Saturday, September 10, 2011

கள்ளநோட்டு அச்சடிக்கிறானுங்கடோய்...!!!

2005ம் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் அடங்கிய 'டெம்ப்ளேட்' (template) வெளியில் கசிந்துவிட்டதால் தான் 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகரித்துவிட்டதாக என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு அதிகரித்து வருவது குறித்து சிபிஐ, வருவாய் புலனாய்வுப் பிரிவினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தியது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்போது அதில் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் சங்கேத குறியீடு, வடிவமைப்பு ரகசியங்கள் அடங்கிய 'டெம்பிளேட்' கள்ள நோட்டு அச்சிடும் கும்பல்களின் கையில் எப்படியோ போய்ச் சேர்ந்துள்ளது.

இதைக் கொண்டு தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்தக் கும்பல்கள் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துள்ளன.

கள்ள நோட்டுகள் அச்சடிப்போருக்கு அது எந்த காகிதத்தில் அச்சடிக்கப்படுகிறது, அதற்கு எந்த வகை மை பயன்படுத்தப்படுகிறது, அது எங்கு கிடைக்கும், நோட்டுகளின் மையத்தில் உள்ள சில்வர் பார், வாட்டர் மார்க் வடிவமைபபு போன்ற தகவல்கள் எளிதாகக் கிடைத்து வருகின்றன என்றும் சிபிஐ கூறியுள்ளது.

மேலும் எந்த வகையான மையை, எந்தெந்த அளவில் பயன்படுத்தினால் உண்மையான நோட்டுகளுக்கு நிகராக தன்மையைக் கொண்டு வர முடியும் போன்ற விவரங்களையும் இந்தக் கும்பல்கள் அறிந்து வைத்துள்ளன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த ரகசியம் வெளியில் கசிந்ததில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கக் கூடும் என்று சந்தேகி்க்கப்படுகிறது.
நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் வரை ரூ. 1,69,000 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

டிஸ்கி : நாங்களும் ஒருநாளைக்கு ரெண்டு பதிவு போடுவோம்ல [[சிபி கவனத்திற்கு]]



25 comments:

  1. நாங்களும் 2 ஓட்டு போடுவோம்ல! :)

    ReplyDelete
  2. சும்மா கலக்குங்க மக்களே.....

    ReplyDelete
  3. நாங்களும் ரெண்டு தடவை வருவோம் இல்ல

    ReplyDelete
  4. கள்ள நோட்டு அதிகம் வருவதுக்கு
    இதுதான் காரணமா???? அவ்வ்

    ReplyDelete
  5. அண்ணே, நிரூகிட்ட அந்த ரூவா டெம்ப்ளேட் இல்லையா?

    ReplyDelete
  6. அந்த நோட்டு இருந்தால் எனக்கும் பார்சல் போடுங்கள்!ஹீ ஹீ!

    ReplyDelete
  7. நாங்களும் 2 தடவை வருவோம்ல...

    ReplyDelete
  8. ஏண்ணா!

    அந்த ரகசியத்த தெரிஞ்சி நமக்கும் கொஞ்சம் சொல்லப்பிடாதா?

    முயற்சி பண்ணுங்களேன். நீங்க நண்ணா இருப்பேள்...!

    ReplyDelete
  9. //ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்போது அதில் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் சங்கேத குறியீடு, வடிவமைப்பு ரகசியங்கள் அடங்கிய 'டெம்பிளேட்' கள்ள நோட்டு அச்சிடும் கும்பல்களின் கையில் எப்படியோ போய்ச் சேர்ந்துள்ளது.//

    எவ்வளவு பாதுகாப்பாக வைக்கவேண்டிய விஷயம்,அதெப்படி கவனக்குறைவாக இருக்க முடியும்??

    ReplyDelete
  10. கள்ள ரூபாய் நோட்டுகள் பற்றிய உங்களின் இடுகை உண்மையில் பாராட்டுகளுக்கு உரியது நல்ல செய்திகளை உளவு செய்திகள் போல .. தொடர்க,

    ReplyDelete
  11. ஆமா கள்ளநோட்-ன்னா என்ன ??

    ReplyDelete
  12. அண்ணே சிபிஐல எப்பண்ணே சேந்தீங்க? ஒருவேள அது சிபியோட ஐய்யா இருக்குமோ?

    ReplyDelete
  13. புது டெம்ப்ளேட்டு, புது வேல....... கலக்குறீங்கண்ணே.........

    ReplyDelete
  14. கள்ள நோட்டு புழக்கம் இங்க ரொம்ப அதிகம் மக்கா... சில சமயம் ஏ.டி.எம்.-ல பணம் எடுக்கும்போதே கள்ள நோட்டும் சேர்ந்து வந்துடுது.... :)

    எத்தனை பாதுகாப்பு இருந்தாலும் அடிக்கறவங்க கள்ள நோட்டு அடிச்சுக்கிட்டே தான் இருக்காங்க....

    ReplyDelete
  15. ATM இல் கள்ள நோட்டு வருவதைப் போல கொடுமை வேறு இல்லை. நோட்டு அடுக்கிற (அடிக்கிற இல்ல ) வேலையை வங்கிகள் contract விட்டு இருக்காங்களாம். அந்த புண்ணியவான்கள் செய்வது இது என்கிறார்கள்." அந்த தெய்வமே கலங்கி நின்னா " னு பிரமிளா குரல்ல சொல்லணும் போல இருக்குது

    ReplyDelete
  16. இப்படியும் பிழைக்கிறார்களா பாஸ்,
    கவலையான விடயம், போலீஸார் தீவிர கண்காணிப்பினை அதிகப்படுத்தி இவர்களைக் கைது செய்யனும் பாஸ்>

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!