Sunday, August 26, 2012

அருவாளை சாணை பிடிக்கச் சொல்லி உத்தரவு....!

புது இடத்தின் வேலையில் நான் புதிதாக சேர்ந்த மூன்றாவது நாள் நடந்த ஒரு சின்ன சம்பவம்....!

௧௨௩ : [[இவர் ஒரு தமிழர்,  பெயர் வேண்டாம்]]  : வாட் இஸ் யுவ்வர் நேம்?

நான் : மை நேம் இஸ் மனோஜ்...

௧௨௩ : யுவார் கம்மிங் ஃபிரம்?

நான் : இந்தியா சர்...

[[டென்ஷனாகி விட்டத்தை முறைக்கிறார்....]]

௧௨௩ : ஐ நோ, இன் இந்தியா விச் ஸ்டேட் ஆப் யூ...? [[என்னை மலையாளின்னு நெனச்சு கடுப்புல கேக்கும் கேள்வியாகும் இது]]

நான் : தமிழ்நாடு சர்....

[[அவர் முகம் பிரகாசமாகிறது, அப்புறம் தமிழில் பேசுகிறார்]]

௧௨௩ : தமிழ்நாட்டுல எந்த ஊர்...?

நான் : கன்னியாகுமரி பக்கம் சாமிதோப்பு சர்....

௧௨௩ : நீங்க மலையாளம் சூப்பரா பேசுறதை கேட்டேன், மலையாளின்னே நினச்சுட்டேன்.

நான் : சார் நான் ஹிந்தி கூட நல்லா பேசுவேன் அப்போ என்னை ஹிந்திக்காரன்னு நினைப்பீங்களா சார்...? 
இங்கிலீஷ் கூட நல்லா தெளிவா அடுத்தவிங்களுக்கு புரியாம பேசுவேன் அப்பிடின்னா என்னை ஆஸ்திரியா [[ஆஸ்திரேலியா அல்ல]] காரன்னு நினைப்பீங்களா சார்??

௧௨௩ : யப்பா.... ஃபிரன்ட் ஆபீசுக்கு ஏற்ற ஆளைத்தான் ஜி எம் செலக்ட் பண்ணியிருக்காருப்பா....! எனிவே காங்கிராட்ஸ்....

நான் : நன்றி சார், இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன் இனிதான் ரொம்ப இருக்கு....

௧௨௩ : யப்பா உனக்கு அரபிதான் லாயக்கு என்னை ஆளைவிடு....[[ஓடுறார்]]

நான் : சார் ஹலோ சார் நில்லுங்க.........

என்னைக்கு என் பிளாக்கை படிச்சுட்டு அலறப்போறாரோ தெரியலை ஹி ஹி.....!
---------------------------------------------------------------------------

படித்ததில் ரசித்தது.....!

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்டபோய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப் போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்'’னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க, கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!
----------------------------------------------------


அருவாளை சாணை பிடிக்க சொல்லி உத்தரவு வந்துருக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து, அதான் ஒரு சாம்பிளுக்கு இந்த போட்டோ ஹி ஹி ஆபீசர் மன்னிச்சு....! 

நன்றி : சின்னவீடு"சுரேஷ்.

Tuesday, August 14, 2012

மறுபடியும் மலையாளி சேட்டனின் கும்மாலக்கிடி...!

கீழே இடப்பட்டிருக்கும் படங்கள் யாவும் பஹ்ரைன் படங்கள்...!

ஒரு முக்கிய வேலை இருந்தபடியால்,  பஹ்ரைன் லேபர் அத்தாரிட்டி ஆபீசுக்கு போகவேண்டி இருந்ததால், போன ஞாயிறு அன்று அவசரமாக கிளம்பி வண்டி பிடிச்சு ஓடிப்போயி அங்கே பார்த்தால்....செம கூட்டம், ஆத்தீ இதுக்கு டோக்கன் வேற எடுக்கனுமாம், நல்லவேளை உக்கார நிறைய சேர் போட்டு வைத்து இருந்தார்கள்.
[[மனாமா ஸரோட்டன் ஹோட்டல்]]

என்ன செய்ய, எம்புட்டு பெரிய வி ஐபி நான்னு இவிங்களுக்கு தெரியலை போல, டோக்கனை தந்தவன் காத்திருக்கும் இடம் எதுன்னு கூட வாயால் சொல்லாமல் கையால் சைகை காட்டி விரட்டினான் ம்ம்ம் அம்புட்டு மரியாதை நமக்குன்னு சந்தோஷமாக அங்கே போயி பார்த்தால், கூட்டம் மொத்தமா டோக்கன் நம்பர் வரும் கவுன்டர் நம்பரையே வெறித்து பார்த்துகிட்டு இருக்காயிங்க.
[[BAHRAIN LMRA கட்டடம், நான் போனது இங்கேதான்]]

எங்கே என்னை பார்த்ததும் எழும்பி நின்று வணக்கம் சொல்லி பீதியை கிளப்பிருவாங்களோன்னு பயந்து, முகத்தை மறச்சிகிட்டே போயி ஒரு சீட்டில் அமர்ந்தேன், ஏன்னா இப்போ பஹ்ரைனிலும் சமூக வலைத்தளங்களை பாவிக்கிறவர்கள் அதிகமாக [[தமிழர்கள்]] பெருகி விட்டார்கள். [[ஆனால் ஒருத்தனும் நேரில் வரமாட்டான் ஹி ஹி]]

