Saturday, March 30, 2013

ரஜினிகாந்தை ஏன் இப்போது பலருக்கும் பிடிக்காமல் போனது...?


உன்னை நீ நேசிப்பது போல பிறனையும் நேசி என்று சொல்லி மனிதனின் மனம் மாற செய்த இயேசு, இன்று உயிர்த்தெழுந்த தினம்.

யாவருக்கும் நாஞ்சில்மனோ'வின் இனிய ஈஸ்டர் தினம் வாழ்த்துக்கள்...

இயேசு சொன்னது போல இனி முதல் நாம், நம்மைப் போல பிறரையும் நேசிப்போம்.
---------------------------------------------------------------------------
காலையிலேயே [[2 am]] முகமறியா தம்பி ஒருவன் சாட்டிங்கில் வந்து அலறி ஓடியே விட்டார்....?

"அண்ணே கன்னியாகுமரி எப்பிடி இருக்கு...?"

"கன்னியாகுமரி எப்பவும் இருக்குற இடத்தில் அப்பிடியேதான் இருக்கு, நான்தான் வெளியே போயிட்டேன்..."

இந்த பதிலுக்கு அப்புறம் ஆளைக் காணவே இல்லை, மருத்துவாமலைக்கு ஓடிட்டாரோ என்னமோ ஹி ஹி...
----------------------------------------------------------------------------
கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த [[இலங்கை கிரிக்கெட் வீரர்கள்]] அனுமதிக்காவிட்டால் என்ன, கேரளா இருக்கே....நான் சூனியா பூந்தியின் செருப்பை நக்குறவன் ஆச்சே எனவே கேரளாவில் தாராளமாக நடத்தலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் உம்முன சுண்டி....

ஒ அப்போள்  கூடங்குளம் அணுமின் நிலையமும் கேரளா கொண்டு போகான் அனுகிரகம் செய்யனே என்றே பொன்னு சாரே....
---------------------------------------------------------------------------
மாணவ செல்லங்களின் இந்த அருமையான போராட்டத்தை, இனி வரும் தேர்தலுக்கு லாவகமாக பயன்படுத்தி, தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்து கொடுக்க புத்தியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து, ஆனால் தற்கொலை போன்ற எண்ணங்களை அவர்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டியதும் நம் கடமை.

தன்னைக் கொல்வதால்  விடிவு கிடையாது, அகிம்சையாக போராடி, புத்தியாக ஈழம் மலரச் செய்யவேண்டும், அவசர புத்தி கூடவே கூடாது என்பதை மாணவர்கள் நன்றாக உணரவேண்டும்.
------------------------------------------------------------------------------
இலங்கையில் இருக்கும் எழுபது சதவீதம் சிங்களர்கள் வட இந்தியர்கள் - இலங்கை அமைச்சர் அறிக்கை

#அடங்கொய்யால இப்பவாவது ஒத்துகிட்டியே சரி சரி அப்போ நீ இலங்கைக்கு வந்தட்டி  வருத்தட்டிதானே...? உடனே கிளம்பு உன் நாட்டுக்கு...வரலாறு உன் வாயாலேயே வெளியே வந்துருச்சு பாரு...! ஒண்டவந்தப் பிடரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்.
------------------------------------------------------------------------------
படம் எடுத்தா படமா [[சினிமா]] எடுங்க, பாம்பு படம் எடுத்தாப்புல படம் எடுத்து எங்களை ஓடவைக்காதீங்க சொல்லிப்புட்டேன்" எங்க அண்ணாச்சி பாலபிரஜாதிபதி அடிகளார் அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது...!

மணிரத்தினம் படங்களும் இப்போ அப்படி வருவதைப்பார்த்தால் பயமா மட்டும் இல்லை பேதி ச்சே பீதியாவும் இருக்கு...!
---------------------------------------------------------------------------
மாணவர்கள் சப்போர்ட் வேண்டும் தனக்கு என்பதை லேட்டாக புரிந்து கொண்டு வந்து வாண்டடாக சவுண்ட் கொடுத்த ரஜினிக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள், காரணம் மாணவர்கள் இப்போது புது இரத்தத்தோடும் உலக அறிவோடும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்பதை ரஜினி போன்ற டடிகர்கள் ஸாரி நடிகர்கள் உணரவேண்டும்.

நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன் என்ற டையலாக் எல்லாம் இனி நடக்காது, இணையதளங்கள் உங்களை சும்மாவும் விடாது..!

ரஜினியை நான் ரசித்த, ரசிகனாக இருந்த காலம் அவரை புரியாத அறியாத காலம்...மேலே போட்டோ பாருங்க...! இப்போ அவர் பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னு...!
----------------------------------------------------------------------------
கூட வேலை பார்க்கும் ஒரு மலையாளி மானேஜர், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர்த்து மற்ற எல்லா டிப்பாட்மெண்ட் உள்ளேயும் மூக்கையும் காலையும் நீட்ட, கடும் பின் விளைவுகள் வந்த வண்ணம் இருக்கு அவனுக்கு....

நான் அப்பவே அவனிடம் சொன்னேன், உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய் மற்றவர்களின் வேலைகளுக்குள் செல்லாதே, அது உனக்குத்தான் வெளியில் போன ஓணானை வேஷ்டிக்குள் விட்ட கதையாக இருக்கும் என்று சொல்லியும் கேட்கவில்லை.

இப்போது பிளட் ஃப்ரஷர் அதிகமாகி செக்கப் செய்து கொண்டு பேய்முழி முழித்துக்கொண்டிருகிறான் ரூமில்....

சொன்னாக் கேக்கணும்...வேறென்னத்தை சொல்ல...?

Sunday, March 24, 2013

பெயர் சொல்ல வைத்த மும்பை தமிழ் தாதா...!

மரியம் என்று எங்கள் ஏரியாவில் [[மும்பை]] ஒரு தாதா இருந்தார், சாராயம் காய்ச்சு வித்தவரும் கூட, என் நண்பனின் அப்பா அவர்...!


அவர் கோலோச்சிய காலத்தில் ஒரு மராட்டிக்காரன் வாய் திறப்பதில்லை தமிழர்களுக்கு எதிராக, ஆனால் தமிழன் தமிழனுக்குள்ளே மோதுறது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே...!

அவங்களுக்குள்ளே நீயா நானான்னு வெட்டுகுத்து அடிக்கடி நடப்பதுண்டு, அதில் ஒருவர் திடீரெனெ ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார், மறுபடியும் நம்ம மரியம் அண்ணாச்சியின் ஆட்சி.
இந்த நேரத்தில் தாதாக்களை ஒழிப்பதற்கு மஹாராஷ்ட்ரா  அரசு புதிய சட்டம் கொண்டுவர, தாதாக்கள் எல்லாம் தடிஃபாராக [[குண்டர்கள்]] மாற்றப்பட்டு சிட்டிக்குள் வர தடை விதித்தது.

நம்ம அண்ணாச்சியும் அவுட்டாஃப்  சிட்டிக்கு போயிட்டார், அடுத்து எங்களின் ஆட்டம் தொடங்கியது. போலீசுக்கு டிமிக்கி கொடுத்துட்டு அவருக்கு எதிரா செயல்படுபவர்களுக்கு அண்ணாச்சி அர்த்த ராத்திரியில் வந்து பூசை கொடுப்பதை நானே பலமுறை நேரில் பார்த்து இருக்கேன்.

அய்யனார் என்று ஒரு அண்ணனை பக்கத்து குளத்தங்கரையில் அருவாளால் கொத்து கொத்து என்று கொத்தியதை நானும் நண்பன் செல்லப்பாவும் அருகில் இருந்து பார்த்தோம் விலக்கினோம் [[நாங்க அப்போ சின்ன பிள்ளைங்க]]
அம்புட்டு பெரிய தாதா கடைசியில் அநாதை ஆகிப்போனார், குடும்பமோ சிட்டியில் அவரோ வெளியே....ஒளித்து ஒளித்து வந்தாலும், அதில் சுகமில்லாமல் போனது அவருக்கு.

