Monday, August 26, 2013

தலைநகரில் பதிவர் சந்திப்பு ஒரு அலசல்...!

திடீரென நம்ம வெள்ளைக்காரன் ஜாக்சன் துரை நம்ம சென்னை பதிவர்கள் சந்திப்பை அறிந்து மொத்தமாக வரி வட்டி குஸ்தி ச்சே ச்சீ கிஸ்தி எல்லாம் மொத்தமாக வாங்கி செல்லலாம் என்று உள்ளே வந்து ஒவ்வொரு பதிவர்களையும் மிரட்டினால் என்ன பதில் கிடைக்கும்னு பார்ப்போமா ? [[அடிக்கவெல்லாம் வரப்புடாது ஆமா ]]

ஜாக்சன் துரை : "எனக்கா எண்ணிக்கை தெரியாது அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் கொடுக்கவில்லை, வெகு காலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை...?

ஜாக்கி சேகர் : ம்ம்ம்ம்ம்ம்.....கொஞ்சம் வெளியே வந்தீங்கன்னா கொஞ்சம் வசதியாக இருக்கும் வாறீங்களா சார் ? ரெண்டுபேரும் வெளியே போகிறார்கள், பைக் சீரும் சத்தம் கேட்கிறது அப்புறம் சத்தமே இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து மாநாட்டு உள்ளே வருகிறார் ஜாக்கி அண்ணன்.

ரகசியமாக மெட்ராஸ் பவன் சிவா காதில் கேட்கிறார் "அண்ணே என்ன ஆச்சு ?

"கொய்யால கையை நீட்டி நீட்டி பேசினாம்ய்யா அவன் பேசுன தமிழும் புரியல அதான் கூவம் ஆத்துல கொண்டு போயி தள்ளிட்டு வந்துட்டேன்"

சிவா அப்பிடியே பம்மி மேசைக்கு அடியில் ஒளிகிறார்.
----------------------------------------------------------------------------------

உணவு உலகம் ஆபீசர் : மனசுக்குள் "அடடா வெள்ளைக்காரன் வம்புக்கு வந்துட்டானே பெல்டை வேற மறந்து வச்சிட்டு வந்துட்டோமே, திவானந்தா வாரேன்னு சொல்லியும் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டோமே....."

"சார் கொஞ்சம் என் கூட வரமுடியுமா ?" பாந்தமாக பாத்ரூம் அழைத்து செல்கிறார்........ஒரு சத்தத்தையும் காணோம்....கொஞ்சநேரம் கழித்து இருவரும் வெளியே வருகிறார்கள்.

சத்தமே காட்டாமல் வெள்ளைக்காரன் மெதுவாக வெளியே செல்கிறான். ஆபீசர் வந்து அவர் இருக்கையில் அமர, சிபி அண்ணன் மெதுவாக ஆபீசரிடம் கேட்க...

"அது ஒன்னும் இல்லை சிபி, பட்டுன்னு பாக்கெட்டில் வச்சிருந்த பிச்சுவா நியாபகத்துக்கு வந்துச்சு அதான் பாத்ரூம் கூட்டிட்டு போயி இடுப்புல ஒரு சொருவு சொருவுனேன் அதான் சத்தம் காட்டாம போறான்..."

சிபி அண்ணன் ஆபீசரை ஏற இறங்க பார்த்துவிட்டு, "ஏம்யா ஏன் இந்த கொலைவெறி"ன்னு அழுதுகிட்டே மேடைக்கு ஓடுகிறான்.
--------------------------------------------------------------------
மெட்ராஸ் பவன் : "ஹா ஹா ஹா ஹா ஹா...."

ஜாக்சன் : "என்ன மேன் இப்பிடி சிரிக்குறே...?"

மெட்ராஸ் : "என்கிட்டேவா ?"

ஜாக்சன் கலவரமாகிறான்..."மாட்டை கொட்டையில கட்டினியா, என்வீட்டு எருமை மாடை மேச்சியா, எங்க வீட்டு நாயிக்கு இறைச்சி வாங்கி அவிச்சி வச்சியா மானம் கெட்டவனே, இங்கே கூடியிருக்கும் எங்கள் பதிவர் கூட்டம் உங்கள் பறங்கியர் தலைகளை பதிவாக போட்டு விடுவார்கள் ஜாக்கிரதை" என்று கர்ஜிக்க...

ஜாக்சன் தனது இடுப்பில் இருந்த வாளை சிவா கையில் கொடுத்துவிட்டு காலில் விழுகிறான்.

சிவா மனதில் "அடடா மேடையில் பேசவேண்டிய டயலாக்கை இவன்கிட்டே சொல்லிட்டோமே"
----------------------------------------------------------------------

சென்னைபித்தன் : "ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....என்றபடி, "இங்கே பாரு ஜாக்சன் உனக்கும் தலையில் முடி வெள்ளை எனக்கும் வெள்ளை, அதனால நாம அப்பிடி இப்பிடி கொஞ்சம் விட்டு குடுப்போம், வா உனக்கு ஒரு கப் மூலிகை டீ  வாங்கி தாரேன் நீயும் இனி என்னைப்போல எப்பவும் இளமையாக இருக்கலாம் என்ன ?

