Sunday, June 30, 2013

சூப்பராக சொதப்புவது எப்படி...!

மலையாளி நண்பர் ஒருவர் ஊருக்கு போக ரெடியானார். ரம்ஜான் நெருங்குவதால் ஏர் டிக்கெட் விலை தாறுமாறாக எகிறிக் கிடப்பதால் பஹ்ரைன் டூ மும்பை டூ கொச்சி டிக்கெட் விலை கொஞ்சம் சீப்பாக கிடைத்தமையால் மும்பை வழி  போக ரெடியானார்.
என்னிடம் மனோஜ் மும்பை ஏர்போர்ட்டில் யாராவது இருந்தால் நீயும் உன் குழந்தைகளுக்கு சாக்கிலேட் தந்து அனுப்பு கொடுத்து விடுகிறேன்னு சொன்னார், நண்பர்களுக்கு போன் பண்ணினால் அவனவன் சென்னை தூத்துக்குடின்னு சிதறி கிடக்கானுக.\

கடைசியாக நண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் போன் நம்பர் தர அவனுக்கு போன் போட்டு ஃபிளைட் நம்பர் டீட்டெயில் எல்லாம் கொடுக்க, அவனும் அண்ணே நான் பார்த்துகிடுதேன்னு சொன்னதும், அவனுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஜானிவாக்கர் ஒன்னரை லிட்டர் வாங்கி கொடுத்தனுப்பினேன்.
மலையாளி நண்பனுக்கு மும்பைன்னாலே தாவூத் நினைப்புதான் எப்போதும் அம்புட்டு பயம், நண்பன் ஒருத்தன் வாரன்னதும் சமாதானமாக புறப்பட்டான். ட்ரான்சிட் பேசஞ்சர் என்பதால் விமான நிலையத்தை விட்டு வெளியே போகமுடியாது.

நான் இங்கேயே சாக்கிலேட் வாங்காமல் அவர் கையில் ஒரு அமௌண்டைக் கொடுத்து [[லக்கேஜ் கூடிவிடும்]] டியூட்டி ஃபிரீயில் சாக்லேட்டும் பாட்டலும் வாங்கிகொள் என்று பணத்தை கையில் கொடுத்தேன்.

அவரும் சந்தோசமாக கொடுத்த காசுக்கு எல்லாம் வாங்கி விட்டு எனக்கு போன் செய்து என்னென்ன வாங்கினார் என்று சொல்லவும், நானும் ஆர்வக்கோளாரில் மும்பைக்கு போன் செய்து குழந்தைகளிடம் சொல்லிவிட பயங்கர சந்தோசம் ஆகிவிட்டார்கள்.
பிளேன் லேண்டாகும் நேரம் மும்பை நண்பனுக்கு போன் செய்தேன் ரிங் போயிகிட்டே இருக்கு அப்பவாவது நான் சுதாரிச்சு இருக்கனும், போன் அடித்து நொந்து போனபின்பு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன், அவன் பிசியாக இருக்கலாம், அதான் நாம பிளேன் நம்பரெல்லாம் கொடுத்தாச்சென்னு.

காலையில போயி சாக்கிலேட் வாங்கி சாப்பிடலாம்னு குழந்தைகள் ஆவலாக இருக்க, எனக்கு காலையிலதான் மைல்டா ஒரு சந்தேகம் வர, மறுபடியும் மும்பை நண்பனுக்கு போன் செய்ய, எடுக்கவே இல்லை, கொஞ்சம் நேரம் கழித்து அவனுடைய நண்பன் போன் எடுத்து பேசினான், அவரு நல்ல தூக்கத்துல இருக்காருங்க அப்புறமா போன் பண்ணுங்க என்று.
எனக்கு அப்பவே புருஞ்சுபோச்சு பயபுள்ள சொதப்பிட்டான்னு, மலையாளி நண்பனுக்கு இன்னும் நான் போன் பண்ணல, என்ன சொல்லி திடடப்போராறோன்னு திகிலா இருக்கு. மும்பையில இப்பிடித்தான் கிழிச்சிகிட்டு இருக்குருயான்னு கேக்கப்போறார்.

