Saturday, August 24, 2019

பல் வலியும் மண்டை குத்தும் வந்தவனுக்குத்தானே அந்த வலி தெரியும்.

Saturday, June 8, 2019

பொதுவா...ஊர்ல இருந்து போன் வந்தாலே திக்குன்னு திகிலாதான் இருக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு...அதிலும் இரவு பனிரெண்டு மணிக்கு போன் வந்தா...? மகளுக்கு கொஞ்சம் சுகமில்லாமலிருந்ததால்...அலறிப்போயி போனெடுத்தால்...சீவலப்பேரி, wish u many more happy returns of the day மாமா....

"யாருக்கு ?"

"உனக்குதாம்டா லூசு மாமா, வீட்லதான் யார் பிறந்தநாளும் உனக்கு நினைவில்லன்னா...ஒம்பொறந்தநாளுமா மறந்துபோச்சி ? ஒம்மக பேசணுமாம் இந்தா பேசு"

[பொறந்த நாளதுவுமா லூசா....ங்கே...]

அப்புறமாத்தான் தெரிஞ்சிது நமக்கு பொறந்தநாளுன்னு, நமக்கு இந்த திட்டெல்லாம் புதுசா என்ன ? லூஸ்ல விட்றா விட்றா  துரை சிங்கம்.

அப்புறம் மகள்கிட்டே  பல லூசுகள் வாங்குனது தனிக்கதை.
--------------------------------------------------------------------------------------------------------------------------

பிறந்தநாளுக்கு நேரிலும், வாட்சப்பிலும், முகநூலிலும்,போனிலும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்...நன்றி நன்றி நன்றி...


Tuesday, May 14, 2019

சீனி கிழங்கு...



சீனி கிழங்கு...

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவசாயம் பரிச்சயம் அவர்களுக்கு, எந்த செடி கொடிகளை பார்த்தாலும் சிறுசுலேயே அதன் பெயரை சொல்லி விடுவார்கள்...

அம்மாவை இங்கே கன்னியாகுமரியில் கட்டி கொடுக்க...எங்க பெரியம்மாவை [மூத்தம்மான்னு சொல்லுவோம்] உள்ளூரிலேயே ஒரு விவசாயிக்கு கட்டி கொடுக்க...

நாங்கெல்லாம் பிறந்த பிறகு அடிக்கடி அங்கே போவதுண்டு...காலையிலே ஆறுமணிக்கு தோட்டத்துக்கு கிளம்பினா ராத்திரி ஏழுமணிக்குத்தான் தோட்டத்திலிருந்து வீடு திரும்புவார்கள், ஒரு பெரிய குத்துபோனி நிறைய சோளக்கஞ்சி எடுத்துக்கொள்வார்கள்...மத்தியானம் சாப்பாட்டுக்கு அவ்வளவுதான்...

மதியம் ஆனதும், பனை ஓலையில் ஒரு கை சோளக்கஞ்சி போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுவார்கள்...மிளகாய் முதற்கொண்டு வெங்காயம் வரைக்கும் தோட்டத்திலேயே கிடைக்கும், மூத்தம்மா மகள் [அக்கா] கூடவேதான் தோட்டத்துக்குள் சுற்றுவேன், நொங்கு, இளநி, பிஞ்சு பருத்திக்காய், பயறு, பச்சை உளுந்து, பனம்பழம், கறிவேப்பிலை பழம், பனங்கிழங்கை புடுங்கி எடுத்து சுட்டு தருவாள் அக்கா [சாப்புட்டுருக்கீங்களா ?] செம ருசியாக மணமாக இருக்கும்.

ஒவ்வொரு செடிகொடிகளின் பெயர்களை சொல்லி தருவாள்...அப்பிடி செல்லும்போதுதான் சீனி கிழங்கு செடியை காட்டினாள், இன்னொரு விபரமும் சொன்னாள், அதாவது இது சிகப்பா இருக்குமே அந்த சீனிக்கிழங்கு இல்லை, முட்டை மஞ்சக்கரு மாதிரி அழகாக இருக்கும்ன்னு சொல்ல...[நான் அதற்குமுன்பு பார்த்ததில்லை]

அக்கா அக்கா எனக்கு அது வேணும்ன்னு சொல்ல...அக்கா கிணற்று பக்கமாக போயி மம்பட்டியை எடுக்க...மூத்தம்மாவும் கூடவே வந்தாங்க...அக்கா ஒரு செடி பக்கமாக வெட்டப்போக...மூத்தம்மா சொன்னார்கள்..."மண்ணு வெடிப்பு இருக்குற இடத்தில் தோண்டு புள்ள அப்போதான் விளைஞ்சிருக்கும்" அக்கா தோண்ட...அற்புதமான ஒரு பெரிய கிழங்கு வெளியே வந்தது...பரவசமாகிப்போனேன், உடனே  அவிச்சி தந்தாங்க, என்னா ருசி என்னா ருசி...

