Tuesday, October 29, 2013

காந்தி பிறந்த மண்ணில் இருந்து ஒரு தலைவன்....!

ஒரு நாட்டை நாறடிக்க வேண்டும் என்றால் இந்த காங்கிரஸ் கட்சி ஒன்றே போதும், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் நடத்தும் அழிச்சாட்டியங்களை இந்திய மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள்...!

இது வேறெந்த நாட்டிலும் இல்லாத அநியாயம், ராஜீவ் பூந்தியை கொன்னது யாருன்னு கூட இன்னமும் தெரியாமல், ஒரு இனத்தையே கருவறுத்தவர்களின் உண்மை முகம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

மனதில் வஞ்சம் வைத்து, வெளியே இன்முகம் காட்டும் அன்னை, முசோலினி, நாடு பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்களின் பரம்பரையில் வந்தவருக்கு இங்கே மிகப் பெரிய சக்தியாக உருவாக வழி அமைத்துக் கொடுத்தது யாரு ?

உலக மக்கள் தொகையே 700 கோடிதான், ஆனால் இவர்கள் களவாண்ட மக்கள் பணமோ [[ஸ்பெக்ட்ரம்]] ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் கோடி....! உலகளவில் தமிழனின் வீரம் தெரியப்பட்டதும் அல்லாமல், களவாங்குறதிலேயும் நாங்க கில்லாடிடான்னு, காட்டிட்டான் தமிழன்...!

ஆட்சியை தன் கையில வச்சிகிட்டே "எங்க பாட்டி, அப்பா மாதிரி நானும் கொல்லப்படலாம்"னு கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூவுது ஒரு ஆக்கங்கெட்ட கூவ....!

அடுத்து...

தமிழ்நாட்டுல ஒரு குடும்பம் தமிழ்நாட்டை மொத்தமா வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்று பிரிச்சு ஊரை அடிச்சி உலையில போட்டுகிட்டு இருக்கு....!

அடுத்து தலைநகரை கைப்பற்றும் கட்சி கூட கூட்டு வைக்க பலமான சிந்தனையில் இருக்கு இவங்க தலைமை, பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அதுவும் மோடி பிரதமராக வரும் பட்சத்தில் "பழம் மொழி" களி திங்க மறுபடியும் திகார் போகவேண்டி வரும்...!
அதான் என்னடா பண்ணலாம் என்கிற யோசனையில் இருக்கு தலைமை, காங்கிரஸை விட்டுட்டு போலாம்னாலும், காங் இவிங்களை விடுறதா இல்லை, ரெண்டு மூன்று தடவை முயற்சித்தும், காங்கிரஸ் பயங்கரமான மறைமுக தாக்குதல் நடத்தியதும் அடங்கி விட்டார்கள்.

ஆக புலி வால் பிடித்த கதையாக உடன்பிறப்புகள் இருக்கிறார்கள், என்ன இனி இவிங்க ஜெயிச்சு வாறது என்பது என்னைப் பொறுத்தவரையில் கானல் நீர்தான், பேசாம இருக்குற காசை எடுத்துட்டு போயி பேரிக்காவில் செட்டில் ஆகச் சொல்லுங்கள்.

காங்கிரஸ் கட்சி வேரும் வேரடி மண்ணோடும் சா[ய்க்க] யவேண்டும் என்பது என் பிரார்த்தனை, வேண்டுதல்.... இவர்களைக் கொண்டு நாட்டுக்கு ஒரு பிரயோசனம் இல்லை, மெத்த படித்த பொருளுதார மேதை அன்னையின் காலில் மண்டிபோட்டுகிட்டு கேவலமே இல்லாம இருக்காம்ன்னா மக்கள் கதி ?
மக்களே இனியாவது யோசிப்போம் செயல்படுவோம், பத்து வருஷம் பட்டது போதும், இனியாவது ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்....!