குழந்தைகளை நினைச்சு பேனாவில் ஓவராக கசியும் மசி போல இருதயம் அழுதுட்டே இருக்கு.

இனி பார்சல் குடுப்பே பார்சல் குடுப்பே குடுப்பே......!

சரின்னு சாயங்காலம் போன் பண்ணினேன் லைன்ல வந்தவன் சொன்ன பதில் எனக்கு தலை சுத்தி போச்சு.[[மும்பை போனா முதல்ல இவனுக்கு செவியில ரெண்டு குடுக்கணும்]]

"அண்ணே...தூங்கிட்டேன்......"[[அதுவும் டியூட்டியில....கொய்யால...]]

Tuesday, June 25, 2013

ரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியுமா...?

நமக்கு அம்மாவை தெரியும் கலைஞரை தெரியும் ரஜினியை தெரியும் கமலை தெரியும் ஏன் கனிமொழியை கூட தெரியும் ஆனா........ அவிங்களுக்குதான் நம்மளை தெரிய மாட்டேங்குது - ம்ஹும் நாங்களும் சொல்வொமுல்ல
-------------------------------------------------------------------------------

ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தியும் ஒருத்தன் வாழ்க்கையில இப்பிடியா வந்து கும்மி அடிக்கணும்...?

வேலைக்கு அவசரமா போனவன் கண்ணுல நடு ரோட்டுல ஐநூறு சவூதி ரியால் கிடப்பது தெரிய அவசரமா ஓடிப்போயி எடுத்தவனின் புட்டத்தில் ஒரு கார் வந்து பிரேக்கடித்து மோத....

ஆஸ்பத்திரிக்கு ஐநூறு ரியாலை மொய் எழுதிட்டு வந்தான்....எப்பூடீ......!

நீதி : அக்கம் பக்கம் பார்த்து நடக்கனும் 
---------------------------------------------------------------------------------
நாலு மாசத்துக்கு ஒருமுறை லோக்கலா செருப்பு, ஷூ வாங்கி கடி வாங்குறதை [[செலவு]] விட, குவாலிட்டியா வாங்கி பயன்படுத்துங்க கடியில இருந்தும், பாக்கெட் காசு செலவுல இருந்தும் விடுபடலாம்...!

குவாலிட்டியா வாங்குனா ரொம்பநாள் யூஸ் ஆகும், மற்றது நம்மையும் கடிச்சு வச்சுட்டு அதுவும் சீக்கிரமே பிஞ்சி போகும்.
------------------------------------------------------------------------------------

பஹ்ரைனில் ஒரு முறை வயிற்று வலி தொடர, ஆஸ்பத்திரி போயி செலவானது 120 பஹ்ரைன் தினார் [[பதினைந்தாயிரம் ரூபாய்]] ஆனாலும் வயிற்று வலி சரியா தீரல, ஒருமுறை ஊருக்கு [[மும்பை]] போனப்போ இதே வயிற்று வலி வர, பக்கத்து தெருவில் உள்ள டாக்டரைப் பார்த்தேன் ஒரு ஊசியும், மூன்று  வேளை  மாத்திரையும் தந்தார் 40 ரூபாய் வாங்கினார், இதுவரை வலி இல்லை. 

வெளி நாடுன்னா அங்கேயும் அநியாயம்தான் போங்க....!
-----------------------------------------------------------------------------------

ரம்ஜான் வந்தா ஊருக்கு போலாம்னு ஆசையா காத்திருந்தது, முடியாமப் போனது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு, எங்கே நாம நினைக்குறது எல்லாம் நடக்கவா செய்யுது ? நடப்பது நடக்கட்டும் பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------

முதலாளிமாருங்க எடுத்ததுக்கும் பிடித்ததுக்கும் அமேரிக்கா, லண்டன், சுவிசர்லாந்னு பொசுக்கு பொசுக்குன்னு போறாங்கய்யா, நமக்குதான் குடுப்பினை இல்லை - சிரிக்கப்டாது ஆமா.
------------------------------------------------------------------------------------

