Friday, December 30, 2011

நாட்டு நடப்புகள்...!!!

ஐதராபாத்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே காரணம். இன்றைய கிராமத்து பெண்கள் நாகரீக ஆடைகளை அணிகின்றனர் என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்....!!![[ அப்போ நடிகைகள் போடுற டூ பீஸ் ஓகேவா கொய்யால...]]

சென்னை: ஒரு நாள் சில மணி நேரம் அடித்த தானே புயல் தாக்கத்தில் கடலூர் மாவட்டம், புது்‌ச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ‌கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதங்கள் காரணமாக பலரும் பாதிப்பில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீள மு‌டியாமல் தவித்து வருகின்றனர். கடலூரில் 21 பேர் உயிர் இழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ‌தெரிவிக்கின்றன. இங்கு ‌மினசாரம் , தொலை தொடர்பு துணடிக்கப்பட்டிருப்பதால் மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட சேதங்கள் குறி்த்து இன்னும் முழு தகவல்கள் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் 8 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில்2 பேரும், சென்னையில் 3 பேரும் ஆக மொத்தம் 36 பேர் பலியாகியிருக்கின்றனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


[[ஒன்னு மழையே பெய்யாமல் மக்களை கொல்லவேண்டியது, இல்லை மழை பேஞ்சே மக்களை கொல்லவேண்டியது, இயற்கையே பொறுமையாக இரு]]

சென்னை: தானே புயல் காரணமாக நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து மணி முத்தா, கோமுகி, விடூர் அணைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 3990 குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழாவரம் ஏரிகள் மூடப்பட்டுள்ளன நேற்று தானே புயல் காரணமாக புழல் ஏரி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம், பூண்டி, ஏரிக்கு விநாடிக்கு 1200 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது, புழல் ஏரிக்கு விநாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தண்ணீரை தேக்கிவைக்கும் பொருட்டு ஏரிகள் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


[[நல்லதே நடக்கட்டும்]]

திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரியில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.தானே புயல் கரைகடந்து வழுவிழந்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மற்ற கடலோர மாவட்டங்களான கடலூர், திருவாருர், நாகை பகுதியில் மழை படிப்படியே குறைந்து வருகிறது.


[[ஹலோ ஆபீசர், குளிக்காமல் சுத்திட்டு திரியும் இம்சை அரசனையும், திவானந்தாவையும், சண்முகபாண்டியனையும், கே ஆர் விஜயனையும் பெல்டால் விளாசி குளிக்க சொல்லுங்க]][[எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா மேடம், கஞ்சா கேஸ் உண்டா...!!!]]

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்ற இளங்கோவன் நிலைபாட்டுக்கு, மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். 


[[ விடுங்கய்யா விடுங்கய்யா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!!]]

இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.


[[பின்னே ஒரு கேப்டனை பார்த்தே பாகிஸ்தான் வாலை சுருட்டிட்டு இருக்கு, அப்புறம் சைனாவுக்கு நம்ம பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அண்ணனின் ஒரு படமே போதுமானதுன்னு சைனாவுக்கு தெரியாதா என்ன...?]]

மயில்,தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது போல், லாலு பிரசாத் யாதவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., எம்.பி., சத்ருகன் சின்கா, நகைச்சுவையாக பேசினார்.


[[அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே இதென்ன சினிமாவா...?]]

இல்லானை இல்லானும் மதிக்காதது மாறி

உள்ளானை உள்ளான் மதிப்பது மாறி 

இல்லானை உள்ளானும் 

உள்ளானை இல்லானும் 

மதிக்க கற்றுக்கொள்வோம்...!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தெரிவித்து கொள்கிறேன்...!

கடலூரில் புயல் மழையாக இருப்பதால், கரண்ட் கட் பத்துநாளைக்கு இருப்பதால் பதிவுலகம் வரமுடியாது என்பதை "நாய் நக்ஸ்"நக்கீரன் அண்ணன் பதிவுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்த சொன்னார்.......!!!

Thursday, December 29, 2011

சில ஆச்சர்யங்களும் முரண்பாடுகளும்.....!!!

