Tuesday, March 18, 2014

உயிர் நண்பனின் ஆதரவு...![[மும்பை]] ஹோலி அன்னிக்கு காலையிலே லேட்டாக எழும்பும் நண்பர்கள் ரூமிற்கு போயி ஃப்ரெஷா கலர் சாணி ச்சே ச்சீ கலர் தண்ணி சர்பரைசா ஊற்றுரதுல ஒரு சூப்பர் சுகம்....

ஆனால்....

ஒருநாள் இல்ல ஒரு தடவை...அப்படி என் ரூமுக்கு வந்தவிங்க அலறியடிச்சு ஒடுனாணுவ....ஹா ஹா ஹா ஹா நாமெல்லாம் ஆரு ?

இவனுக கதவை தட்டவும் ஏற்கனவே கரைச்சு ரெடியாக வச்சிருந்த சாணியை...ஒரு நண்பன் கதவை திறக்க...அவர்கள் சற்றும் எதிர்பாராமல் ரூமுக்குள்ளே இருந்து நான் பீச்சி அடிக்க...ஓடினானுங்க பாருங்க....

இப்பவும் அந்த அட்டாக்கை சொல்லி நண்பர்கள் சிலாகிப்பார்கள்...எப்பிடிடா உனக்கு மட்டும் ஆண்டவன் இம்புட்டு அறிவை கொடுத்தான்னு ஹி ஹி...

அப்புறம் பரஸ்பரம் விளையாடிவிட்டு...சாதமும், மிளகாய் இட்ட வெங்காய பொரியலும், தயிரும் பண்ணி [[கறி வைக்க யாருக்குமே தெரியாது]] சாப்பிட்டுவிட்டு கால் நடையாகவே மும்பை ஜூ பீச்சுக்கு போகும் வழியில் எல்லார் கலர் பொடியையும் வாங்கிவிட்டு, கடல்ல குளிச்சுட்டு வருவோம்...

ஏழை நாட்கள் அவை, இனியும் அந்த சுகம் கிடைக்காது....!

அப்புறம் பைக்...கார்....இருந்தாலும் அந்தநாள் இந்தநாள் போல இல்லை...அன்று விளையாடிய நண்பர்கள்...பலபேர் இப்போ எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை !

கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்கிறது...என் காதல் கல்யாணத்திற்கு தடையாக இருந்தவர்களை அருவாள் முனை கொண்டு மிரட்டி வசப்படுத்திய "உலகன்" என்னும் நண்பன்...[[நெல்லை மானூர்]] கல்யாண மேடையில் ஏறி நின்று என்னைக் கட்டிப் பிடித்தது போன்ற உயிர் நண்பர்கள்....! இப்போது கொஞ்சமே குறைவுதான்...

எப்பிடிய்யா ஒரே வயசை ஒத்த நண்பர்கள் உன்னை சுத்தியே இருக்கிறார்கள் என்று பொறாமைப் படும் ஆட்களும் இருந்தார்கள்...

நண்பர்கள் சூழ இருந்தால் வெற்றி காலில் விழும்போல...ஸோ இப்போ உலகம் ரொம்ப மாறிடுச்சு இல்லையா ?!


டிஸ்கி : எங்ககிட்டே ஜாதி மதம் இருந்தலில்லை...மும்பை வாழ்க்கை அப்படி...சோறு சோறு...கஷ்டத்தில் வந்த உலகனுக்கு அந்த சோறு என் உயிரை பலமுறை காப்பாத்தி இருக்கே... அண்ணன்னுதான் என்னை கூப்பிடுவான்...

கல்யாணத்துக்கு எதிரா சீவலப்பேரி மச்சானுங்க கழுத்தை அறுக்க வந்தப்போ..அவங்களை தூக்கி எறிய சப்போர்ட் தந்ததும் அவன்தான்....

போன பதிவுல ஹோலி அன்னைக்கு ரத்த விளார்ல விழுந்து கிடந்ததும் இதே உலகன்"தான்...

எனக்கு வந்தது அவன் ஏற்றுகிட்டான்...ஹோலி மற்றும் கணபதி விழாவில் [[கலர்]] மும்பையில் யாருண்ணே தெரியாமல் இருக்க இந்த பழி தீர்ப்பு உண்டு...காரணம் முகத்தில் கலர் அப்பி இருப்பதால் யாரென்றே தெரியாது..அடுத்து...பிளேட் வைத்து சர்ர்ர்ர் என்று கீறி சென்று விடுவார்கள்...

