Saturday, July 23, 2011

நெல்லை பதிவர் [[ரெண்டாவது]] சந்திப்பு தொடர்ச்சி...

பரணி ஹோட்டலில் ஆபீசருக்கு சரியான மரியாதை நெஞ்சில் கை வைத்து வணங்குகிறார்கள்...!!! [[எனக்கும் உடனே பெரிய ஆபீசர்ன்னு என்னை நானே நினைத்து கொண்டேன் ஹி ஹி]] அப்புறமா சாப்பிட கிளம்பினோம், பழைய பாஸ்டான்ட் பக்கம் "ஜென்னத்" ஹோட்டலுக்கு, ஏசி ரூம் போனால் அங்கே சரியாக அமர இடம் வசதி குறைவு ஏன்னா நான்கு பேர் அமரக்கூடிய டேபிள் அது.....



அப்புறம் இடம் மாறி அமர்ந்தோம். சாப்பாடு வந்தது, அடடா தேளி மீன் வறுத்தது, தேளி மீன் கறி, இன்னும் பல பல அயிட்டங்கள் இருந்தாலும், பதிவர்களுக்காக ஆபீசர் ஏற்பாட்டில், ஜென்னத் ஹோட்டல் முதலாளி நண்பர் திவான் [[தாக்கூர் அல்ல ஹி ஹி]] அவர்கள் நேரிடையாக மீன் மார்க்கெட் போயி மீன் வாங்கி....!!!


ஸ்பெஷலாக எங்களுக்காக சமைத்து பரிமாற சொன்னார், அடடா அருமையான சாப்பாடு திருப்தியாக சாப்பிட்டோம் எல்லாரும் [[ மிக்க நன்றி நண்பா]] மெதுவாக ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டோம் பொறுமையாக...அடிக்கடி திவான் வந்து கேட்டு கொண்டே இருந்தார் சாப்பாடு நல்லா இருக்கா, இருக்கான்னு...


சாப்பாடு முடிந்ததும் ஆபீசர் கேட்டார் ஜூஸ் ஏதாவது வேணுமான்னு, எங்கே விஜயன் அண்ணாச்சி பழம் ஜூஸ் சொல்லிருவாரோன்னு பயந்து வேண்டாம் என்று கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னேன் ஹி ஹி... அப்புறம் சூப்பரா பழுத்த வாழைபழம் ஆர்டர் பண்ணி தந்தார்....!!!


மீன் சாப்பாடு கையில் கமகமத்து கொண்டு இருந்தது மனசுக்கும் இதமாக இருந்தது...! சாப்பாடு பரிமாறினவர்களை பாராட்டனும், அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள்...!!! கொஞ்ச நேரம் அங்கே இருந்து பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் ஆபீசர் ஹோட்டல் முதலாளி "திவான்"னை அறிமுக படுத்தினார். நல்ல மனுஷன் நம்ம பதிவுகளை எல்லாம் படிப்பாராம்...[[அய்யோ பாவம் ஹி ஹி]]


அப்புறமா பீடா ஆர்டர் செய்தார் ஆபீசர், பாவம் பணியாளரும் திவானும் அலை அலைன்னு அலைஞ்சும் கிடைக்காமல் போராடி கொண்டிருந்தார்கள்...நாங்க ஏசி ரூமுக்கு வந்து அமர்ந்து கொண்டோம்.....அப்புறமா பீடா கதை பேச்சு நடந்தது, சென்னையில் பீடா சாப்பிட்டு நொந்த கதையை பாபு பேசிட்டு இருந்தார்.


அப்புறமா பீடா வந்து சேரவும் சாப்பிட்டார்கள், நல்ல வேளை மண்டை கிறுகிருக்கவில்லை போலும் ஹே ஹே ஹே ஹே....!!!

ஐயோ புது நண்பர் திவான் பற்றி சொல்லணுமே, ஆண்டவா யாராவது எடக்கு மடக்கா அவருகிட்டே கேள்வி கேட்டு மாட்டிக்காதீங்க தப்புறது மிக மிக கடினம்....!!! அவர் ஹோட்டலுக்குள்ளே நடக்கும் அற்புதமான சம்பவங்களை விவரித்து கொண்டிருந்தார், நான் நம்பவே இல்லை, ஆனால் எனக்கு நேரில் அதை காண்பித்ததும் ஆச்சர்யமாக அசந்து போனேன் நானும் விஜயனும், ஏன்னா ஆபீசர் ஃபிரீ டைம்ல அங்கேதான் இருப்பாராம்....!!! இனி ஊர் போனால் ஜென்னத் ஹோட்டலை விட்டு நகர மாட்டேன் ஆமா.....!!!