[[ஜூஃபேர் ராமி இன்டர் நேஷனல் ஹோட்டல்]]

எனது டோக்கனை ஒரு முறை பார்த்தேன் ஆயிரத்தி நூற்றி பதினைந்து.....அய்யய்யோ என்னாப்பா இது, எப்போ நான் வீட்டுக்கு போறது? இங்கேயே தூங்கவச்சி ராத்திரிதான் விடுவானுகளோன்னு நடுக்கம் வந்துருச்சு, கொஞ்சம் நம்பர் வரும் டிவியை எட்டிப் பார்த்தேன் எல்லாவற்றிலும் ஆயிரம், ரெண்டாயிரம், எட்டாயிரம், எழாயிரத்திலேதான் இருந்தது, கனத்த நெஞ்சை கையில் பிடித்து கொண்டு அமர்ந்தேன்.

[[ஷியா"க்கள் அடிக்கடி கலவரம் நடத்தும் இடம், பழைய ஜூஃபேர் பஸ்நிலையம் அருகில்]]

மொத்தம் 24 கவுன்டர்கள் இருந்தாலும் வெறும் நான்கே கவுன்டர்கள்தான் ஓப்பனாக இருந்தது [[அலட்சியமா..? ரம்ஸான் காரணமா தெரியாது]] வந்திருந்ததில் 95 சதவீதம் இந்தியர்கள், அதில் மலையாளிகள் மிகவும் குறைவு என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது...! எல்லாமே வட இந்தியர்கள்...!
[[மனாமா பஸ்நிலையம், நம்ம திருநெல்வேலி பஸ்நிலையம் மாதிரி ஹி ஹி]]

ச்சே இப்பிடி தெரிஞ்சிருந்தால் லேப்டாப்பை கொண்டு வந்துருக்கலாமேன்னு நினைத்துக் கொண்டே பக்கத்தில் இருப்பவனை பார்த்தேன், ஒரு மாதிரியா முழிச்சிகிட்டே இருந்தான், ஆளைப் பார்த்தால் மலையாளி போல இருந்தான், சரி அப்பிடியே கண்ணை மூடிகிட்டே சாய்வோம்னு, ஒரு சொறி வரப்போவது தெரியாமல் சாஞ்சிட்டேன் சேர்ல...
[[அஷ்ரஃ ப், சோனி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எல்லாம் தரமானதாக கிடைக்கும் இடம், பஹ்ரைனில் இருப்பவர்கள் கண்டிப்பாக இங்கே சென்றிருப்பார்கள்...!]]

கண்ணை மூடிட்டு இருக்கும் போதே யாரோ என்னை பலமா பாக்குறாப்ல மனசுக்கு தோணினாலும் மனப்பிராந்தினு நினச்சுட்டே இருந்தேன், கொஞ்சம் நேரம் கழித்து என் தொடையை யாரோ சொறிவதை அறிந்து அதிர்ந்து எழும்பினேன்.
[[ஹப்ஸா, துணிக்கடை மற்றும் தரமில்லாத பொருட்களும் இருக்குமிடம், குதேபியா ஹப்ஸா கடை என்றே அட்ரஸ் சொல்லித் தருவார்கள், அம்புட்டு பேமஸ்]]

அதே பக்கத்து சேர்க்காரன்தான், "சேட்டா நிங்ஙள் மலையாளியானோ..?" [[ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்]] 

"மலையாளி அல்லா, மலையாளம் அறியாம் பறையு" [[மலையாளம் தெரியாதுன்னுட்டு மலையாளம் பேசுறானேன்னு ஜெர்க் ஆகிறான் ஹி ஹி]]

தனது டோக்கனை காட்டி "சேட்டோ இது எத்தரையானு நம்பரு...?" [[எண்ணால் எழுதி இருப்பதுமா தெரியல என்ற கோபம் எனக்கு]]

"எந்தா...?  எழுத்து வாயிக்கான் அறியித்தில்லே நிங்ஙள்க்கு..?"

"செமிக்கனம் சேட்டா, எனிக்கு இது மனசிலாவுந்நில்லா அதானு சோதிச்சு"

எனக்கு வந்த அதே டவுட்டுதான் போல....

டோக்கனை பார்த்து விட்டு சொன்னேன் "ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"எந்தோ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"ஓ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"மனசிலாயில்லா...?"

"ஹலோ....ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"ஓ...எந்தோ..?"

"மலையாளத்தில் பறைஞ்சா மனசிலாவுல்லே நிங்கள்க்கு...?"

என் கோபத்தை பார்த்ததும் சைலண்ட் ஆகிவிட்டான் சேட்டன், ஆனால் நான் கலவரம் ஆகிவிட்டேன், மலையாளத்திலும் தமிழிலும் எண்கள் ஒருபோலதானே இருக்கும் இவனுக்கு ஏன் புரியவில்லை என்று ஆராய்ச்சி பண்ண தொடங்கினேன்....ஆஹா.......மனசை சொறிய வச்சிட்டானே, நம்ம மலையாளம்தான் கோணலாகிப் போச்சோன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே, இன்னொரு மலையாளி சேட்டன் மற்றொரு சீட்டில் அமர.....அவனை பிடித்துக் கொண்டான் இவன்.