ஓ....நம்ம கவலை இனி விஜய்"யின் ஜில்லா பற்றியும், அஜித்"தின் ஆரம்பம் பற்றியும்தானே இருக்கப் போகுது ?!!!

அடபோங்கப்பா......


Wednesday, October 23, 2013

ஆஹா வடை போச்சே......!

உங்கள் "நாஞ்சில்மனோ" வலைத்தளம் பற்றி எங்கள் பத்திரிகையில் தெரிவிக்கப் போகிறோம், உங்கள் போட்டோ மற்றும் உங்களைப் பற்றிய விபரங்கள் தெரிவிக்கவும் என்று தினமணி பத்திரிக்கை எனக்கு மெயில் அனுப்ப.....

எல்லா நாளும் மெயில் ஒப்பன் பண்ணி பாக்குற நானு, ஒரு ஆறு நாட்கள் பாக்காம விட்டதால சான்ஸ் போயிருச்சு, நீங்க உடனே ரிப்ளை தராததால வேறே ஆளை செலக்ட் பண்ணிட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.

எங்க அப்பா ஒரு கதை சொன்னது இப்போது நியாபகம் வருகிறது, ஒரு பரம ஏழை ஒருவன் தினமும் கடவுளிடம், என்னை பணக்காரன் ஆக்கிவிடு என்று பலநாள் வேண்டியும், கேட்காத கடவுள்...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுளச்சி, என்னங்க அவன் உங்கள் முரட்டு பக்தன்தானே? ஏதாவது செய்யப்புடாதான்னு கேக்க...சரி இப்பபாரு என்று சொல்லிவிட்டு...

பக்தன் நடந்து வரும் பாதையில் ஒரு ஐந்துகிலோ தங்கத்தைப் போடுகிறார் கடவுள்.
சரியாக தங்கம் இருக்கும் இடத்தின் அருகில் வந்தவனுக்கு "அப்ப"தான் தோனுச்சு, கண்ணில்லாதவர்கள் எப்படி நடந்து போகிறார்கள், கொஞ்சம் கண்ணை மூடி நடப்பமேன்னு நடக்க....தங்கம் போச்சு...

அப்பத்தான் கடவுள், கடவுளச்சிகிட்டே சொன்னாரு, பார்த்தியா எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும் புரிஞ்சுதா ?

நீதி : தினமும் மெயில் ஒப்பன் செய்து செக் செய்யவும், யோகம் எப்ப வந்து கதவை தட்டும்னு தெரியாம டரியல் ஆகாதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா.
------------------------------------------------------------------------------------

'என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம்': ராகுல் பூந்தி திடீர் அலறல்//

யப்பா சாமீ.....அப்பிடியாவது சீக்கிரமா போயி சேருங்கடே....மக்கள் பாவம்....!


Monday, October 21, 2013

காதுக்குள்ளே "கால்" விட்டு ஆட்டிப்புட்டானே ?

ஆன்லைன்ல ட்ராவல் ஏஜென்சியில ரெண்டு நாளைக்கு வேண்டி ரூம் புக் பண்ணிகிட்டு, சவுதியில இருந்து ஒரு வட இந்தியாகாரன் எங்கள் ஹோட்டலுக்கு போன் செய்ய...
புது ட்ரைனி என்னவெல்லாமோ பதில் சொல்லியும் அடங்காதவன்.....ட்ரைனி கடுப்பில் மனோ என்று கத்த...

என்னடான்னு போயி பார்த்தா....

போனை என் கையில் தூக்கி எறியாத குறையாக எறிந்து விட்டு கோவத்துல ஆபீஸ் உள்ளே போயி உட்கார்ந்துடுச்சு...சரி போனில் யார்னு பார்ப்போம் வாருங்க...

"ஹலோ....வணக்கம்ங்க யார் பேசுறது ?"

"நான் இன்னார்....அப்புறம் எனக்கு சில கேள்விகள் கேட்க வேண்டும் ?"

"அதான் நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் அம்மிணி பதில் தந்துச்சே ?"

