Sunday, October 24, 2010

நடிகை பிந்து பணிக்கர்


அப்புறம், எனக்கு டியூட்டி FALCON INTER NATIONAL ஹோட்டல்ல  [[டிரான்ஸ்பர்]]மாறுச்சி, அப்போ  மலையாள நடிகை பிந்து பணிக்கர் [[தமிழ்லையும் நடிச்சிருக்காங்க]] எங்க ஹோட்டல்ல தங்கி இருந்தாங்க,
நான் ரூம் சர்வீஸ்ல டியூட்டில இருந்தேன்.
 இரவு நேரம்.
பிந்து பணிக்கரிடமிருந்து போன், வேற என்னத்த கேக்க போறாங்க...... அதே ஐஸ் கியூப்ஸ்தான்,   கொண்டு போனேன். சமயம் இரவு 11 மணி, நன்றாக பேசினார் பிந்து, எனக்கு மலையாளம் நன்றாக பேசத் தெரியும் என்பதால், தம்பிக்கு எந்தூருன்னாங்க, கன்யாகுமரின்னேன். தமிழா நீன்னாங்க!, ஆமான்னேன். அப்புறமா பிந்து சொன்னாங்க, கன்யா குமரி, முன்பு கேரளாவில்தான்  இருந்திச்சுன்னு வரலாறு சொன்னாங்க. [[கன்யாகுமரிய தமிழ் நாட்டோட இணைக்க சொல்லி போராடி, குமரி தமிழன் எத்தனை பேர் அடக்கு முறைக்கு செத்தான் என்பது பிந்துவுக்கு தெரியுமோ?]]
  பிறகு பேச்சோடு பேச்சாக ரூமை நோட்டம் விட்டேன். என்னன்னு கேக்குறீங்களா? கொண்டு வந்தது ஐஸ் கியூப்ஸ் ஆச்சே!!
  ஒரு ஃபுல் பாட்டில் கிளன் மேக்ரோக்கர் விஸ்கி பாட்டில் சைட் டேபிளில் சிரித்து கொண்டிருந்தான்!!
 காலை மணி ஆறு,
  மறுபடியும் பிந்துவிடமிருந்து போன், அட்டன்ட் பண்ணேன், டீ வேணும்னு கேட்டாங்க, கொண்டு போனேன். எழும்பி இருந்தார் கண்ணெல்லாம் சிகப்பு[[நைட்டில இருந்தாங்க]], திரும்பி போகுமுன் கண்ணை சுழற்றினேன் பாட்டில் பக்கமாக,
         ஆத்தீ...........................!!!!
பாட்டல் காலிய்யா.......காலி............!!! இதுவும் கலாபவன் மணி குடிச்ச அதே விலைதான்[[250 ரூவா]] இந்த விஸ்கியை கண்டிப்பா பிந்து வாங்கி[[குடித்து]] இருக்க மாட்டார். நம்ம மணியை ஏமாத்துன அதே டெக்னிகல் ஸ்டைலில் யாரோ நண்பன் செய்த வேலை அது.  பாவம் பணிக்கர்.
சும்மாவா அம்மணி இப்பிடி தடிச்சு போயிருக்காங்கன்னு அடுத்த அஞ்சு வருஷத்துல அவரை சினிமாவில் பார்க்கும் போது நினச்சிகிடுவேன்......
           கிக் தொடரும்..........
 

கல்யாண முரண்

திருமணத்திற்கு முன் : [[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்]]
                       கீழே படியுங்கள்

    அவன் : ஆமாம், இதற்காகதானே இத்தனை நாள் காத்திருந்தேன்

அவள் : நீ என்னை விட்டு  விலக நினைப்பாயா?

அவன் : இல்லை இல்லை நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா?

அவன் : ஆமாம் இன்றும், என்றென்றும்.

அவள் : என்னை ஏமாற்றி விடுவாயா?

அவன் : அதை விட நான் இறப்பதே மேல்.

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிக பெரிய சந்தோஷ தருணம்.

அவள் : என்னை திட்டுவாயா?

அவன் : ஒருபோதும்  இல்லை, அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?

                            திருமணத்திற்கு பின் :
          கீழே இருந்து மேலே படியுங்கள்.

இது, நெட்டில் எங்கோ படித்தது, எழுதிய நண்பருக்கு நன்றி. 