அப்பிடியே கடற்கரைக்கு கூட்டிட்டு போயி மூலிகை டீ வாங்கி கொடுக்குறார், மூலிகை டீ இனிக்கும் என நினைத்த வெள்ளைக்காரன் ஒரு மடக்கு குடித்துவிட்டு ஓடிப்போயி கடலில் குதிக்குறான்.

தல மனசுல "எங்கிட்டெயெவாடா"
----------------------------------------------------------------------

தீதும் நன்றும் பிறர் தர வரா : "சோதனைமேல் சோதனை சோத்துப்பானைக்கு வேதனை.......என்னப்பா வரி வட்டி திரை கிஸ்தின்னு சொல்லிட்டே போறே, நான் எழுதும் கவிதைக்கும் வரியா ? " என்று வெள்ளைக்காரனை ஒரு சுற்று சுற்றிவிட்டு முறைக்கிறார்.

குரு என்னமோ சூன்யம் வச்சிட்டாருன்னு பயந்து நோ நோ சொல்லிட்டே ஓடுறான் ஜாக்சன்.
---------------------------------------------------------------------

புலவர் ராமானுசம் : "கவிதையால அறம்பாடி பரங்கியரை அழிச்சிருவேன் ராஸ்கோலு ஓட்ரா இங்கிருந்து" என்று கம்பெடுக்க...ஜாக்சன் எஸ்கேப்.
--------------------------------------------------------------------

மதுமதி : இங்கே பாரு ஜாக்சன், ரூம் போட்டு வச்சிருக்கேன், சாப்பாடு பண்ணி வச்சிருக்கேன், பாயாசமும் இருக்கு, வேண்டியதை சாப்புட்டுட்டு போ சரியா ?"

"சாப்பாட்டு மேடை எங்கே ?"

"அதோ அங்கே"

சாப்பாட்டு வாசலில் காவலுக்கு இருக்கும் ஆரூர் மூனா, இது நம்ம பதிவர்  ஜாதி சனம் மாதிரி இல்லையே என்று ஜாக்சனை புரட்டி எடுத்து அவன் மீது உட்கார வெள்ளைக்காரன் நசுங்கி போனான்.

மதுமதி மனதில் "சூப்பரா கோர்த்து விட்டோம்ல ஹி ஹி"
--------------------------------------------------------------------

கே ஆர் பி செந்தில் : பொருங்க பொருங்க பொருங்க கோவப்படாதீங்க எசமான், உங்க வரி வட்டி குட்டி எல்லாம் தாரேன் என்னை ஒன்னும் பண்ணிராதீக, அதுக்கு முன்னால என்னுடைய ஒரு வேண்டுதலை நீங்கள் கேட்கணும்."

"சரி சொல்லு சொல்லு"

"பக்கத்துலதான் ஒரு தியேட்டர்ல "தலைவா" படம் ஓடிட்டு இருக்கு ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருவோம் வாங்க"

படத்தில் சின்ன டாக்டரை திரையில் பார்த்தும் வெள்ளைக்காரன் மயங்கி கீழே விழுகிறான்.

கே ஆர் பி மனதில் : அப்பாடா நல்லவேளை சுறா பார்க்கலை, பார்த்துருந்தா செத்து கித்து தொலைஞ்சிருப்பான் "
---------------------------------------------------------------------

சி பி செந்தில்குமார் : "எதுக்குய்யா இப்பிடி கூட்டத்து  நடுவுல வந்து மானத்தை வாங்குறே ? கூப்ட்டு விட்டியன்னா உன் வீட்டுக்கே வந்து பாத்திரம் பண்டமெல்லாம் தேச்சு தந்து உன் கால்ல விழுந்துருப்போம்ல ?"

ஜாக்சன் : உன்னை நினைத்து நான் பெருமை படுகிறேன், உடனே வீட்டுக்கு வந்து சேர், புதிதாக நான்கு எருமை மாடுகள் வாங்கி இருக்கேன் சோப்பு போட்டு குளிப்பாட்ட வேண்டும்"

அண்ணன் மனதில் "ஆஹா கொஞ்சம் ஓவரா கூவிட்டோமோ"
---------------------------------------------------------------------

 காணாமல் போன கனவுகள் : "யோவ் மச்சான்.........எங்க அண்ணனுக்கு போனைப் போடுங்க, இங்கே ஒருத்தனுக்கு வட்டி பட்டி எல்லாம் வேணுமாம் ஒடனே வண்டியை பூட்டி வீச்சறுவாளை எடுத்துட்டு வரசொல்லுங்க"

ராஜி போட்ட சத்தத்தில் வெள்ளைக்காரன், இங்கே பாம் வச்சிருப்பாங்களோ என்ற நடுங்களில் ஓடுகிறான் ஏர்போர்ட் நோக்கி.

