ஒரு அழகானப் பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை உணர்ந்தாள்,
பயந்தாளா?? அதான் இல்லை! நவீன உலகத்து பெண், தன் அன்னையிடம் செய்தியை சொன்னாள்.
அவளுடைய அன்னை மிரண்டு போனதுடன், அதீத கோபத்துடன், காட்டுக் கத்தலுடன் அவளிடம் கேட்டாள்,
"உன்னுடன் பழகும் எந்த பன்றி இந்த காரியத்தை செய்தது?"
"இரு, நானும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று அமைதியாக சொன்னவள்: தன் கைபேசியை எடுத்து பேசினாள்,
அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில்,மிகவும் விலை உயர்ந்த சிவப்பு கலர் பெராரி கார் வந்து நின்றது, அசத்தலான தோற்றத்துடன் ஒரு இளஞ்சன் வண்டியை விட்டு இறங்கினான், விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தான், ஊரையே தூக்கும் அளவுக்கு நறுமணம் அவனுடன் சேர்ந்து வந்தது, வீட்டுக்குள்ளே பவ்யமாக வந்தான்.
வந்தவன், அந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் அவளுடன், வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தான்,
சற்றும் யோசிக்காமல், கவலை படாமல், பேசினான்,
"உங்கள் பெண் சற்று முன் என்னுடன் தன்னுடைய புது பிரச்சினையை சொன்னாள்.
நான் என்னுடைய சில சொந்த மற்றும் குடும்ப பிரச்சினைகளால் நான் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது, ஆனாலும் நடந்த தவறுக்கு நான் பொருபேர்கிறேன்,
பெண் குழந்தை பிறந்தால், அடையாறில் ஒரு பங்களா, அண்ணா சாலையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி வைப்பு தொகை தருகிறேன்.
"ஆண் குழந்தை பிறந்தால், வாரிசு சிக்கல் வரகூடாது, சென்னை புற நகரில் எங்களுக்கு உள்ள தொழிற்சாலைகளில் இரண்டை எழுதி தருகிறேன், இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்பு தொகையாக தருகிறேன்"
"இரட்டை குழந்தைகள் என்றால், சொன்னவற்றை இரண்டு மடங்காக தருகிறேன்"
"அதே சமயம், இடையில் கர்ப்ப சிதைவு ஏற்ப்பட்டாலோ அல்லது குழந்தை பிறப்பு சிக்கல் ஆகி, குழந்தை உயிருடன் பிறக்காவிட்டாலோ, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இந்த இடத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்த பெண்ணின் தந்தை, எழுந்து நின்று, அவனுடைய தோளில் ஆறுதலாக தட்டி கொடுத்து விட்டு சொன்னார்..
என்ன சொன்னார்?
கீழே உள்ளது . படித்து பாருங்கள்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"You can try again !!!"
##########################௩####௩#######
[
எழுதிய நண்பருக்கு நன்றி]