நம்மாளுங்க சிம்மிங்பூள் போயி குளிச்ச ரெண்டு மணி நேரத்துல தண்ணீரின் மொத்தக் கலரும் மாறிப்போச்சு, நீச்சல்குளத்துக்கு சொந்தக்காரன் அருவாளோட வருமுன்னே எடுத்தோம் பாருங்க ஓட்டம் அவ்வ்வ்வ்வ்....
-----------------------------------------------------------------------------------

இவிங்க ஓரங்க நாடகம் இன்னும் தீர்ந்தபாடில்லை போல கொய்யால...!
-------------------------------------------------------------------------------------

டேய் மக்கா அந்த வீட்டுல கடிநாய் இருக்கு எச்சரிக்கையாக இருக்க்கவும்னு நண்பன் சொன்னது சரியாக அந்த வீட்டின் முன்பு போகும் போதுதான் நினைவுக்கு வரவும் அந்த கடிநாய் அவன் முன்பு வரவும் சரியாக இருந்தது.

"படேர்"ன்னு எடுத்தான் பாருங்க ஓட்டம், ஓடிட்டே திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி.......பின்னே, இவன் இங்கிட்டு ஓட அது இவன் ஓடினதைப் பார்த்து அங்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது.


Sunday, June 23, 2013

பதிவுக்குப் பதிவு மொய் அழகு...!

கவிதைக்கு பொய் அழகுன்னு எத்தனையோ முறை, எத்தனையோ தடவை எத்தனையோ பேரு சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள், இப்போ என்கிட்டேயும் அதே கேள்வி வந்துருக்கு...!
எனக்கு கவிதை வடிக்க தெரியாது என்பதே உண்மை, "எப்பிடி நீங்க எல்லாம் அனுபவித்து எழுதியது போல தத்ரூபமாக இருக்கிறதே அது எப்பிடி...? அனுபவித்த ஒருவனால்தான் இப்பிடியெல்லாம் எழுத முடியும்" என்று கேட்பவரிடம் என்ன பதில் சொல்லவென்று புரியவில்லை...!
அப்போ காளிதாசன், வைரமுத்து, வாலி, திருவள்ளுவர் எல்லாம் அனுபவித்துதான் காதல், காமம், அழகு பற்றி எழுதி தள்ளினார்களா..? அவர்களையும் இப்படி கேள்வி கேட்பீர்களா என்றால் பதிலில்லை...!

தூரத்தில் இருந்து எழுதுகிறவனிடம் கேள்வி கேட்க முடிவதில்லை, பக்கத்தில் இருப்பவனையே நோன்டுபவர்களை என்னான்னு சொல்ல..?!
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு"ன்னு எழுதினவரைப் பற்றி இவங்க என்னான்னு நினைச்சாங்களோ எனக்குப் புரியல, அவரு போயி ஒரு நூறு ஆயிரம் சேலை கட்டிய பெண்களை மோந்து பார்த்துருப்பாருன்னு நினைச்சிருப்பாயிங்களோ?
மல்லிகை பூவும், பெண்ணும், பெண்மையும் பற்றி எழுதினால் ஏன் இப்படி சந்தேகமாக பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் புரியாத சூத்திரமாக இருக்கிறது...!

வாழ்க்கை ஓட்டத்தில் 
ஓராயிரம் பூக்கள் 
என்றும் என் மஞ்சம் நிறைவாக...!
மறுபடியும் சொல்றேன் கவிதைக்கு பொய் அழகு, இதுக்கு மேலே சந்தேகம் கேடகனும்னு தோனுச்சுன்னா, தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.

Thursday, June 20, 2013

ஹைஹீல்ஸ் செருப்பணிந்து சரக்கடிக்கும் பெண்கள்...!

பஹ்ரைனில் எமர்ஜென்சியின் போது கொல்லப்பட்ட மலையாளி குடும்பத்திற்கு 60,000 பஹ்ரைன் தினார் பஹ்ரைன் பார்லிமென்றின்  அனுமதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 85,000,00 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்....

ஆனால் உயிர்...?

இதுவே தமிழன் செத்து இருந்தால் ஒரு நாதி பேதியும் எட்டிப் பார்த்திருக்காது...!