௧ : நரைச்ச முடியையும், வளரும் நகங்களையும் நறுக்காமல் இருக்க இயலாது...!!!௨ : நான்கு பேருக்கு நல்லதுன்னா அருவாள் எடுக்கலாம்னே தோணுது [[ம்ம்ம்ம் மும்பை எப்பெக்ட்டு]]

௩ : முகத்தில் பூசும் பவுடர் காதுக்கும் கொஞ்சம் ஈயப்படும்...!!!


௪ : தண்ணி அடிக்கிறவன் தண்ணியில சாவான்...!!![[அளவா குடிச்சிட்டு நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க யாரையும் டிஸ்டப் பண்ணாமல்]]


௫ : கழுதைக்கு குதிரை வாலை வச்சாலும், கழுதை கழுதைதான்...!!!


௬ : கன்யாகுமரில பி ஏ படிச்சுட்டு டீ கடை நடத்தும் நண்பன், அதே பி ஏ மும்பையில படிச்சுட்டு பஹ்ரைனில் ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு கசின் [[அசின் அல்ல]]


௭ : லோகோ'வில் எனக்கு கருப்பு கலர் இருந்தால்தான் கண்ணுக்கு தெரிகிறது, அதே கணினியில் வெள்ளை கலர் இருந்தால்தான் என் நண்பனுக்கு தெரிகிறது...!!!


௮ : முல்லைப்பெரியார் பற்றி மௌனமாக இருக்கும் திரையில் வீரம் பேசும் நடிகர்கள்...!!!


௯ : பஹ்ரைனில் கலவரத்தின் போது, கண்ணீர் புகைக்குண்டு வெடிக்க தெரு நாயுடன் சேர்ந்து ஓடிய நண்பன்...!!! [[நாயா இருந்தாலும் மனுஷனுமா இருந்தாலும் உயிர் ஒன்றுதான் இல்லையா]]


௰ : பசிக்கிறது என்று சொன்னதும் உடனே சாப்பிட கூட்டிப்போகும் நண்பன்...!!!


௧௧ : காய்கறிகளையும் அசைவத்தையும் சரி சமமாக சாப்பிடும் பங்களாதேசிகள்...!!!


௧௨ : நெய்யாறு அணை விரிசலை கண்டுக்காத கேரளாவும் தமிழகமும்...!!!


௧௩ : அழிந்து வரும் வயல்வெளிகள்....!!!


௧௪ : போராடி கூட்டம் சேர்க்கும் அண்ணன் வைகோ, அவைகளை ஓட்டாக மாற்ற தெரியாத சூட்சுமம்...!!!


௧௫ : பதிவுலகிலும் அரசியல்....!!!


௧௬ : அணு உலை விபத்தை, விமான விபத்தை சுட்டி காட்டி வியாக்கியானம் பேசும் நல்லவர்கள்...!!! அதாவது மெத்த படித்த மேதாவிகள் [[அப்துல்கலாம் அல்லன்னு நான் சொன்னால் நம்பனும்]]


௧௭ : கமலின் மருதநாயகம்...!!!


௧௮ : ரஜினியின் அண்ணா ஹசாரே ஆதரவு....!!! [[இதை ஆரம்பத்துலே செய்து இருந்தால் உங்களை மக்கள் தலையில் வச்சி கொண்டாடி இருப்பாங்களேய்யா ஸோ ஸாரி டூ லேட்]]


௧௯ : அம்மா, சின்னம்மா பிரிவு...!!! [[சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் நம்பமாட்டேன்]]


௨௦ : ஈராக்கில் இருந்து ஓட்டு மொத்த ராணுவமும் திரும்ப பெறப்பட்டது - அமெரிக்கா [[ஈராக்கில் அமெரிக்கன் தூதரகத்தில் ஐம்பதாயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் - ஈராக் நண்பன் சொன்ன தகவல்]]


டிஸ்கி : முல்லைப்பெரியாருக்காக நடிகர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை என்று உணர்ச்சி வசப்பட்டு கோபபட்டு பொங்குறவிங்க எல்லாம் கீழே உள்ள லிங்க் போயி பார்த்து நெஞ்சை பிடிச்சுக்கொங்க....


Wednesday, December 28, 2011

இவ்வருடத்தில் நான் பெற்ற இன்பதுன்பங்களும் தொடர் மற்றும் எனது 400 வது பதிவும்...!

