Thursday, August 27, 2015

ராஜாக்களின் ராஜதந்திரங்கள்...!


கேரளா நண்பன் சொன்ன ஒரு கதை.

நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த செல்வந்ததம்புரான் கட்டிய ஒருவீடு, தலைமுறைகள் மாற மாற வீடு கஷ்டமான நிலையில் தள்ளப்பட, நான்காவது தலைமுறையில் வந்தவருக்கு ஒரு பெரிய டவுட்டு...

இந்த வீட்டுக்குள்ளே எங்கேயோ நம் முன்னோர்கள் புதையல் வைத்திருப்பார்கள் என்று...காம்பௌன்ட் வீடு என தோண்டி தோண்டி பார்த்தும் ஒன்றுமே அகப்படவில்லை.

குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டதால் வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்...ஆனால்...சாபம் கொண்ட வீடு என்று தம்புரான் வீட்டை யாரும் வாங்கவேயில்லையாம்.

சம்பிராதயம் சாபம் இவைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் [[சவுதியில் வேலைப் பார்த்தவர்]] அல்ப விலையில் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்...அவர் அந்த வீட்டிற்கு குடிவர விரும்பாமல், வீட்டின் மரவேலைப்பாடுகளை கழட்டி விற்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கினாராம்.

நான்கைந்து நாட்கள் வீட்டை சுற்றி பார்த்தவருக்கு, வீட்டில் ஒரு இடத்தில் ஒரு தேக்கு மரத்தூண் வித்தியாசமாக இருக்க...[[சேட்டன் அல்லவா ?]] சந்தேகம் வலுக்க ஆரபிச்சுதாம்.

ஒருநாள் யாருமில்லாமல் தனியாக வந்து அந்த தூணை வேகமாக சுத்தியால் அடிக்க..சத்தம் வித்தியாசமாக இருக்க...தூணை உடைத்தால்....

தூணின் உள்ளே எல்லாம் தங்கம் பவுடராக நிரம்பி வைக்கப்பட்டிருந்ததாம்...சேட்டன் குடும்பம் இப்போது அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் நண்பன்...!

உண்மையா பொய்யா தெரியல சாமீ...ஆனால் திருவிதாங்கூர் ராஜாக்கள் தங்கத்தை பவுடராக சேமித்து வைத்திருந்தார்கள் என்று படித்து இருக்கிறேன்.

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகள் கோவிலில் மார்த்தாண்ட வர்மா, சுவாமிதான் ராஜா நான் அவரின் தாசன் என்று கூறி வாளை சுவாமி காலடியில் சரண்டர் செய்யும்போதே உஷாராகி இருக்கனும், ஏன் வாளை சரண்டர் பண்ணினார்ன்னு, மொத்த கஜானாவும் அங்கல்லா இருந்துருக்கு ?!!!
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் யாவருக்கும்...


Monday, March 23, 2015

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் 4

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் ! பாகம் 3
http://nanjilmano.blogspot.in/2015/01/3.html

முந்தய பதிவு மேலே.

நுங்கம்பாக்கம் ரஹீம் கஸாலி ஆபீஸ் போனதும், வரவேற்று எங்களை நலம் விசாரித்து அமர வைத்தார் கஸாலி, ஆளைப்பார்த்தால் அப்படி ஒரு அமைதி, அவர் எழுத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாமல் தெரிகிறது இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு அக்கினி இருப்பதும், பூவுக்குள் புயல் இருப்பதும் நன்றாகவே உணர்ந்தேன்.
 அவர் ஆபீசிலேயே டிராவல் எஜன்சியும் இருப்பதை தெரிந்து கொண்டேன், பல விஷயங்கள் பேசினோம், சாயங்காலம் வேடியப்பன் அண்ணன் பிளாக்கர் மீட்டிங் வைத்திருப்பதை சொன்னதும் அவருக்கு வேலை இருப்பதால் நீங்கள் போங்க என்று சொல்லிவிட்டார்.

அடுத்தநாள் ஊர் கிளம்ப இருந்ததால் அங்கேயே டிக்கட் எடுக்கலாமேன்னு சிவாவிடம் [[மெட்ராஸ் பவன்]] சொன்னதும் தாராளமாக எடுங்க மனோ என்று சொன்னார், போயி வால்வோ பஸ்சில் போக விலை கேட்டோம், கையில் அவ்வளவு பணம் கொண்டு போகாததால் [[கொஞ்சம் பணம்தான் கையில் இருந்தது, ஹோட்டலில் வைத்து வந்துவிட்டேன்]] இதுக்கென்ன ஹோட்டல் போயி சிவாவிடம் கொடுத்து விடுங்கள், இப்போது டிக்கெட்டை எடுங்கள் [[கொடுங்கள்]] என்று கஸாலி டிராவல்ஸ் ஏஜென்டிடம் சொல்லி விட்டார்.