"இல்லை எனக்கு திருப்தி இல்லை "

"சரி கேளுங்க"

"உங்க ஹோட்டல் எங்கே இருக்கு ?"

"பஹ்ரைன்ல இருக்கு " [[கொஞ்சநேரம் சத்தத்தையே காணோம் கடுப்பாகிட்டானோ ?]]

"ஹலோ உங்க ஹோட்டல் பஹ்ரைன்லதான் இருக்குன்னு எங்களுக்குத் தெரியும் கிண்டல் பண்றியா ? ஏரியா பேர் சொல்லுய்யா ?"

சொன்னேன்....

"சரி ரூம் எத்தனை ஸ்குயர் ஃபீட் ? எத்தனை பெட் ? சோபா வசதி எப்பிடி ? நீச்சல் குளம் ? டிஸ்கோ ? காபி ஸாப் ? பார் ? இவைகள் எத்தனை எத்தனை ?"

"அதான் எங்கள் ஹோட்டல் உள்ளே வெளியே என்னா இருக்குன்னு  நீ புக் பண்ணுன டிராவல் ஏஜன்சி ஆளுங்க போட்டோ அனுப்பி இருப்பாங்களே ?"

இருந்தாலும் பொறுமையா பதில் சொன்னேன்...அப்புறம் கேட்டான் பாருங்க கேள்வி ? அதான் பொண்ணு போனை தூக்கி எறிஞ்சிட்டு ஓடி இருக்கு...

"ஆஸ்பத்திரி எத்தனை தூரத்தில் இருக்கு ? ஆம்புலன்ஸ் கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ? தீயணைப்பு நிலையம் எத்தனை தூரத்தில் இருக்கு ? கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ? போலீஸ் ஸ்டேஷன் எத்தனை தூரத்தில் இருக்கு ? கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ?

டாக்ஸி பிடிக்க எத்தனை தூரம் நடக்கனும் ? கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும் ? பஸ் நிலையம் எத்தனை தூரம் ? [[பஸ்ஸை கூப்பிட்டா எத்தனை மினிட்ல வரும்னு பயபுள்ள கேக்காம விட்டுருச்சே அவ்வ்வ்வ்]]

லோக்கல் போன் பண்ணா இன்னா சார்ஜ் ? இன்கம்மிங் வந்தா இன்னா சார்ஜ் ? [[அவ்வவ்வ்வ்வ்]] இன்டர் நேஷனல் கால் வந்தா எம்புட்டு, கால் போட்டா எம்புட்டு ? [[அதான் நீ உன் காலை என் காதுக்குள்ளே விட்டு ஆட்டிகிட்டு இருக்கியே ?]]

பெட்ரோல் பங்க் எத்தனை தூரம் ? பார்மஸி எத்தனை தூரம் ?"

ட்ரைனி அம்மிணி போனை கட் பண்ணு மனோ"ன்னு சைகை காட்டியதும் அல்லாமல், போனை பிடிச்சு கீழே இழுத்துகிட்டே இருக்க...

"ஆக்சுவலி சார் இங்கே ரெண்டுநாள் தானே தங்கப் போறீங்க ஏன் இம்புட்டு கேள்வி கேக்குறீங்க ? அதான் எல்லாம் ட்ராவல்ஸ் ஏஜன்சியில சொல்லி இருப்பாங்களே ?"

"இல்லை பொறு பொறு இன்னும் கொஞ்சம் கொஸ்டின் இருக்கு..."

"ஆஆஆஆஆ.....இன்னுமா....?"

"எனக்கு திருப்தி இல்லை உங்க மானேஜர் கூட பேசணும்" அய்யய்யோ...

"நான்தான் சார் அந்த டேமேஜர்..."

"ஆஆஆஆ நீயா...?"

"ஆமா..."

"அப்போ உங்க முதலாளி கூட பேசணும்..."

"ஓகே சார்...முதலாளி அமெரிக்காவுல இருக்கார் அவர் வந்ததும் பேசுங்க என்ன...?"