ஹோட்டல்ல கிளாஸ் களவாங்குற பொம்பளைங்க, தண்ணி அடிச்சிட்டு வரும் ஆம்பிளைங்க என பல விஷயங்களில் ஒன்று, தொடர்ந்து கிளாஸ் களவாண்ட ஒரு பெண்ணை பொறி வச்சி கையும் கிளாசுமாக பிடித்து விட, அந்த பெண் அசரவில்லையாம், அப்புறமா பொறுமை இழந்த திவான் அவருக்கே உரிய ஸ்டைலில் ரெண்டு அப்பு அப்புனதும், அந்த பெண் நேரே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துருச்சி என்னான்னு...??? என் கையை பிடிச்சி இழுத்துட்டான்னு [[நாகரீகம் கருதி மேட்டரை மாத்திட்டேன்]]


போலீசுக்கு உண்மை தெரிஞ்சதும் அவளை மிரட்டி அனுப்பி இருக்கு....இப்பிடியெல்லாம் நிறைய மேட்டர் அவர் சொல்லும் போது ஆச்சர்யமா இருக்கு ஹோட்டல்னாலே அனுபவங்கள் சூப்பரா இருக்கும் என்பது எனக்கும் அனுபவம்தானே....!!!

அப்புறமா இம்சை பாபு இடையிலேயே எங்களை கழட்டி விட்டுட்டு ஓடிட்டார் [[ஹி ஹி]] நாங்களும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்து விட்டு சந்தோஷமாக விடை பெற்று கிளம்பினோம். ஏ யப்பா சாப்பாடு சாப்பிடனும்னா ஆபீசர் கூட போயி சாப்பிடனும்ய்யா.....!!!! அதான் நம்ம சித்ரா மேடம் சொன்னாங்க ஆபீசர் இருந்தார்னா நம்பி அந்த இடத்தில் சாப்பிடலாம்னு......சரிதானோ.......????


பிரியா விடை பெற்று கிளம்பி, நெல்லை பஸ்நிலையத்தில் நாகர்கோவில் பஸ்சுக்கு செம கூட்டம் ஹி ஹி ஹி ஹி நானும் விஜயனும் பஸ்சில் இடம் பிடிக்க ரவுடியா மாறி புகுந்து ஏறியும் ஹே ஹே ஹே ஒரே ஒரு சீட்தான் கிடைச்சது, அதில் மாறி மாறி அமர்ந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தோம்...விஜயன் மிகவும் ஆச்சர்யபட்டார், ஏன்னா முதன் முதலா பதிவர்களை பார்க்கும் போறோம்னு கொஞ்சம் டென்ஷனாவே இருந்தவர், சந்திப்பை பார்த்ததும் அசந்து விட்டார், ரொம்ப ரொம்ப சந்தோஷபட்டார்....!!! எனக்கும் அதே சந்தோசம்.....!!!


நான் அடுத்த நாள் மும்பை கிளம்புவதாக இருந்ததால், ஆபீசருக்கும் அன்று மதுரையில் மீட்டிங் இருந்ததால் அவரும் நெல்லையில் மும்பை எக்ஸ்பிரசில் என்னோடு வருவதாக சொன்னார். அடுத்த பதிவும் அதை பற்றிதான்.......விருது நகரில் பிரபல பதிவர்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததும் சிபி ஏமாந்து நாறி போனது பற்றியும், பிரயாணம் பற்றியும் ரயிலில் ஆபீசர் செய்த அடாவடியையும் சொல்லப்போறேன் ஹே ஹே ஹே ஹே...!!!

டிஸ்கி : எலேய் தமிழ்வாசி மக்கா உம்மை இந்த தடவையும் என் மச்சினன் தேடினான் ஹே ஹே ஹே ஹே.........!!!

நன்றி : ஆபீசர் அண்ட் நண்பன் திவானுக்கும்........

டிஸ்கி : நிறைய போட்டோ ஆபீசர் பிளாக்கில் சுட்டது ஹி ஹி....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!