[[குதேபியா மார்க்கெட் தெரு, நம்மைப் போல ஏழைகளுக்கு பர்ச்சேஸ் பண்ண ஏற்ற இடம், அரபிகளுக்கும்தான்...!]]

"சேட்டன் மலையாளியானோ..?"

"அதே"

" ஈ நம்பர் எத்தரையான்னு பறையாமோ..?"

அவனை மேலும் கீழுமாக பார்க்கிறான். "ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"எந்தோ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"ஓ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"மனசிலாயில்லா...?"

கோபமாக...."ஓ....நிங்ஙள் காசர்கோடானோ...? 'ஆயிரத்தி "ஒரு"நூற்றி ரெண்டு" ஓகே"

"அதே அதே மனசிலாயி மனசிலாயி..."

அடப்பாவிகளா இப்பிடி வேற புதுசா சொல்லலாமா...? எங்கே போனாலும் நமக்கு வேட்டு வைக்கவும், பல்பு வாங்கி பாக்கெட்டில் திணிக்கவும் ஸ்பெஷலா திறிவானுக போல....! 

ஒரு வி ஐ பி"க்கு மரியாதையே இல்லை ம்ஹும்.....!
------------------------------

எல்லாருக்கும் நாஞ்சில்மனோ"வின் சுதந்திர தின வாழ்த்துகள்....!

இந்நாளில் "சென்னிமலை" நாயகனையும் என் நினைவில் கொண்டு வணங்குகிறேன்.......அவர்.......
.எங்கள் "கொடிகாத்த குமரன்...!!!"

ஜெயஹிந்த்...

டிஸ்கி : நம்ம சிபி செந்தில்குமார் அண்ணனும் சென்னிமலை"காரர்தான்...!

Saturday, August 11, 2012

தமிழன் பீனிக்ஸ் பறவைக்கு ஒப்பானவன்...!


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. 


இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

நன்றி : தமிழாசான் பதிவேடு [[http://tamilaasan.blogspot.com/2012/07/blog-post_25.html]]
--------------------------------------------------

வரலாறு.......வரலாறு என பீத்திக் கொண்டிருந்தவர்களுக்கு விழுந்துச்சுய்யா சரியான வரலாற்று ஆப்பு...! மாநாடு நடத்துறாங்களாம் மாநாடு...!

இதை தமிழக மக்களும் விரும்பவில்லை, உலக தமிழர்களும் விரும்பவில்லை என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக கண்கூடாக காணமுடிகிறது, சில சிங்கிடிகள் சிங்கி அடித்தாலும், அதை அறுவருப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள்...!

ஏன் இதை மனசாட்சி உள்ள கழக கண்மணிகளே ஆதரிக்கவில்லை, தலைமைக்கு பயந்து தன் கடமையை கடனுக்காக செய்கிறார்கள் என்பது கண்கூடாகவே தெரிகிறது, எதுக்குய்யா இந்த ஆளுக்கு இந்த மாநாடு என்றே கேட்கிறார்கள்...!

டெசோ என்றால் என்ன என்றே தெரியாத வட இந்திய தலைவர்கள் வருகிறார்களாம் எதுக்கு...? இன்னும் மிச்சம் இருக்கும் தமிழனை கொல்லவா..? 

நீ வாயைப் பொத்திக் கொண்டு இருந்தாலே தமிழர்கள் நல்லா இருப்பார்கள், தமிழன் தமிழன் என்று வலிய போயி சொறிந்தால், எந்த மொழிக் காரனுக்கும் கோவம் வருமா வராதா...?

தமிழன் தமிழன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி, ஆசியாவிலேயே பெயர் சொல்லும் பணக்கார லிஸ்டில் உங்கள் குடும்பமும் வந்தாச்சே இன்னுமா அடங்கலை...?

இந்த மாநாடு நடக்காமல் போனதற்கு சமூக வலைத்தளங்களும் முக்கிய காரணமாக இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது, ஆனந்தவிகடன் பேட்டியில் கனிமொழியிடம் கேட்க்கப்பட்ட கேள்வி, "சமூக வலைத்தளங்கள் திமுக"வை அதிகமாக காயப்படுத்துகிறதே கவனிக்கிறீர்களா?"......."ஆம் கவனிக்கிறோம்" பதிலை பார்த்தீர்களா?

"கல்லை கட்டி காட்டில் விட்டால் அந்த கல்லை மெத்தயாக்கிக் கொள்ளும் வன்மை உண்டு தமிழனுக்கு" என்பது வரலாறு சொல்லும் பாடம், இவர் "இப்போ" மாநாடு நடத்திதான் தமிழனை காக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை இல்லை இல்லை....வாய் பேசாமல் இருந்தாலே இவர் தமிழனுக்கு செய்யும் உதவியாக இருக்கும்...!


இனி மாநாடை அறிவாலயத்தில் நடத்துங்க, இல்லை கோபாலபுரத்தில் நடத்துங்க, இல்லை சி ஐ டி காலனியில் நடத்துங்க....இது வரலாற்றில் உங்களுக்கு மற்றுமொரு மாறாத கரும்புள்ளி என்பதை மறக்கவேண்டாம், வரலாறு உள்ளவரை கட்டபொம்மன் சரித்திரத்தில் எட்டப்பன் எப்படி நினைவு கூறப்படுகிறானோ, அப்படியே நீங்களும் நினைவு கூறப்படுவீர்கள் இது சத்தியம், எந்த சல்ஜாப்பும் இனி எடுபடாது...!