உலகன் என்னை கவனிச்சிட்டே இருந்துருப்பான் போல...

ஜாதி மதம் சொல்லலைன்னாலும் இவனை சொல்லலைன்னா என் உயிர்...? 

 "தேவ[ர்]ன் மகன்"

எங்கே தேடியும் இவனை கண்டு பிடிக்க முடியலை...செத்து போயிருப்பான்னு மப்புல ஒரு நண்பன் சொல்ல...அவன் ரெண்டு பல்லைக் காணலைன்னு அடுத்தநாள் செய்தி....


Monday, March 17, 2014

மும்பை ஹோலி பண்டிகையும் நானும் !

ஹோலி பண்டிகையில் மும்பையில் இருக்கும்போது, எப்போ மனோ மாமா எழும்புவாங்க, கலரடிக்கலாம்ன்னு காத்திருக்கும் என் அக்கா பொண்ணுங்க மற்றும் என் மகன், மகள்....

ஒருநாள் முன்னாடியே எங்கிட்ட காசு வாங்கி விதவிதமா கலர் வாங்கி கலக்கி வச்சிட்டு [[எனக்காகவே தனியா]] அவங்க காலையிலேயே விளையாட்டை தொடங்கிருவாங்க...

அதுக்காகவே முன் நாள் தூங்கும்போது வெள்ளை பனியன் அணிந்துதான் தூங்குவேன், எழும்பினதும், கலரை என்மீது அடித்து அவர்கள் விளையாடும் சுகம் எனக்கு இனிமை சந்தோசம் ஜாலி,  பாசம்....

அய்...மனோ மாமா மனோ மாமா...ஐ டாடி டாடி என்று அவர்கள் என்னை பதம் பார்த்து கலர் அப்புவார்கள்...கூடவே அவர்கள் நண்பர்களும்...

அதுவரை ஒளிந்திருக்கும் மனைவியின் நண்பிகள், வீட்டம்மாவை கலரில் மூழ்கடிப்பார்கள்...[[அவள் அழுறது வேற விஷயம்]]

அடுத்து, நண்பர்களை பார்க்கப் போயி...டண்டணக்கா நடந்து, பைக் முதல் கொண்டு என் நாடி நரம்பெல்லாம்...முட்டை, கிரீஸ்...சாக்கடை தண்ணீர் முதகொண்டு நாறடித்து அனுப்புவார்கள், நானும் விடுவேனா ? விளையாட்டுதான்...

எனக்காகவே காத்திருக்கும் குழந்தைகள் வீட்டில்...

மாங்காய், புளிப்பு வெஜிட்டபிள்கள், இன்னும் அவர்களுக்கு பிடித்த சிம்பிள் சாப்பாடு அயிட்டங்கள் எல்லாம் மாமா வாங்கி வருவாங்க என்று குளிக்காமல் காத்திருக்கும் என் செல்லங்கள்...

ரெண்டு கையிலும் பார்சல்களை சுமந்து கொண்டு வரும் என்னை, சூழ்ந்து...ஒவ்வொரு பையாக சுமக்க முடியாமல் சுமந்து, சாப்பிடாமல்...என்னை பாத்ரூமில் தள்ளி...[[வீட்டம்மா என்னை அடையாளம் தெரியாமல் அலறுவது வேறு விஷயம்]]

ஒருத்தி மாத்திரம் பார்சலில் என்னென்னே இருக்குன்னு லைவ்வாக சொல்ல...வீட்டம்மாவும் வந்து அருகில் உடகார்ந்து விளக்கமளிக்க...

பாத்ரூமில் எனக்கு சோப்பு போட்டு சோப்பு போட்டு குளிப்பாட்டும் என் செல்லங்ககள்...!

ஆஹா ஆஹா ஆஹா...சுகமோ சுகம்....!

ஐ மிஸ் யூம்மா......

இப்போ பிள்ளைங்க எல்லாம் வளர்ந்தாச்சு...ஆனாலும்...இப்பவும் அக்காகளிடம் சொல்லி ஏங்குகிறார்களாம்...மனோ மாமாவை ஹோலி"க்கு வர சொல்லுங்க மம்மி என்று....

நானும் மிஸ் பண்ணுகிறேன் இந்த பண்டிகையை...குடும்பத்துக்காகவும் என் நண்பர்களுக்காகவும்...