எங்கள் இடம் ஏர்போர்ட் முன்பு இருப்பதால் வேகமாக முன்னேறியது, அதுவரை பெயரில்லாமல் இருந்த அந்த இடத்திற்கு எங்கள் தலைமையில் வந்த நண்பர்களாகள், மாரியம்மன் நகர் [[மாரியம்மன் கோவில் ஒன்று அங்கே உள்ளது]] என்று பெயர் சூட்டினோம்.
ஆனால் வட  இந்தியர்கள் மாரியம்மன் என்ற பெயரை மரியம் என்று [[நம்ம தாதா நியாபகம்]] அழைக்க ஆரம்பித்தனர், போலீஸ் ரெக்கார்டுகளில் [[நம்ம பையலுவ சும்மா இருப்பானுகளா ஒரே அடிதடி அருவாவாதான் இருக்கும்]] மரியம் நகர் என்றே பதிவாக தொடங்க...
எவளவோ முறை மாரியம்மன் நகர் என்று எடுத்து சொல்லியும், அவர்கள் மரியம் நகர் என்றே அழைக்க தொடங்கினர்.

அண்ணாச்சி மரித்தும் போனார் ஆனாலும் அவர் பெயர் ஒரு ஊரை சூழ்ந்து கொண்டது ஆச்சர்யமோ ஆச்சர்யம்....!
முன்பு இரண்டு தாதாக்கள் வெட்டுகுத்துன்னு இருந்தார்களே அவர்கள் இருவரின் மகன்களும் இப்போது உயிர் நண்பர்களாக இருப்பது இன்னும் ஆச்சர்யம், இவர்கள் இருவரும் என் நண்பர்கள் சர்க்கிளில் இருப்பது இன்னும் ஆச்சர்யம்....!

என்னத்தை சொல்ல, உலகம் உருண்டை இல்லையா...?

இவர் நான் பெண்ணெடுத்த வழியில் [[சீவலப்பேரி]] எனக்கு சொந்தமும் கூட....!

Friday, March 8, 2013

மனதுக்கு வேதனைகள் தரும் நாட்டு நடப்புகள்...!

சொல்லிப்பாரு, தள்ளிப்பாரு, விட்டு தள்ளு...என்று பெரியவாள்கள் சொல்லக்  கேட்டுருக்கேன், அதேபோல சொல்லி பார்த்தாச்சு தள்ளியும் பார்த்தாச்சு இனி, விட்டு  தள்ளுதான்....ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை...!
[[ஆபீசருக்கு புரியும்னு நினைக்கிறேன்]]
-------------------------------------------------------------------

டிமுக தலைமை, நாடகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது, இலங்கை தமிழருக்காக போராட்டம் நடத்துகிறார்களாம், தமிழா தமிழா ஏய் உலக தமிழா, மறந்துவிடாதே போர் நிறுத்தம் வேண்டும் என்று ஒரு சட்டி இட்லியை தின்று விட்டு, ஒரு மனைவி ஒரு துணைவியுடன் உண்ணா விரதம் இருந்து தமிழனையும், உண்ணா விரதத்தையும் கேவலப் படுத்தின மனிதன் இவர் என்பதை மறந்து விடாதே தமிழா...!

இனி எப்படியும் காங்கிரஸ் ஜெயிக்கப் போவதில்லை என்பதை அறிந்து, பிஜேபி"யுடன் கூட்டணி வைக்கவே இந்த ஓரங்க நாடகம் என்பதை தமிழனே நீ அறிவாயாக, இது உன்னை பகடைக்காயாக வைத்து தலீவர் [[ப்பூப்பூப்ப்]] ஆடும் ரத்த விளையாட்டு...!