கலாபவன் மணியை ஏமாற்றிய நண்பன்

  
                  நான் பத்து வருஷம் முன்னாடி middle east hotel [பஹ்ரைன்]ல வேலை செஞ்சிட்டு இருக்கும் போது, கலை நிகழ்சி நடத்த நிறைய மலையாளி நடிக நடிகைங்க வருவாங்க. அப்போ நான் ரூம் சர்வீஸ்ல சர்வரா வேலை தொடங்கிய சமயம். ஹோட்டலுக்கு முதலாளி மலையாளி என்பதால்,கலை நிகழ்ச்சிக்காக வரும்  எல்லா மலையாள சினிமாக் காரங்களும் எங்கள் ஹோட்டலில்தான் பெரும்பாலும்  தங்குவாங்க.
 அவர்களை பற்றி  ஒரு சில சுவாரஸ்ய தகவல்கள்  என்னிடமும் உண்டு
.

  நம்ம கலாபவன் மணி, காமடியனாக இருந்த சமயம் அது, ஒரு டபுள் பெட்ரூல கலாபவன் மணி, கோட்டயம் நசீர், இன்னும் ஒருவர் பெயர் ஞ்சாபகம் இல்லை தங்கி இருந்தனர்.
   இரவு நேரம்,


 ரூம் சர்வீசுக்கு போன் கலாபவன் மணியிடமிருந்து,  போனை நான்தான் அட்டன்ட் பண்ணேன். ஐஸ் கியூப்ஸ் வேணும் என்றார், எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது,
நானே ஐஸ் கொண்டு போனேன். நல்ல ஜாலியாக பேசி பழகினார்கள். என்ன அயிட்டம் குடிக்கிறார்கள்னு கண்களை அலையை விட்டேன்,பாட்டிலை தேடினேன் ரகசியமாக,
பக்கத்து டேபிளில் இருந்தது அந்த பாட்டில். பெயர், நெப்போலியன் பிராண்டி. ஆச்சர்யமாக
 நான் மணியிடம் கேட்டேன், சார் இதா நீங்கள் குடிக்கும் பிராண்ட் என்று, அவர் சொன்னார், மனோ, இது என் நண்பன் வாங்கி தந்தான், அதுவும் அல்லாமல்  இது ரொம்ப காஸ்ட்லி சரக்காம் என்றார். எனக்கு சிரிப்பு பொத்து  கொண்டு வந்தது அடக்கிக் கொண்டேன். மேலும் அவர் சொன்னார், இருபது தினாருக்கும்[2500 ரூபா] மேலாம் என சொல்லி ஆச்சர்யப் பட்டார். அப்படியா என்று சொல்லிக் கொண்டே நான் ரூம் சர்வீசுக்கு வந்து என் சக நண்பர்களிடம் விசயத்தை சொன்னேன். அது ஹோட்டலில் எங்கும் பரவி விட்டது.  அய்யோடா, எப் அன்  பி மானேஜர் முதல், ஆபரேஷன் மானேஜர் அடக்கம் போய் பார்த்து ஆச்சர்யமா குலுங்கி குலுங்கி சிரிச்சாங்க......மலையாளிங்க. காரணம்...
          அந்த சமயம், நெப்போலியன் பிராண்டியின் விலை இரண்டரை தினார்தான், அதாவது நம்ம ஊர் பணம் 250  ரூபாய்தான், சாதாரணமா யாரும் அந்த பிராண்டை குடிப்பது இல்லை.........
       பாவம் கலாபவன் மணியை அவர் நண்பன் நல்லா ஏமாத்தி[கலாய்ச்சி] இருக்கான்.



  இதே மாதிரி இன்னும் நிறைய துணுக்குகள் உண்டு.
    நம்ம ஐஸ்வர்யா[நடிகை லட்சுமி மகள்], கேரள நடிகர் முரளி, சுரேஷ் கோபி, குஞ்சாக்க கோபன், முகேஷ், கேப்டன் ராஜ், அப்புறம் நம்ம திருச்சி சிவா  எம் பி, பிரதமர் ஆவதற்கு முன்பு வாஜ்பாய், இப்படி நிறைய பேருடைய செய்திகள் உண்டு.  சம்பவம் நடந்தது பத்து வருஷம் முன்பு.....

தொடரும்........

கடிஜோக்

இன்னக்கு வைக்கிற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

ஆனா இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு,
நாளைக்கு கருவாட்டு குழம்பு ஆகுமா???

காதலன் : அன்பே, நம்ம கல்யாணத்த எங்க குடும்பத்துல ஏத்துகிட மாட்டேங்குறாங்க..
காதலி : நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்த அவங்க யாரு ?
காதலன் : என்னோட மனைவியும், மாமியாரும்..........

