Monday, February 4, 2013

எங்கேப் போனாலும் உன்னை விடுறாப்ல இல்லை...!

வேலையில் சில மனத்தாங்கல் டேமேஜருக்கும் எனக்கும், அதனால் சில பிரச்சினைகள் இருந்த வேளைகளிலும், சிலபல ரிலாக்சான விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது, இது அன்பா..அல்லது...நம்மை இன்னும் கலங்கவிடாது காக்கும் தெய்வத்தின் கருணையா புரியவில்லை, கீழே படியுங்கள்...

திடீரென என் மொபைல் அலற, எட்டிப்பார்த்தால் ஆபிசரின் நம்பர், அலறிப்புடைத்துக்கொண்டு எழும்பி வணக்கம் ஆபீசர் என்று சொன்னதும், "உடனே திருநெல்வேலி கிளம்பி வாங்க" என்று சொல்லி கட் பண்ணிவிட....

ஓடுகிறேன் நெல்லையை நோக்கி, விஜயனைக்கூட கூப்பிடாமல் ஓடுகிறேன்....

நெல்லையில் பலமான வரவேற்புடன் ஏனைய ஆபீசர்களுடன் நின்று என்னையும் அழைத்துப்போனார் ஆபீசர், சரி வீட்டுக்குத்தான் கூட்டிட்டு போறார்னு நினைத்தால், அவர் கூட்டிப்போனது கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்களை பிடித்து உதைத்து உள்ளே தள்ளுவதற்கு...!
எங்கள் ஆபீசர்.

நடுகாட்டில் போயி அலெக்ஸ் பாண்டியன் [[ரஜினி]] ஸ்டைலில் சண்டைபோட்டு துப்பாக்கி சூடெல்லாம் நடத்தி எல்லாரையும் ஆபீசர் தலைமையில் கைது செய்து கொண்டு வந்து ஜெயிலில் அடைத்தபின்தான் வீட்டிற்க்கே கூட்டிப்போனார் ஆபீசர்.

வீட்டில் சாப்பிட்டுவிட்டு அடுத்த ரெய்டு அல்வா கடையை நோக்கி, அங்கேயும் தப்பி ஓடியவர்களை ஓட விட்டு விரட்டி பிடித்தோம் பலபேரை...

இதில் பெரிய ஆச்சர்யம் என்னவெனில், ரெய்டு போனவர்கள் எல்லார் கையிலும் அருவாள் இருந்ததுதான்...எல்லாருக்கும் ஆபீசர் ரெண்டு ரெண்டு அருவாள்களை கொடுத்து இருந்தார்.

ஒருத்தன் மட்டும் கையில் சிக்காமல் போக, ஆபீசர் என்னைப்பார்த்து கண்ணைக்காட்ட, அவனை விரட்டி போனேன், அவன் தாமிரபரணி ஆற்றுக்குள் குதிக்க நானும் குதிக்க, தண்ணீரில் இருந்து மேலே எழும்பினவன் அருவாளை எடுத்து என் கழுத்தில் வீச.....ஆத்தீ என்று கத்தினால்....

நான் கட்டில்ல எழும்பி உக்காந்து இருக்கேன் அம்புட்டு குளிரிலும் வேர்த்துபோயி காலும் கையும் கடகட...அவ்வ்வ்வ்...... "கனவு....."

உடனே ஆபீசருக்கு போனை போட்டுறலாம்னு போனை எடுத்தால் மணியோ இரவு நடுநிசி [[இந்தியா]] சரி காலையில் போன் பண்ணலாம்னு டியூட்டிக்கு வந்துட்டேன்.
-----------------------------------------------------------------

வேலைக்கு வந்ததும் ஆடிட்டிங் எல்லாம் முடித்துவிட்டு மெல்ல மெயில் செக் பண்ணலாம் என்றால் அங்கே, "வலைச்சரம்" சீனா அய்யாவின் அழைப்பு...! ஆஹா தப்பிக்க முடியாதுடா மனோ இந்தத்தடவை என்று நல்லாவே புரிஞ்சு போச்சு...
சீனா அய்யா.