அன்புக்குரிய வலைப்பக்க நண்பர்களே வணக்கம் [[ஆமா இவரு பெரிய பாரதிராஜா]] தமிழ் கூறும் வலைப்பக்கம் நண்பர்களுக்கு என் நன்றிகள் முதலில்...மொக்கையாகவும், ஜாலியாகவும், சிரிப்பாகவும், கோபமாகவும், என் அனுபவங்களையும் தொடர்ந்து எழுதி [[கொன்னு]] வருகிறேன்.Photobucket

           உங்கள் ரசிப்புதன்மையை [[சகிப்புத்தன்மை]] கண்டு மனம் மகிழுகிறேன், உங்கள் மேலான அன்பின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி [[என்னடா சொல்லவர்ற]] என்னை வாழவைத்த, இம்புட்டு நண்பர்கள் கிடைக்க செய்த என் உயிரினும் மேலான என் தாய்த்தமிழுக்கு, என் உயிர் தமிழுக்கு என்னை சமர்ப்பிக்கிறேன்.


ஆம் நண்பர்களே இது எனது "௪௦௦"வது [[400]] பதிவு....!!! பதிவுலகம் வந்து இரண்டு வருடம் தாண்டிவிட்டேன், இப்போது எனக்கு உலகெங்கும் நண்பர்கள், நெஞ்சம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது உங்கள் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி, தமிழால் ஒன்றிணைந்தோம் தேன்தமிழுக்காய் வாழுவோம் நன்றி....!!! இன்னும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் பதிவுகளை நன்றி...!!!
-------------------------------------------------------------------------------------------------

இந்த வருடத்தில் நான் பெற்ற இன்பம் துன்பங்களை தொடராக எழுதி, அந்த தொடர் அழைப்புக்கு [[விடமாட்டாங்களோ]] என்னையும் அழைத்த நண்பன் ராஜாவும், மற்றும் என் தங்கச்சி ராஜி'யின் அழைப்பையும் ஏற்று இந்தப்பதிவு....


படித்ததில் பிடித்த புத்தகம் : சொன்னால் நம்புங்க ஒரேநாளில் நூறுக்கும் மேற்ப்பட்ட பதிவுகளை படிப்பதால் [[கமெண்ட்ஸ் போடுவதால்]] புத்தகம் சுத்தமாக இந்த வருடம் வாசிக்க முடியாதது வருத்தமே...!!


பிடித்த பாடல் : காஞ்சனா பாடல்கள் எல்லாம்....


ரசித்த படம் : காஞ்சனா, எழாம் அறிவு [[போதி தர்மனை காட்டியமைக்கு]]

[[பன்னிகுட்டி மன்னிச்சு]]

உருகிய படம் : வேலாயுதம் [[அவ்வ்வ்வ்வ் முடியலை]]

[[கீழே போட்டுறாதேடா தங்கத்தை]]

சிரித்த படம் : அதே வேலாயுதம்தான் தமிழனின் தலை எழுத்தை எண்ணி....!!!


சென்ற இடம் : திருநெல்வேலி பதிவர் சந்திப்பும், நண்பன் சிபி, கோமாளி'செல்வாவுடன் சுற்றுலா போன குற்றாலம்.


வாங்கிய பொருள் : அதான் எல்லாருக்குமே தெரியுமே ஹி ஹி அமெரிக்கன் சோனி லேப்டாப்...!!!

புதிய நண்பர்கள் :
பேசியவர்கள் : வீடு"சுரேஷ், நக்கீரன், மனசாட்சி பஜ்ஜிகடை, தங்கச்சி ராஜி, சம்பத், மெட்ராஸ் பவன் [[ஏற்கனவே நண்பனாக இருந்தாலும் போன்ல இப்போதான் பேசினேன்]] இன்னும் நிறைய பேர் இருக்காங்க....


பேசாதவர்கள் : கேபிள் சங்கர் அண்ணன், டைரக்டர் செல்வகுமார், துபாய் ராஜா, பன்னிகுட்டி, டெரர் குரூப்ல கொஞ்சம் பேர் இன்னும் இருக்காங்க......