போட்டோக்கள் மாறி மாறி எடுக்கும்போது சிவா, "என்னையே மாறி மாறி போட்டோ எடுக்காதீங்க"ன்னு சலித்துக் கொண்டார் [[ஏம்யா ஏம்]] மதியம் சாப்பாட்டு நேரம் கடந்து கொண்டிருக்க, கஸாலி, சரி வாங்க சாப்பிடப் போகலாம், என்ன சாப்பாடு சொல்லுங்க வெஜ் அல்லது நான்வெஜ் எது சாப்பிடலாம் ? என கேட்க, முதலில் கையை தூக்கியது நான்தான் "நான்வெஜ்", கிளம்பினோம் சாப்பிட...

அவர் ஆபீசில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அசைவ ஹோட்டல், எப்போதும் பிஸியாக இருக்கும் போல நானும் சிவா, மகேஷ் மற்றும் கஸாலி போய் அமர்ந்ததும், என்ன சாப்பிடலாம் ? என்று யோசிக்குமுன் சிக்கன் பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவானது.

பேரர் வந்ததும், நான்கு சிக்கன் பிரியாணி என்றார் கஸாலி, பேரர் : பிரியாணியா இல்லை ஸ்பெஷல் பிரியாணியா ?" என்று கேட்க, உடனே கஸாலி ஸ்பெஷல் பிரியாணி தாங்க...ஆமா ஸ்பெஷல் பிரியாணின்னா ? என்று கேட்டோம், சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் உள்ளே வச்சி தருவோம்ன்னு சொல்லும் போதே நாங்க உஷார் ஆகிருக்கணும்...
[[நான், ரஹீம் கஸாலி, ஸ்கூல் பையன் சரவணன் [[கடைசியாக வந்தார்]] மெட்ராஸ் பவன் சிவா.]]

சரி கொண்டாங்க என்று சொல்லி காத்திருந்தோம், வந்தது நான்கு பிளேட் பிரியாணி, ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு கிண்ணியில் பிரியாணி சாப்பிட தனியாக நான்கு பிளேட், கரண்டியில் எடுத்து பிரியாணியை பிளேட்டில் இட்டு சாப்பிட்டாலும் அவ்வளவாக சாப்பிட இயலவில்லை எங்களுக்கு...

சரி போதும் என்று சாப்பாடு எல்லாவற்றையும் மீதி வைத்தோம்...ஆனால்...கஸாலி செய்த ஒரு "காரியம்" என் மனதில் வடுவாக பதிந்து விட்டது, எவ்வளவு பெரிய தவறை இவ்வளவு நாட்கள் நான் செய்திருக்கிறேன் என்று என்னை செவியில் அறைந்தால் போல் சொல்லிற்று...!

சில மனிதர்களிடம் சில பாடங்களை கற்கலாம் என்று நான் சொல்வதுண்டு, ஆனால் என் நண்பன் ஒருத்தன் "எல்லா மனிதர்களிடமும் சில பாடங்களை நாம் கற்கலாம்" என்று சொல்வான்...அது எவ்வளவு சத்தியமான வார்த்தை தெரியுமா...

தொடரும்...

Saturday, January 10, 2015

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் ! பாகம் 3

முன் பகுதி கீழே உள்ள லிங்கில்.

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் தொடர் 2...!

தல வீட்டிற்குள் நாங்கள் நான்குபேரும் போனதும் உற்சாகமாக எங்களை வரவேற்றார், அவரது அப்பா போட்டோ ஒன்று கம்பீரமாக இருக்கிறது அவர் வீட்டில், அதோடு கூட பிரபல பதிவுலக தல'யும், சினிமா நடிகர் தல'யும் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்றும் இருக்கிறது.
தல என்று அன்போடு அழைக்கப்படும் சந்திர சேகரன் நாராயண சுவாமி சார்.