நாட்டாமை : எண்றா பசுபதி.... ?
பசுபதி :  1 2 3 4  5  6  7 8 9 10 11  12 13  14 15
நாட்டாமை : எண்றா பசுபதி.......???
பசுபதி : அதான் என்ரோமில்ல.........


பறவையெல்லாம் ஏன் வெளிநாட்டுல இருந்து இங்க பறந்து வருது தெரியுமா????
?
?
?
?
?
ஏன்
?
?
?
?
?
?
?
ஏன்னா.... நடந்து வந்தா லேட் ஆகும் அதான்.....
 

திருடன் 1 : ராத்திரி எவ்வளவு திருடினோம் என்று என்னாமலையே, பணத்தை ஒளிச்சி வச்சிட்டோமே.....?
திருடன் 2 : கவலையே படாதே, நாளைக்கு பேப்பர்ல வரும்ல, அப்ப பார்த்துக்கலாம்..

ஸ்டன்ட் மாஸ்டரை கல்யாணம் கட்டிகிட்டது தப்பா போச்சு...
ஏன்???
வீட்டுக்கு வரும் போது கண்ணாடி ஜன்னலை எல்லாம் உடைச்சிட்டு வாராரு....

மும்தாஜின் நினைவார்த்தமாக ஷாஜகான் தாஜ் மகாலை கட்டினாரு,
முட்டாப்பயல், நானா இருந்தா அவள் தங்கச்சிய கட்டியிருப்பேன்....!

அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும்
நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.....

யப்பா இன்னைக்கி இவளவுதானப்பு....................

 

நெட்டில் சுட்டது

கணவன் : கமலா ஒரு கப் காபி........!??
மனைவி : என்னது....?!
கணவன் : உனக்கு காபி தரட்டுமான்னு கேட்டேன்....!!
மனைவி : அதானே பார்த்தேன் ! [[ஆத்தி.... என்னா வில்லத்தனம்!]]
 

அரசியல் தத்துவம்:-
என்னதான் "கருணாநிதி" திமுக'ல இருந்தாலும் அவர் சொட்டை  மண்டைல யாராவது கொட்டினா "அம்மான்னு"தான் கத்துவாரு....... [[அப்படி போடு அருவாளை]]

காதலியின் கண்ணசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள்........
ஆனால் நண்பனின் கண்ணசைவுக்கு ஒரே அர்த்தம்
"மச்சான் சூப்பர் பிகர் வருது டக்குன்னு திரும்பி பாரு" [[பின்னே இனம் இனத்தோடதானே சேரும்]]

ஒருவர் : இருந்தாலும் அந்த மேஸ்திரி ரொம்ப மோசம்
மற்றவர் : ஏன் அப்படி சொல்றீங்க??
ஒருவர் : ரோடு ரோலர் பன்சர்னு சொல்லி  ஐநூறு ரூபா கணக்குல எழுதிட்டாரு....! [[நல்ல வேளை ரோடே பன்சர்னு எழுதாம விட்டாரே]]

பேஷன்ட் : டாக்டர், ஆபரேஷனை தவிர வேற வழியே இல்லையா...?
டாக்டர் : ஓ...! இருக்கே, "தற்கொலை" பண்ணிக்கலாம்!  [[யப்பா]]

கணவன் : எதுக்கு குப்பை தொட்டியை கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிற...?
மனைவி : மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்ட போறேன்னு சொன்னீங்களே..... [[ ம்ம்ம்ம் பொண்டாட்டிகிட்டே கூட மனசுல உள்ளதை கொட்டப் பூடாதப்பு..]]

என்னதான் பூமி சூரியனை சுற்றி சுற்றி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது...    [[ உன் பிகர் கை மாறிடிச்சோ...?]]

காதல் கல்யாணத்துக்கும் அரேனஜ்மென் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?
நாமளா கிணத்துல விழுந்தா அது காதல் கல்யாணம்.........., பத்து பேர் தள்ளிவிட்டால் அது அரேனஜ் மென்ட் கல்யாணம் [[ஹோ.. கிளம்பிட்டாய்ங்கப்போ]]
இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம்,  பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?? [[ஆத்து மண்ணுல கிடந்தது உருண்டு உருண்டு யோசிப்பாய்ங்க போல]]

பரம்பரைக்கு உக்காந்திருந்து சாப்பிட பணம் இருந்தாலும், பாஸ்ட்பூட் கடையில நின்னுகிட்டுதான் சாப்பிடனும்!!....  [[எதை பணத்தையா?]]

