த பிரச்சினையினால்'தான் எனக்கு உங்களை படுத்த, ஸாரி பார்க்க வர முடியவில்லை [ம்ஹும் வந்துட்டாலும்] நான் மீண்டு[ம்] வந்ததால் இனி பதிவுலகம் மெல்ல வாழும் ஹி ஹி ஹி ஹி  [[எவம்லேய் அங்கே கல்லெடுக்க குனியுறது]]

நீதி : இனி யாரும் கம்பியூட்டர் முன்னாடி எதுவும் அருந்திகொண்டு அமராதீர்கள். எக்கணமும் சிபி போன்ற எருமைகளின் கமெண்ட்ஸ்'களின் அட்டாக்கால், நாம் சிரிப்பது மட்டுமில்லை. கம்பியூட்டரும் பல்லிளித்து விடும். [[ம்ஹும் நாங்களும் நீதி  செப்புவோம்ல]]


அடுத்து, நண்பன் "கலியுகம்"தினேஷ் திடீரேனே முந்தாநாள் போன் செய்தார். அண்ணே நான் நாளை பஹ்ரைன் வாறேம்னே ஏர்போர்ட்டுக்கு வண்டி அனுப்புங்கண்ணே என்று, எனக்கு ஷாக். யோவ் போனமாசம்தானேய்யா கல்யாணமே ஆச்சு என்ன அதுக்குள்ளே அவசரம்...??? கம்பெனி அவசரமாக அழைப்பதாயும், ஃபேமிலி விசா தருவதாகவும் சொன்னார். அப்போ சரி வாங்க வண்டி அனுப்புறது என்ன நானே வாறேன் ரிசீவ் பண்ண என சொன்னேன்.


நேற்றுகாலை காலை எட்டரைக்கு ஃபிளைட் லேண்ட் ஆக நான் ஏர்போர்ட் போகுமுன் தம்பி பிளேன்ல இருந்து சாடிவிட்டார், ஸாரி ஹி ஹி இறங்கிவிட்டார். அவரை பிக்கப் செய்து வரும் வழியில் பேசிக்கொண்டே வந்தோம், மிக்க கவலையாக இருந்தார், மனைவியை பிரிந்த துக்கம் நான் கலகல என பேச்சை மாற்றிக்கொண்டே வந்தேன். ரெண்டுநாள் ஆச்சுன்னா எல்லாம் சரியா போகும் மக்கா என்று.

குடும்ப விசா கிடைப்பதால் சந்தோசம்தானே, பாஸ்போர்ட் கிடைக்கத்தான் கொஞ்சம் இழுபறி மீன்ஸ் தாமதம் ஆகிறது, பாஸ்போர்ட் கிடைத்து விட்டால், விசா ஒரே வாரத்தில் ரெடியாகி விடும். எனக்கும் கவலையாகத்தான் இருந்தது, மனைவியை பிரிந்து செல்லும் வேதனை என்னவென்று எனக்கு நல்லாவே தெரியும். தம்பியின் குடும்பம் இங்கே வந்து நண்பனுடன் சேர்ந்து வாழ என்னாலான எல்லா முயற்சியும் செய்வேன்.......'பிரிவு என்பது உறவுக்காகத்தான்" இல்லையா....நண்பனின் மனைவி விரைவில் அவருடன் வந்து சேர பிரார்த்திப்போம்.


டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.

73 comments:

  1. வடைக்கே வடை போட்டுட்டோமில்ல ..

    ReplyDelete
  2. கொய்யால டீன்னு தானே சொன்னே!

    ReplyDelete
  3. இருய்யா என் ஓட்டை போட்டுட்டு வாரேன்...

    ReplyDelete
  4. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    வடைக்கே வடை போட்டுட்டோமில்ல .//

    இது டூ மச்....ஹி ஹி ஹி...

    ReplyDelete
  5. //விக்கி உலகம் said...
    கொய்யால டீன்னு தானே சொன்னே!//

    எலேய் உனக்கு கண்ணு தெரியாதுன்னு தெரியும், காதுமா...????

    ReplyDelete
  6. டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.// அது சரி அதுல கண்ணாடி போட்டு சும்மா ஹீரோ கணக்கா கீறாரே அவுரு யாரு மாமே..

    ReplyDelete
  7. தினேஷ் திரும்பி வந்தாச்சா? கவிதைகள் தொடரும். அவர் மனைவி, சீக்கிரம் பஹ்ரைன் வர என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  8. விக்கி உலகம் said...

    கொய்யால டீன்னு தானே சொன்னே!
    // எனக்கு வேற சொன்னாரு மாப்ள..