ராஜி மனதில் "ம்ஹும் நான் யாரு தங்கச்சி தெரியுமாலேய்"
---------------------------------------------------------------------

அஞ்சா சிங்கம் : வெளக்குமாரு வெளங்கிருச்சு போ, உன் பரங்கி தமிழில் தீயை வைக்க, டேய் வெள்ளைக்காரா என் பெயர் கஞ்சா சிங்கம் இல்லைடா டுபுக்கு, அஞ்சா சிங்கம், நான் மும்பை தாராவியையே அலறவச்சவன் தெரியுமா ? வேண்ணா கொஞ்சம் கஞ்சா தாரேன்"னு சொல்லிவிட்டு சுண்ணாம்பு தடவுன தம்பாக்கு கொடுக்க வெள்ளைக்காரன் ஒரே ஓட்டமா ஓடுறான்.

சிங்கம் மனதில் "இவன் ஓடுறதை பார்த்தால் பிளேன் வீல்லயே போயி விழுந்துருவானோ "
------------------------------------------------------------------

திண்டுக்கல் தனபால் : இந்தாப்பாரு உனக்கு வட்டி தரலைன்றதுக்காக உன் பதிவுக்கு வந்து கமெண்ட் லைக் எல்லாம் என்னால் போடமுடியாது, ஒன்னு செய் எங்க அண்ணன் சிபி இப்போ மேடைக்கு பேச வருகிறார், அவர் பேச்சை கேட்டுவிட்டு அப்புறமா பேசுவோம் ஓகே"

சிபி அண்ணன் மேடைக்கு பேச வந்ததும் பயங்கர கைதட்டல் சத்தம் வர, பலமான மழை பெய்யுதுடோய் என்று ஓடுகிறான் ஜாக்சன்.

தனபால் மனதில் "ச்சே தப்பிச்சிட்டானே, சிபி அண்ணன் பேச்சை கேட்டாம்னா செத்தே போயிருவான்லா நினைச்சேன்"
----------------------------------------------------------------

கே ஆர் விஜயன் : "சார் நான் ரொம்ப அமைதியானவன், கோவம் வந்துச்சுன்னா சிபி அண்ணன் மாதிரி பம்முற ஆளு நானில்லை ஆமா"

ஜாக்சன் " ஒ கோவமும் வருமா உனக்கு ?"

"கொஞ்சம் வெளியே வரமுடியுமா ?"

"ஒ ஷுவர் "

ஓங்கி மண்டை முடியை விஜயன் பிடிக்க அது அவர் கையோடு வந்து விடுகிறது, உஷாராகி வெள்ளையன் சட்டை காலரை பிடித்து ஒரு பைக்கை மட்டும் அவனை சுத்தவிட்டு அடி பின்னி விடுகிறார்.

விஜயன் மனதில் " மனோ மட்டும் இந்த சீனை பார்த்தாருன்னா நம்மகிட்டே சீனே காட்டி இருக்க மாட்டார்"
-------------------------------------------------------------------

 இம்சை அரசன் பாபு : "ஓ....அது நீங்களா அண்ணே, உங்களைத்தான் அண்ணே இம்புட்டு நாளும் தேடிகிட்டு இருக்கேன்"

"குட் பாய்"

"என்னாது குட் பாயா எங்க சிவாஜி கணேசன்கிட்டே வந்து வட்டி கேட்டது நீதானே ?"
என்று பின்னால் கைவிட்டு அருவாளை எடுத்து வீச, ஜாக்சன் குனிந்து தப்பிக்க பதிவர் கூட்டம் வந்து இம்சை அரசனை பிடித்து ஆசுவாசப்படுத்துகிறது.

இம்சை அரசன் மனதில் "மனோ அண்ணன் தந்த அட்டை அருவாளுக்கு இவ்வளவு வேல்யூ இருக்கா கி கி கி கி..."
-----------------------------------------------------------------

 மங்குனி அமைச்சர் : "ஏம்யா ஏன் ? இம்புட்டுபேர் ரவுண்டு கட்டியும் போதாதா உனக்கு ? அதான் வட்டியும் முதலுமா குடுத்துட்டாங்களே ?"

"சூரியன் அஸ்தமிப்பது இல்லை"

"உனக்கு நேரம் சரியில்லை"  என்று ஒரு ஸ்ப்ரே குப்பியை வெளியே எடுத்து வெள்ளையனை சுத்தி பங்க்லி பங்கா பங்க்லி பங்கா என்று பாட....அலறி ஓடுகிறான்.

மங்குனி மனதில் "நாங்களே ஒவ்வொரு ஊரா கலாயிச்சி காலி பண்ணிட்டு இருக்கோம் எங்கிட்டேவா ?"
------------------------------------------------------------------

சின்னவீடு சுரேஷ் : சரி வாய்யா வாய்யா வா உக்காரு முதல்ல, நான் ஒரு சின்ன கதை சொல்றேன் அதைக் கேட்டுட்டு அப்புறமா உன் டயலாக்கை சொல்லு."