லைப்ல ஒன்னும் இல்லைனா போர் அடிக்கும்,   தலையில ஒன்னும்  இல்லைனா டார் அடிக்கும் [[ஏ யப்பா..... என்னா ஒரு கண்டுபிடிப்பு]]

பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுப்பாங்க....., இட்லி, தோசைக்கும் குடுப்பாங்களா....? [[வாடி, ஸ்கூலுக்கு ஆட்டைய போடப் போறேன்னு புரியுது]]

தேள் கொட்டினா வலிக்கும்,  பாம்பு கொட்டினா வலிக்கும்,   "முடி கொட்டினா வலிக்குமா?"  [[நீ வாடி என் முன்னால அப்புறம் காட்றேன்]]

நாய்க்கு நாலு call  இருக்கலாம்...., ஆனா அதால லோக்கல் call  , எஸ்டிடி call , ஐஎஸ்டி call , ஏன் மிஸ் call  கூட பண்ணமுடியாது.... [[ஓ அவனா நீ?]]

 

Thursday, October 21, 2010

தமிழ் நாடு டூ கேரளா

           என்னோடு பணி செய்யும் மலையாளி நண்பனின் ஒரு அதிர்ச்சி தகவல், என்னை கிலி கொள்ள வைத்தது, இது உண்மையா இல்லையா  என்பதை வாசகர்கள் கையில் விடுகிறேன்.
       பல வருஷமாக இந்த நண்பன் என்னோடு கூட வேலை செய்கிறான். முல்லைபெரியார் பிரச்சினைய சொல்லி சொல்லி அவனை நான் கலாய்ப்பதுண்டு, 
  மலையாள எழுத்தாளர், சக்கரியா அவர்கள் ஒரு பத்திரிக்கையில் இப்படியாக எழுதி இருந்தார், கறிவேப்பிலையில் இருந்து, குருவாயூர் கோவிலுக்கு செலுத்தும்
பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது, பின்னே ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்  என!!![[உண்மைதானே]]
            நண்பன் என்னோடு பேசும் போது இதெல்லாம் அரசியல் மனோ, என சொல்லி விடுவான்,
            இப்படி இருக்கும் வேளையில் அவன் லீவில் ஊர் போனான், போய்விட்டு திரும்பி வந்தவுடன் அவன் சொன்ன காரியம்தான் நான் மேலே சொன்ன அதிர்ச்சி!!
            இவனும் நண்பர்களுமாய் ஊட்டி சுற்றுலா போனார்களாம்......போகும் வழியில் இயற்கையை ரசித்து கொண்டே போனவனுக்கு என் நினைவு [[தமிழ் நாடு போன பின்தான் என்னை நினைச்சிருக்கான் பாருங்க]] வர, முல்லைபெரியாரும் நினைவுக்கு வந்து தொலைக்க, இவன் காய்கறி தோட்டங்களை கூர்மையாக கவனித்தும் ரசிப்புமாக போகும் போது, ஒரு இடத்தில் விவசாயிகள் தோட்டத்தில்[[பூசணி]] வேலை செய்வதை கண்டு, காரை நிறுத்தி விட்டு அவர்களை பார்ப்பதற்காக [[நன்றி உணர்ச்சியாம்]] போனானாம்.
போய் பார்த்து அவர்களோடு பேசி இருக்கிறான்[[இவனுக்கு தமிழ் நன்றாக தெரியும், காரணம் ஒட்டன்சத்திரத்தில் படித்தவன்]] பேச்சின் ஊடே கவனிக்கும் போது, அவர்கள் தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தார்களாம், மருந்தை அவன் கவனித்த போது அதிர்ச்சி அடைந்தவனாய் கேட்டிருக்கிறான் இந்த மருந்தை ஏன் தெளிக்கிறீர்கள் என கேட்க்க, இந்த மருந்தை அடித்தால் சீக்கிரமாக செடி வளரும் என சொல்லியிருக்கிறார்கள். ஐயோ இது  மனிதனுக்கு அதிக கேட்டை விளைவிக்கும் மருந்தல்லாவா என்று இவன் அலற,
   விவசாயிகள் கூலாக சொன்ன பதில், "இந்த காய்கறிகளை நாங்க சாப்பிட மாட்டோம்", கேரளாவிற்கு அனுப்பி [[விற்க]]விடுவோம்னு சொன்னார்களாம்!!!!
       இப்போ நண்பன் என்னிடம் கேட்டான், முல்லைபெரியார் தண்ணீர் வேணுமா வேண்டாமான்னு,  இப்போ இதை சொல்லி சொல்லியே  என்னை பயங்கரமாக கலாய்கிறான்.....




