Wednesday, September 24, 2014

மதுரை பதிவர்கள் மாநாடு ஜாலி ஜாலி கும்மி 2 !


பாலகணேஷ் அண்ணன் உள்ளே இருந்து வேகமாக வெளியே ஓடி வருகிறார்..."எலேய் மனோ என்னலேய் பண்ணிகிட்டு இருக்கே ?"

"என்னண்ணே  ஆச்சு ?"

என்ன ஆச்சா ? சிபி"யை மரியாதை இல்லாம வரவேற்றதா, விக்கியை கலாயிச்சதா சரவணன் கையை பிடிச்சு இழுத்ததா, டீச்சரை வம்புக்கு இழுத்ததா கம்பிளைன்ட் வந்துருக்கு..."

"ஆஆ அதுக்குள்ளேயா ?"

"நொன்ன அதுக்குள்ளே வாயில குத்திபுடுவேன் மரியாதையா எல்லாரையும் வரவேற்கணும், இது எருமைநாயக்கன் பட்டி மீட்டிங் மாதிரி ஆக்கிபுடாதே ஜாக்கிரத"

"ஓகே டீக்கே பம்மிங் பம்மிங் அண்ணே..."

சின்ன வீடு சுரேஷ் வருகிறார்...
 

"வாங்க வாங்க சுரேஷ் எப்பிடி இருக்கீங்க பதிவுலகம் பக்கத்துலையே ஆளை காண முடியலையே ?"

ஒத்தை விரலை தூக்கி காட்டி "யோவ் நீரு [[யாரு]] மட்டும் ரொம்ப யோக்கியமோ ? எத்தனை தடவை திருப்பூர் வாரும் வாரும்"ன்னு கூப்பிட்டுருப்பேன் வந்தீரா வந்தீரா" ன்னு விரலை அப்பிடியே மடக்கி குத்த வர...

"யோவ் பொறுய்யா...அதுக்காக நாகர்கோவில் போயிகிட்டு இருக்குற ரயிலை திருப்பூருக்கு எப்பிடிய்யா திருப்ப முடியும் ?"

"மனமிருந்தால் மார்கபந்து ச்சே மார்கமுண்டு"

"ஆரம்பிச்சிட்டான்...ராசா அடைமொழி பெயருக்கு அர்த்தம் சொல்லிட்டு போ ராஜா..."

ஒரு விரலை மறுபடியும் நீட்டி, ரெண்டாவது விரலையும் தூக்கி காட்டிட்டு..."அண்ணே எனக்கு ரெண்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதான் சிம்பாலிக்கா சின்னவீடுன்னு வச்சிருக்கேன்"

"ரெண்டு சின்ன வீடா...சொல்லவே இல்ல..."

தமிழ்வாசி பிரகாஷ் ஒரு கையை இடுப்புல வச்சிகிட்டு லேசா நொண்டி நொண்டி நடந்து வருகிறார்...
 

"என்னய்யா ஆச்சு உங்க ஊர்ல தெருதெருவா கிட்னி களவு நடக்குறதா சொன்னாங்க, அப்பிடி ஏதும் ?"

"இல்லை மக்கா, யாருகிட்டேயும் சொல்லாதீங்க கொஞ்சம் காத காட்டுங்க"
"சொல்லுங்க"

"பைக்ல வந்துகிட்டு இருந்தேனா...ஒரு சூப்பர் ஃபிகர் நின்னுகிட்டு இருந்துச்சா...அப்பிடியே யூ டர்ன் அடிச்சு போயி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு மட்டும்தான் மக்கா சொன்னேன், பின்னாடி இருந்த அண்ணனுங்க அழகா ஆடாம அசையாம ரோட்டுல சரிச்சி கிடத்தி வச்சி மிதிச்சானுங்க பாருங்க ஸ்ஸ்ஸ் அபா முடியல..." என்று உள்ளே போக...

"யோவ் நில்லுய்யா.."

"யோவ் மக்கா ஏற்கனவே மூச்சு விட முடியாம இருக்கேன் அடைமொழியை நானே சொல்லிருதேன், தமிழ் வாசிடா வாசிடான்னு எங்க தமிழ் வாத்தியார் அடி பின்னி எடுப்பாருண்னே என்ன செய்யலாம்ன்னு மண்ணுல உருண்டு ரோசித்ததுல, தமிழ்வாசி"ன்னு என் பெயரை நானே மாத்திகிட்டேன்"

"இதுக்கு மண்ணுல வேற உருளனுமா வெளங்கிரும், உள்ளே போங்க சாமீ"

நாய் நக்ஸ் நக்கீரன் அண்ணன் ஒரு பாட்டலோடு வரவும்....
 

