காலையில டியூட்டிக்கு வரும்பாதையில் ஒரு லிப்டன் டீக்கடை இருக்கு, டீ நல்ல மணமாக இருக்குமென்பதால், ஒரு டீ ஆர்டர் பண்ணி குடித்துக்கொண்டிருந்தேன்...
என்னை மலையாளி என்று நினைத்து இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்...
பேச்சு அப்படியே அரசியல் பக்கமா போச்சு...காதை கூர்மையாக்கினேன்...
அதிமுக, திமுக, எல்லாம் வேஸ்ட்டு, வெள்ளப்பாதிப்புல இவங்க உடனே வந்து செயல்படவோ, மக்களுக்கு உதவவோ செய்யவேயில்லை, கடைசியில்தான் வந்தாங்க, வந்தாலும் ஒன்னும் உருப்படியா செய்யல ஆனால்...
த மு மு க கட்சிகாரங்க ஆரம்பத்துல இருந்து கடைசிவரை ஓடி ஓடி உதவினார்கள், சாப்பாடு, தண்ணீர், துணிமணிகள் என்று அவர்கள் உதவியதை மக்கள் நன்றியோடு மனதில் வைத்திருக்கிறார்கள்...
கண்டிப்பாக சென்னை, அதிமுக'வுக்கோ திமுக'வுக்கோ சாதகமா இருக்காது'ன்னு சாதாரணமா பேசிட்டு இருக்காயிங்க !
சரி இவங்க ஊர் எந்தப்பக்கம்ன்னு காதைக் கொடுத்தா...முதுகுளத்தூர்...!
//திமுக..... ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் குடுக்குற நியூஸ் இன்னிக்கு இவங்க பார்க்கலை போல\\
//அடுத்து அதிமுக என்னவெல்லாம் குடுக்கப் போகுதுன்னு பார்ப்போம்\\