    ReplyDelete
  9. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.// அது சரி அதுல கண்ணாடி போட்டு சும்மா ஹீரோ கணக்கா கீறாரே அவுரு யாரு மாமே..//

    உங்க தம்பி நாஞ்சில்'தான் ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  10. //Chitra said...
    தினேஷ் திரும்பி வந்தாச்சா? கவிதைகள் தொடரும். அவர் மனைவி, சீக்கிரம் பஹ்ரைன் வர என் பிரார்த்தனைகள்.//

    ஹா ஹா ஹா வந்தாச்சு வந்தாச்சு...

    ReplyDelete
  11. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    விக்கி உலகம் said...

    கொய்யால டீன்னு தானே சொன்னே!
    // எனக்கு வேற சொன்னாரு மாப்ள..//

    திருந்தவே மாட்டீங்கலாப்பா...

    ReplyDelete
  12. அஹா..இதுக்கே ஒரு பதிவா..;-))

    ReplyDelete
  13. //சிநேகிதி said...
    அஹா..இதுக்கே ஒரு பதிவா..;-))//

    கல்லை கில்லை கையில எடுத்துராதீங்க மி பாவம்...

    ReplyDelete
  14. அப்ப இன்னிக்கு பார்ட்டினு சொல்லுங்க

    ReplyDelete
  15. அந்த டையில்லாம இருக்க மாட்டீங்களா பாஸ் :-)

    ReplyDelete
  16. //Speed Master said...
    அப்ப இன்னிக்கு பார்ட்டினு சொல்லுங்க//

    அடப்பாவமே.....

    ReplyDelete
  17. //எல்லாநாளும் விரலாலேதானே நம்மை அடிப்பான் இன்னைக்கு எதோ ஒரு திரவத்தை நம்மீது ஊத்துரானே என அலறி அடங்கி மடிந்து போனது என் செல்லம். //

    படிக்க விடுங்களேன் பிளீஸ்:)

    ReplyDelete
  18. //இரவு வானம் said...
    அந்த டையில்லாம இருக்க மாட்டீங்களா பாஸ் :-)//

    டியூட்டிக்கு போகும் அவசரம்ய்யா அதான்....

    ReplyDelete
  19. முதலில் நீதியும்,
    இரண்டாவதில் நியாயமும்
    (நியாயமான எதிர்பார்ப்பும்)
    சொல்லியுள்ளது அருமை.

    ReplyDelete
  20. /ராஜ நடராஜன் said...
    //எல்லாநாளும் விரலாலேதானே நம்மை அடிப்பான் இன்னைக்கு எதோ ஒரு திரவத்தை நம்மீது ஊத்துரானே என அலறி அடங்கி மடிந்து போனது என் செல்லம். //

    படிக்க விடுங்களேன் பிளீஸ்:)//

    எதை....?

    ReplyDelete
  21. ட்ராலிய அங்கேயே விட்டுட்டு வரணுமைய்யா. அதையும் காருல தூக்கி போட்டு ஹோட்டலுக்கு கொண்டாந்துட்டீங்களா ? போலீஸ் யாரும் பாக்கலையே ? பொழச்சீங்க !

    ReplyDelete
  22. மற்றவர்களின் துயரம் உணரவும்
    ஒரு மனம் வேண்டும் ,
    அது உங்களிடம் நிறையவே இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    முதலில் நீதியும்,
    இரண்டாவதில் நியாயமும்
    (நியாயமான எதிர்பார்ப்பும்)
    சொல்லியுள்ளது அருமை.//

    நன்றி நன்றி...

    ReplyDelete
  24. இதுக்கெல்லாமா பிரார்த்தனை செய்யணும்.!? அதெல்லாம் வந்திடுவாங்க பாஸ்..


    டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.//

    அத விடுங்க நாலாவது, ஐந்தாவது போட்டோவுல கண்ணாடி போட்டுட்டு பூச்சாண்டி மாதிரி இருக்கிறது யாரு.?

    ReplyDelete
  25. //கக்கு - மாணிக்கம் said...
    ட்ராலிய அங்கேயே விட்டுட்டு வரணுமைய்யா. அதையும் காருல தூக்கி போட்டு ஹோட்டலுக்கு கொண்டாந்துட்டீங்களா ? போலீஸ் யாரும் பாக்கலையே ? பொழச்சீங்க !//

    நீங்களும் வாங்க உங்களையும் வண்டியோட தூக்கிட்டு வந்துர்றேன் ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  26. பதிவு படிக்கும்போதோ/எழுதும்போதோ காப்பி கொட்டி விட்டால் அதுதான் காப்பிப் பதிவா!?
    தினேஷுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. நல்ல இருக்கு மக்கா, நான் உங்க போட்டோவ சொன்னேன். ஒரு புது புயல் நீதி சொல்ல கெளம்பிடுச்சு சுழட்டி அடிங்க

    ReplyDelete
  28. தல குடும்பத்தை பிரிவது வருத்தமான ஒன்று ... விசா விரைவில் கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் தாருங்கள்..