  என்ன வாசகர்களே பதில் சொல்லுங்கப்பு....
   

Wednesday, October 20, 2010

குற்றாலம்

















கடந்த ஜூன் மாதம் நான் லீவுக்கு ஊர் போயிருந்தேன், எங்கேயாவது சுற்ற கூட்டிக்கொண்டு போங்களேன்னு மனைவியும் பிள்ளைகளும் கேட்டதால், குற்றாலம் போகலாம்னு சொன்னேன். எங்கள் ஊரிலிருந்து பஸ் பிடிச்சி நாகர்கோவில் போயி, அங்கிருந்து திருநெல்வேலி டூ குற்றாலம் போக ஏற்பாடு, வடசேரி போக பஸ்சுக்காக காத்திருந்தோம், பஸ் வர தாமதம் ஆகியது. அப்போது அந்த வழியாய் வந்த ஒரு அம்பாசிடர் கார் எங்கள் அருகில் வந்து நின்றது, டிரைவர் என்னை கேட்டார் எங்கண்ணே போறீங்கன்னு. வடசேரி போறோம்னேன். அவர் சொன்னார் வடசேரிக்கு போக பஸ்சுக்கு எவ்வளவு கொடுப்பீங்களோ அவளவு காசு எனக்கு தாங்க நான் கொண்டு போய் விடுறேன்னார். எனக்கு சற்று ஆச்சர்யம்! சரியென்று நாங்களும் வண்டியில் ஏறி புறப்பட்டோம். போய்கொண்டு இருக்கையில் டிரைவரிடம் சகஜமாக பேசிக்கொண்டு வந்தேன்[[அவரும்]] பேச்சு சுவாரஸ்மாய் இருக்கும் போது கேட்டேன், எப்படி 12 கிமீ போக 20 ரூபாய் கட்டுபடி ஆகிறதுன்னு கேட்டேன், அவர் சொன்னார், அண்ணே நாகர்கோவில்ல இருந்து கன்யாகுமரி போக ஒரு கஸ்டமரை என் முதலாளி அனுப்பினார், திரும்பி போகும் போது வண்டி சும்மாதானே போகுது அதான் உங்களை ஏற்றிக் கொண்டேன் என்றார். அப்போ நான் தரும் பணம் யாருக்கேன்றேன். அது என் கை செலவுக்குன்னு சொன்னார்![[முதலாளிகளே நோட் த பாயின்ட்]] இதன் விபரீரத்தை கடைசியில் சொல்றேன்.
                                  வடசேரி போனதும் நூறு ரூபாய் கொடுத்தேன். சந்தோஷமாய் வாங்கி கொண்டார்.
பின்பு, வடசேரியில் இருந்து நெல்லை பயணம், பஸ்ஸின் சீட் நெருக்கம் கூடுதல்!!
நெல்லை பஸ் நிலையத்தில் இறங்கியதும், என் மனைவி சொன்னாள், அத்தான் இங்கே பழ ஜூஸ் ரொம்ப சூப்பரா  இருக்கும் என்றாள்[[என் மனைவி திருவேல்வேலி]] ஐந்து ரூபாய்தான்!!! அட மக்கா......என்னே ருசி!!! அருமையாக, தாகத்துக்கு ஏற்றதாக இருந்தது.[[ நீங்களும் நெல்லை போனால் குடித்து பார்த்து விட்டு சொல்லுங்க]] எங்களை கூட்டி  செல்ல என் மைத்துனன் ஆல்பர்ட் வந்திருந்தான், அங்கே இருந்து அவன் வீடு போய் அவன் குடும்பத்தையும் வண்டியில்[[சொந்த ஆட்டோ]] ஏற்றிக்கொண்டு குற்றாலம் போவதாக ஏற்பாடு.
                    ஆட்டோ நல்ல விஸ்தாரமாக இருந்தது[[மும்பையில் ரொம்ப மோசங்க]] நெல்லை டூ அம்பை ரோடு......ரொம்ப ரொம்ப மோசமோ மோசம்!!! சாலை பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக கிடக்கிறது, போகும் வழியில் பதனி கிடைக்கும்னு மைத்துனன் சொன்னான். ஆனால் கிடைக்க வில்லை[[சாயங்காலம் ஆகியிருந்தது]] அனால் நொங்கு கிடைத்தது....தென்காசி பக்கம், ஹோ சூப்பரோ சூப்பர்....எங்க இருவரின் பிள்ளைகளும் நொங்கை ரசித்து சாப்பிட்டார்கள்.
                  பின்பு நாங்கள் நேரே போனது மெயின் அருவிக்குதான். நேரம் இரவு ஆகிவிட்டது, அங்கே போகும் வழியில் இருந்த வாட்ச்மேன்கள் சொன்னார்கள் மெயின் அருவியில் தண்ணீர் இல்லைன்னு, நொந்து போனேன், காரணம் எனது வாழ்க்கையில் சுற்றுலான்னு ஒரு இடமும் நானோ என் மனைவி பிள்ளைகளோ போனதில்லை [[பணியின் காரணமாக]] என் மனைவி எப்போதும் இதை குத்தி காட்டுவாள்.