அதன் பின்பும் அநேகமுறை வீட்டில் சாப்பிட்டாலும் அந்த சுவை இது வரைக்கும் இல்லை...

சரி, நான் சொல்ல வந்தது என்னன்னா...இன்னைக்கு ஒரு சூப்பர் மார்க்கட் போயிருந்தேனா [கல்ஃப் மார்ட்] அங்கே நல்ல பிரஸ்சாக இந்த முட்டை மஞ்சள் கரு கலர் இருந்தது [எல்லா சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும் இருந்தாலும் இது கொஞ்சம் கண்ணைக்கவரும் விதம்] உடனே வாங்கி வந்து அவித்து சாப்பிட்டேன் இருந்தாலும் அக்கா பண்ணித்தந்த அந்த சுவை இல்லை, மலரும் நினைவோடு சாப்புட்டாச்சு !


Saturday, May 11, 2019

நான் முதலமைச்சர் ஆனால்...



நாங்கெல்லாம் ஸ்கூல்ல சேர காட்டுன நீட் தேர்வு இதுதான், ஆனால் அதெப்பிடிய்யா மூன்று வயசுல காதை பிடிச்சுட்டேன்னு கவுண்டமணி கணக்கா இன்னிக்கும் நண்பர்கள் கேட்பதுண்டு, அவனுகளுக்கு நான் சீனியராகிட்டேன்...
எட்மாஸ்டருக்கு தெரிஞ்சி, அவருக்கும் அப்பாவுக்கும் செம சண்டை...
"உண்மைய சொல்லு உம்மவனுக்கு வயசு எத்தனை ?"
"அஞ்சு வயசு"
"ஊர்ல மூன்று வயசுன்னு சொல்றாங்க ?"
"பொறாமை பிடிச்சவிங்க சொல்றதை எல்லாம் நம்புவீரா ? பள்ளிக்கூடம் முடிஞ்சி நம்ம வீட்டு பக்கமா வருவீருல்லா அப்போ பேசிக்குவோம்"ன்னு அப்பா அழுத்தி சொல்ல...எட்மாஸ்டர் கப்சிப்.
நான் முதலமைச்சர் ஆனால் இப்பிடியும் பிரச்சினை பண்ணுவாங்களே அவ்வ்வ்...



உரலும் பின்னே நானும்...





ஒருநாள் நாகர்கோவிலுக்கு போகும் போது, வழுக்கம்பாறைக்கும் சுசீந்திரம் பாலத்திற்கும் நடுவே ஆணை பாலம்ன்னு ஒரு பாலம் வரும், அதை சற்றே கடந்தால்...அம்மி, உரல், சிலைகள் கல்லினால் செய்துகொண்டே விற்பனையும் செய்கிறார்கள்.
அங்கே வீட்டம்மாவுக்கு ஒவ்வொன்றுக்குமாக விளக்கம் கொடுத்தேன்...ஆச்சர்யமாக பார்த்தவள்...படத்திலிருக்கும் சின்ன உரலை கேட்க...நான் மறுத்துவிட்டேன், "நீதான் இதை உபயோகிக்க மாட்டாய்ன்னு எனக்கு தெரியும் அதனால் வேண்டாம்"ன்னு சொல்லிட்டேன்.
முறுமுறுத்துக் கொண்டே வந்தவள்...இல்ல மாமா நான் இதை கண்டிப்பா உபயோகிப்பேன்னு சொல்லிகிட்டே வந்தாள்...
பலநாள் கழித்து அந்த வழியாக வந்தவன், ஆசை பட்டாளேன்னு வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன்...
மறுமுறை லீவுக்கு வந்தபோது நான் சொன்ன மாதிரியே பரண்ல கிடந்துச்சு, கையில எடுத்து திட்டிகிட்டே...சமையல் செய்யும் போது, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, வெங்காயத்தையெல்லாம் மிக்சில போட்டு ஆட்டாம இதுல செஞ்சுப்பார் குழம்பு ருசியாக இருக்கும்ன்னு செஞ்சு காட்டி குடுத்தேனா...
அடுத்தமுறை ஊருக்கு வந்தபோது, இஞ்சி, பூண்டு மட்டும் இடிக்க கண்டேன் ஜாமி, ஏதாவச்சும் சொல்லப்போயி அருவாளை தூக்கிருவாங்கன்னு இப்போ பயம் கொஞ்சம் கூடிப்போச்சு.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!