பொண்ணு போனை புடுங்கி நச்சுன்னு அடிச்சு வச்சிருச்சு, அம்மே...அம்மே...அம்மே"ன்னு கதறவச்சிப்புட்டானே ராஸ்கல்...?
இவன் ரெண்டுநாள் தங்குறதுக்கு இம்புட்டு கேள்வின்னா பர்மனெண்டா வந்தாம்னா பஹ்ரைன் கதி ? இப்பவே கண்ணை கட்டுதே....!

பச்சை பிள்ளைக்கு இப்பிடியெல்லாமா நிலைமை வரனும் ? ம்ஹும்.


Sunday, October 20, 2013

தமிழுக்கு அன்பென்ற பெயரும் உண்டு....!

கேரக்டர்....

பத்து வருஷம் முன்னாடி நான் வேலை பார்த்த ஹோட்டலில் அக்கவுன்ட் டிப்பார்ட்மென்ட் இன்சார்ஜ் ஆக வேலைக்கு சேர்ந்த செல்வி அக்காள், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர்...

எங்கள் ஹோட்டல் மலையாளி மேனேஜ்மென்ட் என்பதால் மலையாளிகள்தான் அதிகம்...

தன்னோடு மலையாளம் பேசுபவர்கள் எல்லாரோடும் இவர் தமிழில்தான் பேசுவார், எத்தனைபேர்கள் சொல்லியும், தமிழ் பேச்சை விடவே இல்லை கடைசிவரை....
ஒருநாள் கேட்டே விட்டேன் "அக்கா நீங்க ஏன் மலையாளத்தில் பேசவே மாட்டேன் என்கிறீர்கள் ?"

"மனோ.....நம்ம தமிழுக்கு என்ன எதுல குறைச்சல், யாம் கேட்கும், பேசும் மொழியில் தமிழைப்போல தித்திப்பு எனக்கு எதிலுமே இல்லை" என்றார்கள், வாயடைத்துப் போனேன்.

அப்புறம்தான் தெரிஞ்சிது அக்காவுக்கு மலையாளம் எழுத படிக்க பேசவும் நல்லாவே தெரியும்னு...! [[ஊருக்கு போனபோது செல்வி அக்கா வீட்டுக்கு போயிருந்தேன், அவங்க அம்மா ஒரு தமிழ் டீச்சர்...!]]

நான் மலையாளம் எழுதி படிக்கும்போதுதான் உணர்ந்தேன் மலையாளம் சில எழுத்துகள் தவிர்த்து எல்லாமே தமிழாகவே இருக்கிறது, என்ன கொஞ்சம் சுழிகள் மாறி இருக்கிறது அம்புட்டுதான்....! [[அதாம்ப்பா ஜிலேபி'ன்னு சொல்றீங்க]]
அதே போல என் சொந்த அக்கா கல்யாணம் கட்டி மும்பை வந்தபோது, ஹிந்தி எழுத வாசிக்க பேச கற்று கொண்டாலும், யார் கூடையும் கூச்சமே இல்லாமல் தமிழில்தான் பேசுவாள்...

"அக்கா ஹிந்தி'காரங்கிட்டே தமிழ்ல பேசாதே"ன்னு சொன்னதுக்கு எங்க அக்காவும் மேலே செல்வி அக்காள் சொன்ன அதே பதிலைத்தான் சொன்னாள்.....என்ன....... காய்கறி கடையில இருந்த வட இந்தியர்கள்  எல்லாருக்கும்  காய்கறிகளுக்கு தமிழ் பெயரை கற்று கொடுத்துவிட்டாள்...!
படிக்கும் காலங்களில்...தமிழ் டீச்சர்கள் பலரும்....தமிழ் கற்று தரும்போது கோபப்படுவது கிடையாது அன்பாகவே கண்டித்து இருக்கிறார்கள்...!

காரணம் அறிந்தபோது மலைத்துப்போனேன்...