ஈழத்"தமிழன்" பீனிக்ஸ் பறவை போன்றவன், உலகமே எதிர்த்தாலும் இறுதி வெற்றி அவனுக்கே, இதை எவனாலும் மாற்ற முடியாது, உங்கள் கரிசனை அரசியலை சாக்கடையை விட கேவலமாக நினைக்கிறோம். போ........போ.........போய்யா...
..!!

டிஸ்கி : ரொம்ப திட்டனும் போல இருந்தது, நாகரீகம் கருதி இதோடு முடிக்கிறேன்....!
------------------------------------


நண்பன் நேசன் [[தனிமரம்]] அவர்களின் "மலையகத்தில் முகம் தொலைந்தவன்" பதிவுகள் அனைத்தும் மின்னூலாக இன்று வெளிவரும் விழா நடக்கிறது, விழாவுக்கு மங்கள விளக்கேற்றலுக்கு எனக்கும் அழைப்பு அனுப்பியமைக்கு நன்றிகள்.....!


விழா நிகழ்ச்சிகள் சிறப்புற வாழ்த்தி விளக்கேற்றுகிறேன்...


விழா நிகழ்ச்சிகள் யாவும் பேஸ்புக் "இன்னும் என்ன தோழா...[[https://www.facebook.
com/groups/120226648034596/]]" என்ற குழுமத்தில் வந்து கொண்டிருக்கும், வாருங்கள் யாவரும் வாழ்த்துவோம் மங்களமாக.....!

உங்கள் பயணம் மென்மேலும் உயர்ந்து தொடர வாழ்த்துகிறேன், வாழ்க என் உயிர் தேன்தமிழ்.....வளர்க தமிழ் இமயத்தை விட உயரமாக....!

Thursday, August 9, 2012

பதிவர்கள் சக பதிவர்களை சந்திக்க கூச்சப்படுவது ஏன்...?!

பிளாக்"கிலும், பேஸ்புக்"கிலும் பிரபலமா இருக்காங்களே இவர்கள் பெ.......ரி......ய.......ஆட்களாக பெரும் பணக்காரர்களாக, நாலும் தெரிந்தவர்களாக, ஊரில் உள்ள பெ....ரி....ய....மனிதர்களோடு தொடர்பும் நட்பும் உள்ளவர்களாக இருப்பார்களோ என்று, தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு, நேரில் பார்க்க முடிந்தும், பார்க்காமல் பயந்து அல்லது கூச்சப்பட்டு ஒதுங்குகிற பல நண்பர்களை கண்கூடாக பார்க்கும் போது, மனதில் வேதனைதான் வருகிறது...!!!பதிவுலகில் நான் முதன்முதலில் சந்தித்த நபர் நம்ம "கலியுகம்"தினேஷ், பஹ்ரைனில் இருக்கிறார்னு தெரிஞ்சதும் [[அவர் பிளாக்கில் போன் நம்பர் வச்சிருந்தார்]] போன் செய்தேன், அண்ணே நாம நேரில் ஒருநாள் சந்திப்போம்னு பேசிக்கிட்டோம், ஆனால் திடீரென ஒருநாள் நேரில் வந்து தன் நட்பை அடையாளப்படுத்தி சென்றார்...! [[அப்புறம் நாங்கள் அடித்த கும்மாளம்தான் எல்லாருக்கும் தெரியுமே ஹி ஹி]]

அடுத்து நண்பன் ரவிகுமார், சாட்டிங்கில் வந்து பின்பு போன் செய்து, ஒருநாள் ஹோட்டலில் சந்தித்து, பின்பு அவர் வீட்டிற்க்கே என்னை அழைத்து சென்று, அவர் நண்பர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், அதுவும் பிளாக் நண்பர்களுக்குத் தெரியும்.

இன்னும் நிறைய நண்பர்கள் பஹ்ரைனில் இருந்து கொண்டு பதிவு எழுதுகிறார்கள், சார் உங்களை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறதுன்னு சாட்தான் பண்ணுறாங்க, நான் போன் நம்பர் கொடுத்தாலும் அவர்கள் போன் பேசுவதே இல்லை, அவர்களும் தன் நம்பர் தராமல் ஒதுங்குகிறார்கள், நான் கண்டுக்குறதும் இல்லை...!

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வலது கரம் போன்றவரும், அவரின் இணைய தளத்தின் பொறுப்பாளருமான ஒரு நண்பர் இங்கே இருக்கிறார், அவர் கூட சாட்டிங்க்லதான் பேசுவார்....! இன்னும் நிறைய பேருங்க இருக்காங்க....!

ஏன் இந்த தயக்கம், நடுக்கம்னு எனக்கு இன்னும் புரியவே இல்லை, ஒருவேளை பணம் கேட்டுருவாயிங்கன்னு பயப்படுறாங்களோ...? இல்லை நம்மை பற்றி ஏடாகூடமா எழுதிப்புடுவாங்களோனு பயப்படுறாங்களோ என்னமோ?

தூரத்தில் இருந்து பார்த்தால் கடல் பெருசா தெரியுமாம், கடலுக்குள்ளே யாத்திரை போனால்தான் தெரியும் அதன் சுகம்னு நண்பன் அடிக்கடி சொல்வான், அப்படிதான் இவங்களும்னு நினைக்கிறேன்....!