    ReplyDelete
  29. கீபோர்டு கதையில் நல்லதொரு நீதி சொன்னீர்கள்.. அவ்வையாருக்கு அடுத்தபடியாய்..
    நிறைய எதிர்பார்க்கிறோம் உங்க கிட்ட இருந்து இதுபோன்ற நீதி கதைகளை :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  30. //A.R.ராஜகோபாலன் said...
    மற்றவர்களின் துயரம் உணரவும்
    ஒரு மனம் வேண்டும் ,
    அது உங்களிடம் நிறையவே இருக்கிறது
    வாழ்த்துக்கள்//

    நன்றி...

    ReplyDelete
  31. //தம்பி கூர்மதியன் said...
    இதுக்கெல்லாமா பிரார்த்தனை செய்யணும்.!? அதெல்லாம் வந்திடுவாங்க பாஸ்..


    டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.//

    அத விடுங்க நாலாவது, ஐந்தாவது போட்டோவுல கண்ணாடி போட்டுட்டு பூச்சாண்டி மாதிரி இருக்கிறது யாரு.?///

    ஹிஹிஹிஹிஹி....

    ReplyDelete
  32. //சென்னை பித்தன் said...
    பதிவு படிக்கும்போதோ/எழுதும்போதோ காப்பி கொட்டி விட்டால் அதுதான் காப்பிப் பதிவா!?
    தினேஷுக்கு வாழ்த்துகள்!//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  33. //FOOD said...
    //தம்பி கூர்மதியன் said...
    இதுக்கெல்லாமா பிரார்த்தனை செய்யணும்.!? அதெல்லாம் வந்திடுவாங்க பாஸ்..
    டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.//
    அத விடுங்க நாலாவது, ஐந்தாவது போட்டோவுல கண்ணாடி போட்டுட்டு பூச்சாண்டி மாதிரி இருக்கிறது யாரு.?//
    இதெல்லாம் வால்போஸ்ட் அடிச்சா ஒட்ட முடியும்? பார்த்தாலே தெரியுதுல்லா பஹ்ரைன் பாபா.//

    ஆபீசர், பஹ்ரைன் பாபானு ஒருத்தர் ஏற்கெனவே இருக்கார் ஆபீசர்...

    ReplyDelete
  34. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்ல இருக்கு மக்கா, நான் உங்க போட்டோவ சொன்னேன். ஒரு புது புயல் நீதி சொல்ல கெளம்பிடுச்சு சுழட்டி அடிங்க//

    ஹா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  35. //மதுரை சரவணன் said...
    தல குடும்பத்தை பிரிவது வருத்தமான ஒன்று ... விசா விரைவில் கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் தாருங்கள்..//

    கண்டிப்பாக....

    ReplyDelete
  36. //Lali said...
    கீபோர்டு கதையில் நல்லதொரு நீதி சொன்னீர்கள்.. அவ்வையாருக்கு அடுத்தபடியாய்..
    நிறைய எதிர்பார்க்கிறோம் உங்க கிட்ட இருந்து இதுபோன்ற நீதி கதைகளை :) //

    அப்போ இனி கம்பியூட்டரா....?

    ReplyDelete
  37. உங்கள் போட்டோதான் ஏர்போர்ட்க்கே திருஷ்டி அண்ணா.

    ReplyDelete
  38. ஃபோட்டோக்கள் அருமை! கீபோர்ட் அருகே ரஸ்க் தின்பது மட்டுமல்ல, காஃபி குடிப்பதும் ரிஸ்க் என்பது நீதி!

    ReplyDelete
  39. மனோ அவர்கள் யாருடைய பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க விருப்பம் இல்லாமல் "ஹிஹிஹி.../ஹஹஅஹஹா... என்று சமாளிப்பதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்... ஒரு நாலு பேரையாவது திட்ட வேணாம்....??? என்னையா பிசினஸ் பண்ணுரிங்க? ஒரு தொழில் தர்மம் வேணாம்?

    ReplyDelete
  40. மனோ....நல்ல அனுபவக் குறிப்பு.நன்றி !

    ReplyDelete
  41. காபி கொட்டியும் ஒரு ஓரமா சாட் செய்த மக்கா... நீங்க திறமைசாலி தான்.