தமிழனுக்கு தமிழன் என்று சொன்னாலே சட்டென்று உணர்ச்சி வசப்படுவான் என்று மற்ற மாநிலத்தவர்கள் சொல்லக் கேட்டு இருக்கேன், திராவிடனின் ரத்தம் அப்படியாம்...!

அதை வைத்தே இத்தனை வருஷம் தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தி கொண்ட உன்னத மனிதன்தான் இவர். தமிழ், தமிழன் என்று கூறியே தமிழனை ரத்த ஆறு ஓடவைத்த மாமனிதன் இவர்...!

தமிழனுக்கு எதிராக இந்த உலகமே ஏன் ஒன்று திரண்டு நிற்கிறது என்பதுதான் எனக்கு விளங்காத வெளக்குமாறாகவே இருக்கிறது...!

அதிமுக இன்டர் நெட் விங்க்ஸ்ல சொல்றது உண்மைதான் இல்லையா...?

கடிதம் எழுதுவது 

3 மணி நேர உண்ணாவிரதம் 

கறுப்புச் சட்டை 

மனித சங்கிலி

இப்போது...


தூதரக முற்றுகை 


பொது வேலை நிறுத்தம்

இனிமேல்..

வேறென்ன வரும்..???


மறுபடியும் முதல்ல இருந்து தான்... 


கடிதம் 


3 மணி நேர உண்ணா விரதம்..

இவரால் நாடகத்தை தவிர வேறேதும் நடத்த முடியாது என்பதை திமுக உடன்பிறப்புகள் உட்பட அனைவரும் அறிந்து விட்டார்கள்..

சாகும் வரை நாடகம் நடத்தி,
நாடகம் நடக்கும் வரை திமுக செத்தே கிடக்கும்...

-------------------------------------------------------------------------
வெடிவேலு ச்சே ச்சீ வடிவேலு மறுபடியும் அவர் இடத்தை பிடிக்க வந்துட்டு இருக்கார், படத்தின் தலைப்பு "ஆப்பிரிக்காவில் வடிவேலு" கே எஸ் ரவிகுமார் டைரக்ஷன் என்பது இன்னும் சிறப்பு, சிரிப்புக்கு கேரண்டி இருக்குன்னு இப்பவே சொல்லி வைக்குறேன்.
--------------------------------------------------------------------------

தன்னை ஜேபிசி முன் ஆஜராக விடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்: ஆ.ராசா

#அதான் மொத்தமா குழி தோண்டி ஸ்பெக்ட்ரம் மேட்டரை மண்ணில் புதைச்சாச்சே, இன்னுமா நோண்டுறீங்க, அய்யா ராசா நீ உயிர் பொழச்சதே பெரிய விஷயமாச்சேய்யா, இல்லைன்னா அண்ணா நகர் ரமேஷ் கதிதானே உங்களுக்கும் ஆகியிருக்கும் சாக்குரத நைனா...
-------------------------------------------------------------------------------------

விஸ்பரூபம் படத்துல வரும் முல்லா ஓமர் கேரக்டர் நம்ம காமெடி நடிகர் சந்தானத்துக்கு தாடி வச்சாப்புல இருக்குன்னு பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன், சாட்டிங்க்ல வந்து தாளிக்குறாயிங்க, சரியாதான் சொல்லி இருக்கீங்க, திரும்ப அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் வில்லனை நினைச்சு சிப்பு சிப்பா வருதுன்னு ஹா ஹா ஹா ஹா...
[[டேய் மனோ, கமலுக்கு ஆதரவா குரலும் குடுத்துட்டு இப்பிடி காலை வாரிட்டியேடே]]
-----------------------------------------------------------------------------------

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. தமிழர்கள் சமஉரிமை பெற்று மதிப்புடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அங்கு அரசியல் ரீதியிலான சமரசம் ஏற்பட வேண்டும். அது ஏற்படும்வரை பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது - ம"ண்" மோகன் சிங் 
# ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையால்லா இருக்கு...?!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!