"என்ன சின்னவீடு கதையா ஜொல்லு ஜொல்லு"

"வழியுறத பாரு ? சரி கதைக்கு போவோம், ஒரு ஊர்ல ஒரு போஸ்ட், அதோடு கதை லாஸ்ட்" வெள்ளைக்காரன் சுற்றி முற்றி பார்க்குறான். எஸ்கேப்.

சுரேஷ் மனதில் "இருந்த இடத்தில் இருந்தே கோயம்புத்தூரை ஆட்சி செய்யிறவிங்க நாங்க என்கிட்டேவா?" என்று எழும்ப முடியாமல் குலுங்கி சிரிக்குறார்.
---------------------------------------------------------------

 கோவை நேரம் ஜீவா : பனங்கள்ளும் குடல் கறியும் சாப்புட்டுட்டு இருக்கும்போது எதுக்குய்யா வம்புக்கு வாறே ? சிங்கப்பூர்லயும் வெள்ளையாத்தான் இருக்கானுக நீயும் வெள்ளையாத்தான் இருக்க ?

அவனுக இப்பிடி புட்டி ச்சே வட்டி கேட்டதில்லையே ? சரி வா பனங்கள்ளு கொஞ்சம் குடி என்று கொடுக்க, ஒரு மடக்கு குடித்தான் புளிப்பை பார்த்து ஓடுகிறான் தலைதெறிக்க.
--------------------------------------------------------------
டிஸ்கி : சென்னை பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்று பதிவர்கள் யாவரும் மனநிறைவோடு சென்று மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே வாழ்க வளமுடன் சுகமுடன்...!

Wednesday, August 7, 2013

பெண்ணென்றால் ஹோட்டலும் இறங்கும்...!

கிர்ர்ர்ர்........கிர்ர்ர்ர்ர்ர்.....

கிர்ர்ர்ர்.......கிர்ர்ர்ர்....[[ போன்தான் ]] ஆத்தீ சவுதி நம்பரு [[யாரவது நம்மை போட்டு குடுத்துட்டானுவளோ]]


"ஹலோ...."

" ஹலோ மனோ...." எதிரில் பெண் குரல் அதுவும் "மனோ" என்று என் பெயரை சொல்லி அரபியில் பேசுது.

"நீங்க யாருன்னு தெரியலை ராங்க் நம்பர்ன்னு நினைக்கிறேன், என் பெயர் மட்டும் பாதிதானே தெரிஞ்சிருக்கு..."


"ஐயோ மனோ.....நான்....... ஹுதா [[அரபி பெயர்தான்]] பேசுறேன்..."

"அட நீயா ஹா ஹா ஹா ஹா ஹா உனக்கு எப்பிடி என் நம்பர் கிடைச்சுது ? "

"நம்பர் உன் கேர்ள் பிரண்டு தந்தாள் [[கூட வேலை செய்யும் பிலிப்பனியை கேர்ள் பிரண்ட் ஆக்கிட்டியா வெளங்கிரும்]]

"நான்தான் எந்த கஸ்டமருக்கும் என் நம்பர் குடுக்க கூடாதுன்னு சொல்லி இருந்தேனே..சரி அதென்ன என் பெயர் மனோஜ் அல்லவா நீ எதுக்கு மனோன்னு கூப்பிட்டே ?"

"அதெல்லாம் மாலீஸ் பண்ணி வாங்கிருவோம்ல, மனோஜ் என்பது அரபியில் மோசமான கெட்ட வார்த்தை யாருமே உனக்கு சொல்லலையா ? அதான் மனோன்னு கூப்பிட்டேன்..." [[ கெட்ட வார்த்தையா....? அதான் அரபி பய புள்ளைங்க அந்தப் பெயரை யூஸ் பண்ணாம இருக்காயிங்களா அவ்வ்வ்வ்வ்வ் இவளவு நாள் தெரியாம போச்சே மனுஷா...]]


"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."

"ஈத் பெருநாளுக்கு பஹ்ரைன் வாறேன் ரூம் புக் பண்ணு எனக்கும் என் தங்கச்சிக்கும்"

"ஸாரி மேடம் ரூம் எல்லாம் ஆல்ரெடி புக்காகி ஃபுல்லாகிருச்சு, அல்லாமலும் ஈத் பெருநாள் சாதாரணமாக 40 தினாருக்கு [[ஆறாயிரம்]] கொடுக்கப்படும் ரூம் மூன்று நாட்கள் ஈத்"துக்கு மட்டும் ஒருநாளைக்கு 120 தினார் [[பதினேழாயிரம்]] தெரியுமில்ல ?"


"ஒ மை காட்......மனோ பிளீஸ் மனோ...."