"ஜெயஹிந்த்"

டிஸ்கி : ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டின் மற்றும் பல மதத்தவர்கள் எல்லாரும் நம் இந்தியாவில் சகோதரர்களே என்ற ஒற்றுமைக்காக உண்டாக்கப் பட்டதுதான் இந்த ஹோலி பண்டிகை...இதில் திகில் சம்பவங்களை நேரில் [[மும்பை]] பார்த்த அனுபவங்களும் உண்டு எனக்கு..கலரோடு கலராக...இரத்தத்தில் மிதந்த நண்பன்...கலர் என்று நினைத்து அவனை நாங்கள் கவனிக்காமல் விளையாடியது...! [[காதல் பலி]]

சமயம் இருக்கும் போது சொல்றேன் !


Sunday, March 9, 2014

அந்தப்பெண் நிச்சயம் உயிரோடே இருக்க சான்சே இல்லை !

இதற்கு முன்பு வேலை பார்த்த ஹோட்டலில் ஒரு திகில் சம்பவம்...

 இரவு ஒரு பத்து மணி அளவில் ஒரு பஹ்ரைனி பெண் வந்து, இந்த நம்பர் ரூமுக்கு போகனும் என்று சொல்ல, நான் அந்த ரூமில் தங்கி இருந்த கத்தார் அரபிக்கு போன் செய்து கேட்க, அவனும் அனுப்பு என்று சொன்னான்.

அவள் ரூமுக்கு போன பத்தாவது நிமிஷம் ஒரு பஹ்ரைனி ஆண் ஓடி வந்தான்.

"இப்போ இங்கே வந்த அந்த பெண் எந்த ரூமிற்கு போனாள் ?"

நாங்கள் எங்கள் ஹோட்டலில் தங்கி இருப்பவர்களை தகுந்த ஆதாரம் இல்லாமல் காட்டி கொடுப்பதில்லை.

"இல்லையே இங்கே யாரும் வரலையே"

"மரியாதையாக சொல்றியா இல்லையா ?"

"இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்தவன் கிடையாது, இங்கே யாரும் வரவில்லை"

"டேய் அது என் பொண்டாட்டிடா" என்று சொல்லி இடுப்பில் இருந்த நீண்ட கத்தியை என் கழுத்தில் ஆவேசமாக வைக்க...

நாமெல்லாம் ஆரு ? ரூம் நம்பர் சொல்லி வழியையும் கிளீனாக சொல்லி குடுத்தோம்ல, பின்னே....நாடு விட்டு நாடு வந்து நான் எதுக்கு உயிரை விடனும், அதுவும் பொண்டாட்டின்னு சொல்றான், கண்டிப்பா கழுத்தை அறுத்தேப்புடுவான் காட்டரபியுங்கூட !

கொஞ்ச நேரத்தில் மேலே போகும் படிகளில் பெண்ணின் அலறல்...பார்த்தால் அவளின் நீண்ட கொண்டை முடியை பிடித்து கொண்டு தரதரவென இழுத்து வந்தான் கையில் நீண்ட கத்தி...அவள் வாய் மூக்கு கண்களில் இருந்தெல்லாம் ரத்தம்...

வெளியே வரை இழுத்துப்போய், கத்தியை கீழே போட்டுவிட்டு அவளை தூக்கி எறிந்தான் காருக்குள், அவளை ஒரு மனுஷ ஜென்மம் என்றே பார்க்கவில்லை அவன் ! அவள் உடல் காருக்குள்ளும் வெளியேயுமாக கிடக்க, மிதித்து காருக்குள் தள்ளினான், திரும்ப வந்து கத்தியை எடுத்துக் கொண்டு காரில் பறந்தான்.

நான் உடனே கத்தாரி அரபிக்கு போன் செய்து உடனே ரூமை காலி பண்ணு இல்லையெனில் உன் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று சொன்னதும் அவனும் தலைதெறிக்க ரூமை காலி செய்து போகவும், பத்து இருவது கார்களுக்கு மேலாக ஆட்கள் வந்து எங்கள் ஹோட்டலை சூழ்ந்து கொண்டார்கள்.

நாம இன்னையோட காலி"ன்னு மனதில் மரணத்திற்கு முன் வரும் தைரியத்தில் [!] கால் நடுங்க நின்றிருந்தேன் ஓடவும் முடியாது, மற்றவர்கள் யாவரும் ஓடி விட்டார்கள், ஏனெனில் போனவன் கண்டிப்பாக இங்கே தங்கி இருப்பவனை போட்டுத் தள்ள வருவார்கள் என்று தெரிந்து...