பத்து வருஷம் முன்னாடி ஒரு பதினோரு தமிழர்கள் தீயில் கருகி இறந்து போனார்கள் அவர்களுக்கு பஹ்ரைன் கவர்மெண்ட் ஒண்ணுமே குடுக்கலை, ஆனால் கருணாநிதி தலைக்கு ஒரு லட்சம் கொடுப்பதாக சொன்னார், கொடுத்தாரோ இல்லையோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...!
-------------------------------------------------------------------------

டாஸ்மாக் குடிமகன்களுக்கு தனி அடையாள அட்டை - மாதம் பத்து நாட்கள் ஒரு குவாட்டர் வீதம் இலவசம் - எனவே தெலுங்கு மானமுள்ள ச்சே தமிழ் மானமுள்ள தலைவனுக்கு "ஒட்டு" போடுங்க ஸ்ஸ்ஸ்ஸ் ஓட்டு போடுங்க.
-----------------------------------------------------------------------

நான் யாருக்கும் கடன் கொடுப்பதும் கிடையாது வாங்குவதும் கிடையாது என்றவன், "மெடிக்கல் செக்கப்புக்கு போகணும் என்கிட்டே காசு இல்லை உன்கிட்டே இருந்தா குடேன்" என்றான்.
----------------------------------------------------------------------------

சில்லரைத்தனமாக நண்பர்களை வைத்திருப்பவனுக்கும் புத்தி சில்லரைத்தனமாகவேதான் இருக்கும் என்றான் ஒரு சில்லரை.
------------------------------------------------------------------------
ஹிந்தியில் படம் நடிக்க [!] போகிறார் விஜய்//


அய்யா சாமிகளா அங்கே கொஞ்சூண்டு இருக்கும் தமிழனையும் சேர்த்து மொத்த ஹிந்திக்காரனையும் கொல்ல திட்டம் போடுறாயிங்க போல....

வேணா இலங்கை போயி சிங்கள படத்துல நடிக்க சொல்லுங்கப்பூ, அவனுகளை வேரடி மண்ணோடு சாகடிச்சிரலாம்.
-----------------------------------------------------------------------------
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டம் தெரிந்தும் அதில் ஈ போல சுற்றி வாராங்களே நம்மாளுங்க திருந்துங்கப்பா.
-----------------------------------------------------------------------------

சேலத்து மாம்பழம் மட்டும்தான் தித்திக்கும்னு யாருய்யா சொன்னது, மொராக்கோ, ஈராக், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வரும் மாம்பழமும் தித்திக்கவே செய்கிறது ஹி ஹி....[[நோ நோ ஆபீசர்....... தப்பா திங்க் பண்ணப்டாது]]
----------------------------------------------------------------------------

ஹைஹீல்ஸ் செருப்பு போட்டுட்டு தண்ணியடிச்சா என்னாகும், எங்க ஹோட்டல்ல பப்பரப்பான்னு மல்லாந்து கீழே மேலே விழும் சவூதி, மொரோக்கன், எகிப்து பெண்களைப் பார்க்கும் போது மனசு கனக்கிறது என்னத்தை சொல்ல போங்க. 
----------------------------------------------------------------------------

ஹோட்டல் ரூல்ஸ் இதுன்னு சொன்னா....... அரபிக்காரன் அவன் அப்பன் வீட்டு ரூல்ஸ சொல்லுறான், அவன் சொல்லுறதை நாங்க கேக்கணுமாம் போடாங்கோ.
----------------------------------------------------------------------------

லெமூரியா கண்டத்தை ஆண்ட தமிழ் பாண்டிய மன்னனுக்கு அறுபதாயிரம் போர் கப்பல்கள் இருந்ததாம் - ஒரு மெத்த படித்த மலையாளி நண்பன் சொன்னது [[இது ஏற்கனவே பகிர்ந்ததான்னு சின்ன சந்தேகம்]] 
-----------------------------------------------------------------------------

புதிதாக வந்த பிலிப்பைனி வெயிட்ரஸ் பெண்தான் இப்போ எனக்கு ரிலாக்ஸ், அரபி தெரியாது என்பதால் போன் [[இன்டர்காம்]] பண்ணி அரபியில் பேசி கலாயித்து கொண்டிருக்கிறேன்  என்னைக்கு மாட்டப் போறேனோ ஹி ஹி....பாவம் பெண் பாவம் பொல்லாதது. [[என்கிட்டேயே வந்து கம்ளயின்ட் வேறப் பண்ணுது என்னாத்தை சொல்ல...]]
-----------------------------------------------------------------------------