அப்புறம் சரின்னுட்டு ஐந்தருவிக்கு போனோம். . . . . .  ம்ம்ம்ம் கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...............அதே கதைதான், அங்கேயும் அருவியில் தண்ணீர் விழ வில்லை!!!
வந்தவர்கள் ஏமாந்து போகப்புடாதுன்னு ஒரு ஓஸ் பைப்பை மேலே போட்டு, அதின் வழியாய் தண்ணீர் வர செய்திருந்தார்கள்!  ஒரு ஆள்தான் அதில் குளிக்க முடியும்! ஆனா வந்திருக்றவங்க குடும்பம் குடும்பமாய்......., என்ன செய்ய ஒரு ஆள் குளிக்கும் இடத்தில் கும்பல் கும்பலாய் குளிக்க போட்டி!!! சமாளித்து குளித்தோம் அப்பாடா....இரவு வேறயா, தண்ணி சும்மா ஜில்ல்ல்லல்லுனு இருந்திச்சு.........
மைத்துனன் சொன்னான், அத்தான் நாளை பாபநாசம் போவோம்ன்னு, 
இரவு சாப்பாடு ஒரு ஹோட்டலில் பரவாயில்லை கொஞ்சம் சுத்தமாக இருந்தது. பரோட்டா முட்டை இருப்பதாக சொன்னார்கள். பரோட்டா சாப்பிட்டேன் அடேங்கப்பா அப்பிடி ஒரு ருசியில என் வாழ்வில் நாகர்கோவில், மும்பை, பஹ்ரைன்னு[[வேற எங்கயும் போனதில்லைங்க]] பரோட்டா சாப்பிட்டதே இல்லை! அவளவு சாப்ட்!!! பின்பு ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டு தங்கினோம்.
                 மறுநாள் காலை எழும்பி ஜன்னலை திறந்தால் எல்லாம் குரங்குகள் மயம்!!! வெகு சுவாரஸ்யமாக குடும்பம் நடத்தி கொண்டிருந்தன!!! பிள்ளைகள் குஷியாகி விட்டார்கள். அப்புறம் காலை உணவு,
பெரும்பாலும் அங்கே லாட்ஜ் நடத்துபவர்கள் ஒன்று செய்கிறார்கள். அது, அந்த லாட்ஜ்தான் அவர்கள் வீடாகவும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். கீழ் போர்ஷனை அவர்கள் உபயோகிக்கிறார்கள், மேலே உள்ள மாடிகள் விருந்தினருக்காக, மற்றும் வரும் விருந்தினருக்கு காலை டிபன், மாலை உணவு, இரவு உணவு, கடைகளுக்கு போய் உதவன்னு, இவங்க குடும்ப உறுப்பினர்களே செய்து தந்து காசு வாங்கிக் கொள்கிறார்கள்[[டூ இன் ஒன்]] அது எனக்கு நல்ல பாதுகாப்பு போல தெரிஞ்சது.
                          அடுத்து பாபநாசம். கிளம்பினோம் காலையிலே, அங்கே சுத்தம் ரொம்ப குறைவுன்னுதான் சொல்லுவேன். அவளவு கழிவு குப்பைகளை அகற்றாமல் அப்படியே கிடந்தது நாறுகிறது!!!
அருவியில் சின்ன சின்ன அருவிகளாய் ஜொலிக்குது, மக்கள் பெரும்பாலும் குடும்பமாகத்தான் வந்திருந்தார்கள், மத்தியானம் வரை அந்த குளிர்ந்த நீரில் குளித்து மகிழ்ந்தோம்..... என் மைத்துனன் ஒரு தகவல் சொன்னான், அதாவது அருவிகரையிலே நாம் சமைத்து சாப்பிடலாமாம், பாத்திரங்கள் அடுப்புகள் அங்கே வாடகைக்கு கிடைக்குமாம்[[முயற்ச்சி செய்யுங்க]] இங்கே மட்டுமல்ல காரையார் போகும் வழியிலும் [[புலிகள் ஜாக்கிரதை]] அதே போல சாப்பிடலாமாம்......
                          இனி நேரே காரையார் அணை போறோம்..........
ஐயா மலை ஐயா மலை!!! மலைய சுத்தி சுத்தி போனோம். ஆட்டோல போனதால ரொம்ப்ப்பப்ப மெதுவாதான் போக முடிஞ்சது. இடையிடையே வளைவுகளில் புலிகள் ஜாக்கிரதை போர்டுகள் பயமுறுத்தின, வனங்கள் வனங்கள் பார்க்க ரம்மிய[[பயமாக]]மாக இருந்தது........ஒருவழியா போட்டோல்லாம் எடுத்துட்டு போய் சேர்ந்தோம்.
அங்கே நிறைய நடை பாதை கடைகள்......கடைகள், நிறைய வித விதமான மீன்களை பொரித்து வைத்து இருந்தார்கள். மீன் சாப்பாடும் உண்டு, ஆனா நிறைய பேர் சொல்ற மாதிரி, அங்கே விற்கும் மீன்கள் எல்லாம் காரையார் அணையில் மட்டும் பிடிக்கிற மீன்கள் இல்லையாம்!!! எல்லாம் கலந்த கலவைதானாம்! மைத்துனன் சொன்னான் [[கவனிக்க, மைத்துனன் சொந்தமாக நாலு ஆட்டோவும், ஒர்க்ஷாப்பும் வைத்திருக்கிறான்]] எனவே ஒரு மீன்கூட நாங்க வாங்கி சாப்பிட மைத்துனன் அனுமதிக்க வில்லை!!!