ஏழெட்டு பேர் உள்ளே ஓடி வந்தவர்கள், நேராக போனது அந்த ரூமிற்க்குதான், கையில் பெயரே தெரியாத கொடூர ஆயுதங்கள், ஆளை தேடிப்பார்த்தவர்கள் ஆள் இல்லையென்றதும் என்னிடம் வந்தார்கள்.

அவர்கள் கேட்குமுன்னே நானே சொல்லிவிட்டேன், இதோ இப்பதான் ரூம் காலி செய்துகொண்டு அதோ அந்த வழியில் காரில் போகிறான் என்று வேறொரு திசையை காட்டினேன், எந்த கம்பெனி கார் ? ஸாரி தெரியாது என்று சொன்னேன்.

நம்பிட்டான் போல...சரசரவென்று நான் காட்டிய திசையில் கார்கள் பறந்தன, கத்தார் அரபி அம்புட்டானோ இல்லையோ, ஆனால் அந்தப்பெண் நிச்சயம் உயிரோடே இருக்க சான்சே இல்லை !

இனியும் நிறைய திகில் சம்பவங்கள் உண்டு, நியாபகம் வரும்போது ஒவ்வொன்றாக சொல்றேன்.

Friday, March 7, 2014

கேரக்டரே இல்லாத ஒரு லூசு"வின் அலப்பறை !

முதன் முறையாக பஹ்ரைன் வந்து எங்கள் ஹோட்டலுக்கு மனைவியுடன் வந்து தங்கி விட்டுப்போன கவைத் [[பெயர் மாறிருக்கு]] நாட்டின் ராஜ பரம்பரையில் ஒருத்தர், இங்கே இருக்கும் ஜல்லாலங்காடி ஜில்லாலங்காடி சுகம், ஜாலி எல்லாம் பார்த்து அதிசயித்து போனவர்....மனைவியை அழைத்துக்கொண்டு கோபமாக [[மனைவி இருந்ததால்] கவைத் போய் விட்டார்.

அப்புறம்தான் ஆச்சர்யம், அடுத்தமுறை தனியாக வந்தவர் காசை அள்ளி ஏறிய ஆரம்பித்தார் [[பின்னே ஷேக் ஆச்சே]] டிஸ்கோ, டிஸ்கோதே, பாஸ்கோ, ரஷ்யன், தாய்லாந்த், சீனா, ஈராக், எகிப்து, மஸ்ரி என்று வரவழைத்து என்ஜாய் பண்ணினவருக்கு குஷி தாங்க முடியவில்லை.

ரிஷப்சனில் வந்து நின்று சிரியாக சிரிக்க ஆரம்பிச்சார்ன்னா நாங்க கதி கலங்கி போவோம். பார்க்காத உலகத்தை புதுசாக அவர் பார்கிறார் என்பது அவர் பேச்சில் செயல்களில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

இடையிடையே அவர் மனைவிக்கும் போன் பண்ணி கொஞ்சி விளையாடுவார், மனைவியும் இவர் செல்போன் எடுக்காத பட்சத்தில் எங்கள் ஹோட்டலுக்கு போன் செய்து விசாரிப்பார்.

அடுத்து இவர் போற இடமெல்லாம் அலப்பறை பண்ண, டிஸ்கோ பாஸ்கோ"வில் எல்லாம் இவரை அனுமதிக்க வில்லை, பணத்தை வீசி எறிந்தாலும் பிரயோஜனம் இல்லாது போனது, அப்புறம் ரூம் மற்றும் காபி ஷாப் என அடங்கினாலும் வெளியே போயி கில்மா விளையாடிவிட்டு வந்து, எங்களைப் பார்த்து பயங்கரமாக சிரிப்பார் அதான் எங்களுக்கு கிலியாக இருக்கும்.

எப்போதும் மப்பில்தான் இருப்பார், பகலில் நேரம் போகவில்லை என்றால், ரிஷப்சன் அம்மணிகளுக்கு போன் செய்து கலாயிப்பார், அது சரியில்லை இது சரியில்லை என்று கத்துவார், ரூமில் போயி பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும், அப்புறம் நம்ம வீரப்பா மாதிரி சிரிப்பார் [[அவ்வ்வ்வ்]]

இவர் ஒரு கேரக்டர் ரோல் என்றுதான் முதலில் அவதானித்தேன், அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு லூசு என்று...!