"அண்ணே அண்ணே ஆல்கஹால் உள்ளே அனுமதி கிடையாது, ஆபீசரும் கணேஷ் அண்ணனும் உள்ளே இருக்காவ அடி பின்னிபுடுவாயிங்க"

"இங்கே வா தம்பி என்னாதிது ?"

"அண்ணே குவாட்டரை வாங்கி தண்ணீர் பாடடலுகுள்ளே மிக்ஸ் பண்ணி இருக்கீங்க"

அந்த பாட்டலை தூக்கி காட்டி...ஒ என்று அழுகிறார்...

"டேய் மனோ...நான் தண்ணிய நேற்றைக்கே விட்டுட்டேன் தெரியுமா ? [[அவ்வ்வ்வ்]] வயிறு சரியில்லை அதான் வீட்டம்மா சீரக தண்ணீர் கொடுத்து விட்டுருக்கா அவ்வ்வ்வ்"

"அண்ணே அழாம மெதுவா உங்க அடைமொழியை சொல்லிட்டு போங்க பிளீஸ்"

"ம்ம்ம்ம் அது வந்து [[திடீர்ன்னு ஆவேசமாக]] நீ நாய்கிட்டே கடி வாங்கிருக்கியா வாங்கிருக்கியா ?" என்று விரலை கண்ணுக்குள்ளே குத்த வர...

"யோவ் இது என்னய்யா ஆரஞ்சு மிட்டாய் வாங்கிருக்கியான்னு கேட்ட மாதிரி இருக்கு ?"

"நான் வாங்கிருக்கேன் நான் வாங்கிருக்கேன் பல தடவை வாங்கிருக்கேன், பல விதத்துல வாங்கிருக்கேன், பல ரூபத்துல வாங்கிருக்கேன், அதுக்கு பிறகுதான் இந்த யோசனை வந்துச்சு "நாய் நக்ஸ்"ன்னு வச்சிட்டேன் இப்போ ஒரு நாயும் என் பக்கத்துல வாறதில்லை"

"அண்ணே போங்க போங்க"
 

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" பாட்டோடு தூரத்தில் "என் ராஜபாட்டை"ராஜா வெறியோடு வருவதை பார்த்து மனதினுள் "ஆஹா ஆபீசர் வீட்டு கல்யாணத்துக்கு வந்து அருகில் இருந்து "அண்ணே இங்கே நாங்க ரெண்டே ரெண்டுபேர் மட்டுமே ஹீரோ எப்பிடின்னு சொல்லுங்க பார்க்கலாம் ?"

"வாத்தி இங்கே ஒரே ஒரு ஹீரோதான் அது மாப்பிளை மட்டும்தான்"

"நான் சொல்லட்டுமா ?"

"சொல்லி தொலை"

"மாப்பிளை பேரும் ராஜா, என் பெயரும் ராஜா"ன்னு சொல்லி காதுல ரத்தம் பார்த்தவனாச்சே..."

"வா வா வா வாங்க வாத்தி நலமா ?"

"அண்ணே நாம இருக்குறது மதுரை..."மறித்து 

"பிச்சிபுடுவேன் பிச்சி, மரியாதையா அடைமொழிக்கு அர்த்தம் சொல்லிட்டு அப்பிடியே உள்ளே போயிரு ஆமா..."

முட்டுல கைவைத்து குனிந்து நின்று யோசிக்குறார்.

"நம்மளை நாமே என்னைக்கும் தாழ்த்திக்க கூடாது என்பதற்காக...அது என்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்பது என் ஆசை அதன் விளைவு இந்த பெயரு, அண்ணே அந்த மதுரை..."

"போய்யா போ கிளம்பிட்டாங்க..." என்று அலற...

"என்ன சத்தம் அங்கே ?" ஆபீசர் ஓடி வர..."
 

"என்ன மனோ ஒரே சத்தமா இருக்கு யாரோ அடிச்ச மாதிரி ?"

"ஆஹா இது வேறயா ஆபீசர்ர்ர்ர்ர் அது ஒண்ணுதான் பாக்கி, பஹ்ரைன்ல இருந்து வல்கரா தூக்கிட்டு  வந்து மாட்டிகிட்டு முழிக்குறேன்...இன்னும் எதெல்லாம் வந்து வயித்தை கலக்கப் போகுதோ..."

"அதோ தூரத்துல வாறது நம்ம மெட்ராஸ் பவன் சிவா மாதிரி இருக்கே மனோ..."

"அய்யய்யோ ஆபீசர், போன்லயே நான்ஸ்டாப்பா பேசுவானே ஆபீசர், இன்னைக்கு என்னவாகபோகுதோ ?"