  அப்புறம் போட் பயணத்திற்கு டிக்கெட்டும், கேமராவுக்கு தனி டிக்கெட்டும் [[கேமிராவை மறந்து ஆட்டோவிலேயே விட்டுட்டு அக்கறைக்கு போய் அலறியது தனிக்கதை]] வாங்கி, வரிசையில் நின்று போட்டில் ஏறினோம், 
காரையார் அணை!!!, பத்திரிகைகளிலும், இணையத்திலும், ஆனந்தவிகடன்  கிரிஷ்ணவேணி தொடரிலும்   படித்து மலைத்த அணை, என் முன்பு பிரமாண்டமாக!!! ஆனால் தண்ணீர் சற்றே குறைவு என்றார்கள்!!!
போட்டில் ஏறினோம், அருமையான காற்றும் மூலிகைகளின் மணமுமாக ஆஹா அற்புதமான பிரயாணம். போட்டில் போய்கொண்டிருக்கும் போது அணையின் ஆழம் பற்றி நாங்கள் ஒவ்வொரு அபிப்பிராயம் சொல்லிகொண்டிருக்க, அதை கவனித்த போட் ஓட்டுனர் சொன்னார், அணையின் நடுவே கையை காட்டி, அதோ தெரிகிறதே அணைக்குள் கொஞ்சூண்டு செடி போல, அது ஒரு அறுபதடி மரம்!!!!
இது போல நிறைய மரங்கள் அனைக்குள்ளே இருக்கிறது என்றார்!!! எனக்கு கைகாலெல்லாம் உதறலெடுக்க.......[[ஆத்தீ இத முதல்லையே சொல்லியிருக்க பூடாதா]] கிருஷ்ணவேணி தொடர் [[ஆனந்த விகடன்]] நியாபகமும் வர......தூரத்தில் மலையில் பால் போல அருவி பாய்வது தெரிய, திர்லிங் திர்லிங்தான் போங்க.........!!!!
                          ஒரு வழியா அக்கறைய அடைஞ்சோம். தண்ணி குறைவா இருந்ததால நிறைய சகதியும், துர்வாடயுமா இருந்தது. அப்பிடியே கொஞ்சம் மலையேறினால்,  ஆஹா!!!!! அழகான[[ஆபத்தான]] பான[[வான]]தீர்த்தம் அருவி!!!  வாழ்க்கையில் முதன் முதல் அருகிலும், குளித்ததுமான அருவி, மலைப்பாய் குளித்தேன், மெய் மறந்தேன். கூட்டம்தான் கொஞ்சம் அதிகம்.
அந்த அருவியிலே தண்ணீர் நிறைந்து ஓடும் தடாகம் உள்ளது. பார்க்க ரொம்ப சாதுவாக தெரிகிறது ஆனால், மிகவும் ஆபத்தான சுழிகள் உள்ளனவாம் அதிலே, எனவே அதில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
 குளித்து முடித்து [[பிரிய மனமே இல்லை நேரமும் மங்கி கொண்டிருந்தது]] கீழே இறங்கும் போது, மோர் வியாபாரி ஒருவர் மோர் விற்றுக் கொண்டிருந்தார், ஒரு கிளாஸ் வாங்கி குடித்து பார்த்தேன் ஆஹா சூப்பர், எங்கள் குழந்தைகளும் நாங்களுமாக குடித்து மோர் பானையை காலி செய்தோம்.
   அப்படியே கீழிறங்கி போட்டில் பயணித்து இக்கரை திரும்பினோம்.....அற்புதமான பயணம் அது!!!
                 சரி இனி நம்ம டிரைவர் பற்றி,
இப்ப எங்களை குற்றாலம் சுற்றி காட்டினானே என் மைத்துனன். இவனுக்கு ஏற்க்கனவே நான்கு ஆட்டோ, ஒரு சொந்த கேரேஜ் உண்டு. திடீர் என ஒரு ஆசை பஸ் வாங்க வேண்டுமென்று, வாங்கியே விட்டான் மினி பஸ். அதற்க்கு ஒரு டிரைவரை நியமித்தான்...... டிரைவரிடம் இவன் சொன்னது, எங்கே ஓட்டம் போனாலும், ஓட்டத்தோடுதான் திரும்ப வேண்டுமென்று.........., ஆனால், ஒரு நாளும் டிரைவர் ஓட்டத்தோடு திரும்பவில்லை, சந்தேகித்த மைத்துனன் சோதனை செய்யும் போது மாட்டிகிட்டான் டிரைவர்.  அதிர்ந்த மைத்துனன், பஸ்ஸை உடனே விற்று விட்டானாம்!!!
மைத்துனன் சொன்ன காரணம், "முதல் போட்டு பஸ் வாங்கினது  நான், முதலே இல்லாமல் சம்பாதிப்பது இவனுங்க" பின்னே என்ன ......... க்கு எனக்கு பஸ்........!