அப்புறம் அவருடைய வயது சொல்லனுமே ? ஏன்னா பாஸ்போர்ட் நம்மகிட்டேதானே இருக்கு, வயது எழுபது, எல்லாரும் ஒரு ஊன்றுகோல்தானே வச்சிருப்பாயிங்க ? இவர் எப்போதும் இரண்டு வச்சிருப்பார்...!

இவர், தான் இங்கே வந்திருப்பது யாருக்குமே தெரியாது என்று நினைத்திருக்க, கவைத் ராயல் குடும்பத்து பாதுகாவலர்கள் அவரை அன்டர்டேக் எடுத்திருப்பது அவருக்கே தெரியாது என்பதுதான் ஆச்சர்யம்...!

மெடிக்கல் செக்கப் என்று பொய் சொல்லி இங்கே வந்ததாக கேள்வி...!

டிஸ்கி : அப்பாடா ஒரு பதிவு தேத்தியாச்சு.

Sunday, March 2, 2014

இது கதிர்வேலன் காதல், நாஞ்சில்மனோ விமர்சனம் !

 "இது காதர்கான் வேலன் ச்சே ஸாரி இதி கதர்வேலன் ஸாரி இது கதிர்வேலன் காதல்"

கண்ணுல நடிப்பு சரி இல்லைன்னு கூலிங் கிளாசை அடிக்கடி கண்ணுல மாட்டுறது சரியில்லை...ஆனாலும் முதலுக்கு இப்போ கொஞ்சூண்டு பரவாயில்லை பரவாவுண்டுன்னும் சொல்றாயிங்க.

அடுத்து, மன்மதராசா பாட்டு ராணியை அக்கா ஆக்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை...[[சாயாசிங்...நயனை விடவும் அழகு]]

பாடல்கள் பரவாயில்லை ரகம், இசையும் அம்புட்டு சரியில்லை ஆமான்னும் சொல்லமாடன் ச்சே சொல்லமாட்டேன்.

நயன்தாரா இடுப்பை அதாங்க வயறு எக்கி எக்கி நடிச்சது, சரி அதாவது போகட்டும் சில இடங்களில் அம்மிணியின் உண்மை உடலழகு வெளியே கண்றாவியாக தெரிகிறது ! [[ஒளிப்பதிவாளர் பால சுப்பிரமணியன் கவனத்திற்கு]]

 நயன்தாரா மூஞ்சியில ஆறுகிலோ பவுடர் அப்பட்டமாக தெரிகிறது....!

செலவே இல்லாம படத்தை எடுத்திருக்காங்க என்ன...வெடிவைக்க மட்டும் ச்சே பாட்டுக்கு மட்டும் வெளிநாடு போயிருக்காங்க அது ஒண்ணுதான் செலவு !
முணுக்குன்னு முக்கியதும் முக்காததுமாக பாட்டு வருவது எரிச்சலாக இருக்கிறது.

ஒரு காட்சியில் வந்தாலும் மயில்சாமி ஒரு கலக்கு கலக்கிவிட்டு செல்வது நன்றாக ரசி[சிரி]க்க வைத்தது.

சந்தானம் மட்டுமே நம்மை காப்பாற்றுகிறார் ! என்னைப் பொறுத்தவரை சந்தானம்தான் இந்த படத்தின் ஹீரோ, கேப்ல கேப்ல எஸ் எம் எஸ் மெசேஜை அப்பிடியே போட்டு தாக்குறார் !

ஒரு முறை ரசிக்கலாம் சந்தானம் என்னும் ஒரு கலைஞனுக்காக...!

என்ன.......பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லியிருக்காங்க இது ஒன்னுதான் கதை !

ஒரு டிஸ்கி : 12.03.14 முதல் 14.03.14 வரை டெல்லியில் உணவு பாதுகாப்பு குறித்த மூன்று நாள் TOT (Training of Trainers ) தமிழகத்தில் பணிபுரியும் 585 FSOக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரில் நம்ம ஆபீசரும் ஒருவர்,11.03.14ல்ல் மதுரை-டெல்லி விமானம். 16.03.14ல் ரிட்டர்ன்.

டில்லியில் இருக்கும் நண்பர்கள் கவனிக்கவும்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!