தொடரும்...

நோ சீரியஸ் கூல்....

Friday, September 19, 2014

மதுரை பதிவர்கள் மாநாடு ஜாலி ஜாலி கும்மி !

மதுரை வலையுலக மாநாட்டில் பதிவர்களை வரவேற்று அவர்கள் அடைமொழி பற்றி கேள்வி கேட்கப் படுகிறது.

அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...



முதலில் முகத்தில் நான்கு கிலோ பருப்புடன் ஸாரி பவுடருடன் உள்ளே நுழைவது சிபி அண்ணன்...
 "வணக்கம் அண்ணே...பார்த்து ரொம்ப நாளாச்சு எப்பிடி இருக்கே ?"

"நான் நல்லா இருந்தா என்ன நல்லா இல்லாட்டா என்னடா, எனக்கு ஒரு போன் பண்ணுனியா ? இல்ல ஊருக்கு வரும் போகும்போது என்ன வந்து பார்க்க சொன்னியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சு..."

"அதெல்லாம் அப்புறம் பேசலாம் அண்ணே இப்போ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஸைன்மென்ட் என்னன்னா..." இடைமறிக்கிறான்.

"அட்ரா சக்கை"தானே ?"

"ஆமாண்ணே ஆமா"

"அட்ரா"ன்னா சூப்பர் ஃபிகரு, சக்கை"ன்னா சப்பை ஃபிகரு [[ஹிந்தி தெரிஞ்சவிங்க கமுக்கமாக சிரிக்கவும்]] போதுமா ?"ன்னு உள்ளே போறான். [[ம்ஹும் இது திருந்தாது]]

விக்கி அண்ணன் டொம் டொம் என்று தரை அதிர நடக்க முடியாமல் [[அம்புட்டு வெயிட்டு]] நடந்து வருகிறான்...

"வா அண்ணே வா..."

"ஆரம்பமே சரியில்லையே...உன்னை யாருய்யா இங்கே நிப்பாட்டினது ?"

"அது கமிட்டி மெம்பர்ஸ் உத்தரவு அண்ணே"

"அப்போ நானு ?"

"நீயும் உறுப்பினர்தான்"

"அப்போ என்னிடம் கேட்காமல் உன்னை எப்பிடி இங்கே நிறுத்தலாம்"

"தூக்கிப்போட்டு மிதிச்சிபுடுவேன் மிதிச்சு [[தூக்க முடிஞ்சாத்தானே]] மரியாதையா உன் அடைமொழி பெயரை சொல்லிகிட்டு சிபி அண்ணன் பக்கத்துல போயி பம்மிரு"

"அது வந்து அண்ணே....[[விட்டத்தை பார்த்து யோசிக்கிறான்]] எனக்கு விக்கல் வக்கலா ச்சே விக்கலா அடிக்கடி வரும்டா அண்ணே அதான் "விக்கி உலகம்"ன்னு நானா ரோசிச்சு வச்சேன்"

அரங்கத்துக்கு மைக்ல தகவல் போகுது...

"சரவண பவன் ஹோட்டலை காலி [[சாப்பாட்டை]] பண்ணிட்டு விக்கலோடே விக்கி அண்ணன் வாறான் பராக் பராக்" அங்கே எல்லாரும் கலவரமாகிறார்கள்.

கே விஜயன் பவ்யமாக வந்து...
"ஓய் நீர் எப்ப ஓய் இங்கே வந்தீரு என்கிட்ட சொல்லாம ?"

கண்ணீரோடு "மக்கா, சென்னை வாறேன் வாறேன்னு டிமிக்கி குடுதேம்ல்லா அதான் சென்னை பார்டிங்க கூலிப்படை அனுப்பி தனி வி"மான"த்துல தூக்கிட்டு வந்துட்டாவ அவ்வவ்"

"சரி சரி அழாதேயும் ஓய்"ன்னு தொப்பை வயிறு வெளியே தெரியாமல் இருக்க சட்டையை கீழே இழுத்து விடுகிறார்.

"உங்க அடைமொழி பற்றி சொல்லுங்க ?"

"எருமைனாயக்கன் பட்டியில் நடந்த பதிவர் சந்துப்பு மாதிரி ஆகிறாதுல்ல ? அன்னைக்கு சன்னல் ஏறி குதிச்சதுல கால் முறிஞ்சி போச்சு ஓய், இப்போ இங்கே உம்மை பார்க்கும் போதே குலை நடுங்குது ஓய்...