சாதனை : உலகம் முழுவதும் நண்பர்கள் உதாரணம், போன தடவை நான் ஊர் வந்தபோது எனது போன் நம்பரை பதிவுலக நண்பர்களுக்கு கொடுத்துட்டு, தூங்கமுடியாம நான் பட்ட அன்பு தொல்லை, என் வீட்டம்மா மிரண்டு போனாள் பாவம், உலகெங்கும் இருந்து போன் வந்துட்டே இருந்தது இதில் நண்பன் நிரூபனும் உண்டு, நான் யாருன்னு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமான்னு போட்டு கலாசி எடுத்த நண்பர்களை பெற்றது மகா சாதனை...!!!


மிக பெரிய சந்தோஷம் : ஆபிசரின் நட்பும், நண்பன் கே ஆர் விஜயனின் நட்பும், தங்கை கல்பனாவின் அளவில்லா பாசமும், ராஜி தங்கச்சியின் அன்பும், விக்கி, சிபி, இம்சை அரசன், நிரூபன், காட்டான், சிவகுமார் [[மெட்ராஸ் பவன்]] சம்பத், வீடு' சுரேஷ் யப்பா சொல்லிட்டே போகலாம், என்ன......குடும்ப உறவுகள் போல மனசுக்கு ஆறுதலா இருக்கிறார்கள் அதைவிட வேறென்ன சந்தோசம் வேணும் சொல்லுங்க...?


வருத்தம் : வருத்தம் என்று சொல்வதை விட கவலைன்னு சொல்லலாம், என் நண்பனின் மரணம், என் மகனின் நண்பனின் மரணம், நண்பர்களின் அக்காவும், தங்கையுமான லட்சுமியின் மரணம், எங்கள் சபை போதகரின் மரணம், நம்ம ஆபிசரின் அம்மாவின் இயற்கை எய்தல்.


ஆச்சர்யம் : பதிவுலகில் வந்து இரண்டு ஆண்டுக்குள் இத்தனை நண்பர்களை சம்பாதித்தது....!!!


டிஸ்கி : ஒ தொடர் பதிவுக்கு ஆளை கூப்பிடனுமோ.....ஓகே ஓகே....

கள்ளப்பட்டி கருப்பசாமி
வண்ணார்பேட்டை வணங்காமுடி
ஜெயிலர் ஜென்னிஸ் பவுல்
மும்பை டான் [[ஆமா இவங்கல்லாம் யாரு]]

டிஸ்கி : நான் ரசித்த பதிவர்களுக்கு [[பதிவுகளுக்கு]] நாஞ்சில்மனோ அவார்ட் ரெடி ஆகிக்கொண்டு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், புத்தாண்டு அன்று வெளிவருகிறது முதல் பாகம்....!!!

டிஸ்கி : நாஞ்சில்மனோ 400 என கிராபிக்ஸ் செய்து தந்த நண்பன் "வீடு"சுரேஷ்குமாருக்கு நன்றி...!!!

Tuesday, December 27, 2011

பேஸ்புக் மன்னர்களின் கலக்கல் கும்மி.....!!!ஆஹா இந்த வீடியோ கிளிப்பை பாருங்க அழகிரி என்னே ஒரு கொலைவெறியா பார்க்குறாருன்னு ஹா ஹா ஹா ஹா முடியல சாமீ முடியல....!!!

ம்ம்ம்ம் அப்பிடியே நான் ரசித்தவைகளை நீங்களும் ரசிக்க வாங்க, எல்லாம் பேஸ்புக் மன்னர்கள் கும்மியது.....!!!!


கருப்பு சட்டை போட்டுட்டு கண்ணு பட கூடாதுன்னு கருப்பு கண்ணாடி போட்டுட்டு களையா அர்ரெஸ்ட் ஆனாரு எங்க கருப்பு சிங்கம். வீரபத்ரன்ல இருந்து வாசிம் கான் வரை எத்தனையோ பேர துவம்சம் பண்ணுன தலைவன எவ்ளோ தைரியம் இருந்தா நேத்து அரெஸ்ட் பண்ணி இருப்பிங்க.

இயற்கைக்கே பொருக்காம புயல் சின்னம் கிளம்பிருச்சு.


-------------------------------------------------------------------------------------------------------------

நெட் ல புல்லா தேடி பார்த்துட்டேன் 250 நாள் ஓடிய லத்திகா படம் லிங்க் கிடைக்க மாட்டிக்கு DVD கேட்ட கடக்காரன் எதோ ப்ளூ பிலிம் கேட்ட மாதிரி மேல
கிழயும் பார்கிறான்.தமிழகம் என்ன தவம் செய்ததோ இப்படி ஒரு நடிகனை பெறுவதற்கு.....
-------------------------------------------------------------------------------------------------------------

ரெண்டு செட் பூரி -50ரூபாய்
#போதையில உள்ள வந்துட்டேன்..செத்தாலும் இனி உன் கடைக்கு வரமாட்டேன்யா!