எனக்கும் முதலில் பதிவர்களை எழுத்தில் பார்க்கும் போது அப்படிதான் இருந்தது, நெல்லை பதிவர் சந்திப்பில் அதற்கு நல்ல விடையும் கிடைத்தது, எல்லாமே நம்மை போலதான் அங்கே, இங்கே ஏற்ற தாழ்வு இல்லை, அலைவரிசை ஒத்து போகிறதா ஓகே கைகொடு நட்புக்கு, ஒத்து போகலையா விலகாமல் கொஞ்சம் கேப் விட்டு ஒதுங்கி நில், என புரிந்து கொண்டேன்...!

எனது பதிவுலக வாழ்க்கையில் இப்போது எனக்கு உலகமெல்லாம் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், காசோ பணமோ தேவையில்லை நல்ல நட்புக்கு இல்லையா...? அப்படி நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்று இருக்கிறேன்...!

ஊருக்கு போனால் கன்னியாகுமரி, நாகர்கோவில் தியேட்டர்கள் இதைவிட்டால் ஒன்னுமே எனக்குத் தெரியாது, ஆனால் இப்போ எந்த இடம் போகனும்னு ஆசைப்பட்டாலும் நண்பன் விஜயன் வந்து கூட்டிச் செல்கிறார், திருநெல்வேலிக்கு என் மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போவதோடு சரி, ஆனால் இப்போது நெல்லை சீமைக்கு போகாமல் மும்பை திரும்ப முடியாத அளவுக்கு நம்ம ஆபிசரின் பாசமும், கவுசல்யா, அவர் கணவர் ஜோதிராஜ், ரூபினோ மேடம், திவானந்தா சுவாமிகள், இம்சை அரசன் பாபு என இவர்கள் அன்பு கட்டி போட்டு வைத்துள்ளது...!

விக்கியுலகம் அண்ணனே வியட்னாமில் இருந்து நெல்லை வந்து அன்பை காட்டி செல்லுமிடமாக பதிவர்கள் நட்பு விரிந்துள்ளது என்பதை நினைக்கும் போது மனம் உவகை கொள்கிறது, மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் சென்னை நண்பர்களைதான் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறேன், அதற்கும் ஒருநாள் வராமலா போய்விடும் கண்டிப்பாக என் நண்பர்களை அங்கே சென்று சந்திப்பேன்...!
[[ஈரோடு வழியாக ரயிலில் எப்போது வந்தாலும், என்னை சந்திக்க வரும் எங்க பெரியண்ணன்]]

இப்படி பம்மி பதுங்கி ஒளிய என்ன அவசியம் நண்பர்களே....? கூட்டை விட்டு வெளியே வாருங்கள், இப்போது காலம் மாறிவிட்டது பதிவுலகில், மாவட்ட வாரியாக பதிவர்கள் சங்கங்கள் ஆரம்பித்து வருகிறார்கள், சந்திக்கிறார்கள், வரும்காலம் நம் கையில் மறக்க வேண்டாம்...!!!

இறுதியாக......

போட்டோவில் பதிவர்களை பார்த்து மிரளாதீர்கள்.....போட்டோவில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.....! சிங்கம் மாதிரி போட்டோவில் இருக்குறவிங்க பூனை மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க உங்களுக்கே ஆச்சர்யமாக [[சிரிப்பாக]] இருக்கும்...! [[எவம்லேய் அங்கே கல்லை தூக்கி குறி பாக்குறது...?]]

"எல்லாருமே நம்மை போல பாடுகளும் கஷ்டங்களும் உள்ள மனுஷர்கள்தான்ய்யா" புரியும்னு நினைக்கிறேன்.

டிஸ்கி : படங்கள் எல்லாம் நீங்கள் ஏற்கனவே பார்த்ததுதான், இருந்தாலும் இது புதியவர்களுக்கான மலரும் நினைவுகள்...!
-----------------------------------------------------------------------

ஸ்பெஷல் டிஸ்கி : சென்னை பதிவர்கள் சந்திப்பு வரும் 26/08/2012 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்சி அடைகிறேன்...!

Wednesday, August 8, 2012

அந்த வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடு...!

பேஸ்புக் சாட்டிங்....

"ஹாய் மனோ சித்தப்பா எப்பிடி இருக்கீங்க?"

"நலமே, நீங்க எப்பிடி இருக்கீங்க...?"

"என்னாது நீங்களா...? நான் உங்க மகள் மனோ சித்தப்பா, நல்லா இருக்கேன், மோசஸ் எப்பிடி இருக்கான், பாப்பா எப்படி இருக்கிறாள், சித்தி எப்பிடி இருக்காங்க...?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க....ஆமா நீ யாரு...?"

"போங்க மனோ சித்தப்பா, என் பிராஃபில்ல போட்டோ பார்த்த பிறகுமா என்னை தெரியலை...?"

"ம்ம்ம்ம்ம்ம் தெரியலையே'ம்மா நீ யாரு...?"

"போங்க மனோ சித்தப்பா நான் உங்க கூடக் கா...."

சாட்டிங் ஆஃப் லைன் போயிருச்சு....

எப்பா, கொஞ்ச நாளைக்கு முன்னால இப்பிடி நடந்து கொல்லோ கொல்லுன்னு கொன்னாயிங்க, இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு, சித்தப்பா'ன்னு சொன்னால் பரவாயில்லை, மனோ"சித்தப்பா'ன்னா கண்டிப்பா நெருங்கிய சொந்தமும் என் கைக்குள் வளர்ந்த பிள்ளையாகதான் இருக்கும், பெயரை மாற்றி வைத்துள்ளாள்.