"அப்போ என் ரூமுக்கு வாறியா...?

"கொன்னேப்புடுவேன்"

"சரி சரி ஏதும் ரூம் கேன்சல் ஆனால் உனக்கு ரெடி பண்ணி வைக்க சொல்றேன் ஆனால் 120 தினார் நியாபகம் வச்சுக்கோ..."


"மனோ மன்னு மன்னு பிளீஸ் பிளீஸ்...."

இவளவு கெஞ்சி கொஞ்சுனா விட்டுருவோமா என்ன......?

30 தினாருக்கு [[நாலாயிரம்]] ரூம் கொடுத்துட்டோமுல்ல [[ கம்பெனி உருப்பட்டுரும் விடுங்க ]]



 நேற்று ராத்திரியே நேரில் வந்து அட்வான்ஸ் மற்றும் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு சென்ட் பாட்டல், பேரீச்சம் பழம் பாக்ஸ் ஒன்று பரிசு தந்துவிட்டு போனாள்....! [[எங்கேயோ புகையிற வாசம் வருதே]] பக்கத்துல என் அசிஸ்டென்ட் முறச்சிகிட்டு நிக்குது, ஓடிருலேய் மனோ......

நீதி : பெண்ணென்றால் ஹோட்டலும் இறங்கும்.

Tuesday, August 6, 2013

நடு மண்டையில சும்மா நச்சுன்னு வந்து உக்காந்துடுச்சு...!


டிடிங் டிடிங்...

டிடிங் டிடிங்....

"ஹலோ..."

" ஹலோ அத்தான் எப்பிடி இருக்கீங்க ?"

"நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா பிள்ள..?"

"நல்லா இருக்கோம், காலையிலே இருந்து ஒரே மழை தூத்திகிட்டே இருக்கு..மழையில குளிக்கனும்னா வாங்க செமையா பெஞ்சிகிட்டு இருக்கு"

"நான் மழையில குளிக்க அந்த மழைக்கு கொடுப்பினை இல்லைன்னு சொல்லிரு..."

"காலையிலேயே ஆரம்பிச்சாச்சா..."

"அவ்வ்வ்வ்வ்வ்வ்...."

"என்ன அவ்வ்வ்வ்....? உங்க மகன் உங்ககிட்டே பேசனுமாம்"

[[பயபுள்ள லேசுல லைன்ல வரமாட்டானே ? ஆஹா....]]

"குடு குடு.."

"ஹலோ டாடி நல்லா இருக்கீங்களா ?

"நல்லா இருக்கேன் மக்ளே நீ நல்லா இருக்கியா ? சொல்லு என்ன விஷேசம்னு.."

"டாடி என் போன் பழசாகிருச்சு, எனக்கு ஒரு புது போன் வேணும்..."

"வாங்கிட்டா  போச்சு டோன்ட் ஒர்ரி..."

"நில்லுங்க நில்லுங்க..."

"சொல்லு சொல்லு..."

"20000 ரூபாய்ல இருக்கு 25000 ரூபாய்ல இருக்கு 30000 ரூபாய்ல இருக்கு நான் எதை செலக்ட் பண்ணனும்னு சொல்லுங்க..?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்....."

"என்ன டாடி அவ்வ்வவ்வ்வா....? [[வீட்டம்மாவின் கலகல சிரிப்பு சத்தம் கேக்குது]]

"ஹலோ ஹலோ ஹலோ ஹல்லல்லோ....." [[லைன் கட்டாகிருச்சோ ஹா ஹா ஹா ஹா ஆத்தீ..... ஊருக்கு போகும்போது நல்லா காஸ்ட்லியா ஒன்னு வாங்கிட்டு போகனும் செல்லத்திற்கு]]

எப்பிடி இப்பிடி கூலா கேக்க முடியுது பாருங்க இப்போ உள்ள பிள்ளைகளிடம், நான் எங்க அப்பாகிட்டே 25 பைசா கேட்க நூறு தரம் ஒத்திகை பார்ப்பதுண்டு...! ஹி ஹி...
------------------------------------------------------------------------------------

வெளிநாட்டு வாழ்க்கையில் எம்புட்டுதான் ஊதியங்கள் உயர்ந்தாலும் அதற்க்கான தேவைகளும் வந்து நடு மண்டையில் நச்சென்று உட்கார்ந்து விடுகிறது.

பணமிருப்பவர்களுக்கு நாடில்லை, நாடிருப்பவர்களுக்கு பணமில்லை, வீடிருப்பவனுக்கு  நாடில்லை, நாடிருப்பவனுக்கு வீடில்லை.

பணமிருப்பவனுக்கும் நோயுண்டு பணம் இல்லாதவனுக்கும் நோயுண்டு, இதுவும் ஒரு பெரிய ஆச்சர்யம்தான், பணக்காரர்களுக்கு வரும் நோயும் இப்போது ஏழைகளை வந்தடைந்து விட்டது.