பெண்ணைவிட அழகாக இருந்தாள், சத்திரத்தில் அறை [[அதாங்க ரூம்]] கொடுத்தேன் பாஸ்போர்ட் செக் செய்தேன் ஆண் பெயர் இருந்தது, அப்புறம்தான் தெரிந்தது அவள் ஒரு அண்ணகன் என்று வாழ்க வாழ்க...ஆனால் அழகோ அழகு...!
-----------------------------------------------------------------------------

என்னைப் பார்த்து ஹபீபி [அன்பானவனே] ஹபீபி...... என்று அன்பாக கைபிடித்து குலுக்கும் சவுதிப் பெண்கள்.......கடுகடுப்பாக பார்த்து மனதிற்குள் கொதிக்கும் சவூதி அரபிகள், அவனுக கண்ணைப் பார்க்கனுமே அம்புட்டு கடுமை கண்களில், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
--------------------------------------------------------------------------- 

சூது நம்மை ஆளும் போது  நாம் சூதாட்டக்காரன் ஆகிறோம், கிரிக்கெட் மொள்ளமாரிகள் கவனத்திற்கு...!
--------------------------------------------------------------------------

எங்க டாடிக்கு அறிவே கிடையாது என்று கேஷுவலா தன் சக தோழியிடம் மகள் சொல்லும் போது - நான் அப்பான்னு கூப்பிடவே பத்துமுறை ரிகர்சல் பார்த்ததை எப்படி இவளிடம் சொல்வேன் ஹி ஹி..

சரி சரி இன்னைக்கு இம்புட்டு போதும்னு நினைக்கிறேன் ஹி ஹி விடு ஜூட் மனோ....


Monday, June 17, 2013

கடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....!

பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி பஹ்ரைன் ஸல்லாக் பீச் கூட்டிட்டுப் போனது எனது அத்தானும் நண்பர்களும், அதன் பிறகு நண்பன் சுந்தரேஷன் அடிக்கடி கூட்டிட்டுப் போவது உண்டு.

பல வருஷங்கள் கழித்து நம்ம "கலியுகம்" தினேஷ் கூட்டிட்டுப் போனார் அங்கே, நண்பர்கள் அனில் அண்ணன் மற்றும் சாஜி என்ற நண்பனும் சேர்ந்து கொள்ள...பயணம் ஆரம்பம் ஆனது, பல விஷயங்களை பேசிக்கொண்டே போகும்போது பஹ்ரைனில் தமிழுக்கு கிடைத்த ஒரு மாபெரும் புகழ் செய்தியை கடைசியில் சொல்கிறேன்.

ஸல்லாக் பீச்சுக்கு இப்போவெல்லாம் அதிகமாக யாருமே வருவதில்லையாம், காரணம் கெடுபிடி, நாங்கள் போகும்போது ரெண்டு இந்தியன் குடும்பமும், ஒன்னோ ரெண்டோ அரபிக் குடும்பங்கள்தான் இருந்தன...!

தூரத்தில் தண்ணீர் மோட்டார்களுடன் ரெண்டுபேர் ரேஸிங் செய்து கொண்டு இருந்தார்கள், தண்ணீரும் இடுப்பளவுதான் இருக்கிறது, அதைப் பார்த்து அனில் அண்ணன் சொன்ன டயலாக்....

"இப்பிடியே தண்ணிக்குள்ளே நடந்து போனா சவூதி அரேபியா போயிறலாம் போல இருக்கே..."

கடல் தண்ணீர் முன்பு நான் போகும் பொது சுத்த வெள்ளையாக இருந்தது, கீழே போகும் குஞ்சு நண்டுகள் கூட கண்ணுக்குத் தெரியும், இப்போ அப்பிடி இல்லை பச்சை கலரில் இருந்தாலும் சுத்தமாக இருக்கிறது.

கடல் தண்ணீர் அடிக்கடி பல கலர்களில் மாறிவிடும் என அனில் அண்ணன் சொன்னார், அடிக்கடி போற ஆளு போல ஹி ஹி...