ஸ்கூல் போட்டோ நிறைய பேஸ்புக்ல போட்டாலும் அதில் நம்ம மூஞ்சி இவள் மட்டுமே நிற்கிறாள், பக்கத்துல நிக்குறவிங்களை வச்சி இவளை அடையாளம் காண இயலவில்லை, எல்லாமே வட இந்திய பிள்ளைகள்...!

இப்பிடித்தான் போன தடவை ஊருக்கு போன போது, ஒரு பங்ஷனில் வச்சி பிடித்து கொண்டார்கள் பிள்ளைகள், அன்னைக்கு சாட்டிங்க்ல என்னை தெரியாதுன்னு சொன்னீங்களே இப்போ சொல்லுங்க நான் யாருன்னு...? என வந்து அப்பிக் கொண்டார்கள் சொந்தம் பந்தம் குழைந்தைகள்....!

இப்பிடி இவர்களை கண்டு பிடிப்பதற்கே வீட்டம்மாவுக்கு போன் போட்டு கண்டு பிடிச்சதும் உண்டு, குழந்தைகள் எல்லாம் இப்போ வளர்ந்ததும் எனக்கு கண்டுபிடிக்க இயலவில்லை. 

ஒரு சர்ச் புரோகிராமுக்கு [[மும்பை]] போனேன், உள்ளே நுழையவும் சத்தமா ஒரு பையன் குரல் கேக்குது "ஹே நாஞ்சில்மனோ வந்தாச்சு"......ஆக இவிங்க நம்மளை பலமாதான் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க...!

சரி போகட்டும் நமக்கு பல்பு வாங்குறது புதுசா என்ன....? என் அக்காமார்கள் பொண்ணுகளுக்கு போன் பண்ணி இது யாருன்னு கேட்டா சொல்லிருவாங்க [[ஆனாலும் அவங்க பிரண்ட்ஸ் பாலோவர்லயும் இந்த பிள்ளை இல்லை]] பார்ப்போம் பல்பு எரியுதா, இல்லை பாக்கெட்டுகுள்ளே வச்சிருந்துட்டு ஊர் போகும் போது வாங்கி காட்டணுமான்னு...?

கொஞ்சநாள் அமைதியா இருந்தாங்க இப்போ ஆரம்பிச்சிட்டாங்க, மனோ சூதானமா இருய்யா....
--------------------------------------------------------------------

படித்ததில் சிரித்தது....

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்
கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்ட
போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு
சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே
கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்
மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்
தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப்
போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே
வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம்
விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு
வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி
இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்'’னு முழுங்கிட்டு, எருமை மாடு
மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்
சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு
வச்சாளாம் மனைவி..!
---------------------------------------------------

தற்கொலைகொலை இரண்டுக்கும் என்ன
வித்தியாசம்
?….

உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை..
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை…

[[நாசமாபோச்சு போங்க]]
-------------------------------------------------------------

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

[[கல்யாணம் ஆகாத வெட்டி பிளாக்கர்ஸ் ஜாக்கிரதை]]
-----------------------------------------------------

நீதிபதி : உனது கடைசி ஆசை என்ன ? 

பக்கி : சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்.

[[செத்தான்டா வண்டு முருகன்]]

Tuesday, August 7, 2012

பிரபல பதிவர்களின் கொலைவெறி தாண்டவம்...!


கருவாடு சாப்பிட ஆசைபட்டு மலையாளி கடையில போயி பார்த்தேன், விதவிதமான கருவாடுகள் தொங்கிட்டு இருந்துச்சு, ஒரே ஒரு கருவாடு பார்சல் பார்க்க ரொம்ப கவர்ச்சியா அழகா டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கவே, அதை வாங்கிட்டு [[கொள்ளை விலை]] ரூமிற்கு வந்து, காரைக்"குடி" நண்பனிடம் பொரித்து கொண்டுவா சாப்பிடலாம் என்றேன்.


"அண்ணே, இது நம்ம ஊர் மீன் மாதிரி இல்லையே அண்ணே" 

"டேய், இல்லைன்னாலும் நீ சாம்பாருக்குள்ளே ஆட்டுகுடலை போட்டவன்தானே...... உனக்கு என்ன தெரியும்..? போ கொண்டுபோயி பொரிச்சி எடுத்துட்டு வா" 

சாப்பாட்டுடன் பொரித்த கருவாடும் வந்தது....

"அண்ணே, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துர்றேன் நீங்க சாப்புடுங்க"

நான் சாப்பிபிட ஆரம்பித்து ரெண்டு கவளம் சோறு சாப்பிட்டுவிட்டு கருவாட்டை எடுத்து கடிச்சேன், கடி படலை மறுபடியும் கடிச்சு இழுத்தேன் அசையவே இல்லை, ரெண்டு கையிலையும் பிடிச்சு கடிச்சி இழுத்தேன் ம்ஹும் வரவே இல்லை, ரப்பரை விட ஸ்ட்ராங்கா இருக்கவே.....கடுப்பாகிட்டேன்....

சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு நேரே கருவாட்டு கடைக்கு போயி சேட்டன்கிட்டே காட்டி சண்டைக்கு போனேன், அவன் கூலாக சொன்னான் "அண்ணா, இது 'பிலிப்பைனிகளின்' கருவாடு, இதை நம்மாளுங்க சாப்பிட மாட்டாங்க, நீ என்னமோ எல்லாம் தெரிஞ்சாப்புல வாங்கிட்டு போனாயோன்னு நினைச்சேன், உன் பிலிப்பைனி கேர்ள் ஃ பிரண்டுக்கு" [[கொய்யால]]

"டேய் என்ன கிண்டல் பண்ணுறியா...? கருவாடுன்னா சாப்புடுறாப்ல இருக்க வேண்டாமா என்னா இது ரப்பரை விட மோசமா இருக்கு?"

"ஐயோ அண்ணா, அதான் சொன்னேனே "பிலிப்பைனி"களுக்குத்தான் இதை எப்படி பண்ண வேண்டும்னு தெரியும், இதை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னரே அவர்கள் கூட்டோ, கறியோ வைத்து சாப்பிடுவார்கள், நீ உடனே பண்ணினா நடக்குமா என்ன..?"

"ங்கே ங்கே ங்கே"

பல்பை கையிலும், பாக்கட்டிலும் வாங்கிட்டு ரூமுக்கு வந்தால், காரைக்குடி'காரன் மிரண்டு போயி உக்காந்து இருக்கான் ரூமில், அப்போ பயபுள்ள விஷயம் தெரிஞ்சிதான் வெளியே ஓடி இருக்கான் போல....நான் ஒன்னுமே சொல்லாமல் போயி சாப்பிட்டுட்டு வந்துட்டேன். ராத்திரி பயபுள்ளைங்க என்னை பலி ஆடு ஆக்கி வெட்டி வெட்டி சிரிக்கிறானுக.....

ம்ம்ம்ம்ம்ம் பயிற்சி இன்னும் போதாது மக்கா....
------------------------------

நல்ல நல்ல நண்பனுங்களா இருக்காங்கப்பூ நம்ம லிஸ்ட்ல.....பாக்குறீங்களா...? இதுல நீங்க யாருன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்...?

ஒருத்தன், எப்பவும் அருவாளோடே சுத்துறான்...

ஒருத்தன், எப்பவும் இடுப்புல ரிவால்வாரை கட்டிகிட்டு சுத்துறான்...

ஒருத்தர், இடுப்புல வேஷ்டியே இல்லாமல் சுத்துறார்...


ஒருத்தர், எப்பவும் பெல்ட்டை சுழட்டிகிட்டே சுத்துறார்....[[கனவுலயும்ல்லா வந்து மிரட்டுறார்]]

ஒருத்தன், எடுத்ததுக்கும் பிடிச்சதுக்கும் சரேல்னு கால்ல விழுறான்....

இதுல ஒரு குரூப் "வெட்டி"யாவே இருந்து போட்டு கொல்லுரானுவ...

ஒருத்தன், டேய் நான் போலீஸ்காரன் போலீஸ்காரன்னு கத்தி கவிதை எழுதுறன்...

ஒருத்தன், ராஜாவும் நானே ஆ ராசாவும் நானேன்னு அலறிகிட்டு திரியுதான்...

ஒருத்தர், எதுக்கெடுத்தாலும் டைரக்டா போன் பண்ணி காதுல வென்னியை ஊத்துறார்...[[உலகத்துல பங்கு சந்தை உயர்ந்தாலும் குறைஞ்சாலும் நானாய்யா கிடைச்சேன் இவருக்கு...?]]

ஒருத்தன், அவன் போட்டோவை குளோசப்ல காட்டியே கொல்லுறான்...

ஒருத்தன், பல்பு வாங்கவும் விற்கவும்னு அலையுறான்....


என்னய்யா உலகம் இது.....இங்கே பக்கத்துல மலை ஏதும் இருக்கா உடனே சொல்லுங்க...? "அவனை" தூக்கிப் போட்டுருவோம்.....
----------------------------------------------------------------------------

முதலாளி நல்லா இருந்தால் கம்பெனி நல்லா இருக்கும்....
கம்பெனி நல்லா இருந்தால் முதலாளி நல்லா இருப்பான்...

தொழிலாளி நல்லா இருந்தால் கம்பெனி நல்லா இருக்கும்..
கம்பெனி நல்லா இருந்தால் தொழிலாளி நல்லா இருப்பான்...


தொழிலாளி நல்லா இருந்தால் அவன் வீடு நல்லா இருக்கும்...
அவன் வீடு நல்லா இருந்தால் அந்த குடும்பம் நல்லா இருக்கும்...

குடும்பம் நல்லா இருந்தால் அந்த ஊர் நல்லா இருக்கும்...
ஊர் நல்லா இருந்தால் நாடு நல்லா இருக்கும்...

இங்கே ஆரம்பமே சரியில்லையே நாடு எப்பிடிய்யா நல்லா இருக்கும்...?

நான் நம்ம சிங்"டி யை சொல்லலைன்னு சொன்னா நம்பவா போறீங்க...!!!

Monday, August 6, 2012

ஆக்கங்கெட்ட பிள்ளைகள் இருக்கும் பெற்றோருக்காக....!

நேற்றைய தொடர்ச்சி....