கொள்ளையடிப்பவன் கொட்டுகிறான், ஏழையோ இன்னும் வறண்டு போகிறான்.

இப்போதெல்லாம் மழை என்றாலே பயமாகி கொண்டே போகிறது, வந்தால் மொத்தமாக வந்து உயிர்களை பலி வாங்கி செல்கிறது இல்லையேல் எட்டி கூடப் பார்ப்பதில்லை. எலேய் மரம் வெட்டிகளா கொஞ்சம் ரோசியுங்க.

முன்பு கதை கவிதைகள் எழுதிய எழுத்தாளர்கள் பரம ஏழையாக இருந்தார்கள், இப்போதோ சுவிஸ் வங்கியில் பணத்தை ஒளித்து வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.

சிங்களன் செய்தது போர் குற்றமே என்று கூப்பாடு போட்டுக்கொண்டே...பின்பக்கமாக போயி சிங்களனோடு பிசினஸ் டீல் செய்கிறான்.

அட்டகாசமாக பிளான் பண்ணி தன் மகளை எங்கே வைக்கனுமோ அங்கே கொண்டுபோய் வைத்தாயிற்று இனி எவன் ஆத்தோடு காத்தோடு கடலோடு போனா வந்தா செத்தா எனக்கென்னன்னுட்டு கட்டையாகி சேர்ல உக்காந்துட்டு இருக்கான் ஒரு மானமில்லா தலீவன்.

நான்கு பேருக்கு தெரியாமல் கமுக்கமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை சேரன் ஏன் இப்படி கொட்டம்போட்டு ஆடுறார் என்ற ரகசியம் இன்னும் எனக்கு புரியவே இல்லை. மீடியா அந்த பையனின் குடும்பமே ஒழுக்கம் கெட்ட குடும்பம் என்று சொல்கிறது. இனி அந்த குடும்பத்தின் கதி ?
--------------------------------------------------------------------------------------

எங்கள் ஹோட்டலில் பணியில் கடுமையான கடுமை காட்டும் ஒரு டியூட்டி மேனேஜர், ரம்ஜான் லீவுக்கு போய் ஈத் பெருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரவேண்டும் என்ற ஆர்டருடன் சென்றான், ஊருக்கு போனாலும் அவன் நினைவெல்லாம் இங்கேதான்.

எனக்கு மிஸ்கால் பண்ணி பண்ணி அங்கே என்ன நடக்குது இங்கே என்ன நடக்குது என்று என்கொயரி பண்ணிட்டே இருப்பான், "யோவ் கேரளாவுல நல்ல மழை வீட்டை விட்டும் வெளியே போக முடியலன்னு சொல்றே வீட்டம்மா கூட ஜாலியா இருக்குறத விட்டுட்டு எதுக்குய்யா வீணா டென்ஷன் எடுக்குறே ? நீ இங்கே இல்லைன்னா ஹோட்டல் நடக்காதா என்ன" என்று திட்டினேன்.

ஆனாலும் அடங்கவில்லை எப்பம்டா ஐந்தாம் தேதி வரும்னு காத்து இருந்தவன் [[லீவுக்கு போயி 20 நாள்கூட ஆகலை]] எனக்கு போன் பண்ணி பிளேன் நம்பர் மற்றும் நேரம் சொல்லி ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்ப சொன்னான்.

கொஞ்சநேரத்தில் அவன் போன் மறுபடியும்...

"ஹலோ என்ன சேட்டா  இப்பதான் தூங்குனேன் மறுபடியும் என்னாச்சு ?"

"ஜீவிதம் நாய் நக்கி...." என்று சொல்லி நிறுத்தினான் [[ வாழ்கையை நாய் நக்கி விட்டது]]

"என்னாச்சுய்யா...?"

"கொச்சின் ஏர்போர்ட் உள்ளே மழை  தண்ணீர் புகுந்து ஏர்போர்ட்டையே குளோஸ் பண்ணிட்டாங்களாம்..."

நான் சிரிச்ச வெடிச் சிரிப்பை கேட்டு நொந்து போனான்.....விதி வலியது மக்கா, அவன் வரலைன்னதும் மொத்த ஹோட்டல் ஊழியர்களுக்கும் தற்காலிக சந்தோசம், மற்றும் சிரிப்புகள்...!
-------------------------------------------------------------------------------

நன் பயின்ற பள்ளி இதுதான், பேஸ்புக்ல நண்பர் மணிகண்டன் பகிர்ந்து இருந்தார், அவர் எடுத்த போட்டோதான் இது, பள்ளியை பார்த்ததும் மனசுக்கு அழகழகான நினைவுகள்...!







Sunday, August 4, 2013

சமையலில் பெண்கள் சிங்கம்தாம்டே ஒத்துக்குறேன்...!


முந்தய நாள் எங்கள் ஹோட்டல் முதலாளி சந்தோஷத்தில் 20 ஆடுகளை பலிபோட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு பலவிதமாக சமைத்து கொடுக்க சொன்னார்.