சரி அய்யாவுக்கு மெதுவா போனைப்போட்டு எஸ்கேப் ஆகிறலாம்னு, போன் செய்தால்...அவர் குரலும் அந்த தெய்வாதீகமான முகமும் நியாபகத்திலும், காதிலும் வந்து செல்ல....அவர் சொன்னதை செய்கிறேன் அய்யா என்று சொல்லி விட்டேன்....ஆம் "வலைச்சரம்" ஆசிரியர் என்னும் வரலாறு என் பக்கமாக தனது கலங்கரை விளக்கை சுழட்டி, என்னை லைம் லைட்டில் கொண்டு வர இருக்கிறது...!
--------------------------------------------------------------------

சரி ஆபீசருக்கு போன் பண்ணிருவோம்னு நினச்சி போன் பண்ணினேன், "ஹலோ ஆபீசர் வணக்கம்"

"வணக்கம் மனோ எப்பிடி இருக்குறீங்க நலமா..?"

"நலம் ஆபீசர், இப்போ நீங்க எங்கே இருக்குறீங்க சென்னையிலா நெல்லையிலா...?"

"நான் இப்போ மதுரை தாண்டி விருதுநகர் பக்கமா ரயிலில் குடும்பமாக, ரயில் ஒன்னரைமணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கி[[றோம்]]றது..."

"ஓஹோ, சும்மாதான் போன் பண்ணினேன் ஆபீசர் நேற்று ஒரு சொப்பனம்..."

"ஹா ஹா ஹா ஹா..." [[ம்ஹும் சிரிப்பை பாருங்க]]

"சென்னையில குடும்பமாக பல கோவில்களுக்கு போனது மட்டுமில்லாமல், ஆபீசியல் விஷயமான மீட்டிங்களில் கலந்துகொண்டு அசத்திவிட்டு வருகிறேன்.."

ஒன்னு மட்டும் நல்லா புருஞ்சுது, ஆபீசருக்கு நல்ல அலைச்சல் என்று, நெல்லை வந்ததும் பணி சுமை கூடி இருக்கும்...அதுவும் நல்லதே...வாழ்த்துக்கள் ஆபீசர்...!
-------------------------------------------------------------------
ஓரத்துல தண்ணீர் குடிப்பதுதான் "தமிழ்வாசி"பிரகாஷ், சம்பத், "சின்னவீடு"சுரேஷ் ஆபீசர் வீட்டு திருமணத்தில் எடுத்த போட்டோ.

சரி மதுரை என்றதும், "தமிழ்வாசி"பிரகாஷ் நியாபகத்துக்கு வர அடிலேய் மக்கா போனை அவருக்குன்னு போன் போட்டதும் அவரே "என்ன மக்கா நலமா...?"

"ஆமாய்யா நல்லா இருக்கேன் நீங்களும் குடும்பமும் நலமா...? புது வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சுதா இன்னும் இருக்கா...?"

"நலம் நலம், இன்னும் கொஞ்சம் மராமத்து வேலைகள் இருக்கு ஒருவாரத்துல முடிஞ்சிரும்"

"ஆமா இப்போ எங்கே இருக்கீங்க வீட்டுலேயா வேலையிலேயா...?"

"ஆமா வீட்டுல வேலையில இல்ல இல்ல ரோட்டுல இல்ல பஸ்டாப்புல இல்ல பஸ்ல...."[[நாசமாபோச்சுபோ]]

"யோவ் என்னாச்சு...?"

"வேலைக்கு போயிட்டு இருக்கேன் மக்கா..."

வலைச்சரம் பற்றி கொஞ்சம் சொல்லிட்டு, கேட்டுட்டு அவரையும் விட்டேன் அப்பாலிக்கா வாரேன்னுட்டு.
--------------------------------------------------------------

மறுபடியும் திடீரென போனடிக்க, எட்டிப்பார்த்தால் மலேசியா டெரர் "என் மனவானில்"செல்வி டீச்சர், ஆத்தாடீன்னு போனை எடுக்க..."ஹலோ யாரு மனோ"வா" [[எனக்கு போன் பண்ணிட்டு கேள்வியா யாருன்னு அவ்வ்வ்வ் ]]
"என் மனவானில்"செல்வி டீச்சர் 

"ஆமா என்னை மனோ'ன்னுதான் சொல்வாயிங்க எப்பிடி வீட்டுல எல்லாரும் நலமா டீச்சர், கனி, வாசன், வீட்டய்யா எல்லாரும் நலமா...?"