ஊரிலிருந்து என் அப்பா வந்திருந்தார். அவரையும் ஷேருச்சாமியுடன் வாக்கிங் அழைத்து சென்றிருந்தேன். "என்ன வேலை பண்ணுறீங்க?" என்பதில் ஆரம்பித்து, பல விஷயங்களை விசாரித்த சாமி, "ரிட்டயரான பிறகு எப்படி..?" என்றார்.

"ஏதோ குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டி வச்சிருக்கேன். மத்தபடி, கையில் நயாபைசா கிடையாது. என் பையன் வச்சி காப்பாத்துனாதான் உண்டு!" என்று என்னை நெளிய வைத்தார் அப்பா.

"அதான் சொந்த வீடு இருக்குல்ல....பையன் காப்பாத்தாட்டாலும், வீடு காப்பாத்திடும்.." என்றார் சாமி.


"வீட்டை வித்து பேங்க்ல போட்டுட்டு, அதுல வர்ற வட்டியில பொழப்ப ஓட்டிடலாம்னு சொல்றீங்களா சாமி? வீடு வித்த காசு பேங்க்ல இருக்குன்னா, அதுக்கு ஆயிரம் செலவு வந்து நின்னிடுமே.... இந்தா இவன் கூட அதை வாங்கிக்கிட்டு, ரோட்டுல நிப்பாட்டிடுவானே..!" என்றார் அப்பா.


 "அதெல்லாம் வேணாம், பேசாம ரிவர்ஸ் மார்ட்கேஜ் பண்ணிக்கிட வேண்டியதுதான். நீங்க சொல்ற மாதிரி எந்த பிரச்சினையும் இருக்காது. பேங்க்ல இருந்து மாசா மாசம் தேவையான பணத்தை சாகுற வரைக்கும் வாங்கிக்கலாம்..." என்றார் சாமி.


"மார்ட்கேஜ் கேள்விப்பட்டுருக்கேன். அது என்ன சாமி ரிவர்ஸ் மார்ட்கேஜ்?" என்றான் நண்பன். "அடேய்... ஒய்வு காலத்துல கையிலையும் காசு இல்லாம, பெத்த பிள்ளைங்களும் கைவிட்டுட்டாங்கன்னா என்ன பண்றது? அதுக்குதான் இந்த திட்டம். வீட்டை பேங்க்ல அடமானம் வச்சுட்டா, அவங்க பென்ஷன் மாதிரி ஒரு தொகையை மாசா மாசம் தருவாங்க, தம்பதிங்க ரெண்டு பேரோட காலம் முடியுற வரைக்கும் பணம் தருவாங்க, அதுக்குப் பிறகு வீட்டை வித்து, கொடுத்த பணத்தை பேங்க் எடுத்துகிடும்"

"அப்ப லோன் கொடுக்குறப்ப, வாங்குறவங்க வயசு, வீட்டோட மதிப்பு இதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்துதான் லோன் தருவாங்க, இல்லையா?" என்றான் நண்பன்.

"ஆமாம்! அது மட்டுமில்லை, அஞ்சி வருஷத்துக்கு ஒரு தடவை லோனை மார்க்கெட் வேல்யூவை வெச்சு மறுபரிசீலனையும் பண்ணுவாங்க, அதிகபட்சமா இருவது வருஷம் வரைதான் இந்த லோன் கிடைக்கும்.." என்றார் சாமி.

"சரி சாமி, ரிவர்ஸ் மார்ட்கேஜ் சிஸ்டத்துக்கு போயிட்டா...பின்னாடி வீடு நமக்கு வேணும்னா கூட கிடைக்காதா? வாங்கின தொகையை வட்டியோட திருப்பி கட்டுரைதா இருந்தாக்கூட வீட்டைத் திருப்பி தரமாட்டாங்களா?" என்றேன்.


"கவலையை பார்றா! தாராளமா பணத்தை கட்டி, வீட்டைத் திருப்பி வாங்கிக்கலாம், லோன் வாங்குனவங்கதான் திருப்பிக் கட்டணும்னு இல்லை, அவங்க காலத்துக்கப்புறம் வாரிசுகள் கூட லோனை திருப்பி கட்டிட்டு வீட்டைத் திருப்பிக்கலாம்..." என்றார் சாமி.

"அப்ப என் பையன் கையை எதிர்பார்த்து நான் வாழவேண்டியது இல்ல.... அப்படிதானே சாமி?" என்றார் அப்பா.


"நீங்க மட்டுமில்ல... நல்ல மதிப்புல சொந்த வீடு வச்சிருக்குற எந்த அப்பா அம்மாவும் 'நடுத்தெருவுல பசங்க நிருத்திடுவாங்களோ'னு பயப்பட வேண்டியதில்லை" என்று சொல்லி விடை பெற்றார் சாமி.

டிஸ்கி : ம்ம்ம்ம் இனி தைரியமாக இருங்க போதுமா....நோ டென்ஷன் நோ ஃபீலிங்ஸ், ஜாலியா இருங்க...

டிஸ்கி : ஷேருச்சாமி என்கிற பெயரில் ஜூனியர் விகடனில் [[தொடரில்]] டாக்டர் எஸ். கார்த்திகேயன் எழுதியது.

நன்றி : ஜூனியர் விகடன் 12/05/2010

"பெற்றோரை போற்றுவோம், வாழவைப்போம், அவர்கள் சாபம் இல்லாவிட்டாலும், மேலே இருப்பவனின் சாபம் விடவே விடாமல் தொடரும் ஜாக்கிரதை..."!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!