புது இடத்தில் ஹோட்டலின் எல்லா இடங்களையும் தனியாக சுற்றிப் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய ஜி எம் பணித்தபடியால் ஹோட்டலினுள் எல்லா இடங்களையும் பார்ப்பதற்காக ஒவ்வொரு மாடியாக ஏறி பார்வையிட்டு கொண்டே வந்தேன்.
ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் அங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் வேலைகள் இருப்பதை கணித்து, கவனத்து கொண்டே ஒவ்வொரு மாடியாக லிஃப்டில் போயி பார்த்துக் கொண்டிருக்கும் போது....
பத்தாவது மாடியில் இருந்து கீழே இறங்க லிஃப்டில் ஏறினேன், உள்ளே வாக்கிடாக்கி சகிதம் சீஃப் செக்கியூரிட்டி அவசரமாக வாக்கிடாக்கியில் ஆர்டர் பிறப்பித்துக் கொண்டிருந்தான். என்னமோ பிரச்சினை போல....அவசரமாக கீழே போக பிரயாசப்பட்டு கொண்டுருந்தபடியால் அவன் போக்குக்கு லிஃப்ட் போகட்டும் என விட்டுவிட்டேன்.
சீஃப் ரொம்ப அவசரமா பரபரவென லிஃப்ட் உள்ளே நிற்பதை பார்த்து நானே கொஞ்சம் பயந்துதான் போனேன், லிஃப்ட் கிரவுண்ட் ஃபுளோர் வந்து டோர் திறக்கவும்.......
அவன் "சார் நீங்க போங்க"
நான் "இல்லை நீங்க போங்க"
அவன் " இல்லை சார் நீங்கதான் முதல்ல போகணும்"
நான் "இல்லை சார் நீங்கதான் அவசரமா போகனும் போல, நீங்க வெளியே போங்க முதல்ல"
அவன் " சார் நாங்க உங்களை வெகுவா மதிக்கிறோம்[!] அதனால நீங்க போங்க முதல்ல"
இதற்கிடையே எந்த நாதாரியோ எட்டாவது மாடியில் இருந்து கீழே வர லிஃப்ட் பட்டனை அமர்த்த........எங்கள் லிஃப்ட் டோர் டபக் என மூடிக்கொண்டு மேலே போக.....
சீஃப் செக்யூரிட்டி என்னை பார்த்து முறைத்த முறைப்பு இருக்கே......[[நான் புது ஸ்டாஃப் வேற]] கண்டிப்பா அடிவிழும்னு ரெடியாகிட்டேன் [[ஹி ஹி]]
ஆத்தீ எட்டாவது ஃப்ளோர் வந்ததும், கீழே போகவேண்டிய நான் எட்டாவது ஃப்ளோர்லேயே இறங்கி ஓடியே போயிட்டேன்...வயர்லஸ் அலறும் சத்தம் இப்பவும் எனக்கு சிரிப்பு சிரிப்பு அதிர்வா இருக்கு.......சரி அந்த செக்கியூரிட்டி யாருன்னு கேளுங்களேன்....?
...................ஆத்தீ நம்ம பஞ்சாப் "சர்தார்" அண்ணாச்சி..........!
------------------------------ ------------------------------ ------------------------
ஒரு ஆச்சர்யம், எனக்கு மட்டும்தானா அல்லது உங்களுக்கும் இது நடக்குதான்னு சொல்லுங்க...?
எனக்கு வெள்ளைக் கலர் சட்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், நான் வெள்ளைக் கலர் சட்டை வாங்கிப் போட்டால் போட்ட அன்று அல்லது, மறுமுறை எப்படியாவது அந்த சட்டையில் பார்க்க சகிக்காத வண்ணம் ஏதாவது கறை வந்து விடும், அதாவது பென் இங்க் லீக்காகி கறையாகும், இல்லைன்னா நான் நடந்து போகும்போதே காக்கா ஆயி போட்டுரும்...!
இது ஒருமுறையல்ல பலமுறை நடந்துருக்கு நடந்துகிட்டும் இருக்கு, ஆனாலும் விடாமல் வாங்கி போட்டுட்டுதான் இருக்கேன், கண்ணு படும்போல இருக்கு அத்தான்னு என் வீட்டம்மா சொன்னாலும், எனக்கு அதன் மர்மம் புரியவே இல்லை இன்னும்...!
அதுபோல கருப்பு கலர் பேன்ட், ரெடிமேடா வாங்கி அங்கேயே போட்டுப்பார்த்து ஓகே'ன்னு வந்தாலும், எனக்கு அது ஃபிட்டாக இருப்பதில்லை ஏதாவது எனக்கு பிடிக்காத கோளாறு கண்டிப்பாக இருக்கும் அந்தப் பேன்டில், இதுவரை கருப்பு பேன்ட் எனக்கு செட் ஆகவேயில்லை, இதுவும் ஆச்சர்யமாதான் இருக்கு...மற்ற எந்தக் கலரும் ஒரு பிரச்சினை இல்லை, இந்த ரெண்டு கலரும்தான் போட்டு வறுக்குது.....ம்ம்ம்ம் இந்த ரெண்டு கலருமே எனக்கு பிடித்தவைகள்....!
------------------------------ ------------------------------ ------------------
சரி, ஒரு சின்ன சந்தேகம்....?
கட்டபொம்மனின் வாரிசுகள் இப்போதும் பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு பக்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும், ஆனால் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள்...? யாருக்காவது தெரியுமா...?
கட்டபொம்மனை தூக்கிலிட்ட பிறகு கண்டிப்பாக எட்டப்பனுக்கோ அவன் வாரிசுகளுக்கோ கிஞ்சிட்டும் மரியாதை இருந்து இருக்காது என்பது நிச்சயம், அப்படி இருக்கும் பட்சத்தில், எட்டப்பனும் அவன் வாரிசுகளும் ஊரை காலி செய்து போனார்களா...?
எங்கே போனார்கள்...? எட்டப்பனின் மரணம் எப்படியாக இருந்தது...? யாருக்காவது தெரியுமா...? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.........உங்கள் பதிலைப் பார்த்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ஃபாலோ அப் செய்கிறேன்....!