ஸ்பெஷலாக ஏமன் நாட்டு சமையல்காரர்களை வரவைத்து பல வெரைட்டிகள் செய்து தர உத்தரவு.

எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் இருந்ததால் அவரவர் நண்பர்களுக்கோ அல்லது வீட்டுக்கோ கொண்டு செல்லலாம் என்றதும் நானும் மட்டன் திக்கா என்று சொல்லப்படும் [[அதாவது கரி அடுப்பில் சுட்டது]] அயிட்டத்தை பார்சல் எடுத்து வந்து ரூமில்  ஃபிரிட்ஜில் வைத்துவிட்டேன்.

மறுநாள் போயி ஃபிரிட்ஜில் இருந்து அதை வெளியே எடுத்தேன், "ங்கே" என்று முழித்தேன் பின்னே.......எப்பிடி சூடு பண்றதுன்னு புரியல, சட்டியில வச்சி சூடு பண்ணா சட்டியும் கரிஞ்சி போகும் மட்டனும் சூடாகாது எல்லாமே பெரிய பெரிய சைஸ் வேற.

என்னடா பண்றதுன்னு யோசிச்ச உடன் வீட்டம்மா நியாபகம் வர, போனைப் போட்டேன், நாலு திட்டு கிடச்சுது ஹி ஹி [[சரி சரி விடுடா மனோ நமக்கு இதெல்லாம் புதுசா என்ன]]

அப்புறம்தான் சூப்பர் ஐடியா சொல்லித் தந்தாள் என் செல்லம்.

ஒரு பெரிய சட்டியை எடுத்து அதில் அரை சட்டி நிறைய தண்ணீர் ஊற்றி, அந்த பெரிய சட்டிக்குள் அடங்கும் ஒரு கிண்ணம் எடுத்து தண்ணீர் மீது படாத வண்ணம் வைத்து அதன் மீது மட்டனை வையுங்க, அப்புறம் அதை இன்னொரு மூடி கொண்டு மூடவும், அப்பிடியே மிதமாக சூடாகும் படி அடுப்பில் நெருப்பை எரிய விடுங்க, நன்றாக சூடானதும் எடுத்து சாப்பிடுங்க என்றாள்.

ஆஹ்ஹா அப்பிடியே செய்தேன்....சூப்பர் டேஸ்ட் மக்கா...! நாங்களும் சமைப்போம்ல ஹி ஹி....!

சமையலில் பெண்கள் புலி, சிங்கம்தாம்டே ஒத்துக்குறேன்...! 

------------------------------------------------------------------------- 
சீவலப்பேரி பாண்டியை என்கவுண்டர் பண்ண கொண்டு சென்றபோது, எஸ் பி'யாக இருந்து மரித்துப்போன பிரேம்குமரைதான் சுட சொன்னார்களாம், நான் சுடவே மாட்டேன் என்று மறுப்பு சொல்லிவிட்டாராம் பிரேம்குமார்.

அப்புறம் மற்றொரு அதிகாரிதான் சுட்டாராம், உடலை போலீஸ் வேனில் போட்டாலும் சீவலப்பேரி பாண்டியின் உயிர் பிரியாமல்தான் இருந்துள்ளது, உயிர் பிரியும்வரை வேனில் சுற்றிக் கொண்டே இருந்தார்களாம்...!
உடல் எரியூட்டபட்ட பின் யாருமில்லாத சமயத்தில் போயி சாம்பலை அள்ளி  ஆற்றில் கரைத்தது பிரேம்குமார்....!
சங்கரமடம் ஜெயேந்திரரை கைது செய்த அதே பிரேம்குமார்"தான்....!
விகடன் பிரசுரம் "சீவலப்பேரி பாண்டி" புஸ்தகத்தில் இருந்து எப்பவோ வாசித்தது நியாபகம்...!

மனோ"தத்துவம் : எல்லாம் தெரியும் என்று சொல்பவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று அர்த்தம்.



Thursday, August 1, 2013

முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...!

தங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி நேரத்தில் டைப்பி வெளியிட்டு விட்டேன், நக்கீரன் அண்ணனின் தொடர் பதிவுக்கு இன்னும் விஷயங்கள் தேவைப்படுவதால் வெயிட்டிங்.....அண்ணே மன்னிச்சு.
THE GREAT MUMBAI JUHU BEACH!!! [[இதுதான் தலைப்பு]] ஆகஸ்ட் 19/ 2010 ல், நான் மும்பை போனபோது மும்பை ஜூ பீச் சுற்றிப் பார்க்க குடும்பமாக போனபோது எடுத்த போட்டோவை போட்டு எனது வேதனையை சொல்லி இருந்தேன்.