ஐம்பது ரூபாய்க்கு 10இட்லியும்,6பூரியும்,2தோசையும் சாப்பிட்ற வயிறுய்யா இது...


------------------------------------------------------------------------------------------------------------

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
தொகுப்பான் சிலர் அதைச் சுவப்பதில்லை
தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை.
#டெலிகேட் டூ காங்கிரஸ்.


-------------------------------------------------------------------------------------------------------------

Raajakumaran Shanmugam
உலகிலேயே மிகப்பெரிய காமெடி நியூஸ் சேனல் சன் டி.வி.தான்.அவர்கள் அணியும் உடையும்,நியூஸ் ஸ்கிரிப்டும் ஏதோ,பழங்குடியினர் நடத்தும் நியூஸ் சேனல் போலவே உள்ளது.காலம் ரொம்ப மாறிட்டு மாமு.எப்ப திருந்தப் போறீங்க?


-------------------------------------------------------------------------------------------------------------

வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கோ இல்லயோ,வீட்டுக்கு வீடு TASMAC கொண்டு வர மும்மரமா செயல்படுது அரசு
#ஊருக்கு ஊர்,தெருவுக்கு தெரு லாம் போய்ட்டு,வீட்டுக்கு வீடு நிலமை "வரும்"(கொஞ்சம் அழுத்தமா படிங்க)


------------------------------------------------------------------------------------------------------------

‎@Chitra Subramanian
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா(ஹசாரேயல்லவா)
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும்(ஹசாரேக்கும்) தமிழர்க்கும்(தமிழரல்லாதவருக்கும்) கொடுப்பது முறையல்லவா.

தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது, அதுக்கு எல்லாம் குரல் கொடுக்காதவர், ஹசாரேவுக்கு கொடுக்கிறாராம். இவர்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்தாலும் உண்மையான தமிழ் உணர்வு என்பது ஒரு துளியும் இல்லாதவர்கள்.

ஒரு வேளை எ.ஆர்.ரஹ்மான் மாதிரி இவருக்கு தமிழ் நாட்டு நடப்பு என்னவென்று தெரியாதோ...??


------------------------------------------------------------------------------------------------------------

பாரளுமன்றத்துல அவ்ளோ கூச்சல்,குழப்பத்துலயும்
ஒரு சின்ன ரிலாக்ஸ் சபாநாயகர்தான்.
#அந்தம்மா சும்மா மண்டையை மண்டைய ஆட்டிகிட்டு, கண்ணை சிமிட்டி சிமிட்டி... சிரிச்சிக்கிட்டே இருக்காங்க.


-------------------------------------------------------------------------------------------------------------

குல தெய்வத்தைக்
கூட்டிக்கொண்டு
குலதெய்வக் கோயிலுக்குப் போகிற
ஒரே அறிவாளி
உன் தந்தைதான்.
...........................உன் பேச்சுக் கா...தல்.


-------------------------------------------------------------------------------------------------------------

கேரளமுதல்வர் உம்மன்சாண்டியும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் டெல்லிக்குச்சென்று பிரதமரைச்சந்திச்சாங்க.! சென்னைக்கு வந்த பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சந்திச்சாங்க. முல்லைப்பெரியார் பற்றி இருதரப்பும் சொன்னதை சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டாரு.. # மலையாளிக்கும் பேபே பெப்பே..!!தமிழனுக்கும் பேபே பெப்பே..!!!


-------------------------------------------------------------------------------------------------------------

Theesan Ramanathan
பார்த்து சகித்துக்கொள்ள முடியாதவைகள்:

1.காதலிக்குறவன் செல்லு.
2.பான்பராக் போடுறவன் பல்லு.
3.காதலியே கிடைக்காதவன் ஜொள்ளு.
4.நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த பில்லு.

##உங்களுக்கு தெரிந்ததையும் சேர்க்கலாம்.

விஜய் படம் வில்லு

தண்ணி தரமாட்டான் மல்லு!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!