    ReplyDelete
  42. இப்போ பாஸ்போர்ட் வாங்குறது பெரிய ரோதனை தான் மக்கா!

    ReplyDelete
  43. உந்தப் பிரிவில் இருந்து தப்பத்தானே உங்க கூட ஜொல்லு விடுறன் மாப்பூ!

    ReplyDelete
  44. காபி போர்ட் – ஹை இது நல்லா இருக்கே…

    தற்காலிக பிரிவு எனினும் அதுவும் துயரம் தான் நண்பரே….

    ReplyDelete
  45. நல்ல தத்துவம் சொன்னீங்க போங்க! என்னது சி பி எருமையா? ஹி ஹி ஹி ஹி! சி பி எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்தான்! அதுக்காக இப்படியா?

    ReplyDelete
  46. //பலே பிரபு said...
    உங்கள் போட்டோதான் ஏர்போர்ட்க்கே திருஷ்டி அண்ணா.///

    கவுத்துபுட்டியே தம்பி அவ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  47. //middleclassmadhavi said...
    ஃபோட்டோக்கள் அருமை! கீபோர்ட் அருகே ரஸ்க் தின்பது மட்டுமல்ல, காஃபி குடிப்பதும் ரிஸ்க் என்பது நீதி!///

    அட இதுவும் நல்லா இருக்கே....!!!

    ReplyDelete
  48. //சரியில்ல....... said...
    மனோ அவர்கள் யாருடைய பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க விருப்பம் இல்லாமல் "ஹிஹிஹி.../ஹஹஅஹஹா... என்று சமாளிப்பதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்... ஒரு நாலு பேரையாவது திட்ட வேணாம்....??? என்னையா பிசினஸ் பண்ணுரிங்க? ஒரு தொழில் தர்மம் வேணாம்?//

    நாசமாபோச்சி போங்க, யோவ் நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா.....?

    ReplyDelete
  49. //ஹேமா said...
    மனோ....நல்ல அனுபவக் குறிப்பு.நன்றி !//


    நன்றி நன்றி........

    ReplyDelete
  50. //தமிழ்வாசி - Prakash said...
    காபி கொட்டியும் ஒரு ஓரமா சாட் செய்த மக்கா... நீங்க திறமைசாலி தான்.//

    ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா என்ன...?

    ReplyDelete
  51. //செங்கோவி said...
    இப்போ பாஸ்போர்ட் வாங்குறது பெரிய ரோதனை தான் மக்கா!//

    ஆமா போல, நம்ம கக்கு'வும் அப்பிடிதான் சொல்லிட்டு இருந்தார்...!!!

    ReplyDelete
  52. //Nesan said...
    உந்தப் பிரிவில் இருந்து தப்பத்தானே உங்க கூட ஜொல்லு விடுறன் மாப்பூ!//

    புரியலையே மக்கா....?

    ReplyDelete
  53. வெங்கட் நாகராஜ் said...
    காபி போர்ட் – ஹை இது நல்லா இருக்கே…

    தற்காலிக பிரிவு எனினும் அதுவும் துயரம் தான் நண்பரே….//

    எல்லாம் சரியாகிடும்....

    ReplyDelete
  54. // டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.//

    அதுல எங்க ஏர்போர்ட் தெரியுது. ரோடு மட்டும் தானே தெரியுது மக்கா ஹி.. ஹி.. #டவுட்டு # (நான் அங்க பல தடவ வந்திருக்கேன் தல! அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அவசியம் வந்து உங்கள பார்க்கணும்!)

    ReplyDelete
  55. // குடும்ப விசா கிடைப்பதால் சந்தோசம்தானே //

    ஆஹா ரொம்ப சந்தோஷம் தல. நம்ம வாழ்த்துகளையும் சொல்லுங்க!!

    ReplyDelete
  56. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    நல்ல தத்துவம் சொன்னீங்க போங்க! என்னது சி பி எருமையா? ஹி ஹி ஹி ஹி! சி பி எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்தான்! அதுக்காக இப்படியா?//

    அவன் ஒரு கழுதையும் கூட ஹே ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  57. //எம் அப்துல் காதர் said...
    // டிஸ்கி : மூணாவது போட்டோ பஹ்ரைன் ஏர்போர்ட்.//

    அதுல எங்க ஏர்போர்ட் தெரியுது. ரோடு மட்டும் தானே தெரியுது மக்கா ஹி.. ஹி.. #டவுட்டு # (நான் அங்க பல தடவ வந்திருக்கேன் தல! அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அவசியம் வந்து உங்கள பார்க்கணும்!)//

    அவசரமா டியூட்டிக்கு போகனுமேன்னு எடுத்த படம்.....