ஆம் தமிழ் மீது மாணவர்களுக்கு வெறுப்பு வந்துவிடக் கூடாது என்றே கவனமாக இருந்திருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள்....!


Sunday, October 6, 2013

அரபியுடன் மல்லுகட்டிய நாட்டாமை...!

எங்க ஹோட்டல் நம்பருக்கும் போலீஸ் ஸ்டேஷன் நம்பருக்கும் ஒரே ஒரு எண்"தான் வித்தியாசம்ன்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லையா....
அப்பிடி போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த அரபி, நம்பர் மாறி எங்க ஹோட்டலுக்கு [[ரிஷப்சன்]] வருது [[இது எப்பவும் வழக்கம்தான்]] போனை எடுத்ததோ நம்ம புதிய டிரைனிங் கேர்ள் மொரோக்கோ...போன் நம்பர் மாற்றம் பொண்ணுக்கு தெரியல போல...

"என்ன...?"

"................................................................"

"சரி நம்பர் சொல்லு"

".............................................................."

"இந்த இடம் இந்த அட்ரஸ்..." [[எங்கள் ஹோட்டல் அட்ரஸ் சொல்கிறாள்]]

"......................................................."

"ஒ இல்லை இல்லை அது இல்லை"

"......................................................"

"நோ நோ...."
என்னமோ விவகாரம்னு நாட்டாமை ஓடி வர.....பொண்ணு உதட்டை பிதுக்கி காமிச்சுட்டு போனை நாட்டாமை கையில் கொடுக்க....

"ஹலோ..."

"என் பி எம் டபள்யூ காரை காணோம் யாரோ களவாண்டுட்டு போயிட்டங்க எங்க அப்பாவுக்கு உடம்புக்கு சரி இல்லையாம் நான் உடனே சவூதி போகணும்... உடனே கண்டுபிடுச்சி தாங்க பிளீஸ்"

ரோகம் என்னான்னு நாட்டாமைக்கு பிடி கிடைக்க....
"ஆக்சு"வலி" நீங்க ராங்க் நம்பர்ல பேசிகிட்டு இருக்கீங்க சார், இது போலீஸ் ஸ்டேஷன் இல்லை இது ஒரு ஹோட்டல்"

"பொய் சொல்லாதே இப்பதானே அந்த லேடி போலீஸ், கார் நம்பர் கேட்டாங்க...கார் இருக்கிற இடத்தின் அட்ரசும் சொன்னாங்க...நீ எதுக்கு பொய் சொல்லுறே ?"

"சார்....." இடைமறிக்குறான்...

"எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு இப்போ என் கார் வேணும் அப்பாவுக்கு சுகமில்லை நான் உடனே சவூதி போகணும் பிளீஸ்"

"ஹலோ...சார்.....இது நீங்க நினைக்குராப்ல போலீஸ் ஸ்டேஷன் இல்லை..."

"அவ்வவ்வ்வ்வ் ம்ம்ம்ம் அவ்வ்வ்வவ்வ்வ் எங்க அப்பாவுக்கு சுகமில்லை எனக்கு உடனே சவூதி போகணும் அதுக்கு கார் வேணும் கண்டுபிடிச்சி குடு ஆஅ ஆஅ வவ்வ்வ்வ் ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்..." அழுவுறான்

நாட்டாமை டபீர் என்று போனை லைனில் அடித்து எறிஞ்சிட்டு மொரோக்கோ பார்ட்டிக்கு ஒரு மிதியும் குடுத்துட்டு [[செல்லமாதான்]] ரூமுக்குள்ளே போயி அழுதுகிட்டு இருக்கான்.

ஏதாவது ஒரு ரூபத்துல வந்து லந்து குடுக்கலைன்னா இவனுகளுக்கு தூக்கமே வராதோ...?

Friday, October 4, 2013

சுகமான பிரசவம்....!

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:-

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்

மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்­ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.


நன்றி : இயற்கை அளிக்கும் நிவாரணம்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!