கடலுக்குள்ளே பன்னி ச்சே ச்சீ தண்ணி....எங்களுக்குள்ளே......? 

பச்சை தண்ணிதாங்க....கலியுலகம் பலியுலகமா மாறி தண்ணிய கடிச்சு வச்சிருச்சு ச்சே தடுத்து வச்சிருச்சு அவ்வ்வ்வ்வ்.....

வாங்க போட்டோவும் கமேண்ட்சும் பார்க்கலாம்....


 அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி எப்பிடியாவது ரெண்டு மூணுபேர் ஸ்பாட் அவுட் ஆகுற இடம்.

 பேசிட்டே இருக்கும்போது யாருய்யா அங்கே கல்லை தூக்குறது...? கலியுகம்"தினேஷ் மற்றும் அனில் அண்ணன்.

 பூமியில வாழுறத விட கடல்ல குதிப்பதே மேல்னு போயிட்டு இருக்காயிங்க.

 அய்யயோ நான் கட்டுன மணல் வீட்டை யாருலேய் இடிச்சுட்டு ஓடினது...?

 அப்பிடியே போயிருங்க வடக்கு பக்கமா சவூதி இல்லைன்னா கத்தார் வந்துரும்.

 எல்லாரும் தண்ணிக்குள்ளே ச்சூ ச்சூ'தான் போவாங்கன்னு பார்த்தா அண்ணன் விவகாரமான விரலை காட்டுதாரே....

 நான் இப்பிடி மல்லாந்து விழுறதை படம் பிடிங்க அண்ணே...

 அய்யயோ நண்டு நண்டு...


 இது என்ன யோகாசனம் அண்ணே...?

 ஓங்கி அடிச்ச அலையில [!] அண்ணன் காதுக்குள்ளே சனி ச்சே தண்ணி புகுந்துருச்சு.

 தண்ணிக்குள்ளே மனுஷ ஆமைகள்.

 தண்ணிக்குள்ளே காலைபிடிச்சு இழுத்து என்னை முக்கி வச்சது யாருலேய்...?

ஏதாவது கப்பல் வருதான்னு பாக்குறேன் அண்ணே பொருங்க.


 வாழ்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம்போல ஓடிடுவோமே வாழ்நாளிலே....


 எதுக்குடி என் குழந்தையை பயங்காட்டினே...? குழந்தை போட்டோவுல எப்பிடி மிரளுது பாருன்னு வீட்டம்மாவை மிரட்டுற ஒரே ஆள்....!

 அழகழகான பேரீச்சம் பழங்கள் மரத்திலிருந்து விழுந்து மனிதனின் கால்களுக்கு இரையாகும் உலகம்தான் வளைகுடா நாடோ...?!!!

 அடடே ராஜகுமாரன் தம்பி அறிமுகம் ஆகப்போறார் ஓடிருங்கே எல்லாரும்.



ஆபீசர் நியாபகம் அதிகமாக வந்த நேரம்......!



 ஒ போனுக்கே போனா....ச்சே போட்டோவுக்கே போட்டோவா...

 மொரோக்கோ கூட்டத்தோடும் பிலிப்பைனி கூட்டத்தோடும் சேராதேன்னு சொன்னா கேக்குறியா...? பாரு கடிச்சி திங்கும் ஐஸ் கிரீமை கரண்டி போட்டு திங்குறத...


-----------------------------------------------------------------------
தமிழுக்கு கிடைத்தப் பெருமை என்னான்னு தெரியுமா...?

தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று பஹ்ரைன் யூனிவர் சிட்டியில் எழுதி பொரித்து வைத்து இருக்கிறார்களாம், என்று அனில் அண்ணன் சொன்னபோது ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனோம்....!

கடைசியா இன்னொரு "குளியலை"யும் போட்டு முடிச்சா, கொண்டு போன எனது டவுசர் டவல் எல்லாம் தினேஷ் காருக்குள்ளே மாட்டிகிச்சு, சரிய்யா நாளை ஹோட்டல் பக்கம் வரும்போது கொண்டு வந்துருங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டேன்.