கணேஷ் அண்ணன் அதை போட்டோ பிடிச்சி கிராபிக்ஸ் பண்ணப்போவதாக கிளிக்'க நானும் ஒரு கிளிக்'கினேன். கணேஷ் அண்ணன் எனக்கு தந்தது போன்று தல'க்கும் இரண்டு புஸ்தகங்கள் பரிசளித்தார்.

என்னென்ன புரோகிராம் இன்று என்று அங்கேயும் டிஷ்கஷன் நடந்தது, வேடியப்பன் அண்ணன் மீட்டிங் போகலாம் என்று தல'யை சிவா அழைக்க, எனக்கு வெளியே எங்கேயும் போக முடியாது இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்றார் அந்த தாயை பேணும் தாயுமானவர் !
வலமிருந்து நான், மெட்ராஸ் பவன் சிவகுமார், தல, பால கணேஷ் அண்ணன்.

அப்போது ஆஜானுபாவாக ஒரு ஆள் வீட்டிற்குள்ளே வர, பதிவர்கள் எழும்பி ஓட எத்தனித்த போது, அது என் மகன்தான், ஜிம் பாடி என்றார் தல [[நாங்களும் என்னமோ கூலிபடையை தல ஏற்பாடு பண்ணிட்டாரோன்னு நினைச்சிட்டோம் அவ்வவ்]]

தல ரொம்ப சந்தோஷமாக பிரஷாக இருந்தார், அந்த உற்சாகம் எங்களையும் தொற்றி கொண்டது.
வலப்புறம் இருப்பவர் என் நண்பன் மகேஷ்.

சந்தோஷமாக அவர் வீட்டில் உரையாடி கொண்டு இருக்கும் போது கணேஷ் அண்ணன் தல"யிடம் சரி சரி அந்த ஒயினை எடுங்க என்று சொல்ல, நாங்கள் கண்களை விரிக்க, ஒயின் வந்தது ரோஸ் கலரும் இல்லாமல் ரெட் கலரும் அல்லாமல், பயப்படாதீங்க அது ஜூஸ்தான் என்று சொன்னார் தல.

இனிமையாக இருந்தது, ஜூஸும், மனதிற்கும், நேரமின்மை காரணமாக புலவர் ஐயாவை சந்திக்க இயலவில்லை, அடுத்து ரஹீம் கசாலிக்கும் வேலை நிமித்தம் புக் பேலஸ் மீட்டிங் வரமுடியாத காரணத்தால் அவரையும் நுங்கம்பாக்கம் போயி பார்க்க முடிவு செய்தார்கள்.

நல்லா இருங்கடேன்னு சொல்லுதாரோ கணேஷ் அண்ணன்.

சந்தோஷமாக தல'யிடம் விடை பெற்று, நுங்கம்பாக்கம் எப்படி போவது என்ற பஸ் நம்பரை கணேஷ் அண்ணன் சிவாவுக்கு சொல்லிவிட்டு புல்லட்டில் கிளம்பி விட, நாங்கள் பஸ் ஸ்டாப் வர, எனது கூலிங் கிளாஸ் லூஸாகி [[அந்த லூசல்ல]] இருந்தமையால், அங்கே ஒரு கண்ணாடி கடை இருந்தமையால் உள்ளே சென்றோம் நானும் மகேஷும்.

இரண்டு பிகர்கள் உள்ளே இருந்தார்கள், கண்ணாடியை கொடுத்து டைட் பண்ண சொன்னேன், டைட்டே ஆகலை புது ஆள்ன்னு நினைகிறேன், திருப்பி தந்தபோது, முன்பிருந்த மாதிரியே இருக்க, என்னான்னு கேட்டதுக்கு இதுக்கு மேலே [?] டைட் பண்ண முடியாது சார் [[அவ்வவ்]] என்று சொல்லி பத்து ரூபாய் கறந்தாள்.[[ மும்பை வந்து டைட் பண்ணினேன்]]

பஸ்சுக்கு சில்லறை காசு என்னிடம் இல்லை சிவா என்றதும் "உங்களை பர்ஸ் கொண்டு வர கூடாதுன்னு அப்பவே சொன்னேனே ?" என்று கடிந்து கொண்டு எல்லா செலவையும் அவரே ஏற்று கொண்டார் சிவா.

பஸ் ஏறி அடுத்து ஆட்டோ ஷேர் ச்சே ஷேர் ஆட்டோ பிடித்து நுங்கம்பாக்கம் இறங்கி நடந்தோம் ரஹீம் கஸாலி ஆபீஸ் நோக்கி...

தொடரும்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!