நேற்று
ரூம் இருக்கா என்று கேட்டு ஹோட்டல் நிலவரம் பற்றி அம்மிணியிடம் விசாரித்து
கொண்டிருந்த ஒரு இந்தியர்...நான் எட்டி பார்த்தபோது எங்கயோ பார்த்த
நியாபகம் பட்டென்று நியாபகம் வரவில்லை...
அவருக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் அவரும் உற்று பார்த்துக் கொண்டோம், பிடி கிடைக்கவில்லை....அப்புறம் லேசா நியாபகம் வந்து போயி மெதுவா...
அவருக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் அவரும் உற்று பார்த்துக் கொண்டோம், பிடி கிடைக்கவில்லை....அப்புறம் லேசா நியாபகம் வந்து போயி மெதுவா...
"மிஸ்டர் ஷா..." என்று மெல்ல அழைத்தேன்.
"எஸ் யூ....?"
"ஐயம் மனோஜ், பிஃபோர் வொர்க்கிங் ஃபால்கன் இண்டர்நேசனல் ஹோட்டல்"
"வாவ் மை காட்...மனோஜ் ஹவ் ஆர் யூ ?"
"நலம் சார் நீங்க எப்டி இருக்கீங்க எங்கே இருக்கீங்க ?"
"நான் அதே ஹோட்டலில்தான் இருக்கேன் மனோஜ், நீ இம்புட்டு உசரத்துக்கு வருவேன்னு எனக்கு முன்பே தெரியும் உன் கண்களின் பிரகாசம் அதை உணர்த்தியது உண்டு எனக்கு, காட் பிளஸ் யூ..."
காபி ஷாப்பில் போயி காப்பி குடித்தவாறே பரஸ்பரம் விசாரித்து விடை பெற்றார்.
பனிரெண்டு வருஷம் பின்னோக்கினேன்...அதாங்க பிளாஷ் பேக்...
ஃபாலகன் இன்டர் நேசனல் இரண்டு நட்சத்திர ஹோட்டல்...நாப்பது ரூம்ஸ்...ஒரு ஆங்கில டிஸ்கோ...ஒரு இந்தியன் டிஸ்கோ...ஒரு அரபி டிஸ்கோ...ஒரு பார்...காபி ஷாப் வித் ரூம் சர்வீஸ்...
அனைத்து கேரளா நடிக நடிகைகளும் கேரளா விவிஐபிகளும் வந்து போன இடம்...நான் ரூம் சர்வீஸ் வெயிட்டர்...ஷா சார் ஆல் ஹோட்டல் இன்சார்ஜ் !
தெய்வ அனுகிரகத்தால் இன்று நான் நான்கு நட்சத்திர ஹோட்டலின் இன்சார்ஜ், ஷா சார் இப்பவும் அங்கே அதே பதவியில்...!
பதிமூன்று மணி நேரம் வேலை, லீவில்லாமல் இரண்டு வருஷம் வேலை பார்த்துட்டு லீவுக்கு ஊருக்கு போனபோது ஐந்துநாள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கின போது கேலி செய்தனர் குடும்பத்தினர், நம்ம உழைப்பு அவங்களுக்கு எங்கே தெரியப் போகுது ஆனால் நம்மை படைத்த தெய்வம் நம் உழைப்பை காணுகிறான் !
காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது இல்லையா !
கண்ணீரோடு என்னை படைத்தவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்...