                           ஸோ, நான் மேலே சொன்ன டிரைவர் வாங்கியது, கை செலவுக்கு அல்ல...............அவனுடைய எல்லா எல்லா செலவுக்கும்தான்....!!!!
                 
                

Tuesday, October 19, 2010

ஏழை

உள்ளவனுக்கு ஆயிரம் வீடு,
இல்லாதவனுக்கு வானமே வீடு.........!!!

Sunday, October 17, 2010

ஒரு சிலருக்கு, ஏதோ என்னால் ஆன ஆலோசனை.....




பதிவர்கள் கவனத்திற்கும், மற்ற  கம்பயூட்டர்....பயனாளிகளுக்கும் என்னால் முடிந்த [[ரகசிய]]ஆலோசனை.......... முதலாளிமார்களே, கோவிச்சுக்காதீங்கப்பா....!!
சிரிக்காதீங்கப்பு.......

Saturday, October 9, 2010

நான் செல்வந்தன் ஆனால்........

நிலவை சொந்தமாக வாங்குவேன்.
                            எனது பெட்ரூம் வழியாக உலகத்தை பார்ப்பேன்.
                                            எனது சர்வெண்ட் எப்போதும் ரெடி.

                                                  எனது  கோப்பைகள் வைரங்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.
             நேரமிருந்தால் இதில் கோல்ப் விளையாடுவேன்.
                             எனது பாதுகாப்பிற்காக செக்கூரிட்டி 24 மணி நேரமும்.

                             இமயமலையின் தண்ணீரைதான் எனது டாய்லட்டுக்கு பயன் படுத்துவேன்.

                                                டாய்லட் பேப்பர்.

என்னுடைய நீச்சல்குளம் விலை உயர்ந்த வாசனை திரவியத்தால் நிரப்பப்படும்.

நான் உபயோகிக்கும் கார் தங்கத்தால் செய்யப் பட்டிருக்கும்.

எனது லேப்டாப் வைரங்களாலும், வைடூரியங்களாலும் செய்யப்படும்.
                     நான் பயணம் மேற்கொள்ளும் கார்.

                       என்னுடைய ஹாலிடே வீடு.
!


!

!

!

!

!

!

!

!

!

!
எலேய்................................உறங்குனி பயலே, கனவு கண்டது போதும், போய் வேலைய பாருலேய்......ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..........

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!