மனதில் நின்றவை" என்பது யாதெனில் "போட்டோவில் நின்றவை" என்றும் சொல்லி சொல்லாமல் நானிருந்தால் இந்த நாடு என்னை கல்லெறியும் தக்காளி எறிஞ்சி  ஆஸ்பத்திரியில் படுத்து சூப்பர் ஸ்டார் கையால பூரிகட்டை..." கமல் போல புலம்ப...இடைமறித்து. 

"சரி சரீஈஈ உள்ளே போரும் ஓய்" நெஞ்சை கையில் பிடித்து செல்கிறார்.

"ஸ்கூல் பையன்" சரவணன்  வெடைப்பாக வேகமாக ஓடி வருகிறார்.


மனோ"வை அலட்சியமாக பார்த்துவிட்டு உள்ளே நுழைய முயற்சிக்க...

"ஹலோ ஹல்லல்லொ ஸ்டாப் ஸ்டாப்...இங்கே ஒருத்தன் வெறைப்பா நின்னுகிட்டு இருக்கேன்ல ?"

"ஹாங்.... பஹ்ரைன்ல இருந்து உம்மை தூக்கிட்டு வந்ததே நாங்கதான் நியாபகம் இருக்கட்டும்" மேலேயும் கீழேயும் பார்கிறார்.

"மெதுவா சொல்லுய்யா யாரும் கேட்டுற போறாயிங்க அண்ணன் பாவமில்ல"

"இப்போ உமக்கு என்ன வேணும் ?"

"எண்ணய்தான் வேணும் ச்சே அடைமொழி அர்த்தம் சொல்லுய்யா முதல்ல"

"ஊ....ஊ..... ஒ.... ஒ.... ஒ.... அவ்வவ்...." அழுது தரையில் உருள...

"ஆய்யே அழாதேய்யா அழாம சொல்லுங்க"

"அண்ணே என் பையனை ஸ்கூல் கூட்டிட்டு போகும்போது ஒருநாள் மழை பெய்ய, நான் அப்பிடியே மழையில் நனைஞ்சி சந்தோஷமா உருண்டு புரண்டு ரோட்டுல பாட்டு பாடினதை பார்த்து, பையன் வீட்டுல போட்டு குடுத்துட்டான், வீட்டம்மிணி பூரிகட்டையால சாத்தினது கூட பரவாயில்லை அண்ணே...

"ஸ்கூல் பையன்" மாதிரி ரோட்டுல உருளுவியா உருளுவியான்னு சொல்லி அடிச்சது என் மனசை ரொம்ப பாதிச்சுருச்சு அண்ணே அதான்"ன்னு  விக்கி விக்கி அழுதுட்டே போறார் பாவம்.

குடு குடு"ன்னு நல்லா "சிகப்பான" உருவம் ஒன்று ஹெண்ட் பேக்கை தலையில் வச்சிகிட்டு முகத்தையும் மூடிகிட்டு ஓடிவர...
"ஹல்லோ மேடம் யார் நீங்க ?"

"என்னாது யாரா...?" என்று பேக்"கை நகர்த்த...ஆஆ...செல்வி டீச்சர்...

ஜெர்க் ஆகி கால் கை தலை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்...."டீச்சர் நீங்க இங்கே எப்பிடிலா ?"

ஆள்காட்டி விரலை உயர்த்தி "பிச்சிபுடுவேன் பிச்சி...நானும் பதிவர்தான் ஆமா..."ன்னு சொல்லிட்டு உள்ளே நுழைய...

"பிளீஸ் ஸ்டாப்  உங்க அடைமொழி சொல்லிட்டு போங்க டீச்சர்"

காதில் மெதுவாக.."மனோ அன்னிக்கு பதிவர்கள் சந்திப்பில் நடந்த மாதிரி கலவரம்...?"

"நோ நோ டீச்சர் நம்ம ஆபீசர் இருக்கார் கூடவே பிரகாஷும் இருக்காப்ல"

"அன்னைக்கு கலவரம் ஆனதுக்கே பிரகாஷ்தானே"டா"[[அவ்வவ்]]  காரணம் மனோ ? சரி, அதாவது நான் ஒருகாலும் [[ரெண்டு கால் ஆச்சே]] தரையில், மண்ணில், நிற்பவள் கிடையாது, எனது காலும். கையும். ஏன் மனசும் கூட வானில் பறந்து கொண்டேதான் இருக்கும், அதான் "என் மன வானில்"ன்னு வச்சிருக்கேன், போதுமா ?

"சரி சரி பார்த்துக்கலாம் போங்க டீச்சர்"

 [["யாருலேய் அங்கே வானில் பட்டம்"ன்னு கத்துறது ?]]
தொடரும்...

மனதின் கற்பனைதான் இது தப்பாக எடுக்காமல் நல்லா சிரியுங்க...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!