    என்னாது பஹ்ரைன் வாரீங்களா....??? சந்தோஷம், வருமுன் சொல்லிட்டு வாங்கய்யா ஜமாச்சுறலாம்...நீங்க வரும் போது பஹ்ரைன் ஏர்போர்ட் போட்டோ சூப்பரா போட்டுருவோம் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  58. //எம் அப்துல் காதர் said...
    // குடும்ப விசா கிடைப்பதால் சந்தோசம்தானே //

    ஆஹா ரொம்ப சந்தோஷம் தல. நம்ம வாழ்த்துகளையும் சொல்லுங்க!!//

    சரிய்யா சொல்லிர்றேன், நீங்க பஹ்ரைன் வந்தா உங்களை பிக்கப் பண்ண தினேஷும் என்னோடு வருவார்...

    ReplyDelete
  59. மனைவியை பிரிந்து செல்லும் வேதனை என்னவென்று எனக்கு நல்லாவே தெரியும்.//
    முன் அனுபவமா?
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  60. //குணசேகரன்... said...
    மனைவியை பிரிந்து செல்லும் வேதனை என்னவென்று எனக்கு நல்லாவே தெரியும்.//
    முன் அனுபவமா?//

    ஆமாம்...

    ReplyDelete
  61. என்னது சிபி எருமையா....இதை வன்மையா கண்டிக்கிறேன்...
    இப்படிக்கு
    எருமை மன்னிக்கவும் சி.பி-ரசிகர் மன்றம்

    ReplyDelete
  62. //ரஹீம் கஸாலி said...
    என்னது சிபி எருமையா....இதை வன்மையா கண்டிக்கிறேன்...
    இப்படிக்கு
    எருமை மன்னிக்கவும் சி.பி-ரசிகர் மன்றம்//

    ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  63. ஏதேதோ சொல்றீங்க.. உம்ம்..

    ReplyDelete
  64. நீதி : இனி யாரும் கம்பியூட்டர் முன்னாடி எதுவும் அருந்திகொண்டு அமராதீர்கள். எக்கணமும் சிபி போன்ற எருமைகளின் கமெண்ட்ஸ்'களின் அட்டாக்கால், நாம் சிரிப்பது மட்டுமில்லை. கம்பியூட்டரும் பல்லிளித்து விடும். [[ம்ஹும் நாங்களும் நீதி செப்புவோம்ல]]
    //

    எந்த செல்வா தம்பி எங்க போயிட்டு
    அப்ப அப்பா முடியல ராஜா...

    ReplyDelete
  65. sir neenga erukkum photo neengaley kela erunthu top angle edutha photova...na payanthu poiten...avvvv> alaga erukkeenga...

    ReplyDelete
  66. எல்லாநாளும் விரலாலேதானே நம்மை அடிப்பான் இன்னைக்கு எதோ ஒரு திரவத்தை நம்மீது ஊத்துரானே என அலறி அடங்கி மடிந்து போனது என் செல்லம்.//appada antha keybord thappithathu...:))) aanal vera oru keyboard matum ellai naangalum maatikitoom unga anbu pathivill....vaalga engal mano..anja singam vaalga..

    ReplyDelete
  67. ok...rightu..

    valakam pola kalakal postu...

    vaalga valamudan..

    nanbenda

    ReplyDelete
  68. சம்பந்தமே இல்லாம என் பேரை என்ன இதுக்கோசரம் இழுக்கறே.. ராஸ்கல் பிச்சுப்போடுவேன்

    ReplyDelete
  69. மனோ நேர்ல எப்படி இருக்கானோ.. ஆனா ஃபோட்டோல பய புள்ள நல்லாதான் இருக்கான்

    ReplyDelete
  70. மூணாவது போட்டோவில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் நபர் யார்? பரபரப்பு தகவல்கள் விரைவில்.

    ReplyDelete
  71. ரெண்டு நாள் முன்னாடி ஒரு பதிவில், சிபி'யின் கமெண்ட்ஸ் படிச்சிட்டு இருந்தேன் காபி குடித்தவாறே, அவனின் ஒரு கமேண்ட்சை படிக்கும் போது சிரிப்பு பொத்து கொண்டு வெளியே வர,//

    அட, சிபியின் கமெண்ட் தான் இதற்கெல்லாம் காரணமா. இருங்க சிபியை இன்னோர் பதிவு போடச் சொல்லி கம்பியூட்டரையே வெடிக்கப் பண்ணிடுறேன்.

    ReplyDelete
  72. ஆமா, அந்தக் கடைசிப் படத்திலை மழைக்கு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு நிற்பது யாரு. அவ்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!