அடுத்தநாள் நேரே ஹோட்டலுக்கே வந்து தந்துட்டுப் போனார், அவர் போன கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகும் அக்கப்போர் தெரிஞ்சிருந்தா அவரையும் கண்டு மகிழ [?] செய்திருக்கலாம் போல...

நடக்கவே முடியாத [[சரக்கு]] அமெரிக்காகாரனை எலவேட்டர்ல போட்டு உருட்டி மேலே கொண்டு வந்தானுக எங்க செக்கிரியூட்டியும், ரெண்டு பெல் பாயும் மற்றும் பஹ்ரைன் டாக்ஸிகாரனுமாக, கெஸ்ட் சிட்டிவேஷனை பார்த்ததும் நான் ரூம் தரமாட்டேன் என்று மறுத்ததும் அல்லாமல் எங்கள் ஸ்டாப் யாவருக்கும் சரியான டோஸ் விட....[[நார்மல் அல்லாத அன்பர்களுக்கு நாங்கள் ரூம் கொடுப்பதில்லை]]

இதற்கிடையில் எங்கள் ஹோட்டல் ஊழியர் ஒருவர் வீல் சேர் கொண்டுவர, அதில் அந்த அமெரிக்கனை உக்கார வைத்ததும் அவன் சுகமாக தூங்கிவிட்டான்.

நான் கத்திய கத்தில் பயந்து போன டாக்ஸி டிரைவரும், எனக்கு காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாமென்று ஓட....மாட்டுனது நாங்க...

என்ன செய்ய நேரம் சரியில்லைன்னா யானை மேல இருந்தாலும் நாயி கடிக்குமாமே.....ஆம்புலன்ஸ் கூப்பிட.....ஆம்புலன்ஸ்காரன் "இப்பிடி குடித்திருக்கிறவனை ஏர்போர்ட் செக்யூரிட்டிகள் எப்படி வெளியே விட்டார்கள்...?" என்று எங்களைப்  படுத்த....

அடுத்து போலீஸை கூப்பிட......அவர்களும் எங்களை சுளுக்கெடுக்க.....அப்புறமா அவன் ஐ டி செக் பண்ணும் போது அவன் அமெரிக்கன் நேவி மிலிட்டரிகாரன் என்று தெரிந்து.......அமெரிக்கன் நேவி போலீஸ்க்கு போன் போட்டு கூப்பிட....அவன் வந்து எங்களை சுளுக்கெடுத்து சந்தோஷமாக [[கொய்யால]] அவனை ஆம்புலன்ஸில் அள்ளிகிட்டு போனானுக.....

 ஆத்தீ......!
எப்பிடி வில் சேர்ல தூங்குறான் பாருங்க.

Tuesday, June 11, 2013

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...!?

டிங் டிங் டிங் டிங் டிங் டிங்......

"ஹலோ......... ஹலோ...."

"எடா பட்டி  எடா பட்டி பட்டி பட்டி...."

"டேய் டேய் நில்லு நில்லு என்னாச்சுன்னு சொல்லுய்யா முதல்ல...?"

"போடா பட்டி போடா பட்டி.....வ்ப்ஹ்ர்ன்ஹ் ஜ்ன்ப்ஜ்ச்ட்ப்வ் ஜ்ஹ்வ்தேவ் ப்ன்வ்வ்......."

"ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்....ஏன்டா இப்பிடி திட்டுறே மரியாதை இல்லாம...?"

"என் லேப்டாப் நாசமா போச்சு, என் மூஞ்சி நாசமா போச்சுடா பட்டி..."

"உன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாசமா போனதுக்கு என்னை எதுக்குடா இம்புட்டு திட்டு திட்டுறே...?

"கொய்யால நீதானே அன்னிக்கு..................................................."

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........"

பிளாஷ் பேக்.............. அப்பிடியே மோட்டு வளையத்தை அண்ணாந்து பாருங்க பார்ப்போம்.....

ஒருநாள் நானும் இந்த மலையாளி நண்பனுமாக பர்ச்சேஸ் பண்ணப் போனபோது, மிகவும் தாகமாக இருக்கிறது என்று ஒரு கூல்டிரிங்க்ஸ் கடையில் போயி ரெண்டு பிளாஸ்டிக் கேன் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி குடிக்கும் போது, அவன் உடனே ஒப்பன் செய்து குடிக்க....