"ஆமா ஆமா நலம் நலம்..." [[ஆஹா என்னமோ கடுப்புல இருந்தாப்ல இருக்கே]]

"மனோ நான் இப்போ உங்க ஊருக்கு வந்துட்டு இருக்கேன், அங்கே நாப்பத்தி ஒரு இஞ்ச் டீவி ஸ்பெஷல் ஆஃபர் போட்டுருக்காங்களாம், எங்க ஸ்கூலில் சொன்னார்கள் அதான் வந்துட்டு இருக்கேன் அவசரமாக, உடனே ஏர்போர்ட் வந்து என்னைக்கூட்டி செல்லவும் கடைக்கு.."

"சரிங்க டீச்சர்...." மனதுக்குள் இன்னைக்கு என் பர்ஸ் பழுக்க காஞ்சிருமோ, மருமகளுக்கு இன்னும் சீர்வரிசை வந்து சேரலைன்னு [[நாத்து நட்டாயா களை பறித்தாயா ஸ்டைல்ல]] ஜாக்சன் துரை மாதிரி கேட்டு வாளை உருவிறக்கூடாதே...

எப்பிடியோ மாட்டுவண்டி ச்சே கார்பிடித்து கடைக்கு கூட்டிப்போனால் டிவி கடை ஓனர் நம்ம நடிகை காந்திமதி போல வெற்றிலை சுவைத்துக் கொண்டு இருக்க, டீச்சர் என்னை முறைக்க..."இதுதான் அந்தக்கடை டீச்சர்" கையை கட்டிக்கொண்டு சொன்னேன்.

"சரி சரி டிவி'யை காட்ட சொல்லுங்க மனோ"

"அக்கா அந்த நாப்பத்து ஒன்னு....."சொல்லி முடிக்குமுன்...

"ஒ அதுவா....அதோ அந்த வெத்தலை கட்டுக்கு கீழே இருக்கு பாரு" [[வெற்றிலை கட்டா...]]

எட்டிப்பார்த்தால் ஒரு அழுக்கு படிந்த 1897 ஆம் ஆண்டு வெளிவந்த[!] டிவி இருப்பதைப்பார்த்து நானும் டீச்சரும் ஜெர்க்காகி வெளியே ஓடிவர....

கடை ஓனரை சமாளிக்கனுமேன்னு கடையை விட்டு வெளியே வரும்போது டீச்சரிடம் நான் சத்தமாக...

"டீச்சர் இந்த கருப்பு அக்கா கடையிலதான் நாங்க எல்லாரும் சாமான்கள் வாங்குவோம் ரொம்ப நல்லவிங்க" என்று சொல்லி நாங்கள் வெளியே வரவும், கடை ஓனர் சத்தமாக....

"டேய் யாரைப்பார்த்துடா கருப்புன்னு சொன்னே எடுபட்ட பயலே....நீதாண்டா அண்டங்காக்கா மாதிரி கருப்பா அழகா இருக்கே"ன்னு கத்த...டீச்சர் சிரிச்ச வேட்டு சிரிப்பில் மார்கெட் அதிர....நானும் அவ்வ்வ்வ்வ் என்று சிரிக்க....

கட்டில்ல எழும்பி உட்கார்ந்து தனியா சிரிச்சுட்டு இருக்கேன் அவ்வ்வ்வ்வ்வ்....இங்கேயும்..."கனவு...!"

ஒன்னு நம்மளை சிரிக்க வைக்குறாயிங்க இல்லைன்னா நம்மளை வச்சு அவிங்க சிரிக்குறாயிங்க அடபோங்கப்பா ஹா ஹா ஹா ஹா...

இதுல என்னா விஷேசம்னா...என் மனதின் டென்ஷன் எல்லாம் பஞ்சாக பறந்தேபோச்....!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!