அதற்க்கு ஸ்பீட் மாஸ்டர் முஸ்தபா வந்து ஒரு கமெண்ட போட்டுட்டு போயிட்டார், பிற்காலத்தில் எனக்கு விருது கொடுத்து கவுரவித்ததும் இதே நண்பன்தான் [[இப்போ ஆளு எங்கேன்னே தெரியவில்லை ஆரம்ப காலங்களில் பதிவுலகத்தின் ராஜாவாக திகழ்ந்தவர்]]

இதற்க்கு அடுத்த பதிவில் எனக்கு நானே கமெண்ட் போட்ட கொடுமையும் உண்டு [[சிரிக்கப்டாது ஆமா ]]  நாஞ்சில் எக்ஸ்பிரஸ் தம்பி பிரதாப் மெயிலில் [[கமெண்டில்]] வந்து கேட்டார் "என்ன அண்ணே உங்களுக்கு நீங்களே கமெண்ட் போட்டுருக்கீங்க" என்று, சரி நாம அதுக்கு சரிப்படமாட்டோமோன்னு நினைக்கும் வேளையில்....

கே ஆர் பி செந்தில் அண்ணன், தம்பி "மாப்பிளை"ஹரீஷ், தங்கை கல்பனா, தம்பி கோமாளி செல்வா, இம்சை அரசன், தோழி மதுரை பொண்ணு, தம்பி பிரவீண் மற்றும் டெரர்  குரூப் எல்லாம் உள்ளே வர, நானும் அவர்களின் பதிவுகளில் பின் தொடர ....சிபி அண்ணனும், விக்கி உலகமும், விஜயன் மற்றும் ஆபீசர் மற்றும் ஏனைய பதிவர்கள் நண்பர்கள் எல்லாரும் வந்து சேர இன்று என் வலைப்பக்கத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை 285, 315 லட்சமாக இருக்கிறது....!

எனது பதிவுகளில் என் அனுபவங்களைத்தான் கூடுதல் பகிர்ந்துள்ளேன், சோகம் என்றாலும் அதில் இருக்கும் சுகத்தையும் சேர்த்தே அனுபவிக்க பழகிக் கொண்டேன், என்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து பார்த்து வெடி சிரிப்பாக சிரித்து மகிழ்வேன், அவைதான் என் பதிவுகளில் அதிகமாக வெளிப்படும்...!

அந்த அனுபவம்தான் முதல் பதிவிலேயே வந்துள்ளது, மனசில் இருப்பதுதானே சிலது வெளியே வரும் இல்லையா இவ்வளவாக சகித்து எனக்கு ஆதரவளித்த பதிவர்களுக்கும், எனது வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்க்கிறேன்.

என் உயிர் தமிழின் பொற்பாதத்தில் என் நன்றியை மறுபடியும் சமர்ப்பிக்கிறேன்.


டிஸ்கி : நாய் நக்ஸ் அண்ணே, உங்க தொடர்பதிவுக்கு ஒரு ஹிந்தி படம்தானய்யா கிடைச்சிருக்கு, அதான் தாமதம் ஆகிட்டு இருக்கு கொஞ்சம் பொறுங்க, எனக்கு டீன் ஏஜ் பருவம் மும்பையில் அல்லவா, நான் சிலாகித்த காதல் சினிமா பற்றி சொல்லுதேன், சஃபர் கரோ பாய் சாப்.


ஓ  இதுக்கு இனியும் ஐந்துபேரை சேர்த்து விடனுமா ?

 ஏற்கனவே போனமுறை கோர்த்து விட்டதுல ரெண்டுபேர் கிரேட் எஸ்கேப் ஆகிட்டாங்க, சரி கூப்பிட்டு பார்ப்போமே ? ஒருமணி நேரத்தில் [[கூடுதலாக]] எழுதி முடிக்கும் சுவாரசியம் அல்லவா எனவே நம்பி கூப்பிடுதேன்.


 1 : அதே அதே....நம்ம ஆபீசர் சங்கரலிங்கம், தனது ஆக்கப்பூரவமான நடவடிக்கைகள், கைதுகள், ரெய்டுகள் பற்றி முதல் பதிவு எழுதி இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

2 : கே ஆர் விஜயன், எங்கள் கன்னியாகுமரி குசும்பு கலந்து ஏதாவது முதலில் எழுதி இருக்கலாம். வாசித்து நாமும் ரசிக்கலாம்.

3 : பன்னிகுட்டி ராமசாமி, ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அந்த ஆயிரம் கமெண்ட்ஸ் பெற முதல்ல என்ன ஆரம்பம்ன்னு சொன்னா சிரியா சிரிக்கலாம்.

4 : சென்னை பித்தன், தல என்னா போடு போடுதாரு, அவரும் ஆரம்பத்துல என்ன ரசனையில ஆரம்பிச்சார் என்கிறதை பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது.

5 : அவர்கள் உண்மைகள், ஒரு குசும்பே முதன் முதலாக குசும்பு எழுதினது எப்படின்னு தெரிஞ்சு நாமும் சந்தொஷப்படலாம்.


அன்புடன்,

நாஞ்சில் மனோ.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!