நான் அவனுக்கு எப்பிடி கேன் ஜூஸ் மற்றும் பாட்டல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன் அதாவது எந்த ஜூஸ் வாங்கினாலும் ஒப்பன் பண்ணும் முன்பு நன்றாக குலுக்கிவிட்டு அப்புறம்தான் ஒப்பன் செய்து குடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

இன்னைக்கு சேட்டன் லேப்டாப்பை ஒப்பன் செய்து வைத்துவிட்டு, ஃபிரிட்ஜில் இருந்த கேன் பீரை எடுத்து வந்து லேப்டாப் முன்பு அமர்ந்து ஒப்பன் செய்ய போனவனுக்கு என் நியாபகம் வந்துவிட...[[ஏன்டா சாராயம் குடிக்கும்போது மட்டும் என்னைத் தேடுறீங்க...]]

பீரை நன்றாக 'குலுக்கி' விட்டு ஒப்பன் செய்ய.......இவன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாறிப்போச்சு, இதுக்குதான் இம்புட்டு திட்டும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

நான் என்ன சொன்னேன் இவன் என்ன செஞ்சிருக்கான் பாருங்க, நமக்கு வாய்க்கிறது எல்லாமே இப்பிடியா இருக்கணும்..? முடியல....
------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் தாண்டுகிறார்கள் அதனால் இலங்கை ராணுவம் இவர்களை தாக்குகிறது என்று கூப்பாடும் கூச்சலும் போட்டு செய்தி சொல்லும் பத்திரிக்கைகள், இம்புட்டு வசதிகள் வந்திருந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிரார்களா இல்லையா என்று ஏன் நேரில் சென்று பார்த்து பேட்டி  எடுத்து செய்தி போட மாட்டேன் என்கிறார்கள் ?
--------------------------------------------------------------------------------------------------------------------

வடமாநிலம் ஸ்டாலின் கையில் சரி, தென்மாவட்டம் அஞ்சாநெஞ்சன் கையில் சரி, இப்போ எனக்கு ஒரு டவுட்டு, மேமாநிலமும் அதாங்க மேற்கு மாநிலம்,கீமாநிலமும் அதாங்க கிழக்கு மாநிலம் யார் கையில்...? சும்மா ஒரு டவுட்டு ஹி ஹி...
---------------------------------------------------------------------------------------------------------------------

பத்து பனிரெண்டு வருஷம் முன்பு பஹ்ரைனில் நண்பர்களை விட சொந்த பந்தங்கள்தான் என்னை சுற்றி எப்போதும் இருந்தார்கள், சொந்த பந்தங்களுக்குள் சீட்டு போட்டு யாருக்கு பணம் அவசியமோ அவர்களுக்கு மாதா மாதம் கொடுத்து உதவுவது வழக்கம், அப்படிதான் நானும் மும்பையில் சொந்த வீடு வாங்க உதவினார்கள்....!

நாட்கள் நகர நகர சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொருத்தராக தம் தம் ஊர்களுக்கு பஹ்ரைனை காலி செய்து போய்விட, நண்பர்கள் மிகவும் அன்பாக அணைத்துக் கொண்டனர்.

ஆனால் இந்த காலத்துக்கும் பொறுமை இல்லாமல் ஒவ்வொரு நண்பனாக பஹ்ரைனை காலி பண்ணிவிட....ஏகத்துக்கும் தனிமையாகிப் போன உணர்வு எனக்கு, இப்போ இருக்குற தமிழ் நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு வந்து விட்டது, முன் நேற்றும் நண்பன் வின்னி என்ற விண்ணரசன்  போன் பண்ணி, அண்ணே எனக்கு இதே சம்பளத்தில் பெங்களூரில் வேலை கிடைக்கிறது நானும் பஹ்ரைன் காலிப் பண்ணப் போறேன்னு சொன்னதும் சந்தோசமாக இருந்தாலும், மனசுக்கு கவலையாக தொடங்கிவிட்டது.....!

நலம் வாழ எந்நாளும் அண்ணனின் வாழ்த்துக்கள் மக்கா....!



நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!