ஐதராபாத்: விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியது தொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கை குழு சட்சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பலன் அடைந்த பெரும் நிறுவனங்கள் ரெட்டியின் மகன் ஜெகன்மோன் ரெட்டி நடத்தும் நிறுவனங்களில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
# ஆஹா என்னமா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, நடந்தது, எலேய் கொய்யால சண்முகபாண்டி எட்றா அந்த வீச்சருவாளை, இந்திய மக்கள் தொகை 120 கோடி, உலக மக்கள் தொகை 700 கோடி...[[ ஒரு லட்சம் கோடி பெருசில்லையாம் இந்த போக்கத்த நா.......ளுக்கு]]
திருச்சி: திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
# ஒரு மாஜி முன்னாள் [[பின்னால்'ன்னு கேக்கப்புடாது]] அமைச்சரின் தம்பி கொல்லபட்டதுக்கு பதட்டம்னு எதுக்குய்யா பொது மக்களை பயமுறுத்துறீங்க, அன்னைக்கு தா கிருட்டிணனை கொன்னவணுக இன்னைக்கும் உசிரோட கம்பீரமா சுத்திகிட்டு இருக்கானுக, ஸ்டாலினின் உயிர் தோழன் அண்ணாநகர் ரமேஷை கொன்னவணுக உயிரோடே சுத்திகிட்டு இருக்கானுக, ம்ஹும் பதட்டமாம் பதட்டம், நாங்க [[மக்கள்]] பதட்டம் இல்லாமல்தான் இருக்கோம், நீங்கதான் பதட்டமா இருக்கீங்க அடுத்த கத்தி உங்களுக்கு வந்துருமோன்னு போங்கடா...!!!
மின் உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கூட, சரியாக புரிந்து கொள்ள வக்கில்லாத தி.மு.க.,வினர், மின் உற்பத்தியை பற்றி பேச அருகதை கிடையாது'' என, முதல்வர் ஜெயலலிதா காட்டமாக பேசினார்.
# ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ மேடம் முதல்ல மின்சாரம் பற்றி உங்களுக்கு புரிந்துணர்வு இருக்கான்னு கொடநாட்டுல போயி ரூம் போட்டு யோசிங்க முடியல....!!!
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலைக்கு, அரசியல் காரணமா அல்லது தொழில்போட்டியா என்ற கோணத்தில், ஐந்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியினர் பொறுமை காக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
# ஹே ஹே ஹே ஹே அமைச்சர் மரியம்பிச்சையை கொன்னவனையே இன்னும் பிடிக்கலையாம் இது வேறயா, எல்லாம் டீலிங்ல முடிஞ்சிரும்'ன்னு யார்டா அங்கே சத்தமா சொல்றது ராஸ்கல்.
எம்.ஜி.ஆர். பெயரை தே.மு.தி.க.,வினர் உச்சரிப்பதற்கு அருகதை இல்லை,'' என்று சட்டசபையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
# யார்டா அது, கலைஞரே எம்ஜியார் பெயரை உச்சரிக்கும் போது, உங்க மம்மியே அவர் படத்தை விரும்பாத போது இதென்ன சின்னபுள்ளதனமா இருக்கு..???
தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை,'' என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
# தமிழ்நாட்டுக்கு கொடுக்க மாட்டானாம் ஆனால் பாகிஸ்தானுக்கு கொடுப்பானாம் என்னே ஒரு உத்தரவாதமான பொழைப்பு, தமிழக மத்திய அமைச்சர்கள் மானம் கெட்டவர்கள் என்று யாராவது சொல்லுங்க பாப்பேம் ச்சே ச்சீ பாப்போம்.
அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என, சசிகலா வெளியிட்ட அறிக்கையை தயாரித்ததே, சசிகலாவின் உறவினர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
# ஆண்டவா தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாத்துய்யா ராசா, சனியனுக ஒழியனும் நாட்டுல மழை தண்ணி [[மொடாஸ் இல்லை]] பெய்யனும் பார்த்து செய் ஆண்டவா.....
,
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் உதயகுமாரின் வீடு மற்றும் அறக்கட்டளையில், டில்லியில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இதில் உதயகுமார் நடத்தி வரும் சாக்கர் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
[[http://www.kousalyaraj.com/2012/03/blog-post_30.html இந்த லிங்கையும் படியுங்க]]
# அய் அய் பிடிக்காதவங்களை பொய் கேசுல பிடிக்கிறதுக்கு என்னமா பாடு படுராங்கப்பா, இந்த வேகத்தை ஆட்சியிலும் மக்கள் நலத்திலும் காட்டுங்கடா வீணா போனவுனு[ளு]களா வெண்ணை பன்னாடைகளா....
நான் தரகர் கிடையாது - குஷ்பு.
# ஹா ஹா ஹா ஹா ஆண்டி இருந்தாலும் உங்க நேர்மை என்ற கருமை எருமை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனாலும் உண்மையை இப்பிடி போட்டு உடைக்கனுமா என்ன..?
டிஸ்கி : பயணங்கள் முடிவதில்லை தொடர் அடுத்த பதிவோடு நிறைவடையும்......!!!